Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்- 3

3

போலி கல் ஒட்டியிருந்த அந்த பித்தளை மூக்குத்தியிலும் அழகாய் ஜொளித்தாள் மாரியம்மன் .கண்ணகல அம்மனை
பார்த்தபடி நின்றார் பொன்னுரங்கம் .” ஐயா கற்பூரம்
எடுத்துக்கோங்க ….” பூசாரி பவ்யமாக கற்பூர தட்டை நீட்டினார் .கறபூரம் தொட்டு ஒற்றி , கை நிறைய விபூதியை அள்ளி நெற்றி நிறைய இட்டுக் கொண்டார் .

” என்னங்கய்யா ….அப்படியே பார்த்துட்டு நின்னுட்டேள் ….? ” பூசாரி விசாரித்தார்.

” என் அம்மாவை பார்த்தேன் சாமி .இந்த போலி நகைகளிலேயே இத்தனை தேஜஸ்ஸோடு இருக்கறாளே .உண்மையான பொன் நகைகளை பூட்டி நிறுத்தும.போது எம்புட்டு அழகா இருப்பா ….? உடனேயே அப்படி ஒரு முழு அலங்கார கோலத்தில் தாயை பார்க்கனும்னு ஆசையாக இருக்கறது சாமி …” குரல் நெகிழ்ந்தார் .

” அதுக்குத்தான் நாளெல்லாம் குறிச்சாச்சே கோவில் .வேலைகள்  இன்னமும் இரண்டே மாதம்தான் .பிறகு பாருங்க நம்ம அம்மன் உள்ளே பூட்டி போட்டு வைத்தருக்கிற அவளது உண்மையான நகைகளை அணிந்து கொண்டு , அப்படியே தங்க ரத்த்தில் வருவாள் பாருங்கள் . காண கண் கோடி வேண்டும் .அன்றே நம் ஊருக்கு நல்ல காலமும் பிறந்துவடும் ….”

” என்னைக்கு நம்ம அம்மனுக்கு கும்பாபிசேக ஏற்பாடுகளை செய்தோமோ …அன்றே நம் ஊர் சுபிட்சப்பட ஆரம்பித்துவட்டது பூசாரி ஐயா .இந்த வருடம் ஓரளவு மழை பெய்து ஊரில் எல்லோருக்கும் நல்ல வளைச்சல் ்தெரியுமில.லையா .??”

” அதுவும் உண்மைதாங்கய்யா .பன்னிரெண்டு வருடத்தற்கு ஒரு முறை கும்பாபிசேகங்கிறது ஐதீகம் .ஆனால் அரசாங்கத்தை நம்பிக்கிட்டே இருந்தே கூடுதலா ஐந்து வருடம் ஓடிப்போச்சு .இப்போ நீங்க மட்டும் இந்த ஏற்பாடுகளை கையிலெடுக்கலைன்னா ….நம்ம மாரியம்மா சோர்ந்து போய் சுருண்டு கிடந்திருப்பா .சாமின்னாலும் மனுசங்க மாதிரி அதையும் அப்பப்ப கவனிக்கனுமேங்கய்யா ….” பேசியபடி வந்தார் தர்மகர்த்தா .

” வாய்யா …எப்படி இருக்கிறீர் ….? என்ன பையனுக்கு பொண்ணு அமைஞ்சடுச்சு போல …? ” தர்மகர்த்தாவை வரவேற்றபடி கோவிலை வலம் வர ஆரம்பித்தார் பொன்னுரங்கம் .

” ஆமாங்கய்யா .பையன் கூட படிச்ச பொண்ணாம். ஆசைப்பட்டான் .சரிதான் போடான்னு …முடிச்சிட்டேன் .நானும் உங்களை மாதிரிதாங்கய்யா ….” தானும் பொன்னுரங்கத்தை போன்றே முற்போக்குவாதி என்பதை நிரூபித்து விட வேண்டுமென பறந்தார் தர்மகர்த்தா .





பொன்னுரங்கத்திற்கு திருப்தி பரவியது .இரண்டாவது மகன் முருகேசனின் காதலை ஒத்திக் கொண்டு , தன்னை விட அந்தஸ்தில் குறைந்த குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்து மகனுக்கு மணம்  முடித்தது , ஊர் முழுவதும் ஒரு நல்ல அலையை பரவ வைத்துள்ளதை உணர்ந்தார் .அந்த ஊரினுள் நிமிர்ந்து பார்க்கும்படி ஒரு அந்தஸ்தில் இருக்கும் அவரை போல் தாங்களும் சீர்திருத்தம் செய்ய வேண்டிமென்ற ஆர்வம் அந்த ஊர் பெரிய மனிதர்களிடம் வந்திருந்த்து . அதனால் அவர்கள் பிள்ளைகளின் காதல் மணங்களை ஒத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தனர் .

இந்த ஊர் முன்னேற இது ஒரு சிறந்த வழியின் ஆரம்பம் .அதனை முதலில் நிகழ்த்திய தனது தைரியத்தில் தானே பெருமையுற்று மீசையை நீவிக்கொண்ட பொன்னுரங்கம் ” பொண்ணு எந்த ஊரு …? என்ன படிப்பு …? ” விசாரித்தார் .

” மேலப்பாளையங்கய்யா .பி. எஸ்ஸி படிச்சிருக்குதாம் ….” என்றவர் தயங்கி நிறுத்தி ….” எங்காளுங்கதாங்கய்யா …உங்களவு அவ்வளவு தைரியம் எனக்கு வரலீங்கய்யா ….” தலை குனிந்து சொன்னார் .

” வருமய்யா …நான் எட்டு வருசத்துக்கு முன்னாடியே என் இரண்டாவது மகனுக்கு தைரியமா செஞ்சு வச்ச கல்யாணத்தை போல நீங்களும் செய்ய இப்போதான் இறங்கி வ ந்திருக்கீங்க . இப்போ செய்யப் போற கல்யாணத்தோட தைரியம் உங்களுக்கு வர இன்னமும் எட்டு வருசம் ஆகும் .அவ்வளவுதானே …கழுதை …நான் இன்னும் ஒரு எட்டு வருசம் உயிரோடு இருக்க மாட்டேனா …என்ன ….? உன் மகள் வயிற்று பேரன் ஒருத்தன் பள்ளிக்கூடம் முடிச்சு …காலேசு சேர்ந்திருக்கானே .அவன் கல்யாணத்தை இது போல் …ஒரு சீர்திருத்த திருமணமா நீ செய்யுறதை பார்க்காமலா போக போகிறேன் …? “

தர்மகர்தாவிற்கு உடலில் குளிர் ஜுரம் வருவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.அடப்பாவி  …பெரிய.மனுசன்னு நம்பி வந்து பேச ஆரம்பிச்சா …இந்த ஆள் என் அடி மடியிலேயே கை வைக்கிறானே …இவன்தான் லூசுத்தனமா கண்டதையும் செய்து வைத்துக் கொண்டிருக்கறான் .மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக் கொண்டிருக்கிறான. என்னையும் எதற்கு இவன் கூட்ணியில் இழுக்கறான் …நான் ஊருக்குள் நடமாட வேண்டாமா …?பீதியில் வெளுத்த முகத்துடன் விடை பெற ஆயத்தமானார்தர்மகர்த்தா .

” கல்யாண சோலி தலைக்கு மேல கிடக்குங்கய்யா .நான் வாரேன் …” வேட்டி நுனியை தூக்கி பிடித்தபடி கிட்டதட்ட ஓடினார. லேசாக சிரித்தபடி கோபுர புனரமைப்பு இடத்தை நோக்கி நடந்தார் பொன்னுரங்கம் .

” என்னங்கய்யா வேலையெல்லாம் எப்படி போகுது …” செதுக்கும் சிலையிலிருந்து கண்ணெடுக்காமல் …” ஒரு வாரத்தில் முடிஞ்சிடுங்கய்யா ….” என்றார் அந்த ஸ்தபதி .

வேலையை கெடுத்துக் கொள்ள விரும்பாத அவரது தன்மை பிடித்திருக்க , தனக்குள் தலையாட்டியபடி இடுப்பில் கை வைத்து சுற்றிலும் இறைந்து கிடந்த கற்குவியல்களை பார்த்தார் .நாற்பது தூண்களுடன் மண்டபம் ஒன்றை அந்த கோவிலினுள் கட்டும் எண்ணத்தில் இருந்தார் .அதற்கான செலவை முழுக்க அவரே ஏற்றுக்கொண்டிருந்தார. அந்த நாறபது தூண்களும் சிறபங்கள் நிரம்பியதாக இருக்க வேண்டுமெனபது அவருடைய ஆசை .இதோ அவரது ஆசை நறைவேறக் கொண்டிருக்கிறது .

வரிசை …வரிசையாக சிற்பங்கள் தாங்கிய தூண்கள் …இன்னமும் நானகு தூண்கள்தான் பாக்கி .அவற்றின் வேலையும் ஒரு வாரத்தில் முடிந்துவடுமென தலைமை ஸ்தபதி சொல்லியிருந்தார் .சொன்னதை செய்பவர் அவர் .இதோ இந்த யாளி சிற்பம் நான்கு நாட்களுக்கு முன்பு மொழுக்கட்டையாக உருவேறாமல் இருந்த்து . இன்றோ …நேர்த்தியாக …கூர் பற்களுடன் …கம்பீரமுமாக அந்த சிம்ம யாளியின் முகத்தை மெல்ல வருடினார் .சுளீரென ஒரு மின்னல விரல் வழி உடல் முழுவதும் ஊடுறுவதை உணர்ந்தார் .

ஒரு உண்மையான ஆத்திகனுக்கு மனதார பக்தியுடன் சிலைகளை தொடும் போது உண்டாகும் உணர்வுதான் இது .ஆனால் இந்த சிலைகள் இன்னமும் சக்தியேற்றி உருவேற்றப்படவில்லையே …அதற்குள் இந்த பரவச உணர்வு உள்ளுக்குள் உண்டாகிறதென்றால் …இந்த மகமாயிக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும் …சிலிர்த்த  உடலுடன் வண்ணங்கள் பூசப்பட்டுக் கொண்டிருக்கும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து கை கூப்பினார் .” உன் திருப்பணியில் எந்த தடங்கலும் ஏற்பட நான் விட மாட்டேன் தாயே ….” உள்ளுக்குள்ளேயே அம்மனுக்கு உறுதியளித்தார் .

” வடக்குத் தெருவிற்கு காரை விடுலே …” கோவில் வாசலில் நின்ற தனது அம்பாசிடரில் ஏறிக்கொண்டு டிரைவர் திருமலைக்கு உத்தரவிட்டார் .திருமலை காரின் கியர் மாற்றியதிலேயே அவனது உற்சாகம் தெரிந்த்து . வடக்குத்தெரு அவனது ஏரியாவாயிற்றே ….





” வாத்தியார் வீட்டுக்குங்களாய்யா …”

” என் சம்பந்தி வீட்டுக்குடா ….” மீசையை நீவி முறுக்கிக் கொண்டார் .

ஆளுமையான ஆண்கள் மீசையை முறுக்குவது தங்கள் பெருமையை , பாரம்பரியத்தை சொல்ல .வடக்குத்தெருவற்கு போவதை தனது பாரம்பரியமாக கருதினால் பண்ணையாரய்யா அந்த அளவு இந்த சம்பந்த்ததில் கருத்தாக இருப்பதாகத்தானே அர்த்தம் .திருமலையின் கையில் கார் ஸ்டியரிங் உற்சாகமாக சுழன்றது .

அந்த தெருவில் பாதி தூரம் வந்த்துமே சிலம்ப குச்சிகளின் ஓசை காதில் கேட்க துவங்கியது .அந்த தெருவிலேயே பெரியதாக , நடுநாயகமாக கம்பீரமாக நின்ற அந்த  மாடி வீட்டின் மொட்டை மாடியிலும் கீற்று குடிசை வேயப்பட்டு சிலம்பு பயிற்சி நடந்து கொண்டிருந்த்து .சிறிய பையன்களுக்கு அங்கே சிலம்பம் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தான் கார்மேகம் .சிலம்ப வாத்தியாரின் மகன்.  வீட்டின் பின்புறத்திலும் சிலம்ப பயிற்சிதான் . அங்கே கற்று தந்து கொண்டிருந்தவர் வாத்தியார் பலவேசம் .வீ  ட்டின் தலைவாசலில் நுழையாமல் வெளிப்புறமாக சுற்றி வீட்டின் பின்புறம் வந்தார் பொன்னுரங்கம் .

” க்ம்பு இந்தக் கையிலிருந்து இந்தக் கைக்கு மாறும்போது இப்படி சுழண்டுட்டே போகனும் .இதோ …இப்படி ….” லாவகமாக சுற்றியபடி வலதிலிருந்து , இடதிற்கு கம்பை மாற்றிக் காட்டியபடி இருந்தார் பலவேசம் .முன்பாதி தலை முடி வழுக்கையாகி காலை வெயில் அவர் பளபளதலையில் பட்டு எதிரொலிக்க , கம்பு சுற்றிய வேகத்தில் மூக்கு நுனி வியர்வை தெறித்து சூரியனின் ஒளியில் வர்ணங்களாய் மாறியது .வாத்தியாரின் சரியான சிஷ்யனென நிரூபித்தான் அந்த சிலம்பம் சுற்றிய பையன் .பலவேசத்தினது போல் இப்போது அவன் கைகளிலும் கம்பு சுழன்றது .எதிராளியின் முகத்தை தாக்குவது போல் சுழன்று நின்றது .

படபடவென்ற கை தட்டுல்கள் சுற்றிலுமொலிக்க தனி லயமாய் ஒலித்த தட்டல் சத்தத்திற்கு திரும்பி பார்த்தார் பலவேசம் .நிதானமான அழுத்தமான தட்டலுடன் அவரை நெருங்கிய பொன்னுரங்கம் ….” அட்டகாசம் வாத்யாரே ….” என்றார் .

” வாங்கய்யா …எப்போ வந்தீக …? ” தன் கை கம்பை தரையில் ஊன்றி வரவேற்பாய் தலையசைத்தார் பலவேசம் .

” அந்தாக்கல …சக்கரம் கெனக்க கம்பு சுத்துனீகளே …அந்நேரமே வந்துட்டேன் ….” என்றவர் பலவேசம் வழித்து போட்ட நெற்றி வியர்வையை பார்த்து ” உழைப்பு வண்ணமாய் மின்னுதுல ….” என்று சூரிய ஒளியை காட்டினார் .

பலவேசம் சிறு கூச்சத்துடன் …” என்னங்கய்யா ஏதோ சொல்லிக்கிட்டு …உள்ளாற வாங்க ….” மீண்டும் வீட்டை சுற்றி முன்வாசல் வழியாக அவரை வீட்டினுள் அழைத்து செல்லும் எண்ணத்துடன் நடந்தார் .

” ஏன் …இந்த வழியா உள்ளார போக்க்கூடாதோ ….? ” கேட்டபடியே பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்துவிட்டார் பொன்னுரங்கம் .

அவர் நுழைந்த பின்வாசலில் முதலில் குளியலறை வர தொடர்ந்து சமையலறை வந்த்து .” ஆஹா கருப்பட்டி வாசம் …” மூச்சை இழுத்தபடி உள்ளே வந்தார் …” என்ன சமையலுங்கம்மா ….? “

அடுப்பின் மேல் ஆவி வெளி வந்து கொண்டிருந்த   இட்லி கொப்பரை முன் நின்றிருந்த குணவதி திடுக்கிட்டு திரும்பினாள் .இப்படி தன் வீட்டு சமையலறை வாசலில் திடுமென பண்ணையாரை எதிர் பார்க்கவில்லை அவள் .

” ஐயா …நீங்க ….இங்க ….” தடுமாறி முந்தானையில் கையை துடைத்து அப்படியே உயர்த்தி தோள்களை மூடிக்கொண்டாள் .சமையலறை தரையில் அமர்ந்து தேங்காய்யை திருகி பூவாக்கிக் கொண்டிருந்த புனிதா பதறியபடி எழுந்தாள் .

” உங்க பலகாரம் வாசம்தான் தாயி ….என்னை பின்வாசல் வழியாக உள்ளே இழுத்து வந்துட்டுது .என்ன சமையலுங்கம்மா …? ” இயல்பாய் அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டார் .

” வ…வந்து கருப்பட்டி புட்டு .வேகுது ….” இட்லி பானையை காட்டினாள் .

” கொடுங்க …கொடுங்க …எனக்கு முத்ல்ல கொடுங்க ….”ஆவலாய் கை நிட்டியவர்க்கு சிறு தயக்கத்துடன்  தட்டில் சிறு வாழை கீற்றிட்டு சிவந்தசிவப்பரிசி   புட்டை வைத்து , ஓரமாக கருப்பட்டி தூளை வைத்து , மேலே தேங்காய் துருவலை தூவினாள் .பொன்னுரங்கத்திற்குபலகாரம.  கொடுத்த குணவதியின் கைகள் நடுங்கின .

” நீங்க விதம் விதமா சாப்பிட்டிருப்பீங்க” குரல் நடுங்க கூறியவள் , ஒரு தைரியத்திற்காக பக்கத்தில் மருமகள் புனிதாவை தேட , அவள் கை கால்கள் தந்தியடிக்க எப்போதோ மாயமாகி இருந்தாள.  எனக்கு ஒரு இக்கட்டுன்னா முதல் ஆளா ஓடிடுவாளே …இவளெல்லாம் ஒரு பொண்ணு …? மனதுக்குள் மருமகளை வசை பாடியபடி ஙெளியில் முகத்தில் அமைதி காட்டினாள் .

குணவதி சொன்னது போல் அன்று பொன்னுரங்கம் சாப்பிட்டார்தான் . .இட்லி. தோசை , வடை , கேசரியென இலை முழுவதும் நிரப்பி உண்டார்தான் .ஆனால் இந்த புட்டின் சுவை நிறைவு அதில் இல்லை .நாவின் நிறைவென்பது ருசியியில் இல்லை மனதில்தான் போலும் .கடைசி துகள் வரை விரலால் வழித்தெடுத்து உண்டுவிட்டு எழுந்தார.

அருகில் நின்றிருந்த பலவேசத்தின் தோள்களில் கைகளை போட்டு அணைத்தபடி வீட்டின் முன்னறைக்கு நடந்தார் .” கோவில் வேலைகள் எனக்கு மிக திருப்தியாக நடந்து கொண்டிருக்கிறது வாத்தியாரே .நீங்களும் ஒரு முறை வந்து பார்த்துவிடுங்கள் ….”

மாடியிலிருந்து இறங்கி வந்த கார்மேகம் அவருக்கு பணிவாய் வணக்கம் செலுத்தினான் .

” கார்மேகம் நீயும் கோவிலுக்கு வந்து பார்த்தேயில்ல …” அவனிடமும் விசாரித்தார.

” நானும் பார்த்துக் கொண்டுதானய்யா இருக்கிறேன் .எங்கள் பக்கத்து ஆடகளும் வந்து பார்க்கிறார்கள் ….” இருவருமே சொன்னார்கள் .

” ம் …எல்லோருக்கும் திருப்திதானே ….? “

” திருப்திதானுங்கய்யா .உங்களுக்கு பெரிய மனது .எங்களையும் உங்களுக்கு இணையாக ஆக்கிக் கொண்டதற்கு ….”

” இதிலென்னப்பா இருக்கறது ….? நெட்டையும் , குட்டையுமாக விதம் விதம்மான வடிவங்களுடன் இருக்கும் விரல்கள் ஒன்றாக சேர்ந்து குவிந்தால்தான் , எதிரியின் முகத்தில் ஒரு குத்து விட முடியும் .அந்த ஒத்து போகும் தன்மைதான் இங்கே நம் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கிறது ….” குத்தூசி பேச்சால் நடு நெஞ்சை சொருகியபடி வந்து நின்றாள் பூந்தளிர் .

அரக்கு வண்ண பாவாடையும் , ரவிக்கையும் பழுப்பு நிற தாவணியுமாக பின்னியிருந்த நீள இரட்டை ஜடைகள் முன்னால் மார்பு மீது கிடக்க , படபட விழியும் , சடசட பேச்சுமாக எதிரே வந்து நின்ற பூந்தளிரை நிமிர்ந்து பார்த்ததும் பொன்னுரங்கத்தின் முகம் மலர்ந்த்து .

வரப்பின் மீது லாவகமாக சைக்கிள் ஓட்டியபடி வந்து அவர் முன் நின்று ” நீங்க கெளம்புறதுக்குள்ள வந்துரனும்னு வேகமாக சைக்கிள் மிதித்து வந்தேனய்யா .உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் ….” மூச்சு வாங்க அவள் அன்று நின்ற கோலம் , பூந்தளிரை முதன் முதலாக சந்தித்த நாள் நினைவில் வந்தது .




What’s your Reaction?
+1
22
+1
25
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!