Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-11

11

சுகம் மருத்துவமனை சுகமான வாசனையோடு இயங்கிக் கொண்டு இருந்தது. குமாரை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்க மலர், வசந்தா,மகேஸ்வரியோடு ராஜனும் வந்து சேர்ந்து கொண்டான். அவன் கையில் புதிய பைல் ஒன்றும் முளைத்திருந்தது.

வாங்க ராஜ். சித்தி இவர் தான் பாதர் சொன்ன ஆள் மிஸ்டர் ராஜன்.

வசந்தியின் அறிமுகத்தைத் தொடர்ந்து மகேஸ்வரியும்,ராஜனும் பரஸ்பரம் வணக்கம் கூறிக் கொண்டார்கள்.

வசந்தி டாக்டர் என்ன சொன்னார்?

செக் பண்ணிட்டு இருக்கார். அவள் சொல்லும்போதே ஸ்டாப் நர்ஸ் வந்து டாக்டர் உங்களை அழைக்கிறார் என்றாள்.

வணக்கம் டாக்டர்

“யெஸ் “

ப்ளீஸ் பீ ஸீட்டட் என்று நாற்காலியைக் காட்டிட, வசந்தியும் ராஜனும் அமர்ந்தார்கள். தாயும் மகளும் தவிப்போடு காத்திருந்தார்கள்.

டாக்டர் இப்ப மிஸ்டர் குமாருக்கு எப்படியிருக்கு?அவர் புன்னகைத்தார். அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை,

அப்படின்னா, உடனே ஆபரேஷன் பண்ணிடுங்க டாக்டர்!அதுக்கு என்ன பணம் செலவாகுமோ அதை நான் தந்திடறேன்.

ஸார்.. பணம் இருந்தா மட்டும் உடனே ஆபரேஷன் பண்ணிட முடியுமா?அந்த ஆபரேஷனை அவருடைய உடல்நிலை தாங்க வேண்டாமா?

என்ன டாக்டர் சொல்றீங்க?




பேஷண்ட்டுக்கு இப்போ ஒரு ஆபரேஷனை தாங்கக் கூடிய அளவிற்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை, அதனால அவருக்கு இன்னும் ஒரு மாதம் கழித்து தான் ஆபரேஷன் செய்ய முடியும்,

அப்படி நடந்தா அவர் உடனே குணமாயிடுவாரா?

அம்மா என்னதான் இருந்தாலும் கடவுள்னுஒருத்தர் இருக்கார் இல்லையா? ஆபரேஷனுக்கு பிறகு பிஸியோ தெரபிஸ்ட் சொல்கிறபடி உடற்பயிற்சிகள் செய்தால் ஆறு மாதங்களுக்குள் குணமாகிட வாய்ப்புண்டு,

நன்றி டாக்டர்! நாங்க உங்களைத்தான் மலைமாதிரி நம்பி இருக்கோம்.

கடவுள் நல்லவங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.அனைவரும் டாக்டரின் அறையை விட்டு வெளியேறி ராஜனின் காரிலேயே வீட்டிற்குச் சென்றனர். தந்தையைப் படுக்கையறையில் பக்குவமாய் கிடத்தி வெளியே வந்தாள் மலர், ராஜன் நடுநாயகமாய் சேரில் அமர்ந்திருந்தான்.

ரொம்ப நன்றி தம்பி ! மகேஸ்வரி அம்மாதான் வாய் திறந்தாள்.

என்னமா நீங்க வயசிலே பெரியவங்க நீங்க போய்…

பரவாயில்லை தம்பி ! எங்க வீட்டுக்கு மறுபடியும் வெளிச்சத்தைத் தரப்போறீங்க, அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?

அம்மா நானும் உங்களைப் போல ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவன்! என் மனைவியும், எங்கப்பாவும் ஆக்ஸிடெண்டுலே இறந்திட்டாங்க, உறவுகளுடைய முக்கியத்துவம் அருமையும் எனக்குத் தெரியும்.

உண்மை தான் ஸார்! காலத்தினால் செய்த உதவி சிறியதாய் இருந்தாலும்,அது பெரியதாய் தானே காணப்படும். ஆனா இப்போ நீங்க செய்றது ரொம்பப் பெரிய உதவி இல்லையா?

பரவாயில்லைம்மா? நான் இப்போ வந்தது இந்த செக்கை தரத்தான்.

இதிலே 20,000 ரூபாய்க்கு செக் இருக்கு. ஆஸ்பிட்டல்ல 15,000 கட்டியிருக்கேன் மீதி செலவுக்கு மலரும், வசந்தியும் ஊருக்கு வந்த பிறகு கிடைக்கும்.

நன்றிப்பா..

அடிக்கடி நன்றி சொல்லி என்னை அந்நியனாக்கிடாதீங்கம்மா.உங்க குடும்பத்தை பற்றியும் வசந்தியைப் பற்றியும் பாதர் நிறைய சொல்லி இருக்கார். மலருக்கும் வசந்திக்கும் ஏர்டிக்கெட் ரெடி ஆயாச்சு., அவங்க இன்னும் 4 நாட்களில் புறப்பட வேண்டியிருக்கும்.

தம்பி! நாங்க இந்த இரண்டு பெண்களையும் உலகம் புரியாம வளர்ந்திட்டோம். இப்போ அத்தனை தூரம் அனுப்ப மனம் சங்கடப்படுது.

அம்மா நீங்க பயப்படணுமின்னு அவசியமே இல்லை, இவங்க ரெண்டுபேருமே ஒரு ஆரோக்கியமான சூழலில் தான் இருப்பாங்க.தவிரவும் எங்க அம்மா என் குழந்தைகள், வேலையாட்கள் துணையோடு எங்க அவுட் ஹவுஸில் பாதுகாப்பா தங்கி இருப்பாங்க! ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கறது எங்க பொறுப்பு !

அதன் பின் அவன் மலரின் தந்தையை அணுகினான்.

அய்யா! இந்த வேலைக்கு எனக்கு ஏகப்பட்ட ஆர்டர் வந்தது. இருந்தாலும் பாதர் ரெக்கமண்ட் பண்ணினால்தான் நான் இவங்களைத் தேர்ந்தெடுத்தேன். அப்புறம் வசந்தி !இது வேலைக்கான காண்டிராக்ட் படிச்சிப் பார்த்திட்டு கையெழுத்துப் போடுங்க. என்று சின்ன பைலை அவர்களிடம் தந்தான்.

மலர் அதை வாங்கிப் படித்தாள்.

இன்னாருக்கு இன்னார் என்று பெயரிட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி எழுதியிருந்ததோடு, சம்பள விவரமும், வேலை பற்றிய விபரமும்,மேற்கொண்டு இந்த காண்ராக்ட் முடியும் வரை அந்தமானில் இருக்க ஒப்புக் கொள்கிறோம் என்றும் எழுதியிருந்தது.




மலரும் வசந்தியும் அதில் கையொப்பமிட்டு ஒரிஜினல் அவர்களிடமே தரப்பட்டது. அதேபோல் ராஜனும்,அவர்களின் சுய மரியாதைக்கு தன்னால் எந்த பாதிப்பும் வராது என்றும் கையெழுத்திட்டுத் தந்தான்.

நான் கிளம்பறேன்மா,.

இருங்க தம்பி சாப்பாடு ரெடி பண்ணிடறேன் சாப்பிட்டுப் போகலாம் என்றார் மகேஸ்வரி.

பரவாயில்லைம்மா! அவன் கிளம்பி விட்டான். ஏன் ராஜ் ? அக்ரிமெண்ட் தேவையா என்றாள்.

தெரியலை வசந்தி,நேத்து ஆசிரமத்தில் இருந்து வந்தவுடனே ஆனந்தன் தான் இதை செய்யச் சொன்னான். நானும் கேட்டேன். எதை செய்தாலும் முறையாகச் செய்யணும் அப்பதான் அவங்க குடும்பம் நிம்மதி அடைவாங்கன்னு சொன்னான்.

தவிரவும் வெளியூர் வேலைன்னு வரும்போது இதெல்லாம் அவசியமான ஒன்றுதானே.

ம்.. அப்போ நான் நாளைக்கு போன் பண்றேன். எல்லாம் ரெடி பண்ணி வைச்சிடு வசந்தி! ராஜ் கிளம்பி விட்டான். வசந்தி ஒரு பெருமூச்சோடு உள்ளே நுழைந்தாள்.




What’s your Reaction?
+1
16
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!