Beauty Tips அழகு குறிப்பு

அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா?

அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா? இந்த  பொருளை அப்ளை பண்ணுங்க ஒரே வாரத்துல பளிச்சினு ஆயிடும்…

சருமப் பராமரிப்பு என்றால் முகத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துகிறோம். முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க நாம் எடுக்கும் முயற்சிகளை கழுத்துக் கருமை, அக்குள் கருமை பகுதியில் உண்டாகும் கருமை ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ஆனால் முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதைப் போலவே வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்தே போக்க முடியும்.




நம்முடைய சருமத்தில் உள்ள இறந்த செல்களை எக்ஸ்ஃபோலியேட் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதால் அவை சருமத்தில் அப்படியே தேங்கி கருமையாக மாறிவிடும். அந்த கருமை மேல் கருமை படிய படிய அந்த இடங்கள் திக்காக தடிமனாக மாறிவிடும்.

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு- 1

எலுமிச்சை-1/4  டீஸ்பூன்

மஞ்சள்-1/2 டீஸ்பூன்




தயாரிக்கும் முறை

  • தோல் கருமைகளைப் போக்கி பளிசிசென மாற்றுவதற்கு உருளைகிழங்குஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

    உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களும் இருக்கின்றன. இவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். குறிப்பாக வைட்டமின் ஏ சருமப் பிரச்சினைகளைத் தீர்க்க பெரும் உதவி புரிகிறது.

  • உருளைக்கிழங்கை வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி அக்குளில் உள்ள  கருமை  இடங்களில் 10 நிமிடங்கள் நன்கு தேய்க்கவும். பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த இடங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

  • ஓரு உருளைக் கிழங்கை துருவி சாறெடுத்து அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

  • பின்பு 15 – 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரால் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

  • இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தாலே ஒரு சில வாரங்களில் அக்குள் பகுதிகளில் உள்ள கருமை நீங்கி, சருமம் உடல் முழுக்க ஒரே நிறமாக மாறும்.




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!