Entertainment palace அரண்மனைகள்

செட்டி நாட்டு அரண்மனை

தமிழ் நாட்டு அரண்மனை -1

செட்டிநாட்டு அரண்மனை

சினிமாவில் சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடு தான் கானாடு காத்தான் மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட அரண்மனை (வீடு) தான் அது.




பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர். பிற்காலத்தில் பாண்டியர்களது வீழ்ச்சிக்கு பின்,விசய நகர பேரரசின் படையெடுப்புகளாலும் பல பாளையங்களாக பிரிக்கப்பட்டது.சேதுபதி பாளையக்காரர்களாலும் பின் மருது சகோதரர்களாலும் ஆளப்பட்டு,ஆங்கிலேயர் உடனான போர்களால் இப்பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் சென்றது.பின் ஆங்கிலேயர் நகரத்தார்களின் நிர்வாகத்தின் கீழ் இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். விடுதலைக்கு பின் மக்களாட்சியின் கீழ் இப்பகுதி வந்துள்ளது.




ஊர் சிறப்பு 

ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் பல காடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகவும்,மருது பாண்டியர்களுடனான போரின் காரணமாகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக இப்பகுதியில் உருவாகி இருந்தாலும்,இங்கு இறைநம்பிக்கையின் அல்லது அச்சத்தின் காரணமாக சோலை ஆண்டவர் கோவில் மற்றும் ஆயின்மார் கோவிலை சுற்றியுள்ள காட்டுப்பகுதி மரங்களை இப்பகுதி மக்கள் இன்றும் வெட்டுவதில்லை.மீறி காடுகளை அழிப்பவர்களை தெய்வம் தண்டிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது.இன்றும் அப்பகுதிகள் காடுகளாகவே காட்சி அளிக்கின்றன. கான் நாடு _ காடுடைய நாடு காத்தான்.(கானாடு காத்தான்).மற்றுமொரு பொருளாக பூம்புகார் நகரம் ஆழிப் பேரலையால் அழிந்து போன போது அந்த நகரத்தார்க்கு இடம்தந்து காத்ததனாலும் இப்பேர் வந்ததாக கூற இடமுண்டு.கானாடு(காவிரிநாடு_பூம்புகார் நாடு) காத்தான்.இன்றும் இங்கு கோவில் திருவிழாக்கள் நடத்தப்படும் போது நாட்டார்(இப்பகுதியினர்),நகரத்தார் (சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு.

செட்டிநாடு அரண்மனையின் சிறப்பு

செட்டிநாடு அரண்மனை இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை ஆகும்.




இந்த மாளிகை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியாரால் இவ்வரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார்.  கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரம்மாண்டமான வீடுகளைப் பார்க்கலாம். செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை.செட்டியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் ஆய்வுசெய்துள்ளனர்.




இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் அதைவிட அதிகமான அறைகள் கொண்டதாக இருக்கும். வீடு வசீகரிக்கும் வண்ணத்தால் ஆனவையாக இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியிருப்பார்கள்.

வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருப்பார்கள். நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் இன்றைய பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெற்றிகரமாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள்.

அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இவர் வீட்டுக்குத் தேவையான மரங்களையும் பகுதிப் பொருள்களையும் தருவித்தார்கள். குறிப்பாக மரங்கள். செட்டிநாட்டு வீடுகளின் சிறப்பம்சங்களுள் ஒன்று இந்த மர வேலைப்பாடுகள். பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட தேக்கு மரப் பலகையில் செய்யப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும் இன்றும் செட்டியார்களின் கலையம்சத்தை உணர்த்துகின்றன.

அக்காலத்தில் விளங்கிய தொழில் நுட்பத்தைப் பற்றி பல தகவல்களை நமக்கு அளிப்பதால், இது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டிடமாகக் கருதப்படுகிறது.செட்டிநாடு அரண்மனை, செட்டிநாடு மக்களின் சிறந்த கலாச்சாரப் பெருமைக்கு, மிக உயரிய சான்றாக விளங்குகிறது.   செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இங்கு காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இவ்வரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்ட்தால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.

அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த்தாக உள்ளது.

 தமிழ் நாட்டு அரண்மனைகள் ,  அரசர்கள்  பற்றி நம் வீட்டு குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். தமிழ் நாட்டில் உள்ள அரண்மனைகளை கோடை விடுமுறையில்  குழந்தைகளுக்கு சுற்றி கட்டுங்கள்.  நாளை மற்றும் ஒரு அரண்மனையை பற்றி பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!