Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-2

2

வீட்டிற்கு வந்த பிறகும் படபடப்பு அடங்கவில்லை, என்ன வார்த்தை பேசிவிட்டான். பெண்ணை வர்ணிக்க வேண்டியது,அவள் தனக்கு கிடைக்கவில்லை
என்றால்,அவளின் கற்பின் மீது சேற்றைப் பூசுவது என்ன மட்டமான ஆண்புத்தி.

அருணும் ஆனந்தியும் வந்து கட்டிக் கொண்டனர் இருவரும் 10 ,8 படிக்கும் பிள்ளைகள்.

“ஆங் ! என்னடா இன்னைக்கு ?” இத்தனை நேரம் விழித்து இருக்கிறீர்கள் ?

“என்னம்மா ! மறந்திட்டியா இன்னைக்கு உனக்கு சம்பளத் தேதி இல்லையா ?”அம்மா சொல்லவும் தான் நினைவிற்கே வந்தது.

“சாரிடா ! அக்கா இன்னக்கு மறந்திட்டேன் அம்மாகிட்டே காசு தந்திடறேன் நாளை வாங்கிக்கிறீங்களா ?”

“சரிக்கா ?”




“நீங்க ரெண்டு பெரும் சாப்டீங்களா பிள்ளைகளா ?”

“ஆச்சு அக்கா ஹோம் ஒர்க் கூட முடிச்சாச்சு தூங்க போறோம்.”

“அருண்,ஆனந்தி இந்த வயசுல படிப்பு மட்டும்தான் உங்க கடமை அதனால மனசை அலைபாய விடமா படிங்க, அழிக்க முடியாத செல்வம் கல்வி மட்டும் தான். எத்தனையோ பேர் அது கிடைக்காம இருக்காங்க, உங்களுக்கு கிடைச்சத நல்ல வழிக்கு பயன்படுத்திகோங்க.”

“நிச்சயம் அக்கா !”அவர்கள் அங்கிருந்து நகரவும், முகம் கழுவி விட்டு தாயிடம் வந்தாள். ” அம்மா இதிலே ஓவர்டைம், தினப்படி எல்லாம் சேர்த்து 4500 /- சொச்சம் இருக்கு. நான் போய் அப்பாவைப் பார்த்திட்டு வர்றேன்.”

“இப்போதுதான் தூங்கினாரு மலர், நீ வாயேன் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். ரொம்பவும் களைப்பா தெரியுறியே ?”

” நீ வைம்மா, நான் தொந்தரவு பண்ணாம அப்பாவைப் போய் பார்த்திட்டு வந்திடுறேன்.” கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள் தந்தை படுக்கையில் பலகீனமாய் இருந்தார். தன்னையும் அறியமால் கண்களில் நீர் சுரந்தது மலருக்கு !

யார் வம்புதும்பிற்கும் போகாத அப்பாவின் வண்டியையா லாரி இடிக்க வேண்டும்.இதோ இன்று முதுகுத் தண்டு உடைந்து நோயாளியாய் கிடக்கிறாரே ? பெண் ! இன்ஜினியர் ஆவாள் என்று எத்தனை எதிர்ப்பார்ப்புடன் கல்லூரிக்கு அனுப்பினார். ஆனால் இன்று, ஒரு நாள் கூட வெளி உலகில் கால் பதிக்கவிடாமல் அன்பு என்னும் இரத்தினக் கம்பளம் விரித்து வைத்திருந்தீர்களே, இப்போது உங்கள் பெண்ணின் நிலையைப் பார்த்திர்களா ?மெல்லிய விசும்பல் எழ, தந்தை அசைவது தெரிந்ததும் வெளியே ஓடிவந்து படுக்கையில் சரிந்தாள்.

“மலர் என்னப்பா இது சாப்பிடமா வந்து படுத்திட்டே வேலை அதிகமா ?”

இல்லைமா கொஞ்சம் உடம்பு டயர்டா இருக்கு, நான் இரண்டு நாள் லீவு எடுத்துக்கவா ?”

“என்னடாம்மா இதுக்கெல்லாம் என் அனுமதி கேட்கனும்மா என்ன ? தாராளமா எடுத்துக்க ? இப்ப சாப்பிட வா ?”

“பசிக்கலைம்மா !” நடந்த விஷயத்தைச் சொல்லி தாயைக் கலவரப்படுத்த மனம் வரவில்லை. தாயின் மனம் பதறக் கூடும். இதை பேசமால் அப்படியே விட்டுவிடுவோம்.நாளை மானேஜரிடம் இதை சொல்லுவதுதான் நல்லது என்ற யோசனையில் இருந்தவளிடம், அதற்குள், அம்மா தட்டில் காரக் குழம்போடு பிசைந்த சாதத்தோடு வந்தார். “சாப்பிடுடா”, தாயின் பரிவும் பாசமும் மனக்குமுறலுக்கு நன் மருந்தாய் இருக்க, உண்டாள்.

“இத்தனை பசியை வைச்சிகிட்டு சாப்பிடமா இருக்கியேமா,மலர் வேலை செய்யற இடத்திலே ஏதும் பிரச்சினாம்யாமா ?”

“இல்லையே !”

“மலர் இது தடுமாறும் வயசு உன்னை சுற்றி நிறைய முள் செடிகள் இருக்கு,நீதான்மா பார்த்து பக்குவமா நடந்துக்கோம்மா.”

“நான் சின்ன பிள்ளைம்மா, எனக்கு எந்த ஆசையும் உணர்வுகளும் கிடையாது.அப்பாவைத் தவிர வேறெதுவும் என் கண்ணுக்குத் தெரியாது.”

“சரி களைச்சிப் போய் வந்திருப்ப போய் தூங்குமா காலையிலே பேசலாம் !” அம்மா நகர வழக்கம் போல் உறக்கம் தொலைத்த விழிகளோடு விழித்திருந்தாள் மலர்.




What’s your Reaction?
+1
17
+1
21
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!