Cinema Entertainment

அஜித் பார்முலாவை கையில் எடுத்த ஜெயம் ரவி

அஜித் பார்முலாவை கையில் எடுத்த ஜெயம் ரவி.. ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோ!




கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு  மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் அஹமத் இயக்கத்தில் இறைவன், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவி தற்போது ராஜேஷ்.எம் இயக்கும் படம், ஆண்டனி பாக்யராஜின் சைரன் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதற்கு அடுத்து விரைவில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தைப் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிகர் ஜெயம் ரவி கெட்டப்பை மாற்றியுள்ளார். அவருடைய லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. எப்பொழுதுமே இளமையான கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி முதன்முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ரசிகர் ஒருவர் ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜாவின் தோற்றத்தில் இருப்பதாக இருவரின் புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டிருந்தார். அதற்கு மோகன்ராஜா விருப்பம் தெரிவிக்கும் விதமாக ஹார்ட் எமோஜியை பதிவிட்டுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!