Entertainment Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-1

1

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன் …ஆலயத்தின் இறைவன் ….” கண்களைத் திறவாமலே வானொலியில் உங்கள் விருப்பம் பகுதியில் வந்த அப்பாடலை கண்மூடி ரசித்தால் மலர்செல்வி. வெளியே மழை ஊரையே குளிப்பாட்டிக் கொண்டிருக்க குளிர்காற்று ஜன்னல் வழியே கண்ணா மூச்சி ஆடிக்கொண்டிருந்தது. கண்களை உறுத்தாத அளவிற்கு வெளிச்சத்தில் மழையில் கதகதப்போடு மனம் விரும்பும் பாடல்களைக் கேட்பது அவளிற்கு மிகவும் பிடிக்கும்.

எத்தனை விதமான கவலைகளையும் மனவருத்தங்களையும் மறக்க வைக்கும் சக்தி இசைக்கு உண்டு, மழை பெய்யவோ, நோய் குனமாகவோ இசையை ஒரு மருந்தென எண்ணுவார்கள் அது எத்தனை சவித உண்மை.

“ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன் !

உங்கள் விருப்பமாய் ஒலிப்பரப்பான அந்த பாடலில் மனம் நிறைந்தாள். அவளையும் அறியாமல் அவனின் நினைவு வந்து நெஞ்சுக் கூ ட்டிற்குள் மோதியது. எத்தனையோ முறை கேட்டுக் கேட்டு ரசித்த பாடல் !





‘ஆனந்த்’ – ஒரு முறை அப்பெயரை உச்சரித்துப் பார்த்தாள். வெள்ளம் சுவைப்பதைப போல் இனித்தது கண்களை அழுத்த மூடினால்.

“மலர் ! நான் இப்போ போகிறேன், ஆனால் நிச்சயம் ஒரு நாள் நான் திரும்பி வந்து உன்னை என்னுடையவள் ஆக்கிக் கொள்வேன். நம் அன்பு இப்போது இருப்பதை விடவும் அதிகமாக பெருகும் என்பதுக்கு இந்த வானம்தான் சாட்சி”. அவள் பதினெட்டு வயது புறவாய் இருக்கும் நேரம்,அவன் மலரின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கூறியது இன்றும் பதித்து இருந்தது. நடந்து வந்த பாதைகள் மனிதருக்கு எத்தனையோ விஷயங்களை உணர்த்துகிறது. மலருக்கும் புரியத்தான் செய்தது. அறியா பருவத்தில் மனதில் அவன் ஏற்படுத்திய சலனம் இன்று வரை ஓயாமல் நீள்கிறதே. கடந்த ஐந்து வருடங்களில் அவள் அடைந்த துயரங்களுக்கு எல்லாம் காரணகர்த்தா அவன் அல்லவா, அந்த பிஞ்சு பருவத்தில் கண்ட கனவுகள் எல்லாம் நீர்க்குமிழி என உடைத் தெரிந்தவன் அவன் . இருப்பினும் பாழும் மனது அவனைத்தான் நாடுகிறது . அதுவரை இன்பமாய் இருந்த சூழ்நிலை மெல்ல மெல்ல இறுக்கம் ஆவதை உணர்ந்தாள். வானொலியை அமர்த்தியவள் எழுந்து அமர்ந்தால். அறையை போலவே மனதிலும் இருட்டு படிந்து இருந்தது.

ஆனந்த் ! நான் என்ன தவறு செய்தேன் ? என்னை ஏன் விட்டு விட்டு சென்றீர்கள் ? வெறும் வாலிப மோகத்தில் பழகும் பூவிதையாகத்தான் நான் உங்களின் கண்களுக்கு தெரிந்தேனா ? என் அன்பு எதையுமே நீங்கள் உணரவில்லையா? மனதில் ஆழப்பதிந்திருந்த அவன் உருவத்துடன் வாதம் செய்தாள்.

மலர் ! தாயின் குரல் அவளின் நினைவு சங்கிலியை அறுத்தது.

“என்னமா ? “

“என்னடா ? மணி ஆறாகுது,விளக்கை கூடப் போடாம இருக்கே ? தம்பி, தங்கை ஸ்கூலில் இருந்து இன்னும் வரலையே ? இல்லேம்மா ?!.

“நல்ல வேளை காலையிலேயே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு ! வரத் தாமதமகும்னு சொன்னாங்க, கோவில்ல ஒரே கூட்டம், பிள்ளைங்க பசியோடு வரும் ! நான் சாப்பாடு தயாரிக்கிறேன். மலர், நீ கூட சாப்பிட்டு இருக்க மாட்டியே சூடா காபி தரவா ?”

“வேண்டாம்மா ? நான் ஏதாவது உதவட்டுமா ? தாயின் பின்னேயே சென்றாள்.

” மதியம் வைச்ச ரசமும், பொரியலும் இருக்கு, இப்போ துவையலும் சத்தமும் ரெடி பண்ணிட்டா வேலை முடிஞ்சது. அப்பா என்ன செய்றார் ?”

“தூங்குறார் “

சரி மேஜையிலே பூப்பொட்டலம் இருக்கு எடுத்து சாமிக்கு போடும்மா, அம்மா அடுபடிக்குள் நுழைந்தாள்.

காதிலும் கழுத்திலும் பொன் ஆபரணங்கள் சூடி எப்படி வலம் வந்த அம்மா காதில் இப்போது தோட்டைத் தவிர ஒரு குண்டு மணி சைஸ் கூட தங்கம் இல்லை.




அதிகமில்லை என்றாலும், ஓரளவு வசதியான குடும்பம் மலருடையது. தம்பி, தங்கை என ஐவரைக் கொண்ட அழகிய குடும்பம், குதூகலத்திற்கும், சிரிப்பிற்கும் பஞ்சமே இல்லாத வீடாய் இருந்தது ஆறு மதங்களுக்கு முன்புவரை.

அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பு வழியில் தந்தை குமாரின் ஸ்கூட்டரின் மீது ஏதோ வண்டி மோதி முதுகுத் தண்டு முறிய அன்றிலிருந்து படுத்த படுக்கையாய் அவர் விழுந்து விட்டார்.

தந்தை ஆரோக்கியமாய் இருந்த வரை சீராய் ஓடி கொண்டிருந்த குடும்ப வண்டி, அவர் சரிந்து படுத்ததும் ஆட்டம் கண்டு விட்டது. மிச்ச படுத்தி வைத்திருந்த பணமும், அம்மாவின் நகைகளும், தந்தையின் வைத்திய செலவிற்கும்,குடும்ப செலவிற்குமே கரைந்து போக படிப்பை கை விட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள் மலர்.

சிறுவயது முதலே தந்தையின் செல்லப் பெண் அவள், தம்பி, தங்கைகள் சண்டையிலோ,குறும்பு செய்தாலோ நடுநிலை வகித்து சமாதனம் செய்து வைப்பாள்.

“அப்போதே தந்தை சொல்லுவார் பாருடி ! மகி, எம்பொண்ணு, திர்க்கதரிசி அவ குணம் ஒண்ணே போதும் அந்தப் பெண்ணின் முன்னேற்றத்திற்கு.

பள்ளியிலும் அவள் தான் முதல் மாணவி, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதற்பரிசைத் தட்டிச்செல்லும் போது தவறாமல் திருஷ்டி சுத்தும் தாய் மகேஸ்வரி, என ஒட்டு மொத்த குடும்பமும் அன்பை பொழிந்தன.

“ஏன்டா குமார் ? எங்கேயிருந்துடா இப்படியொரு தேவதை பிறந்தா ? நம்ம வம்சத்திலே இத்தனை அழகும் அறிவும் ஒரு சேர நான் பார்த்தது இல்லைடா ?” என்று பாட்டி தன் மகனிடம் சொல்லும் போது “

தந்தை பெருமிதத்தோடு மகளை கட்டியணைத்து முத்தமழை பொழிவதையும் மறக்க முடியுமா ?

அதே தந்தை இன்று படுத்த படுக்கையில் கட்டிலில் கிடக்கிறார். சம்பாதிக்கும் இயந்திரம் தம் இயக்கத்தை நிறுத்தி விட்டது. தம்பி, தங்கைகளின் எதிர்காலம் குட்ம்பத்தின் சூழ்நிலை இவையெல்லாம் சேர்ந்து அவளை அந்த முடிவிற்கு வர வைத்தன.

தன்னை இமை போல் பார்த்திருந்த அந்த குடும்பத்திற்கு உழைக்க தயராகிவிட்டாள். தந்தை என்னும் ஆலமர நிழலில் வாழ்ந்திருந்த வரி சுயநல உலகத்தின் உஷ்ணம் தாக்கவில்லை, இதோ முதன் முறையாக நிழலின்றி காலுன்றுகிறாள் உலகம் சுடத்தான் செய்கிறது.

வெளி உலகம் ஒன்னும் அவள் அறிந்திராது இல்லை, நேற்று வரை பட்டம்பூச்சியென சுற்றி திரிந்த கல்லுரி மாணவி அவள், இன்று பொறுப்பை சுமந்து வெளி வரும் சிறகு முளைத்த புத்தம் புது பறவை அவள்.

வெளியே வந்து தனக்கென ஒரு வேலையை தேடிக் கொள்ளும் முடிவிற்கு வந்தவளுக்கு, அதன் அப்டியே மலரின் பெரியப்பாவின் மகளான வசந்தாவின் மூலம் நிறைவேறியது. வசந்தா தனக்கு தெரிந்தவரின் மூலம் சிபாரிசு செய்ய அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை கிடைத்து.

காலை 10 மணியிலிருந்து இரவு 8 .00 மணி வரை வேலை இவளுக்கு. கம்ப்யூட்டர் தெரியுமாதலால் பில் செக்க்ஷனில் வேலை கிடைத்தது.

பொருட்கள் அனைத்திற்கும் கோர்டு நம்பர் அதிலேயே இருக்கும் அதைத் தட்ட பதிவு செய்யப்பட்ட விலையும் பதிவாகி விடும். இரண்டு நாட்கள் வேலை புரிபட சற்று கடினமாக இருந்தது. அதன் பின், வழக்கமான அவளின் மூளை சுறுசுறுப்பாகி விட்டது.

நிரந்தரமான வேலையில்லை என்றாலும் அதன் மூலம் வருமானம் ஓரளவுக்கு பயன்பட்டது. அதோடு வசந்தாவும் அவ்வப்போது உதவி செய்து வந்தார்.

வசந்தா குமாரின் அண்ணன் மகள் சிறுவயதிலேயே அண்ணன் குடும்பம் கஷ்டப்பட்ட நிலையில் இருக்க, குமார் தான் தன்னால் ஆன அத்தனை உதவிகளையும் செய்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த வசந்தா மலரின் குடும்பத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டாள்.

திருமணம் முடிந்த பிறகு,

வசந்தாவின் வாழ்வில் விதி வேறு விதமாய் விளையாடியது. கல்யாணமான மூன்றாவது மாதமே கணவன் இறந்து போனான். அவனுடன் இருந்த வியாதியை மறைத்து வைத்து திருமணம் நடத்தி விட்டார்கள், மாப்பிள்ளை வீட்டார்கள்.

பாவம் ஒரு பெண்ணின் வாழ்வு பறிபோய் விட்டது. அதே கவலயில் தந்தையும் இறந்து விட, அடைக்கலமென சிறிய தந்தையிடம் வந்து விட்டாள்.

ஆனதை ஆசிரமத்தில் ஆசிரியையாய் பணி புரிந்து தன் மனக்கவலைகளை அகற்றப் பாடுப்பட்டு இருந்தாள், குமாரும் எத்தனயோ முறை மறுகல்யாணம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால் நாசூக்காக மறுத்து விடுவாள் வசந்தா.

அவள்தான் இந்த வேலையை, மலருக்கு வாங்கி தந்தது. சகோதரியின் பெயரை காப்பற்ற வேண்டி அந்த பணியை மேலும் காணும் கருத்துமாய் செய்து வந்தாள் மலர்.

30பேர் வேலை செய்யும் அந்த ஸ்டோரில் மலரையும் சேர்த்து மொத்தம் மூன்று பெண்கள்தான். அதிலும் மற்ற இரண்டு பேர் திருமனமனர்கள் என்பதால், பிற வாலிபர்களின் ஒட்டு மொத்த பார்வையும் இவளின் மேல்தான்.

கோதுமை நிறமும் அளவெடுதார்ப்போல் உடற்க்கட்டுமாய் மீனாய் துள்ளும் கண்கள் என, யாரும் ஒரு முறை திரும்பி பார்க்கும் அழகு தேவதையவள் .

மலர் தன்னுடைய வேலையில் வெகு கவனமாய் இருந்தாள். அப்போது மாலை நேரமாதலால் ஸ்டோரில் நல்ல கூட்டமிருந்தது. கஸ்டமர்கள் பொருட்களை சரிப்பார்த்து பில் போட்டு பேக்கிங் செக்க்ஷனுக்கு அனுப்புவதற்குள் பெண்டு கழன்றது. சூடாய் பருகிய தேனீர் மீண்டும் உற்சாகத்தை பெற்றுத்தந்தது.

எதேச்சயாய் நிமிர்ந்தவள், அக்கௌன்டன்ட் கணேசன் பார்வையால் தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். சுடிதார் துப்பட்டாவை சரி செய்தாள்.

உடனே கணேசன் பார்வையைத் திருப்பி கொண்டான். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால், அவர்களை தோல் உரித்துப் பார்க்கும் ஆண்கள் தான் இங்கு அதிகம். நேரம் எட்டரையைத் தாண்ட சேல்ஸ் டாலி பண்ணி ரிப்போர்ட் எடுத்து கேசியரிடம் தந்து விட்டுப் படியிறங்கினாள்.

இப்போது போய் பஸ்ஸை பிடித்தால்தான் வீட்டுக்குப் போய் சேர 1 /2 மணியாவது ஆகும் என்றபடியே, நடந்தவளுடன் சேல்ஸ் கவுன்டரில் இருந்த கிரிஜாவுடன் நடந்தாள்.

” கிரிஜா இந்த அக்கௌன்டன்ட் கணேசன் பார்வையே ! மலர் பேச்சை ஆரம்பித்தாள்.

“நானே உங்கிட்ட சொல்லணுமின்னு நினைச்சேன் மலர் அவன் சரியன் பெம்பிளை பொறுக்கி, நீ அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு “

“ம்… ! தலையசைத்தாள் கிரிஜாவின் பஸ் வர அவள் சென்றதும், மலர் தனியாய் பேருந்து நிறுத்தத்தில் நின்றாள், சற்று தள்ளி ஜனநடமாட்டம் இருந்தது.

“எங்க காலத்தில் எட்டு மணிக்கே இருட்டிடும் இப்போயெல்லாம் பொம்பளை பிள்ளைங்க, நைட்டு வேலைக்கு போறாங்க… அம்மா பேசியது இப்போதும் சிரிப்பு வந்தது மலருக்கு.

“மலர் ….”

ஓட்டமும் நடையுமாய் அருகே வந்த கணேசன் தான் குரல் கொடுத்தான்.

“நான் உங்ககிட்ட பேசணும்” என்றான் தடிமனான குரல் அவளின் மௌனத்தை கலைக்கும் விதமாய்.

“என்ன ?” என்றாள் எரிச்சல் மண்டின குரலில்.

“எல்லாம் ஏற்கனவே சொன்னதுதான்”

சாரி நான் அப்படிப்பட்ட பென்னில்லைன்னு நான் ஆயிரம் தடவை சொல்லிட்டேன். ஏன் சார் என்னைத் தொந்தரவு செய்யறிங்க ?”

“நானும் என் விருப்பத்தை எத்தனயோ முறை சொல்லிட்டேன் .”

“சார் வயித்துப்பாட்டுக்ககா வேலைக்கு வரோம் ! தயவு செய்து பின்னாடியே வந்து தொந்தரவு செய்யாதிங்க ?”

“ஓஹோ ! கால்நடையா வரதாலே என் காதல் புரியலை, கார்ல போன மட்டும் பல்லை இளிச்சிட்டு போவிங்க இல்லை ?”

“மிஸ்டர் வார்த்தையை யோசிச்சி பேசுங்க !”

“என்னடி யோசிச்சி பேசறது ?”

“அன்னைக்கு அந்த மேனஜேர் வரதன் கூட இளிச்சிட்டு காருலே போனியே அப்போ உன் கற்பு எங்கடி போச்சு ?”

“யூ… இடியட் ! இப்போ போறியா இல்லை போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணவா ? நாயே நீயெல்லாம் அக்கா தங்கையோட பிறக்கலையா ?” பட படவென பொறிந்து தள்ளி விட்டு மேற்கொண்டு அங்கு நிற்க பிடிக்காமல் அருகில் நின்ற ஆட்டோவில் ஏறியமர்ந்தாள்.




What’s your Reaction?
+1
21
+1
21
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!