Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -14

அத்தியாயம்-14

“பசங்கள பத்திரமா பாத்துக்கோங்க நீங்க ஒரு பக்கம் போனீங்கன்னா அவங்க ஒரு பக்கம் போயிட்டு தான் இருப்பாங்க…இங்கே எது வழின்னு தெரியாம மாட்டிக்கிட்டா அப்புறம் என்ன நடக்குன்னு எங்களுக்கு தெரியாது? அதுக்கு நாங்க பொறுப்பில்லை.”

அவனுடைய பதில் கடுமையாக வந்தது அப்பாவும் அம்மாவும்   பேச்சிழந்து நின்றார்கள்.




“தம்மாத்தூண்டு பையன் என்ன பேச்சு பேசுறான் என்ன மிஞ்சிமிஞ்சிப் போனா ஒரு பதினாறு பதினேழு வயசு இருக்குமா? சரி வாங்க அதுக்குதான் வெளிச்சம் இருக்கும் போதே வந்து பார்த்துட்டு போகணும்னு சொன்னது.”

என்ன காரணமோ மீண்டும் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

அத்தோடு அந்த நிகழ்ச்சி முற்றுப்பெறவில்லை. திரும்பவும் அவனை சந்தித்தாள். ஆனால் அந்த சந்திப்பு ஒரு பெரிய பிரச்சனையில் கொண்டு போய்விட்டது.

மோகனா குடும்பம் அருகில் இருந்த ஒரு வீட்டில் தங்கி இருந்தது. அப்பாவின் நண்பர் வீடு என்பதால் இவர்கள் தங்கியிருக்கும் ஒரு மாத காலமும் சாப்பாடு அத்தியாவசிய பொருள்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பதற்கு நண்பர் உதவி செய்தார்.

அப்படி ஒரு நாள்  மதிய சாப்பாட்டை எடுத்து வந்து கொடுத்தான்  அரண்மனையில் இருந்த அந்தப் பையன். அப்பா அம்மா இருவரும் கோவிலுக்கு சென்றிருந்ததால் இவளும் இவள் தங்கையும் வெளிப்புறத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் பாதுகாப்பிற்கு வாட்ச்மேனும் அவர் மனைவியும் இருந்ததால் அப்பா அம்மா அடிக்கடி வெளியில் சென்று வருவது வழக்கமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தான் அந்தப் பையன்.

இருவரும் அவன் வந்ததைக் கவனிக்கவில்லை. விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். உள்ளே சென்றவன் அறையில் சாப்பாட்டை வைத்து விட்டு வெளியில் வந்தான். அப்போது தான் இவள் அவனை பார்த்தாள்.

அவனும் இவளை கோபத்தோடு பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து வெளியில் சென்றிருந்த அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தார்கள். இவர்கள் இருவரையும் சாப்பிட வருமாறு அழைத்தார்கள்.

முன்னே சென்று கதவைத் திறந்த அம்மா லபோ திபோ என்று கத்தத் தொடங்கினாள். அவள் கழற்றி  வைத்திருந்த தங்கச் சங்கிலியை காணவில்லை என்பது பிறகு தான் தெரிந்தது. நீங்க ரெண்டு பேரும் எங்க தான் இருக்கீங்க ரூம்குள்ள யாரும் வந்தா உனக்கு தெரியும் இல்ல என் சென்னை இந்த  டேபிள் மேலதான் கழற்றி வச்சேன்.

அழுது கொண்டே அம்மா கேட்ட போது இருவரும் பேந்த பேந்த முழித்ததுதான் மிச்சம்.




“நான் பார்க்கலம்மா இவளை கேளுங்க இவளுக்குதான் தெரியும். பாரதி  மோகனாவை சுட்டிக்காட்ட அப்பா அருகில் வந்து,

“மோகனா இந்த ரூமுக்கு யார் வந்தாங்க நல்லா யோசிச்சு சொல்லு?”

தலையை ஆட்டியபடி யோசித்தவளுக்கு முதலில் ஞாபகம் வந்தது அந்த பையன்தான் சாப்பாடு கொண்டுட்டுவந்த அரண்மனை காவலாயின் மகன்தான்.




What’s your Reaction?
+1
9
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!