Beauty Tips

நரை முடிக்கு இயற்கையான மருதாணி ஹேர் பேக்

நரை முடி, இளநரை மறைந்து கூந்தல் கருகருன்னு அடர்த்தியாக வளர மருதாணி ஹேர் பேக் இன்று பெருமளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா நாட்டவரும் பயன்படுத்தக் கூடிய இந்த ஹென்னா ஹேர் பேக் எப்படி எளிதான முறையில் வீட்டிலேயே தயாரிப்பது? இதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் என்னென்ன? பயன்படுத்த வேண்டிய முறை என்ன? என்பது போன்ற எளிய அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

மருதாணி ஹேர் பேக் தயாரிக்க தேவையான பொருட்கள்:

மருதாணி பொடி – அரை கப்

தேயிலை தூள் – ஒரு டீஸ்பூன்

காபித்தூள் – ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு

நாட்டுக்கோழி முட்டை – 2




மருதாணி ஹேர் பேக் தயாரிக்கும் முறை:

  • மருதாணி ஹேர் பேக் தயாரிப்பதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வைத்துக்  கொள்ளுங்கள். நன்கு தண்ணீர் கொதித்ததும் ஒரு டீஸ்பூன் தேயிலை தூளும், ஒரு டீஸ்பூன் காபி தூளும் சேர்க்க வேண்டும். எந்த பிராண்டட் பவுடர் நீங்கள் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலை இலைகளை பிரஷ்ஷாக கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை சுண்டி பாதி அளவிற்கு வர வேண்டும். அந்த அளவிற்கு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து முற்றிலுமாக ஆறவிட்டு விடுங்கள். கொஞ்சம் கூட சூடு இருக்கக் கூடாது.




  • பிறகு சிறிய பவுல் ஒன்றை எடுத்து அதில் அரை கப் அளவிற்கு வருமாறு மருதாணி பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். மருதாணியை காய வைத்து பவுடர் ஆக்கி நீங்கள்  வைத்திருந்தாலும் சரி அல்லது கடையில் வாங்கிய மருதாணி பவுடராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் மருதாணி பவுடரை கடையில் வாங்குவதாக இருந்தால் ஆர்கானிக் கடைகளில் வாங்குங்கள். இதனுடன் நீங்கள் ஆற வைத்துள்ள கலவையில் இருந்து சிறிதளவு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல கரைத்துக் கொள்ள வேண்டும்.

  • இப்பொழுது மருதாணி ஹேர் பேக் கிட்டத்தட்ட ரெடி! இதனுடன் உங்கள் முடியின் அளவுக்கு ஏற்ப ஒரு நாட்டுக்கோழி முட்டையிலிருந்து, இரண்டு முட்டைகள் வரை சேர்க்கலாம்.

  • டீ தூள், காபி தூள் கலந்த இந்த கலவையை ஊற்றியதும் நீங்கள் ஒரு இருபது நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள், அது கருப்பாக மாறிவிடும். அதன் பிறகு  முட்டையை கலந்து தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து பேக் போட வேண்டும். பிறகு ஒரு பாலிதீன் கவரால் தலையை கவர் செய்து ஒரு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் போல தலையை அலசினால் போதும், கருகருவென்று ஒரே வாஷில் நல்ல ஒரு ஷைனிங்கான கூந்தல் அலைபாயும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!