Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-3

3

நட்ராஜ் ரெஸ்டாரன்ட்,குளிரூட்டப்பட்ட ஏஸி அறையில் வசந்தாவும்,ராஜனும் அமர்ந்திருந்தனர்.கிரேப் ஜூஸை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தான் ராஜன். அவன் நல்ல திடகாத்திரமான இளைஞன்,வசந்தி,எதுவுமே பேசமாட்டேங்கற நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா ?”

ராஜனும் வசந்தாவும் கல்லூரித் தோழர்கள், வசந்தா தன் திருமண வாழ்வை இழந்தாற்போல், ராஜனும் ஒரு விபத்தில் தன் மனைவியை பறிகொடுத்தவன் தான். இரண்டு பச்சிளம் குழந்தைகள் அனாதையாக்கிவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டாள் ராணி.

பிள்ளைகளுடன் அந்தமானில் வசிக்கும் நடராஜ் அவ்வப் போது சென்னை வந்து அலுவலகத்தைக் கவனிக்க வருவான்.
அந்த நேரம் ராணியின் நினைவு நாளை ஒரு அனாதை இல்லத்தில் கொண்டாடப்போக அப்போதுதான் பழைய தோழி வசந்தாவைக் கண்டான். அன்றிலிருந்து மீண்டும் துளிர்த்த நட்பு இன்று வரை தொடர்கிறது.

“என்ன வசந்தி இன்னும் மௌனமாகவே இருக்கறே ?”

“பழைய நட்போடு நண்பனா பேசியிருந்தா நான் யோசிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனா நீங்க ?”

“வசந்தி வாழ்க்கையிலே நாம இரண்டு பேருமே இணையைத் தொலைச்சிட்டு நிக்கிறோம்.நாம ஒண்ணு சேருவதில் எந்த தவறும் இருப்பதாய் எனக்குத் தோணவில்லை.”

“ராஜ் ஆசிரமத்திலே எனக்குன்னு ஒரு நல்ல பேர் இருக்கு.தவிரவும் என் ரணங்களுக்கு எல்லாமே ஆறுதலா இருக்கு, இந்த அமைதியான வாழ்க்கை.

“ஆனால் நீ இன்னும் முழுமையாய் வாழல வசந்தி”.

“ராஜ் நான் சொல்ல வந்ததை முதல்ல சொல்லிடறேன்.ஆணோ பெண்ணோ தன் வாழ்வு முழுவதும் யாரவது ஒருவரை சார்ந்து இருப்பது உண்மைதான். இது வரை நம்ம வாழ்விலே அமைதி இல்லைங்கிறது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இனிமே நாம அமைச்சிக்கப் போற வாழ்க்கைக்காவது ஆனந்தமும் சந்தோசமும் வேணும் இல்லையா ?”

“அது தவிர இன்னொரு தோல்வியை தாங்கிக் கொள்ள என் மனசிலேயும்,உடம்பிலேயும் சக்தி இல்லை ராஜ் !” வசந்தி கண்களில் நீர் சுரந்தது.

“ப்ளீஸ் வசந்தி ! கண்ட்ரோல் யுவர் ஷெல்ப், நீ என்னை நம்பலையா ?

வெறும் உடல் தேவைக்காக மட்டும் நான் ஒரு இணையைத் தேடலை,என் கவலை,சந்தோசம் எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு உறவு வேணும், என் குடும்பமும் குழந்தைகளுக்கும் நல்ல வழிகாட்டியா இருக்கணும். அதுக்கு நீ சரியான ஆள் என்பது என் எண்ணம்.

“அதை நான் தப்பு சொல்லலை, ஆனா நாம கொஞ்சம் ப்ராடிக்கலா பேசறது நல்லது.”

“சொல்லு !”

“உங்க குழந்தைக்கு முதலில் என்னை பிடிக்கணும். அவங்க மனசிலே எனக்குன்னு ஒரு அங்கீகாரம் வேணும். அப்படி கிடைக்கிற பட்சத்தில எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை.

” நீ சொல்ல வர்றது எனக்கு புரியல.”

“நான் உங்க குழந்தைகள் கூட பழகணுமின்னு ஆசைபடறேன்.”
ஆனா ஆர்த்தியும் அம்மாவும் அந்தமான்ல இருக்காங்களே நான் இங்கே அழைத்து வர முடியாதே .”

“உண்மைதான்,பெரியவங்களுக்கு கூட இடம் மாறுனா எரிச்சல் வரும், குழந்தையோட மனசு புது சூழ்நிலையை எந்தளவு ஏத்துக்குமோ,அதனால அவங்களுக்கு பழக்கமான சூழ்நிலையில்தான் நான் மனதிலே இடம்பிடிக்க முடியும்.”

“அப்போ நீ அந்தமான் வர்றீயா ?”
இப்போது வசந்தியிடம் மௌனம் நிலவியது.

“அது சரிப்பட்டு வருமா, இங்கே ஆசிரமம் குழந்தைக்களை எல்லாம் விட்டுட்டு,நான் எப்படி வர முடியும் ?”

“சுயநலமில்லாத மனிதர்கள் யார் ?”
வசந்தி எத்தனை பொதுநலவாதியா இருந்தாலும்,அவங்களுக்குள் 10 சதமாவது சுயநலம் ஒளிந்து கொண்டிருக்கும் தாயின் அருகாமையை உணராம தவிக்கிற இரண்டு பிள்ளைகள். அவங்க எதிர்காலம் இதெல்லாம் உன்னால் மட்டும் தான் சரி பண்ண முடியும் வசந்தி.

“ஆனா சித்தப்பாவுடைய குடும்ப நிலைமை இப்போ சரியான நிலையிலே இல்லை.”

“வசந்தி எனக்கு ஒரு யோசனை.”

“என்ன ?”

“உங்க சித்தா ப்பவுடைய மகள் நல்ல புத்திசாலி ! ஆனா பாதியிலே படிப்ப நிறுத்திட்டானு சொன்னியே இப்போ என்ன பண்றா ?”




“ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பாக்குறா ?”

“வசந்தி என் தம்பி ஆனந்தன் அந்தமானில் ஒரு புது பாக்டரி ஆரம்பிக்கிறான் அதுக்கு உதவியாளரா வேலைக்கு ஒரு படித்த ஆள் வேணும்.நான் சொன்னாஅவன் மறுக்க மாட்டான். அம்மாவும் குழந்தைகளை கவனிக்கவும் வீட்டை நிர்வகிக்கவும் ஒரு ஆள் தேவைன்னு சொல்றாங்க, நீயும் அந்த பெண்ணும் ஏன் அந்தமான் வரக்கூடாது .”

“நல்ல யோசனைதான் ஆனா மலரை என் கூட அனுப்ப அவங்க சம்மதிக்கணுமே ?

“பேசிப்பாரு,புரியவை ! அவங்க வாழ்க்கைக்கு மட்டுமல்ல உன் தங்கைக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். அதனால, அவங்க குடும்பத்து பிரச்சினை தீரும் இல்லையா ?”

“உண்மைதான் “

“வசந்தி இன்னொரு சந்தேகம் “

“என்ன ?”

“நான் வேணுன்னா உன் சித்தப்பாவின் மருத்துவ செலவிற்கு பணம் தரட்டுமா ?”

“வேணாம் ராஜ் !நான் உங்ககிட்டே இருந்து பணத்தை எதிர்ப்பாக்கலை,உங்க அன்பு மட்டும் கடைசி வரை இருந்தா போதும். தவிரவும் நீங்க பணம் தர்ற மாதிரி இருந்தா உங்களை அறிமுகபடுத்த வேண்டிவரும். என் நிலையே இன்னமும் முடிவாகாத பட்சத்தில் நான் உங்களை எப்படி அறிமுகம் செய்ய முடியும். முன்பின் அறியா ஒருத்தர் உதவி செய்யறார் என்றால் என்ன ஆதாயம் என்று நினைக்கமாட்டங்களா ?”

“சரி வசந்தி !நான் இன்னொரு வழி சொல்றேன் அனாதை ஆசிரம நிர்வாகியினை பாதிரியார் மூலமா நான் உனக்கு அறிமுகமானதாகவும்,உங்க சித்தப்பாவுடைய ஆபரேஷன் செலவை நானே ஏத்துக்கறேன்னு அதை மாசமாசம் சம்பளத்திலே பிடிசுக்கறேன்னு சொல்லிடலாம். இதனால அவங்களுக்கு சந்தேகம் வராது இல்லையா ?”

“ஏன் ? ராஜ் நம்ம தேவைக்காக அவங்களை ஏமாத்தனுமா ?”

“வசந்தி நல்லது நடக்கணும் என்பதற்காக பொய் சொல்வது தப்பில்லை, இதனால உங்க சித்தப்பா குடும்பத்திற்கும் நல்லது நடக்குமே !”

“சரி ! நல்லதோ கெட்டதோ நான் அவங்ககிட்ட நாளைக்கே இதைப் பற்றி பேசிடறேன்.” சித்தப்பா வீட்டில் இதை எப்படி பேசுவது என்று இமாலய சிந்தனையோடு வசந்தி கிளம்பினாள்.




What’s your Reaction?
+1
18
+1
19
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!