Entertainment News palace அரண்மனைகள்

தமிழ் நாட்டு அரண்மனை-6 (மதுரை தமுக்கம் அரண்மனை)

 




தமுக்கம் அரண்மனை அல்லது இராணி மங்கம்மாள் அரண்மனை தமிழ் நாடு, மதுரையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான அரண்மனையாகும். தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். 1670ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, நாயக்க வம்சத்தை சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக் நவாபிடம் இருந்தது; ஆங்கிலேயோர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. 1959 இல் காந்தி அருங்காட்சியகமாக மற்றப்பட்டது.அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானமும் இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.

இந்த அரண்மனையின் பின்புறம் ஒரு பெரிய ஏரி உருவாக்கப்பட்டு, அதன் தண்ணீரில் அலையடிக்கும் அளவில் உருவாக்கப்பட்டது. இராணி மங்கம்மாள் கடல் காற்று போன்ற காற்று வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. அதன் இன்றைய பெயர் வண்டியூர் கண்மாய் ஆகும். அன்றைய ஏரி சுருங்கி, தற்போது கண்மாயாக ஆகிவிட்டது.




தமுக்க மைதானத்தின் வரலாறு

தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள ராணி மங்கம்மாள் அரண்மனையின் ஒரு பகுதியாக இந்த மைதானம் இருந்துவந்தது. கோடை கால மாளிகை அல்லது சுவர்கள் இல்லாமல், தூண்களால் தாங்கப்பட்ட மண்டபம் என்ற பொருள் தரும் ‘தமகமு’ என்ற தெலுங்கு வார்த்தையிலிருந்து ‘தமுக்கம்’ என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாக இந்த அரண்மனை இருந்துவந்தது. இந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து அரச குடும்பத்தினர் மல்யுத்தம், மிருகங்களுடனான மோதல்களை கண்டுகளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ராணி மங்கம்மாள் இங்கு பல  குதிரைகளையும் வளர்த்து வந்தார்.  அக்குதிரைகளில் இருந்த மூன்று குதிரைகளுக்கு இங்கு சமாதி அமைத்து வழிபட்டு வந்துள்ளார். பிரதான கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து வெளியே செல்ல ரகசிய சுரங்கப்பாதை உள்ளது அதன் வழியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, தெப்பக்குளம் மைய மண்டபம் ஆகியவற்றிற்கு செல்லலாம் தற்போது சுரங்கப்பாதையின் முதல் மூன்று படிகள் மட்டுமே வெளியில் தெரிகிறது.

மேலும் இந்த அரண்மனையில் இராணியின் அறையின் மேல் பகுதியில் ஒரு ஓட்டை உள்ளது. அதில் காலை நேரத்தில் மட்டும் அந்த அறைக்குள் புகும் சூரிய ஒளி தலையில் மட்டும் படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த சூரிய ஒளியின் வெப்பத்தில் இராணி குளித்துவிட்டு வந்து தலைமுடியை உணர்த்துவார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

மதுரையில் பார்க்க வேண்டிய இடத்தில் இந்த அரண்மனையும் உண்டு. கண்டிப்பாக தமிழ் நாட்டு அரண்மனையை  பார்க்க தவறாதீர்கள்.

 




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!