Beauty Tips அழகு குறிப்பு

தொடைகளின் இடுக்கில் இருக்கும் கருப்பினை போக்க இப்படி செய்யலாம்.

முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? தொடைப் பகுதியில் கருப்பாக இருப்பது பலருக்கும் கவலையாக இருக்கலாம். எல்லா வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகும்கூட, அந்த கருமையை போக்க முடியவில்லையே என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே தொடை இடுக்குகளில் இருக்கும் கருமையை போக்கிவிடலாம்.





தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்

உருளைக் கிழங்கு ஜூஸ்

எலுமிச்சை

தயாரிக்கும் முறை

  • எலுமிச்சைப் பழத்தின் பாதியை எடுத்து, ஜூஸாக பிழிந்து கொள்ளுங்கள்.

  • அதனுடன் ஒரு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கலக்கி, தொடை இடுக்குகளில் கருப்பாக இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடம்  வரை அப்படியே இருந்து, பிறகு குளிக்க செல்லுங்கள்.

  • இந்த டிப்சை இரவில் செய்யுங்கள் . உருழைக்கிழங்கு ஒன்றை எடுத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர், சுத்தமான காட்டன் துணியை எடுத்து, நீரில் நனைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக ரெடியாக இருக்கும் உருளைக்கிழங்கு ஜூஸில் அந்த துணியை நனைத்து, தொடையில் கருப்பாக இருக்கும் பகுதியில் அப்ளை செய்யுங்கள். அரைமணி நேரம் (தோராயமாக) வரை பொறுமையாக இருந்து நீரில் கழுவிக்கொள்ளுங்கள். (பொதுவாக இதை இரவில் நிதானமாக செய்த பின்பு உறங்க செல்லுங்கள். )

  • ஒருவாரம் தொடர்ந்து பகலும், இரவும் செய்து வந்தால், நிச்சயம் மாற்றம் தெரியும். தொடைப் பகுதியில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, தோல் வெண்மையான நிறத்தைப் பெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!