Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-4

4

பெசண்ட்நகர் பிளாட், மற்ற பில்டிங்களுடன் கோபித்துக் கொண்டாற்ப்போல் தனித்திருந்தது. 2 -வது ப்ளாக்கில் 26 -ம் எண்ணை கண்டுபிடித்து பர்சரை அழுத்தினாள் மலர்.

“கதவைத் திறந்த மானேஜர் ஒரு இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.

“வாங்க…. வா மலர் என்ன திடீர் விஜயம் ? இட்ஸ் ஏ ப்ளசன்ட் சப்பரைஸ்டு மீ !”

“சார் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“உள்ளே வாங்க மலர்.”

மலர் உள்ளே நுழைந்தாள், சிகரெட் நாற்றம் வயிற்றைப் புரட்டியது.

“மேடம் இல்லையா ?” அவளின் கண்கள் தேடின.

“இல்லே ஷாப்பிங் போயிருக்கா ? என்ன சாப்பிடறீங்க மலர் ?”

“எதுவும் வேண்டாம் சார் ! நான் உங்ககிட்ட அபிஷியலா ஒரு விஷயமா பேச வந்தேன்.”

“உட்காருங்க ? என்ன விஷயம் ?”

நாற்காலியின் நுனியில் அமர்ந்தவள் பேச்சை ஆரம்பித்தாள். ஆனால், தான் இந்த நேரம் வந்திருக்கக் கூடாதோ என்றும் எண்ணினாள்.

“சார் ! ஆபிசில் அக்கௌன்டன்ட் கணேசன் நாலுநாள் முன்னாடி எங்கிட்ட ப்ரோபோஸ் பண்ணினார். ஆனா நான் அக்ஸப்ட் பண்ணலை, நேத்து நைட்டு ரோட்ல வைச்சு என்னை ரொம்பவும் அசிங்கமா பேசிட்டார்.”

“இடியட் என்ன சொன்னான் ?”

“நான் ஒரு நாள் மழையிலே, பஸ்டாண்டிலே நின்னுகிட்டு இருந்தப்போ நீங்க கார்ல என்ன டிராப் பண்ணிங்களே ! அதை வைச்சு நம்ம இரண்டு பேரையும் தப்பா பேசறான்.”

“அப்படியா ?”

“ஆமா சார் ! நீ மட்டும் என் விருப்பத்திற்கு சம்மதிக்கலைன்னா உன்னையும் மேனஜர் பேரையும் சேர்த்து ஆபிஸ் பூரா நாறடிச்சுடுவேன்னு சொல்றான் சார்.”

“ஏன் மலர் ? கணேசனுக்கு என்ன தண்டனை தரலாம், அப்படியே தண்டிச்சாலும் அவன் பேசறத தடுக்க முடியுமா ? நாம ஏன் அவன் பேசினத உண்மையா ஆக்கிவிடக் கூடாது ?”

“என்ன சொல்றீங்க சார் ?”

“எனக்கே அப்படி ஒரு எண்ணம் இருந்தது மலர். ஆனா பாரு கணேசன் முந்திட்டான் . எப்படியோ நான் நினைச்ச மாதிரி நீ வந்திட்டே ! என் எண்ணம் நிறைவேறிடுச்சு,… அவள் கைகளைப் பற்ற வந்த அவனை பலங்கொண்ட மட்டும் தள்ளினாள்.ச்சீ… உன்னைப் பொய் பெரிய மனுஷன்னு நினைச்சு நியாயம் கேட்க வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். என்கிட்டே வராதே தள்ளிப்போ.”

“நல்ல சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு அதை நான் விடுவேனா ?”அவள் தாளிடப்படாத கதவைப் பார்த்தபடியே நகர, தனக்கு இருக்கும் ஒரே வழியும் அடைபடும் என்ற நினைப்பில் அந்த விபதரீதத்தைத் தவிர்க்க எண்ணி, அவனுக்கு முன்னால் கதவை நோக்கிப் பாய்ந்தவள் அவன் கைக்குள் அகப்பட்டுக் கொண்டாள்.
மதுவின் நாற்றமும், பயமும் சூழ்ந்து கொண்டு மயக்க நிலைக்குத் தள்ளப்பட்ட மலர் தன் மொத்த சக்தியையும் பலமாக உபயோகித்து அவனை பிடித்து தள்ளிவிட்டு வெளியே வந்தாள் ! அந்தப் போராட்டத்தின் விளைவாக மயங்கி சரிந்து விழப் போனவளை வலுவான கரம் ஒன்று தாங்கியது.

அரைக்கண் மயக்கத்தில் மிக நெருக்கமாய் ஆனந்தின் முகம் !இது உண்மைதானா என்று விளங்கும் முன் மயக்கம் அவளை முழுமையாக ஆட்கொண்டது.




“மலர் கண்விழித்த போது தான் ஒரு குஷன் போன்ற படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் நோக்கிட அது ஒரு வசதியான வீடு என்பது மட்டும் புரிந்தது.
நாம் எங்கிருக்கிறோம் என்று அவள் குழப்பிக் கொண்டிருக்கையில் அந்த படுக்கையறையின் மூலையில் இருந்து அவள் வெளிப்பட்டாள் .

“ஓஹோ… கண் திறந்தாச்சா பயப்படாதிங்க. நீங்க பாதுக்காப்பான நிலையிலே தான் இருக்கீங்க ? டயர்டா இருக்கும் சூடா ஏதாவது தரேன்.”

“அதிருக்கட்டும் நான் எப்படி இங்கே வந்தேன்.”

“நீங்க எதையோ கண்டு பயந்து மயங்கி விட்டீர்களாம். என் நண்பர் உங்களை தூக்கி வந்தார் என்றாள் அந்த பெண்.”

” யார் அது ?” என்ற மலரின் கேள்விக்கு நான் தான் என்று வெகு கம்பீரமாய் வந்து நின்றான் ஆனந்தன்.
மலர் தன்னையே நம்ப இயலாதவளாய் பார்த்தாள். யாரை பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தாளோ அவன் கண்ணெதிரில் !

“ப்ரியா ! நீ போய் அவளுக்கு எதுவும் சூடா கொண்டு வாயேன்.” அந்தப் பெண் நகரவும்,

“இப்போ எப்படியிருக்கு மலர் ?”
என்றான் அருகில் வந்து நின்று !

“ஆடு நனைவதற்காக ஓநாய் அழுவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.”

“என்ன சொல்லுகிறாய் நீ ஒரு வாரம் கழித்து நான் அங்கே வந்த போது நீ இல்லை !”

“நான் உங்களை எந்த விளக்கமும் கேட்கவில்லையே ?”

“மலர் உன் கோபத்திற்கான காரணம் எனக்குப் புரியவில்லை,நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா ?”

“எதற்கு என் வாழ்வை சீர் குலைக்கவா ?”

“மலர் “

“பேசாதீங்க !

என்னைக்கு உங்களை முதன் முதலாகப் பார்த்தேனோ அன்னைக்கே என் நிலைமை தலைகீழா மாறிப் போயிடுச்சு ! சந்தோஷங்கிற உணர்வை அனுபவிச்சுக் கூட மாறிப் போயிடுச்சு ! சந்தோஷங்கிற உணர்வை அனுபவிச்சிக் கூட மாதக் கணக்காவுது.”

“மலர் ப்ளீஸ் ! என் நிலைமை உனக்கு புரியல.”

“நல்லப் புரியுது !

நீங்க விரும்பிய பெண்கள் வரிசையில் நான் மட்டும் தான் உங்க கைக்கு சிக்கலை,இப்போ கிடைச்ச வாய்ப்பை பயன்படுதிக்க கதை விடறீங்க ? அப்படித்தானே !”

“குற்றவாளிக்கு கூட தன் தரப்பு வாதத்தைக் கூற ஒரு சந்தர்ப்பம் உண்டு.அது கூட எனக்குக் கிடையாது உன்னிடத்தில் !”

“என் உள்ளம் இறுகி பாறையாய் மாறி ரொம்ப நாளாச்சு,அறியாத வயசிலே காதல்ங்கிற பேர்ல நீங்க விதைச்ச விதை இப்போ கருகிப் போச்சு ! எம்மனசுலே இப்போ நீங்க இல்லை தயவு செய்து வழியை விடுங்க !”கையைத் தூக்கிக் கும்பிட்டாள்.

“சரி இப்போ நான் போகிறேன் ஆனா இன்னொரு சமயம் நிச்சயம் என்னோட நிலைமையை உனக்கு புரிய வைப்பேன்.”

“அப்படியொரு சந்தர்ப்பம் என் வாழ்வில் வரவே கூடாதுன்னு இப்பவே நான் கடவுளை வேண்டிக்கறேன் !”
மலர் காபியோடு எதிர்ப்பட்ட ப்ரியாவை ஒரு உஷ்ணப் பார்வை பார்த்து விட்டு வேகமாய் நடந்தாள்.




What’s your Reaction?
+1
16
+1
22
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!