Serial Stories குறளி வசியம்

குறளி வசியம் -4

4

மொட்டை பாறையின் மேலே இயல முடியாத ஒரு கோணத்தில் அவன் கிடந்தான். அவனை பார்த்த முதல் பார்வையிலேயே அய்யருக்கு அவன் யார் என்பது தெரிந்துவிட்டது. அன்று மாடன் சொன்ன குடுகுடுப்பைக்காரன் இவன் ஆகத்தான் இருக்கும் .”இல்லை இல்லை” ” இவன் தான் அவன்”

இரண்டு கைகளையும் பரப்பியபடி கால்கள் விரிந்த நிலையில் மல்லாந்து கிடக்க, நிலைகுத்திய விழிகள் ஆகாசத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தது.

அவனுடைய வாய் ,காது, மூக்கு என்று அனைத்தின் வழியாகவும் ரத்தம் நிறைய வெளியேறி இருந்தது.
அவன் உடலை நெருங்கினாலே ‘மூத்திரம்’ மற்றும் ‘மலத்தின்’ வாடை அடித்தது.”  உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது  செத்துப் போனவன் படாதபாடுபட்டு இருக்கவேண்டும் என்பதற்கு இந்த மலமும் மூத்திரமும் தான் சாட்சி”

ஐயர் அந்த இடத்தை சுற்றும்முற்றும் பார்த்தார்; அந்த மாலை வேளையில் இவ்வளவு திரளான மக்களுக்கு மத்தியிலும், எவருக்கும் புலப்படாத ஓர் வித்தியாசமான சக்தியின் இருப்பை அந்த இடத்தில் அவரால் உணர முடிந்தது. கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும் அந்த சக்தியின் அமானுஷ்ய இருக்கம் அந்த இடம் முழுவதும் பரவி இருப்பதை உணர்ந்தார்.

தன்னுடைய ஜால வித்தைகள் கூட இந்த இடத்தில் பழிக்குமா என்ற சந்தேகமே அவருக்கு வந்தது.   “உளுந்தம் பயரின் வாசம்”  ” சர் “என்று நாசியில் ஏறியது , “ஐயர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்”.

“நீ இன்னும் இங்க தான் இருக்கியா” ” அவனைக் கொன்றதுக்கப்புறமும் நீ போகலையா”?

மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை என்பது குடுகுடுப்பைக்காரன் போன்ற கருப்பு மந்திரவாதிகளுக்கு மிகவும் கொடூரமானது. இவர்கள் எந்தெந்த சக்திகளை ஆட்டுவித்தார்களோ, அல்லது ஆட்டுவிக்க நினைத்தார்களோ,  அந்த சக்திகள்இவர்களுடைய மரணத்திற்காக காத்துக்கிடக்கும்.

இவர்கள் மரணத்திற்குப் பிறகு, இவர்களுடைய ஆன்மா அந்த சக்திகளிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு இருக்கிறதே !!!!அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அதற்காகத்தான் கருப்பு மாந்திரீகத்திள் இறங்கும் ஒவ்வொருவரும் ஓரளவு சித்துக்கள் கை வந்தவுடன் மரணம் அடையாமல் இருப்பது எப்படி என்பதிலேயே தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

செத்துப்போன குடுகுடுப்பைக்காரனின் ‘ஆன்மா’ அவன் கட்டிப்போட்ட  பைசாசனங்களுக்கு மத்தியிலே அமர்ந்துகொண்டு  ” ஓ ” என்று கதறி அழுது துடிப்பதும் அந்தப் பைசாசனங்கள் அவனைப்பார்த்து  பல்லை இளிப்பதும் ஐயரின் உணர்வுகளுக்கு புரிந்தது.

‘ போலீஸ் வந்தாச்சு’  கூட்டத்தில் எவரோ ஒருவர் அறிவிப்பு போல் சொன்னார்.
அதன்பின் வேலைகள் மளமளவென நடக்க ஆரம்பித்தன. குடுகுடுப்பைக்காரனின் உடல் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.




அவன் கிடந்த இடத்தை சுற்றிலும் கோடு வரையப்பட்டு, கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஏதாவது தடயம் கிடைக்குமா என்று காவலர்கள் சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டது குடுகுடுப்பைக்காரனின் கருப்புகலர் “ஜோல்னாப் பை”.

கான்ஸ்டபிள் ஒருவர் அந்த ஜோல்னா பையின் ஜிப்பை திறந்தார். உடனே ” வீல் ” என்ற அலறலுடன் பையை தூக்கி விசிறி எறிந்தார்.

அந்த பையிக்கு உள்ளே இருந்து ‘சில மாந்திரீக’தகடுகள்’, ‘மந்திரித்த தாயத்துக்கள்’ ,’வசிய மை குப்பிகள்’ ‘சிறிதும் பெரிதுமான சில மூலிகை வேர்கள்’, இவை அனைத்தும் சிதறி விழுந்தன. சிதறி விழுந்த அந்த பொருட்களுக்கு மத்தியிலே கான்ஸ்டபிளின் பயத்திற்கு காரணமான  அந்தப் பொருளும் கிடந்தது.

உள்ளங்கை அளவே இருக்கும், “என்ன அது”   “கை கால் முளைத்த பொம்மை போல் ”  பொம்மை போலத் தெரிந்தாலும் பார்ப்பதற்கு இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே!!?

பார்த்த மாத்திரத்தில் ஐயருக்கு நன்றாக தெரிந்து விட்டது. அது பாலம்மாளின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ” கரு ” என்று , அந்தக் ” கரு ” நன்கு காயவைத்து ” வற்றல் ” ஆக்கப்பட்டு இருந்தது. அதற்கு சேலைகட்டி பூ முடித்து ஜோடனை செய்யப்பட்டிருந்தது.

” செத்துப் போனவன் குறளியை ஆவாகனம் செய்யும்பொழுது ஏதோ தவறு செய்து விட்டான் போலும் “.       “ஒரு வினாடி ஒரே ஒரு வினாடி அந்தக் கரு தன்னுடைய கண்களை லேசாக திறந்து மூடியது போல் தோன்றியது ”
எந்த சூழ்நிலையிலும் எதற்கும் பயப்படாத அய்யரின் இரும்பு நெஞ்சமும் திக்கென்றது ,  ” குறளி ” “என்னிடமே உன்னுடைய வித்தையா” இந்த கிருஷ்ணய்யர் யார் என்பதை உனக்கு நான் காண்பிக்கிறேன். மனதிற்குள் கருவிய படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஐயர். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையில் போலீசார் முழு மூச்சுடன் செயல்பட்டனர்.

இப்பொழுது, ஐயருக்கு குறளியை வசியம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தொற்றிக்கொண்டது. ‘குடுகுடுப்பைக்காரன்’ “தலைச்சன்கருவின் உள்ளே குறளியை ஆவாகனம் செய்ய முயற்சி செய்திருக்கிறான்” . ‘முட்டாள்’ அவனுக்கு என்ன தெரியும்.

பேசாமல் மந்திரித்த தாயத்து, தகடு ,இவைகளை விற்றுக்கொண்டு வசிய மை வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தால்  பாவம் உயிரோடாவது இருந்திருப்பான்.

‘ குடுகுடுப்பைக்காரர ‘ …      ” உனக்கு போக்குக் காட்டிவிட்டு போன அந்தக் குறளியை உச்சந்தலை மயிரை கட்டி கொண்டு வந்து காட்டுகிறேன் பார்க்கிறாயா ” எதிர்த்து நின்று சபதம் செய்வதற்கு யாரும் இல்லை என்றாலும், தனக்குத்தானே ஒரு இருமாப்பாண சபதம் ஒன்றை எடுத்துக்  கொண்டார் ஐயர்.

‘ என்னங்க ‘   ‘ஏன் ‘ ‘ என்ன சிந்தனையில் இருக்கீங்க?.அய்யரை உலுக்கியது, மனைவி ‘கோமளத்தம்மாள்’.

இல்லடி , சும்மா தான், ஒரு வசியம் சம்பந்தமா யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன்.
அது என்னன்னா பூடகமான பேச்சு ; “ஒரு வசியம்”  அப்படின்னு சொல்லி , ஒரு நாளும் நீங்க என்கிட்ட இப்படி பேச மாட்டீங்களே.

“பூடகம் எல்லாம் ஒன்னும் இல்லை” உன் கிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கம் அவ்வளவுதான்.
‘ வேண்டான்னா ‘ நம்ம ரெண்டு பேருக்கும்  குழந்தைங்க இல்லைனாலும் , ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா, அன்பா வாழ்ந்துட்டு இருக்கோம் ,நமக்குள்ள எந்த ஒழிவு மறைவும் வேண்டாம்.

“ஒழிக்கிறது எல்லாம் ஒன்னும் இல்லடி” ” குறளி வசியம் பண்ணனும் அப்படின்னு எனக்கு ஒரு எண்ணம் வருது”.

“ஏன்னா இந்த எண்ணம் சரிதானா?” ”  நீங்கள் ஒருநாளும் கடவுள் மந்திரத்தை தவிர்த்து சிறுதெய்வ மந்திரத்தை உச்சாடனம் செய்தவர் இல்லையே “.

“திடீரென்று உங்களுக்கு ஏன் இந்த எண்ணம்?”

‘ தெரியலை ‘ ‘ எனக்குத் தெரிந்த ஒரு வித்தை அது ‘  ‘அதை நான் ஒருநாளும் பரீட்சித்துப் பார்த்ததில்லை ‘ ‘ இப்பொழுது பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது ‘

” குறளி கட்டு மிகவும் அபாயகரமானது என்று சொல்வார்களே “,  “அது மட்டுமல்ல கட்டப்பட்ட குறளிக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காமல் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமாமே ?” ” நம்மால் வேலை தர முடியாமல் போய்விட்டால் அது கட்டை அறுத்து கொள்ளுமாம் ” இது எல்லாம் நான் கேள்விப்பட்டது. இது எல்லாம் உண்மைதானா ? !!




‘ எல்லாம் உண்மைதான்  கோமளா ‘ . “கட்டப்பட்ட குறளியை சளைக்காது வேலை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அது கட்டியவனையே கூட பதம் பார்த்து விடும்”.

“நமக்கு எதுக்கு  இந்த வேண்டாத வேலை ” நாம தெய்வத்தோட நாமத்தை பாராயணம் பண்ணிக்கிட்டு, நிம்மதியா இருப்போம் .நீங்க கத்து வச்சு இருக்கிற ” சித்து ” நம்ம வயித்துக்கு தேவையானத கொடுத்துவிடும். நமக்கு இந்த வேண்டாத வேலை வேண்டாம்னா, இனிமே இது மாதிரி எண்ணம் உங்களுக்கு வரவே கூடாது மறந்துடுங்க.

திட்டவட்டமாக உத்தரவு போல் ஐயருக்கு சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் வீட்டிற்குள் சட்டென்று புகுந்து கொண்டாள் கோமளம்.

எப்பொழுதும் மனைவியின் பேச்சை மீறியோ, மனைவிக்கு தெரியாமலோ, எதுவும் செய்து அறியாத அய்யர் விழித்தபடி நின்றிருந்தார்.

(தொடரும்…..)




What’s your Reaction?
+1
4
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!