Beauty Tips அழகு குறிப்பு

தொப்புளில் மஞ்சள் தடவுங்கள் -மாற்றத்தை பாருங்கள்

                                                                    அழகு குறிப்பு

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் தரும் சிறந்த பொருள். ஆனால் தொப்புளில் தடவினால் நாம் பல்வேறு பயன்களை அடையலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?




ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்கள் கொண்ட மஞ்சளை நாம் சமையலறையில் மசாலாவாக பயன்படுத்தி வருகிறோம். ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை பற்றிய பல ஆரோக்கிய குறிப்புக்கள் சொல்ல பட்டு இருக்கிறது. மஞ்சள் உடலுக்கு மிகவும் நல்லது சிறந்த வலி நிவாரணி என்றும் கூறலாம்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் உடல் வலி தீரும். நம் சருமம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை மஞ்சள் தீர்க்கிறது. ஆனால் இதை தொப்புளில் தடவி வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. உங்களுக்கு நாங்கள் கூறும் இந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமாக தெரியலாம். ஆனால் இது இயற்கை தான். மஞ்சள் நம் செரிமான மண்டலத்தை நன்கு இயங்க வைக்கிறது, மாதவிடாய் வலிகளை நீக்குகிறது மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் வியாதிகளை துரத்தி விடுகிறது. எப்போது, எப்படி மஞ்சளை பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் வாசித்து  தெரிஞ்சுக்கலாம்.




எப்போது மஞ்சளை தடவ வேண்டும்?

    • நீங்கள் 1-2 மணி நேரம் ஓய்வு எடுக்க நினைக்கும் போது மட்டுமே இதை தொப்புளில் தடவ வேண்டும்.

    • இவ்வாறு நாம் செய்யும் போது, மஞ்சளில் உள்ள தன்மைகளை நம் தொப்புள் எளிதில் உறிஞ்சி விடுகிறது.

    • எனவே இதற்கான சிறந்த நேரம் இரவு நேரம் தான்.

    • இதற்கு மேலும் நன்மைகள் தரக்கூடியது நாம் தூங்க செல்லும் நேரம் தான்.

நன்மைகள் மற்றும் எப்படி தொப்புளில் மஞ்சளை தடவ வேண்டும்?

  • மஞ்சளில் அதிக அளவில் ஆன்டி பாக்டீரியா குணங்கள் உள்ளது. உங்களுக்கு அஜீரணம் அல்லது மலச்சிக்கல் காரணமாக, வயிற்றில் வலி அல்லது வீக்கம் இருந்தால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொப்புளில் தடவ வேண்டும். இது வயிறு வீக்கத்தை குறைக்கிறது.

  • பல பெண்கள் மாதவிடாயின் போது அதிகமான வலியை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இது போன்ற சமயத்தில், மாதவிடாய் வலி மற்றும் வயிற்று பிடிப்புகளை சரி செய்ய மஞ்சளை தொப்புளில் தடவி வரலாம்.

  • ஆன்டி பாக்டீரியா குணங்கள் கொண்ட மஞ்சளை கடுகு எண்ணெயுடன் கலந்து தொப்புளில் தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் குளிர் காலத்தில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கள் நமை அண்டவே அண்டாது.




 

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!