Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-15

15 

அந்தமான் தீவிற்கு வந்து நான்கு நாட்கள் சுமுகமாய் சென்று விட்டது.

எதிர்பார்த்ததை விடவும் குழந்தைகள் ஒட்டிக் கொண்டனர்.அவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் சொல்லித் தருவது என் வசந்தி பிசியாகி விட்டாள்.

மலரும் ஓரளவு அக்குடும்பத்து உறுப்பினர்களுடன் பழகி இயல்பாய் இருக்க முயன்றாள்.இருப்பினும் அவ்வப்போது ஆனந்தனின் நினைவு புதைமணலாய் அவளை உள்ளுக்குள் இழுத்து. வலுக்கட்டாயமாய் அதைத் திருப்பினாள்.
இவள் தனித்திருந்த சமயங்களில்,  பெரியம்மாவே கூப்பிட்டுவார் அந்தம்மாளுடன் பேசுவது மனதிருக்கு ரொம்ப தெம்பளித்தது. ஆன்மிகம் கலந்த அவரின் உரைகளை ரொம்பவே ஊன்றி கேட்டாள்.

“இந்த சின்ன வயசிலே ஆன்மீகத்திலே உன்னோட ஈடுபாடு எனக்கே வியப்பா இருக்கு.”




“மனசு வலியை மறைக்க எத்தனையோ உத்திகள் அதில் ஒன்றுதானேம்மா இந்த ஆன்மிகம். கடவுள் என்ற கண்ணுக்கு தெரியாத உருவத்தின் மீது மனிதன் வைக்கும் நபிக்கை தன் எண்ணங்கள் நிறைவேற வைக்கும் கோரிக்கை. இவையெல்லாம் தானே மனிதப் பிறவியின் நடப்புகள். கடவுள் படைத்த உணர்வுகளிடையே சிறந்தது சிரிப்பும் அழுகையும் மட்டும் தான்.

“பறவைகள் தங்கள் சிறகுகளை விரிப்பது போல் மனிதன் தன் கவலைகளை உதிர்த்தால் நம்மால் இன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடிவது போல், துன்பத்தை தாங்க முடிவது இல்லையே,பிறக்கும் போதே மனிதனுக்கு அழ தெரிந்திருப்பது கடவுளின் பரிசுதான்.”

“நல்ல பேசறே மலர்… அத்தனையும் அனுபவம் வாய்ந்த சொற்கள்.”

“அனுபத்திற்கு வயசு தேவையில்லைம்மா.”

“உண்மைதான், மலர்! நவராத்திரி வரப்போகுது.அவர் போன பின்னாடி நான் இதையெல்லாம் எடுத்து செய்யறது இல்ல. என்னவோ இந்த வருடம் செய்யன்னுமின்னு தோணுது. நீயே எடுத்து செய்யறீயா?”

“எனக்கு அதெல்லாம் …!

” நான் சொல்லித் தர்றேன் மலர்”

“சரிம்மா, என்னென்ன தயார் செய்யனுமின்னு லிஸ்ட் எழுதிடலாம். “மலர் பேப்பரும்,பேனாவுமாய் பெரியம்மாளின் அருகில் அமர்ந்தாள்.குழந்தைகள் புத்தகத்தை எடுத்து டேபிளில் மேல் பரப்பினர். வசந்தி இரண்டு கோப்பைகளில் போர்ன் விட்டாவை நிரப்பிக் கொண்டு வந்து தந்தாள்.

“ஆன்ட்டி இன்னைக்கு நிறைய ஹோம் வொர்க் இருக்கு.”

“சரி நாம கொஞ்சம் காலார நடப்போம் அப்புறம் படிச்சா மனசிலே பதியும்.”

“உங்களுக்கு யார் சொன்னது ?”

“எங்கம்மா?”

“ஆன்ட்டி உங்களுக்கு அம்மா இருக்காங்களா?”

“இல்லை எனக்கு 10 வயசு இருக்கும் போது  இறந்திட்டாங்க?”ஆர்த்தி அருகே வந்து வசந்தியின் கைகளை பற்றிக் கொண்டாள். “பாவம் ஆன்ட்டி! நீங்க நெஜமாகவே எனக்கு இப்போதான் ரொம்ப பிடிக்குது. ஏன்னா எனக்கும் அம்மா இல்லை.”வசந்தி அந்த குழந்தைகளை இழுத்து நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்.

“பாருடா கண்ணு இனிமே நீங்க இரண்டு பேருமே என்ன தேவைன்னாலும் என்கிட்டே கேட்கலாம். நானே செய்து தருவேன்.” சிறிது நடைக்கு பின் படிக்க அமர்ந்தனர்.

“பரவாயில்லையே நீங்க இரண்டு பேரும் நான் எதிர் பார்த்ததை விடவும் சமத்தா இருக்கீங்களே?”

“ஆன்ட்டி என்னோட பென்னில் இங்க் போடறேன். “அவள் சொல்லிக் கொண்டு இருக்கம் போதே, ஆகாஷ் பாட்டிலை கை நழுவி போட்டுவிட நொறுங்கி போனது.

வசந்தி எங்கே திட்டுவாளோ என்று பயத்தில் ஆகாஷ் நடுங்க, “அச்சச்சோ தள்ளு!ஆகாஷ் உன் கையிலே ஏதும் குத்தலையே! முதல்ல உடைந்ததை சுத்தம் செய்தாள்.

“ஸாரி ஆன்ட்டி ?”

“பரவாயில்லைடா…”

“ஏன் ? ஆன்ட்டி நான் பாட்டிலை உடைச்சிட்டேன் உங்களுக்கு என் மேல கோவமே வரலையா ? இதுவே பாட்டியா இருந்தா என்ன திட்டுவாங்க.”

“ஆமாம் … எங்க மேல உங்களுக்கு கோவமே வராதா?” ஆன்ட்டி – ஆர்த்தி.

“உன்னை திட்டரதால மட்டும் உடைஞ்ச பாட்டில் சரியாயிடுமா இனிமே எந்தப் பொருளையும் பார்த்து எடுக்கணும் புரியுதா ? இதே கண்ணாடி சில்லு உன் காலிலோ கையிலோ பட்டுயிருந்தா என்னாகும்.”




“ஸாரி ஆன்ட்டி……….”

“ஓகே. செல்லம், சரி நீங்க சாப்பிட்டு தூங்குங்க.”

“ஆன்ட்டி எங்க ஸ்கூல்ல எக்சிபிஷன் நடக்கப் போகுதாம் எனக்கு ஸ்கூல் பார்மட் செய்து தர்றீங்களா?”

“ஆமாம் நான் கூட பேன்சி டிரஸ் போட்டியில் சேர்ந்திருக்கிறேன்.” என்றான் ஆகாஷ்.

“சரி நான் ரெடி பண்ணிடறேன் நீங்க போய் சாப்பிடுங்க.”

அதிகாலைச் சூரியன் தன் மஞ்சள் நிற வெய்யில் விதைகளைத் தூவிய படியே வளம் வந்தான் வானவீதியில்.!

அடர்ந்த பனிமலை சிகரம் ஒன்றின் மேல் மலரும், ஆனந்தனும் எதிரெதிராய் ஒருவரையொருவர் பார்த்தபடி.
“மலர் இன்னும் எத்தனை நாள் தான் என்னிடம் பாராமுகமாகவே இருப்பாய் என் அன்பு உனக்கு புரியவே புரியவே செய்யாதா?”

வெள்ளை போர்வையாய் போர்த்தியபடி அருவி விழ,அதன் முன்பு நின்று கண் கலங்கியபடி பேசிய அவன் என் காதலை உணரவைக்க இதை தவிர வேறு வழியில்லை என்று கூறியபடியே அருவியில் விழுந்துவிட, ‘ஆனந்த்’ என்று அலறியபடியே எழுந்த மலரை வியப்பாய்ப் பார்த்தாள் வசந்தி.

“ஏய் ! மலர் என்னாச்சு ? எதாவது கெட்ட கனவு கண்டியா ?”

மலர் ஏதும் பேசவில்லை, தண்ணீர் வேண்டுமென்று கைசைகை மட்டும் செய்ய, தண்ணீர் கொடுத்து, வியர்வையை துடைத்து மீண்டும் படுக்க வைத்தாள்.

மணி ஐந்தைத் தொட்டிருக்க, தெர்மாகோல், கத்திரிக்கோல் கலர் பேப்பர் சகிதம் சேரில் அமர்ந்தாள் வசந்தி, தெர்மகோலின் மேல் கலர் பேப்பர் ஒட்டி,சிறிய அட்டையின் மூலம் ஸ்கூல் முகப்பை வரைந்து அளவாய் வெடி ஒட்டினாள். மெழுகு பொம்மைகள் ஆங்காங்கே நிற்க வைத்தாள். சின்னதாய் நெட் கட்டி புட் பால் கிரவுண்ட் அமைத்தாள். கேட் கம்பிகளுக்கு பதிலாக தீக்குசிகளை அடுக்கினாள். திருப்தியாய் இருந்தது.
ஆகாஷிர்க்கா, ஆரஞ்சு பழநிற உடைய தாயர் செய்து வைத்தாள்.

நேற்றே பார்லரில் ஆர்டர் பண்ணியிருந்தது பள்ளி விட்டு வரும் போது வாங்கி வந்தது.
குழந்தைகள் இதப் பார்த்தால் மிகவும் மகிழ்ந்து தான் போவர்கள். அதற்குள் மலர் அருகில் வந்தாள் “என்னக்கா இது?”

“ஆர்த்தி ஸ்கூலில் இன்னைக்கு மதியம் எக்சிபிஷன் அவங்களுக்கத்தான் இதை செய்யுறேன்.

ஆமா மலர் நீயேன் அப்படி கத்தினே ?” நினைவு வந்தவளாய் கேட்க.”

“ஏதோ கெட்ட கனவு அக்கா, அதை விடு, நீ ஸ்கூலுக்கு போயிட்டு எப்ப வருவே?”

“ஏன் மலர் ?”

“வந்த நாளிலிருந்தே என்னோட வேலை என்னேனே தெரியலை,மனசு தேவையில்லாம எதை எதையோ நினச்சு கவலை படுது.”

“நீ வருத்த படதே மலர் ! நானே உன்னப் பற்றி ராஜ்கிட்டே கேட்டேன்.அவர் நாளைக்கே உன்னை ஆபிசிற்கு கூட்டிப் போவதாக சொல்லியிருக்கிறார். இப்போ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன் நீயும் வாயேன் உனக்கும் ஒரு மாறுதலா இருக்குமே.”




“இல்லைக்கா பெரியம்மா நவராத்திரி கொலுவிற்கு ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்காங்க நான் அந்த வேலைய கவனிக்கப் போறேன்.”

சொல்லிவிட்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள் மலர்.

தண்ணீர் இதமாய் உடலில் இறங்கிட மனம் காலையில் கண்ட கனவை எண்ணி ஊமையாய் அழுதது.
குளித்து உடை மாற்றியவள் “மலர்” என்ற குரலால் ஈர்க்கபட்டு வெளியே வந்தாள். “என்னம்மா நீங்க ? என்னைக் கூப்பிட்டு விட்டிருந்தா நானே வந்திருப்பேனே ?”

“உன் கூட கொஞ்சம் பேசலாம் என்று வந்தேன். வாயேன் வீட்டுக்கு.”

“இதோ,” இலேசாய் அறையைச் சாத்தி விட்டு இறங்கி பெரியம்மவோடு நடந்தாள்.

“என்ன விஷயம்மா ?”

இன்னைக்கு என் மருமகளோட பிறந்தநாள், வருஷா வருஷம் அவளுக்கு பட்டுபுடவை எடுத்து தருவது வழக்கம். கடந்த மூணு வருஷமா யாருக்காவது இதை தருவது வழக்கம்.

இந்த வருசம் உனக்கு தான் தரனும் என்று நினைத்தேன் வாங்கிக்கோமா.”

” ஐயோ எனக்கு உங்க அன்பு ஒண்ணே போதும்மா இதெல்லாம்…..”

“மூச்… ஏதும் பேசக் கூடாது வாங்கிக்க.:அதற்கு மேல் மறுக்க மனமின்றி புடவை.இரவிக்கை.வளையல் சகிதம் இருந்த தாம்பலத்தை பெற்றுக் கொண்டாள்.




மலர் காலையிலேயே சின்னவன் போன் பண்ணினான் உங்கப்பாவிற்கு உடல் நலம் தேவலையாம் அதனால, இன்னும் ஒரு மதத்தில் ஆபரேஷன் செய்திடலாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்கிறாராம்.

“அப்படியா ?”

“ஆமா நீ உன் அம்மாவிற்கு போன் பண்ணியா ?”

“இல்லைமா, பேசினா அம்மவோட நினைப்பாகவே இருக்கு .”

“சரி இப்போ போன் பண்ணுமா,வெளியூர் போயிருக்கிற பிள்ளை போன் பண்ணலைன்னா பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்”மலர் தொலைபேசியை சுழற்றினாள், “அம்மா நான் மலர் பேசறேன்.”

“பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு, அப்பாவின் உடல்நிலை தேறி இருப்பதாகவும், தம்பி தங்கைகள் நலத்தோடு, ராஜனின் தம்பி வந்து சகல உதவிகளையும் செய்வதாய் கூறினார். மேற்கொண்டு சில விஷங்களை பேசிய பிரு, போனை கட் பண்ணினாள்.”

“அம்மா நிச்சயம் உங்க எல்லாருக்குமே நாங்க கடமைப்பட்டு இருக்கோம்.”மலர் கை  கூப்பினாள்.”விடும்மா இது ஒரு சாதாரண உதவி, சரி கொலுவுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கணும் வாயேன்.”

கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வராலம்.அலைபாயும் எண்ணத்தை கட்டுப்படுத்த இது நல்ல வழியென பட்டது.




What’s your Reaction?
+1
16
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!