Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -6

 6

ஆளு பிரச்சனையில்லாதவன்தானே ?

அதிலே உங்களுக்கு என்ன சந்தேகம் எல்லாம் பிரச்சனையில்லாதவன் தான் பணத்துக்கு மயங்காதவன் யார் இருக்காங்க மதன் அவன் முரண்டு பிடிச்சா இரண்டு எலும்புத்துண்டு எக்ஸ்ட்ராவா எடுத்துப்போடு எல்லாம் சரியாயிடும். 

அபிராமி இருந்த டேபிளைப் பார்த்தான் மதன் அருகில் உள்ள பேரரிடம் எதோ கேட்க, அவன் பாத்ரூமை நோக்கி கை காட்டினான் மதனைப் பார்த்து தலையசைத்து விட்டு, இடது பக்கம் நகர்ந்தாள். வழுவழுவென்று தரையும் கண்ணாடியாய் திரைச்சீலைகளும் கண்கவர் விளக்குகளும் நெஞ்சை அள்ளியது. கண்ணாடித் திரைக்குப் பின்னால் அவன் நின்று கொண்டு இருந்தான். 

அவள் கைகளில் சற்று நேரத்திற்கு முன் சிவா கொடுத்த துண்டுசீட்டு இருந்தது. சொல்லுங்க சிவா என்னை பின்தொடர்ந்து வர்றதுதான் உங்க வேலையில்லை. அவளின் குரலில் சற்று சிரிப்பு இருந்ததா என்று கூட தெரியவில்லை.

நான் அத்தனை சொன்னபிறகு நீ ஏன் ? 

மதன் கூட வந்தேன்னு கேக்குறீங்க அதானே இன்னும் கொஞ்சநேரத்தில நீங்களே தெரிஞ்சிப்பீங்க… சரி நீங்க எப்படி இங்கே என்னை வேவு பாக்குறீங்களா ?

அச்சச்சோ சத்தியமா இல்லை நான் இங்கே வந்தது ஒரு வேலை விஷயமா என் பிரண்டு ஒப்புக்கிட்ட அசைன்மெண்ட் ஆனா அவனால வரமுடியலை அதனால நான் வந்ததேன் வந்ததும் நல்லதா போச்சு

என்ன நல்லதா போச்சு….

இங்கே மதன் எதுக்கு உன்னைக் கூப்பிட்டு வந்திருக்கான் தெரியுமா ? அபிராமி அவன் …. சொல்ல வந்த வார்த்தைகள் மனதிற்குள் சுருண்டு கொல்ல, ஆனா நான் வந்தது நல்லதா போச்சு உன்னை காப்பாத்துற பொறுப்பு எனக்கு கிடைச்சது.

நல்ல காமெடி நீங்க என்னைக் காப்பாத்த போறீங்களா ? இப்போ இருக்கிற சூழ்நிலையிலே நான்தான் உங்களைக் காப்பாத்தப் போறேன். 

அபிராமி…

எனக்கு மதனைப் பத்தி எல்லாம் தெரியும். பயப்படாதீங்க என்னைக் காப்பாத்திக்கவும் எனக்குத் தெரியும். அவன் சொன்ன வேலையைச் செய்யுங்க அப்பத்தான் உங்கமேல எந்த சந்தேகமும் வராது. மத்ததை நான் பார்த்துக்கறேன்.

அபிராமி உனக்கு ஏதாவது…..




சிவாவின் கண்களில் வழிந்த பயத்தையும், காதலையும் பார்த்து சிரித்து வைத்தாள் அபிராமி நேரம் ஆகுது என்னைக் காணலைன்னு அவன் தேட ஆரம்பிச்சிடுவான் நான் போறேன் அவன் பதில் பேசாமல் நிற்க, எனக்கு ஒண்ணும் ஆகாது அவனின் கையைப் பற்றி ஒருமுறை அழுத்திவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள் அபிராமி. மீண்டும் அதே இருக்கையில் வந்து அமர்ந்து விட்டாள். 

நீ போ மதன் ரூம்ல உனக்கு எல்லாம் தயாரா இருக்கு அந்த பொண்ணு ரொம்ப நேரமா உன்னைத்தான் பார்த்துட்டே இருக்கு, ஏதாவது சந்தேகம் வந்திடப்போகுது. மதன் அவனை விட்டு விலகி அபிராமியிடம் சென்றான். 

அபி சாப்பிட்டியா அம்மா இப்பத்தான் கோவிலுக்குள்ளே போயிருக்காங்கலாம் உச்சிகால பூஜை முடிச்சிட்டு உடனே கிளம்பிடுவேன்னு சொல்லியிருக்காங்க அவங்களோட கார் டிரைவர்கிட்டே, அதனால …. அதுவரையில் …. ! 

சொல்லுங்க மதன் ஏன் தயங்குறீங்க ?

இல்லை அதுவரையில் வெளியே எங்காவது போயி உன்னை யாராவது பார்த்திட்டா உனக்கும் கஷ்டம் அதனால இங்கே மேல ரெஸ்ட் ரூம் இருக்கு நம்ம இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்திடலாம் என்ன சொல்றே ? காலேஜ் விடறதுக்குள்ளே நான் உன்னை கூட்டிட்டுப் போய் விட்டுடறேன்.

அபிராமி ஒரு விநாடி அமைதி காத்தாள் சரி போகலாம் வாங்க ஆனா சரியான நேரத்திலே என்னை வீட்டிலே விட்டுடணும் சரியா. 

சரிம்மா வா போகலாம் என்று அவளரியாமல் விரல் உயர்த்தினான் ரூமிற்குள் செல்லும் வரையில் மனதிற்குள் ஆயிரம் கணக்குகளைப் போட்டு இருந்தான். அறைக்குள் சென்ற அடுத்தவிநாடி திகைத்துப் பின் வாங்கினான் மதன் அறையின் கட்டிலில் அவனின் தாய் அமர்ந்திருந்தார்.

அபிராமி அவரருகில் போய் நின்று சிரித்தபடியே என்ன மதன் கோயிலுக்குப் போயிருக்கிறதா சொன்ன உங்கம்மா இப்படி திடீர்னு வந்து நிக்கிறது உங்களுக்கு ஆச்சரியமா இருக்கா ?! எப்படி உங்க பிறந்தநாளுக்கு நான் கொடுத்திருக்கும் சஸ்பிரைஸ்.

அம்மா…நீங்க

இந்த ஏஸியிலே கூட உங்கபிள்ளைக்கு ரொம்பவும் வேர்க்குது பார்த்தீங்களா ?

வலையில் மாட்டிய பொறி போல பதறி நின்றிருந்தான் மதன்.

ஒரு பெரிய கண்டத்தில் இருந்து உன்னை உங்கம்மா காப்பாத்தியிருக்காங்க மதன். என்னோட பள்ளித்தோழி ரஞ்சனா படிக்க வசதியில்லாம அவ உங்களோட வணிக நிறுவனத்தில் வேலைக்கு வந்தா அங்கே நீ அவளைப் பார்த்து ஆசை வார்த்தைக் காட்டி மயக்கி அவளோட வாழ்க்கையையே சீரழிச்சிட்டே, எதிர்பாராத விதமா அவளை ஒரு மோசமான நிலையில் நான் சந்திச்சேன் அப்போவே உன்மேல எனக்கு கொலைவெறி வந்தது.

கிழிஞ்சிபோய் நாரா கிடந்தா ஆஸ்பத்திரியிலே அப்போ கூட அவளுக்கு உன்மேல கொஞ்ச நஞ்ச நம்பிக்கை ஒட்டிக்கிட்டு கிடந்து. ஆம்பிளைன்னா நீ என்னவேணா செய்வியா ? அவளுக்காகத்தான் நான் உன்னைக் காதலிக்கிறாமாதிரி நடிச்சேன். நீ கூப்பிட்டதும் நான் வந்ததுக்கு காரணம் உன் மேல காதல்ன்னு நினைச்சியா ? தன் ஹேண்ட்பேகைத் திறந்து சிறு பெளடர் போல இருந்த பொட்டலத்தைக் காட்டினாள்.




இது கார்டியாக் அரெஸ்ட் பண்ற போதை வஸ்து இதுலே ஒரு சின்ன சிட்டிகை அளவு நீ குடிக்கிற காபியிலேயோ வேற எதிலேயோ கலந்தா உனக்கு பேரலிஸ் அட்டாக் வரும். இன்னும் கொஞ்சம் அதிக டோஸ் கொடுத்தேன் வச்சிக்கோ அடுத்த இரண்டு மணி நேரத்தில் உன் இதயம் துடிப்பை நிறுத்திடும் நீயே சொல்லு காதலே இல்லாம காமத்தை மட்டும் சுமந்துட்டு யாருக்கும் உண்மையில்லாம அலையற இந்த இதயம் ஓடுனா என்ன நின்னா என்ன ?

அபிராமி….

பயப்படாதே நான் இன்னும் அதைக் கலக்கலை. அதுக்குள்ளேதான் உங்கம்மா குலதெய்வம் மாதிரி வந்து காப்பாத்திட்டாங்களே ?! நேத்து நீ என்னை இறக்கிவிட்டுப்போனதும் ஒரு கார் என் பக்கத்திலே வந்து நின்னது அதிலிருந்து இறங்கினது வேற யாரும் இல்லை உங்கம்மாதான். அந்த நிகழ்வு அவள் கண்முன்னால் ஆடியது.

காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்மணியைக் கண்டதும் திகைப்பினைப் பூசியபடியே யார் என்று பார்வை உயர்த்தினாள் அபிராமி.

உன் கூட கொஞ்சம் பேசணும்

நீங்க…. ?!

நான் மதனோட அம்மா

சரி என்கிட்டே நீங்க என்ன பேசணும்.

என்னமா இது என்பையனைக் காதலிக்கிறே நாளைக்கு அவன் கூட மகாபலிபுரம் போறதுக்கு ஒப்புக்கிட்டு இருக்கே ? அபிராமியின் துணுக்குற்ற பார்வையைக் கண்டதும், நீ யாரு ஏன் மதனைக் காதலிக்கிறா மாதிரி நடிக்கிறேன்னு எல்லா விஷயமும் எனக்கு தெரியும் என்று சொல்லி அவளை வியர்க்க வைத்தார் அந்தம்மாள்

உங்க பையனுக்காக தூது வந்திருக்கீங்களா ?

இல்லைம்மா இன்னொரு தப்பு நடந்திடக் கூடாதுன்னும் நடந்திட்ட ஒரு தவறை நேர்ப்படுத்திடனுன்னு உங்கிட்டே பேச வந்திருக்கேன்.

புரியலையே ?

ரஞ்சனா மதன் விவகாரம் எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது இது குடும்ப விஷயம் பேசித் தீர்க்கணும். பழிவாங்கறேன்னு நீயும் உன் வாழ்க்கையைக் கெடுத்துக்க கூடாதுன்னுங்கிற அக்கறையில் பேசறேன்.

எப்படி அபார்ஷன் பண்ணிடு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தரங்கெட்ட ஒரு மருத்துமனையில் சேர்த்து உயிருக்கு போராடினவகிட்டே கருவை கலைச்சிட்டே இனிமே என்ன ஆதாரம் இருக்கு படுத்ததுக்கு பணம் வாங்கிட்டுப்போன்னு உங்க பையன் பேசினானே அந்தமாதிரி பேச்சு வார்த்தையா ? உங்க பணக்காரங்களுக்கு அதுதானே வரும். அவன் மனசாட்சியில்லாம பேசினான். நீங்க அதையே பூசிமெழுகி செய்யப்போறீங்க ?!

அலட்சியம் தொனித்த வார்த்தையில் பேசும் அவளைப் பார்த்து சிரித்தபடியே, சமீபத்தில நீ ரஞ்சனாவைப் பார்க்கலைன்னு நினைக்கிறேன். என்னைக்கு ரஞ்சனாமதன் விவகாரம் எனக்கும் என் கணவருக்கும் தெரிந்ததோ அப்போதே அவதான் எங்க வீட்டு மருமகன்னு முடிவு பண்ணிட்டோம். பணம் எனக்கொரு பெரிய விஷயமே இல்லை அபிராமி. ஒரு பெண்ணோட சாபத்தை சுமந்துகிட்டு மேல என் குடும்பம் வாழக்கூடாது, நான் ஒரு டாக்டர் என் தோழியோட தொண்டுநிறுவனம் மூலமா ரஞ்சனாவோட கேஸ் என்கிட்டே வந்தது. அந்தப்பொண்ணு தவறான மருத்துவம் பார்த்தது தெரிந்து அவளோட பிரச்சனையை இப்போ கொஞ்சம்கொஞ்சமா குணப்படுத்திட்டு வர்றேன் அவ இப்போ என் மருத்துமனையில் பாதுகாப்பா உடல்நலம் தேறிட்டு வர்றா.




அம்மா அபிராமி அந்த பெண்மணியைப் பார்த்த பார்வையில் ஒரு நம்பிக்கை தென்பட்டது.

நீங்க சொல்றது எல்லாம்

உண்மை…. இப்போவே என் கூட மருத்துவமனைக்கு வா ரஞ்சனாவைப் பார்த்திட்டு பேசு. அவங்க கூட போய் ரஞ்சனாவைப் பார்த்திட்டு வந்தேன். ஆரோக்கியமா முன்பைவிட அழகாவே இருக்கா.

மதன் இந்த பொட்டலத்தை அபிராமிகிட்டே கொடுத்ததே நான்தான், உனக்கு இன்னமும் நேரம் இருக்கு இங்கேயிருந்து வெளியே வரும்போதே நல்லவனா வரப்பாரு இல்லைன்னா அபிராமி செய்ய நினைச்சதை நான் செய்துடுவேன் என்று அம்மா சொன்னதும்.

சொன்னா மாதிரியே உங்கம்மா அவங்க சொல்லைக் காப்பாத்திட்டாங்க. இந்த மாதிரி உத்தமமான அம்மாவிற்கு பிறந்திட்டு, இப்படி கெட்டழியுனுமா மதன் ஒரு பெண்ணை காதலிக்கிறாமாதிரி நடிச்சு அந்தரங்கமான அவளோட உறவை படம் பிடிக்க ஒரு ஆளையும் கூட்டி வந்திருக்கியே நீ எல்லாம் என்ன மனுஷன். கடவுள் இன்னைக்கு என் பக்கம்தான் அதனால்தான் எனக்குப் பாதுகாப்பா  அம்மாவும், நீங்க ஏற்பாடு பண்ணியிருக்கிற கேமிராமேன் சிவாவும் என் பக்கத்திலேயே இருக்காங்க. இன்னொரு முறை இந்த தப்பு நடந்தா நான் மனுஷியா இருக்கமாட்டேன். மதன் தலை குனிந்து நின்றிருந்த தலை நிமிர்ந்து வெளியேறிய அபிராமியைப் பார்த்தான்.

சிவா அவள் பின்னாலேயே கவசமாய் நடந்தான் அவன் நினைப்பில் அபிராமி ஒரு குழந்தையில்லை அவள் உலகம் அறிந்தவள் என்ற கர்வம் தலைதூக்கியது. அவளை விரும்பியதை எண்ணி பெருமையடைந்தான்.

புதிதாய் வந்து சேர்ந்த நான்கு மனிதர்களை கண்கொத்திப் பாம்பாய் கண்காணித்தார்கள் மற்ற குடித்தனக்காரர்கள். இரண்டு பெண்கள் அதில் ஒருத்திக்கு கல்யாணம் ஆகியிருக்கும் போலும் கைக்குழந்தை இருந்தது. கணவனும் மனைவியுமாக நான்கு பேர் கொண்ட குடும்பம். எல்லாரும் சேர்ந்து ஒத்தாசை செய்ய பொருட்கள் கொஞ்சம் தாறுமாறாக உள்ளே ஏறியது. 

வேறு ஏதும் உதவியிருந்தா தயங்காம கேளுங்கம்மா என்றான் சிவா.

நன்றிப்பா ஒத்தையாளா சிரமப்படணுமேன்னு நினைச்சேன்.

நம்ம காம்பெளண்டிலே எந்தளவுக்கு சத்தமும் சந்தடியும் இருக்குமோ அந்த அளவிற்கு அன்பும், அக்கறையும் இருக்கும். அப்போ நான் கிளம்பறேன் அவன் ஒரு குவளைத் தண்ணீரோடு விடைபெற்றான். 

இருங்க தம்பி ராஜம் தன் புடவைத் தலைப்பினை சீராக்கிவிட்டு இன்னைக்கு மதியம் எல்லாருக்கும் நம்ம வீட்டுலேதான் சாப்பாடு பால் காய்ச்சியிருக்கோம் இல்லையா என்றதும் சிவாவிற்கு மறுபடியும் வீட்டுச் சாப்பாடு என்ற சந்தோஷம். நேற்றைய நிகழ்வில் இருந்தே வீட்டுக்கு வந்த அபிராமி இதுவரையில் வெளியே வரவேயில்லை. நடந்தவைகள் அவளை பாதித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், அவள் வெளியே வராதது கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. 

புதுக் குடித்தனத்திற்கு உதவுவதைப் போல அங்குமிங்கும் அலைந்திருந்தான் ஆனால் அபிராமி அம்பாளின் தரிசனம்தான் கிடைக்கவில்லை ஏக்கம் தொனித்த விழிகளோடு காத்திருந்தான். ஜன்னல் வழியாக நின்று அவனைப் பற்றிய சிந்தனைகளை அசைப்போட்டுக் கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை.




What’s your Reaction?
+1
8
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!