Beauty Tips

முகம், கழுத்து என மருக்கள் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..?

மருக்கள் நம்மில் பலருக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. மருக்கள் பொதுவாக கைகள், கழுத்து, முகம், கால் மற்றும் உடலின் அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவை உங்களுக்கு சங்கடமாக இருப்பது மட்டுமின்றி, அழகை கெடுக்கிறது. உங்கள் அழகை கெடுக்கும் மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாவதே.இந்த மரு உதிர சில மருத்துவக் குறிப்புகள் உங்களுக்காக.




  • 1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து , வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.




  • வெங்காய சாற்றினை இரவில் தூங்கு முன் மருக்களின் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • எலுமிச்சம் பழம் சாறில் மஞ்சள் தூள் கலந்து, இந்த கலவையை பஞ்சில் நனைத்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • ஆப்பிள் சீடர் வினிகர் மருக்களை அகற்ற உதவுகிறது. காட்டனை எடுத்து அதில் ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து மருக்கள் மீது தடவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி ஏதாவது ஒரு குறிப்பை தொடர்ந்து  செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!