Entertainment News

சிசேரியன் கீறல் வலியை போக்க சில குறிப்புகள்

அறுவை சிகிச்சைக்கு பிறகு சிசேரியன் செய்த இடத்தில் வலியை உணர்கிறீர்களா? இதற்கான தீர்வை  தெரிந்து கொள்வோம்…




குழந்தையை பெற்றெடுப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வரை பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். கர்ப்ப காலத்தில் பலவிதமான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. ஒரு சில மாற்றங்கள் பிரசவத்திற்கு பிறகும் தொடர்கின்றன. சுக பிரசவம் அல்லது சிசேரியன், எதுவாக இருந்தாலும் குழந்தையை பெற்றெடுத்த பின் பல உடல் நல மாற்றங்களையும், வலிகளையும் அவர்கள் சந்திகின்றனர். சுக பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு மீட்பு நேரம் அதிகமாக தேவைப்படும். ஏனெனில் இந்த பெரிய அறுவை சிகிச்சையில் குழந்தையை வெளியே எடுக்க வயிற்றின் ஏழு அடுக்குகள் வரை கிழிக்கப்படுகிறது.

 

மற்ற அறுவை சிகிச்சையை போலவே இதுவும் குணமடைவதற்கு நேரம் எடுக்கும். கீறல் நான்கு முதல் ஆறு அங்குலம் வரை ஆழமாக இருப்பதால், அவை முழுமையாக ஆற சில மாதங்கள் வரை ஆகலாம். இந்நிலையில் சிசேரியன் செய்த இடத்தில் வலியை பெரும்பாலான தாய்மார்களும் உணர்கிறார்கள்.

தாய்க்கு ஸ்பைனல் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டிருந்தால் 4-6 கழித்து கீறல் தளத்தில் வலி வெளிப்படும். இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுக்கவும், சில மணி நேரங்களுக்கு பிறகு எழுந்து நின்று நடக்கவும், கூடிய விரைவில் வழக்கமான செயல்பாடுகளையும் செய்யவும் அவர்கள் தொடங்குகின்றனர். இந்நிலையில் கீறல் தளத்தில் அசௌகரியம் மற்றும் வலி  இருந்தால் இவை அனைத்தையும் செய்வது கடினமாக இருக்கலாம்.

 

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு கீறல் உள்ள இடத்தில் ஏற்படும் வலியை போக்குவதற்கான சில எளிய குறிப்புகளை, இங்கே தெரிந்து கொள்வோம்.




சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு என்ன நடக்கும்?

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு  24 மணிநேரங்களுக்குப் கழித்து குழந்தை பெற்ற தாய்க்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணிகள் வழங்கப்படுகிறது. அவர்களின் நிலையை பொறுத்து 5-14 நாட்களுக்கு இந்த மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பெரும்பாலான வலி நிவாரண மருந்துகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பாதுகாப்பானவையாகவே பரிந்துரை செய்யப்படும். பொதுவாக கீறல் தளத்தில் போடப்பட்ட கட்டுகள் 24-48 மணி நேரத்திற்குப் பின் அகற்றப்படும்.

கீறிய இடம் மற்ற சருமத்தை விட சற்று உயர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலும் 2-3  நாட்களுக்குப் பிறகு வலி குறைய தொடங்கினாலும் இரண்டு முதல் மூன்று வாரங்கள்  வரை வலி இருக்கலாம்.

சிசேரியன் கீறல் வலிக்கான  குறிப்புகள்

கீறல் தளத்தில் வலியைக் குறைக்க உதவும் சில  குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.




உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும்

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் நாள் முழுவதும் தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தேவையான திரவங்களை குடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான சமச்சீர் உணவை சாப்பிடவும்

சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.

முறையான காயம் பராமரிப்பு

பிரசவம் முடிந்த 24 மணிநேரத்திற்குப் பிறகு தினசரி குளியல் மேற்கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார். இந்நிலையில் குளியலுக்கு பின் காயத்தை முற்றிலும் உலர விட வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரை செய்த ஒரு ஆண்டிபயாடிக் மற்றும் கிருமி நாசினிகள் கிரீம்களை பயப்படுத்தலாம்.

 

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

கீறல் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து சிவத்தல், வலி, வீக்கம் அல்லது ஊடுருவல், வெளியேற்றம் அல்லது சீழ் வெளியேறினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் 100 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட உடல் வெப்பநிலை இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். நமது பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.




What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!