Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-16

16

வினயா ஒரு வீட்டின் அறையில் அடைக்கப்பட்டிருந்தாள்.

லேசாக மயக்கம் தெளிந்து பார்க்கையில் மது வாடை , சிகரெட் புகை நாற்றம் வந்து கொண்டிருந்தது. கண் விழித்தாள்..

மங்கலாக சதீஷ்…பனியன் லுங்கி சகிதம்.

தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

தனக்கு இதுவரை ஒன்றும் ஆகவில்லை..

“சதீஷ்..நான் காரணமில்லை..என்னை ஒண்ணும் செய்யாதே..”

உனக்கு எவ்வளவு பணம் வேணுமானாலும் ஏற்பாடு செஞ்சு தரேன்..”

“என்ன ஒரு பத்து லட்சம் தருவியா..? இது எனக்கு நல்ல சந்தர்ப்பம்..

விடுவேனா..பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல..” “நீ மயக்கத்தில் இருக்கும் போதே உன்ன…. “

சொல்லக் கூசும் ஒரு வார்த்தையை உதிர்த்தான்.

“ஆனால் நீ நினைவு திரும்பினப்புறம்” …………”

“உன் முக உணர்ச்சிகளை என்றைக்கும் நினைவு படுத்தி கொள்ளலாம்.”

“அதுவும் தவிர எனக்கு உதவி செஞ்சவங்கள்ள ஒருத்தருக்கும் நீ வேணுமாம்.” சொல்லிக் கொண்டே வந்து வினயாவின் மேலாடையில் கை வைத்தான்.

வெளியே வாசல் கதவு தட்டப் பட்டது.

“இருங்கடா என்ன அவசரம்?? நானே இன்னும் ஆரம்பிக்கல..”

மீண்டும் தட்டப் பட்டது.

வாயில் துணி அடைத்து அறைக் கதவை வெளியில் தாளிட்டுப் போனான். என்ன நடக்கிறது என கேட்க ஆரம்பித்தாள்.




“விபாகர் சார்..வாங்க..” “அடப் பாவி..விபாகரா..”

‘மயக்கமாகும் முன் விபாகரை தெரியும்நு ஏதோ விசிட்டிங்க் கார்ட் கொடுத்தானே!!..’

சதீஷின் கெட்ட நண்பர்களில் விபாகரும் ஒருவனோ?..ஆனால் இவனை நல்லவன் என்று சொல்லி இவனை கல்யாணம் செஞ்சுக்கலாம்னுட்டு மதியம் தானே நினைத்தேன்.’

‘எனக்கு அப்படி ஒரு கல்யாண ராசி..’

‘இப்போ கல்யாணம் ஆகாமலே கன்னி கழியப் போகிறோம் கண்டவனிடம்.’

“பாஸ்கரை வேண்டாம் என முழுவதும் ஒதுக்கி அவனது போட்டோவையும் அழித்தோமே..எனக்கு இது தேவை தான்..”

பயத்தில் ஏதேதோ நினைத்து மீண்டும் மயங்கினாள்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்தாள் …

“போலீஸ் போல தோற்றத்தில் ஒருவர் .. இருப்பது இப்போது அவள் தங்கியிருந்த அதே ஓட்டலில்.. அதே ரூமில்.

“கவலைப் படாதே..உன்னை காப்பாற்றி விட்டோம் என்றார் ஆங்கிலத்தில். சரியான சமயத்தில் எங்களுக்கு தகவல் கிடைத்தது..”

“நீ ரெஸ்ட் எடு.. காலைல மேலே பேசிக்கலாம்.”

எஸ்தர் மெதுவாக பக்கத்தில் வந்து தலையை தடவிக் கொடுத்தாள்.

“விபாகர் தான் உன்னைக் காப்பாற்றினான்.”

“எப்படி அவனுக்கு?….அவருக்குத் தெரியும்..??

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்..

நெற்றியிலிருந்த சின்ன ஸ்டிக்கர் பொட்டு தவிர வேறு ஒன்றும் கலையவில்லை.

‘சே..என்ன ஒரு அவசர புத்தி..எனக்கு..’

‘அன்று… அம்மா சொன்னாள் என பாஸ்கர் சம்மந்தப்பட்ட அனைத்தையும் அழைத்து அவனை தொலைத்தேன்.”

‘இன்று அதற்குள் இவனை தப்பாக நினத்து விட்டேனே…’

அதற்குள் எஸ்தர் பேச ஆரம்பித்தாள்.

“அன்னிக்கு எங்க ஆபிசுக்கு சதீஷ் உன்னைப் பார்க்க வந்ததா பொய் சொன்னப்பவே விபாவுக்கு ஒரு சந்தேகம் .”

“நான் வேற உன்னைப் பத்தி சொல்லி விட்டிருக்கேனா..

உன்னைப் போட்டோவில் பார்த்து பிடிச்சிருச்சுனு நெனைக்கிறேன்.”

“எது..என்னோட லைசென்ஸ் போட்டோவா?..அதிலேயே பார்த்து பிடிச்சிருக்கா.அப்போ நேர்ல பார்த்தா??…”

“சதீஷ் , நாம வந்த அதே ரயில்ல தான் வந்தான்…அதையும் அவன்ட சொன்னேன்.” “நான் சொல்வேனே..எதையும் சரியா பிளான் பண்ணுவான்..அவன் என்ன நடக்கலாம் நு முன்னாடியே யோசிப்பானுட்டு..”

நேத்து விபாகர் பற்றி எஸ்தர் சொல்லும் போது பிடித்தம் இல்லாமல் கேட்ட வினயா, இப்போது படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து..

“அப்புறம் என்னாச்சுக்கா..என்ன செஞ்சாரு உங்க பாஸ்..”

“அவன் ஒரு பிரைவேட் டிடக்டிவ் ஏஜன்சி ஏற்பாடு செஞ்சி நம்மையும், சதீஷையும் கவனிக்க வெச்சிருக்கான்.” “நான் கூட நீ கடத்திப் போன போது பின்னாடியே போன பைக் ஏதோ வீடியோ காரங்க ‘ பிராங்க்’ செய்யறாங்க நு நெனச்சேன்.”

“அந்த பைக் காரன் ஒரு டிடக்டிவ்…அவன் சதீஷைத் தொடர்ந்து போய் பார்த்துட்டு,லோகல் போலிஸ்ட்ட எல்லாம் சொல்லி,

அடையாளம் பார்க்க விபாகரையும் வரவழைச்சுருக்கான்.

அப்பாவும் போனை எடுக்கலப்பா. அவர் நண்பர்கள் நா உசுர குடுப்பாரு..” “இன்னிக்கு ஏதோ பிரச்சனையாம்.

சாமுவேல் சொல்லிச்சு.” இப்போ அவருக்கு என்ன ஆச்சுனு பார்க்கணும்.”

அப்பாக்கு போன் போட்டாள்.

இப்போது எடுத்தார்.

“நானே உனக்கு போன் போடணும்நு நெனச்சேன் எஸ்தர்..”

“என்னாச்சு..வினயா திரும்ப வந்துட்டாளா..”எப்படி இருக்கா..”




“உனக்கு எப்படி தெரியும்?”

“உங்க பாஸ் தான் எனக்கு மூணு நாள் முன்னாடி சொன்னரே..ஒருத்தரை டிராக் பண்ணனும் நு… சதீஷ் விவரம் சொன்னாரு.” “நான் தான் கேரள போலிஸ்ல ரிடயர் ஆன ஒரு நண்பர் வெச்சிருக்கிற டிடக்டிவ் ஏஜன்சி மூலம் ஃபாலோ பண்ண சொன்னேன்.”

“வழக்கம் போல இந்த கடத்தலை போலீஸ் காரங்க முதலில் சீரியஸா எடுத்துக்கல..” “உங்க பாஸ் கிட்ட சொல்லி… அவரை உயர் அதிகாரிக்கு பேசி……” “சட்டுனு காப்பாத்திட்டாங்க..”

“அட.. விபா உன்கிட்ட தான் சொன்னானா??”

” காவல் துறையில் என்னுடைய இன்ஃப்ளுயன்ஸ் பத்தி அவருக்கு தெரியும்..” உன்னைப் பொறுத்தவரை உன் அப்பா ஒரு பழைய ஆளூ அதானே.??” சிரித்தார்

“அந்த சதீஷ் கேரளவில் இருக்கும் அன்னிய நாட்டு தீவிரவாதிங்க கூட சேர்ந்து இவளை வெளி நாட்டுக்கு கடத்த கூட ஏற்பாடு செஞ்சிருக்கான். அவனை ரகசியமா கைது செஞ்சு விசாரிச்சுட்டு இருக்காங்க..” “நீங்க திரும்பி வரும் வரை போலிஸ் உங்களுக்கு தெரியாம கண் காணிக்கும். தைரியமாக இரு..”

அப்பா வினயா பத்தி கேட்டதுமே ஸ்பீக்கர்ல போட்டாள் எஸ்தர்.

வினயா…இதெல்லாம் கேட்டு விட்டு..

“அங்கிள்…அப்பா அம்மாக்கு தெரியுமா…”

“இல்லம்மா..என்னனு சொல்வது??”

“நாளைக்கு போகும் போது இதை பத்தி சொல்லட்டா..”

“வேண்டாம் அங்கிள்..

நாளைக்கு நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி எஸ்தரோட பாஸ் விபாகருக்கும் எனக்கும் கல்யாண பேச்சை ஆரம்பிங்க.”

” நான் எஸ்தர் அக்காட்ட சம்மதம் சொல்லிட்டேன்நு சொல்லுங்க..”

“என் கிட்ட எப்போ டீ சொன்னே..”

“இப்போ தான் சொல்ரேங்கா..”

“ஓகே.ஒகே..”

“இரு இரு மதியமே நீ கேட்டயே அவன் போட்டோ..பழைய மொபைல் ல இருக்கு..எடுத்து வரேன்..” “அப்படியே விபா கிட்ட ஒரு வார்த்தை சொல்றேன்..”

“அடியே..நான் போனை வெச்சுடட்டுமா.. “எஸ்தரப்பா கேட்க..

“நீ இன்னுமா லைனல இருக்கே..” போனை கட் செய்தசெய்தாள்.

“வேண்டாங்கா.. நான் போட்டோ பார்க்கலை..எப்படி இருந்தாலும் அவரை நான் கட்டிக்கறேன்..எனக்கு இப்போது தேவை என்னைப் புரிந்த ஒரு நல்ல ஆண் துணை.” அது இவர் மூலம் எனக்கு கிடைக்கும்நு நம்பறேன். அவர்ட்டயும் சொல்லாதீங்க..நான் நேரேயே கேக்கறேன்..”

அடுத்த நாள் காலை ரெடியாகி.. எஸ்தருடன் வேலன் சார் தங்கி இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றாள்..

வேலன் சாரை அறிமுகப் படுத்தினாள்.

“நல்ல ப்ரெசண்டபிளா வந்திருக்கியே…

நீ வெறும பேசிக் கிட்டு கூடவே இரு..” ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் கூட இரு..அப்சர்வ் பண்ணு..மாலைல கேள்வி கேளு…” “சில மீட்டிங்குக்கு மட்டும் நீ வரவேண்டாம்..”

ஓகே சார்…

கீழே பொது இடத்தில் உணவு அருந்திக் கொண்டு இருக்கையில் வினயாவின் கண் அலை பாய்ந்தது.

அந்த விபாகர் வருகிறாரா என பார்க்க…

நேற்று இரவில் தீர்மானித்து விட்டாள்…கடவுளாகப் பார்த்து விபாகரை அனுப்பி இருக்கிறார்.. இவன் தான் நமக்கு எல்லாம் இனிமேல்.

அதனால் தான் கடைசியாக பாஸ்கரின் நினைவும் அவன் படங்களையும் அழிக்க வைத்தானோ அந்த கடவுள்.

டாய்லட் போய் வருகிறேன் என்று சென்றவளின் பார்வையில் மாடியின் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வெளியே ஒரு தெரிந்த உருவம் தென்பட்டது .முதல் மாடிக்கு விரைவில் ஏறிச் சென்றாள்.

அந்த ஹாலில் உள்ளே நுழைந்து கொண்டிருந்த அந்த உருவம் அச்சு அசலாக இவளுடைய பாஸ்கர்.




விபாவை திருமணம் செய்யலாம் என குதூகலமாக இருக்கும் போது,

“என் பாஸ்கர்….மீண்டும்..

ஒரு வேளை அவனுக்கு திருமணமாகி என்னை மறந்திருந்தால்..”

“இப்பொது அவனைப் பார்த்து என்ன செய்வது??”

“எனக்கு கல்யாணம் என்ற நினைப்பே கூடாதோ இந்த ஜென்மத்தில்..??”

நேசத்தினால் யாரை நெருங்குவாள் வினயா…??




What’s your Reaction?
+1
8
+1
17
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!