Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-10

10

” டேய் என்னடா நடக்குது இங்கே …? ” அண்ணன் கதிர்வேலனின் கேள்வி காதில் விழாமல் ஆணியடித்தாற் போல் நின்றிருந்தான் குருபர ன் .

” ஏன்டா உன் வீட்டுக்காரி என்ன பண்றா …? ” முருகேசனின் கேள்விக்கும் குருபரனிடம் பதிலில்லை .

” நம் வீட்டு நிலவரத்தை நேற்றே நீ உன் வீட்டுக்காரியிடம் சொல்லவில்லையா ….? ” கதிர்வேலனின் குரலில் நேற்று இரவெல்லாம் என்னடா செய்தாய் என்ற கேள்வி தொக்கி நின்றது .

” அண்ணே பாவம்னே நம்ம தம்பிக்கு நேத்து ராத்திரி பேசக் கூட நேரமில்லை போல ….” முருகேசனின் கேலி குரலில் குத்தலும் இருந்த்து .

ஒருநாள் இரவிறகுள் பொண்டாட்டி பக்கம் சாய்ந்து விட்டாயாடா மடையா …கேட்காமல் கேட்டுக் கொண்டிருக்கும் தன் சகோதர்ர.களை முறைத்தான் குருபரன் .உள்ளுக்குள் இப்படி ஒரு நிலைமையில் நிறுத்தி விட்டாளே என பூந்தளிர் மேல்தான் ஆத்திரம் கன்ன்றது .கையை அசைத்து தலையை ஆட்டி பேசிக் கொண்டிருந்தவளின் கைகளை மடக்கி தலையில் நங் …நங்கென கொட்டும் ஆர்வம்வந்த்து .

” நான் சொன்ன சாமான்களையெல்லாம் குழியில் போட்டு    மட்க வைத்து ,திரும்ப தோண்டி எடுத்து போட்டாலே போதும் மாமா .சூப்பர் உரம் ரெடி ….” இப்போதுதான் உரமொன்றை தயாரித்தவள் போல் கைகளை தட்டிக் கொண்டு சொன்னவளை காபியை உறிஞ்சியபடி பார்த்துக் கொண்டு , தலையசைத்து  கொண்டிருந்தார் பொன்னுரங்கம் .

இப்போது பொன்னுரங்கத்தின் பின்னால் வந்து நின்ற சொர்ணத்தாய் பூந்தளிர் மேல் நெற்றிக்கண்ணை திறந்து விட்டுக் கொண்டிருந்தாள. பேசியபடி ஏறிட்டு பார்த்த பூந்தளிருக்கு மாமியாரின் நெருப்பு பார்வையின் காரணம் தெரியவில்லை .ஆட்காட்டி விரலால தலைய்யை சொறிந்து கொண்டு விழித்தாள் .

திரும்பி மனைவியை பார்த்த பொன்னுரங்கம் ” ஏ புள்ள எதுக்கு மெய்மறந்து நிக்கிற …போய் என் தோள் துண்டை எடுத்தா…வயக்காட்டு பக்கம் போகனும் ….” விரட்டினார. பூந்தளிர் மேலிருந்த பார்வையை அகற்றாமல் போனாள் சொர்ணத்தாய் .

” இங்கன வேலையை முடிச்சிட்டு நம்ம காட்டு  பக்கம் வா தாயி …” பூந்தளிருக்கு ஒரு அழைப்பு விடுத்து விட்டு மனைவி கொண்டு வந்து கொடுத்த துண்டை வாங்கி தோளில் போட்டபடி வெளியேறினார் பொன்னுரங்கம் .அவர் போனதும் அமர்ந்த நிலையிலேயே கண்களை சுழற்றி பார்த்த பூந்தளிர் வியந்தாள் .அந்த வீட்டினர் அனைவரும் ஆங்காங்கே நின்றபடி அவளையே உறுத்தபடி இருந்தனர் .எதற்கு எல்லோரும் இப்படி பார்க்கின்றனர் …? புரியாமல் விழித்தாள் .





சொர்ணதத்தாய் இடுப்பில் கை வைத்து கண்களை உருட்டி என தனது கோபத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தாள் .என்னம்மா இது …எனபது போலொரு சலித்தல் பார்வை பொன்னியிடம் .அனுராதாவின் முகம் ஆச்சரியமோ , திருப்தியோ …என புரிந்து கொள்ள முடியா ஒன்றுடன் விளங்கியது .சரிதான் இவளை என்றுதான் புரிந்து கொள்ள முடிந்த்து .தள்ளி    நின்று இவளை பார்தபடி இருந்த கதிர்வேலன் , முருகேசன் முகங்களிலும் அதே வெறுப்பு பாவனை .

எந்திரிச்சி நம்ம ரூமுக்கு வா ….” குருபரனின் பற்கள் நெரிபடும் சத்தம் அருகில் அவன் வந்த்தால் கேட்டது .நிமிர்ந்து அவனை பார்க்கையில் முகம் சாதாரணமாகத்தான் தோன்றியது .பூந்தளிர் தலை திருப்பி மீண்டும் சொர்ணத்தாயை பார்க்க ” அங்கே என்ன பார்வை …எந்திரிச்தி வா ….”

” உங்க அம்மா கடைவாயில் கோரைப்பல் எதுவும் தெரிகிறதான்னு பார்த்தேன் .விட்டால் காளி மாதிரி ருத்ர தாண்டவம் ஆடுவாங்க போலவே …,” குரல் குறைத்து பேசியவளின் உச்சந்தலை வலியாய் அதிர்ந்த்து .தன் தலையை தொட்டு பார்த்தவள் …

” அத்தை …கொட்டிட்டாருத்தை ….” சிறு குழந்தையாய் உதடு பிதுக்கி புகாரளித்தாள.

வந்த சிரிப்பை அடக்கி பொன்னி உள்ளே போய்விட , அனுராதா விருப்பமற்றதானதோர் உதடு பிதுக்கலுடன் பொன்னியை பினதொடர்ந்தாள் .திடுமென தன்னிடம் பதியப்பட்ட புகாருக்கு என்ன தீர்ப்பு வழங்குவதென , தனது அவதார தோற்றத்தை விடுத்து யோசிக்கலானாள் சொர்ணத்தாய் .தொண்டையை செருமியபடி அன்னையின் உதவிக்கு வந்த கதிர்வேலன் ” ஏலேய் உன் வீட்டுக்காரியை உள்ளே கூட்டிப் போய் நம்வீட்டு நடைமுறையை விளக்கு …” என்றான் .

” வா ….” என்றவனின் அழைப்புக்கு ” மாட்டேன் ….” தலை தடவியபடி முறைத்தாள் .குருபரனின் பொறுமை பறக்க நீண்ட அவள் பின்னலை அழுத்தி பற்றி கைகளில் முறுக்கி இழுத்தான் .” ஒழுங்காக வாடி …” மீண்டுமொரு புகாருக்காக பூந்தளிர் சொர்ணத்தாய் பக்கம் திரும்ப , அவளுக்கு அவசரமாக உள்ளே ஒரு வேலை வந்துவிட்டது .” இதோ வர்றேன் ….” கூப்பிடாத யாருக்கோ பதிலளித்தபடி போய்விட்டாள் .இப்போது குருபரன் பூந்தளிரின் தோள்களை அழுத்தி பற்றி எழுப்பி இழுத்து போனான் .

” குரு …அவளை நிச்சயம் கண்டிப்பான் …” கதிர்வேலன் முருகேசனிடம் சொன்னான்

” ம் …கண்டித்தால் சரிதான் .எனக்கென்னவோ …அவன் அவளை உள்ளே இழுத்து போவதை பார்த்தால் வேறெதற்கோ கூட்டிக் கொண்டு போவது போலவே தெரிகறது ….” முருகேசன் தலையை உலுக்கிக் கொண்டான் .

உனக்கும் அப்படித்தானா …எனக்கும் …என எண்ணிவிட்டு சீச்சி …அப்படி இருக்காது .தனது மன ஓட்டத்தை மாற்றியபடி போனான் கதிர்வேலன் .

” உன் குடும்பத்திலெல்லாம் இப்படித்தான் வீட்டு பெரியவர்கள் முன் அமர்ந்து மரியாதையில்லாமல் காலாட்டிக் கொண்டு பேசுவீர்களா …? ” அறையினுள்ளே நுழையவும் கத்த தொடங்கி விட்டான் .அப்போதுதான் மாமனாருடன் அமர்ந்து பேசிக் கொண்மிருந்த்துதான் இவர்கள் அனைவரின் கோபத்தற்கு காரணமென்பதை உணர்ந்தாள் பூந்தளிர் .

” ஏன் அதிலென்ன தப்பு …? என் அப்பாவுடன் நான் இப்படித்தான் பேசுவேன் .அவர் எங்கள் வீட்டு பெரியவர்தானே …? “

” உன் அப்பாவுடன் நீ உட்கார்ந்து பேசுவாய் .உன் அண்ணன் மனைவியும் இப்படித்தான் பேசுவார்களா …? “

பூந்தளிரின் வேகம் குறைந்து சிந்தனை வந்த்து ” .அண்ணி …அப்படி பேச மாட்டாள் …அப்பாவை பார்த்ததும் முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டு …பேசவே தெரியாதவள் போல் நடிப்பாள் தெரியுமா …? உண்மையில் அவளுக்கு அப்பாவிடம் மரியாதையெல்லாம் கிடையாது .போலி பவ்யம் …” இயல்பாக தன் வீட்டை பகிர்ந்து கொண்டவளுக்கு பதில் சொல்லும் வகையற்று அவளை பார்த்தான் குருபரன் .





” ஆனால் நான் அப்படி இல்லை ்எனக்கு நடிக்க தெரியாது .நான் அப்பாவையும் , மாமாவையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் .அதனால் என் அப்பாவிடம் பழகுவது போன்றே உங்கள் அப்பாவிடமும் பழகுகிறேன் ….” சரிதானேஎன அவளுக்கு வக்காலத்து வாங்கிய தன் மனதினை அதட்டி அடக்கிய குருபரன் …

” ஆனால் …இங்கே நம் வீட்டிற்கென சில நெறிமுறைகள் இருக்கிறது .நீ கவனித்தாயோ என்னவோ …நாங்கள் ஆண்பிள்ளைகள் மூவருமே ஒரு முறை கூட அப்பாவின் எதிரே அமர்ந்து சரக்கு சரியாக பேசியதில்லை …”

” அதென்ன ஆண்பிள்ளைகளே …ஆம்பளைகளுக்கென்ன தலையில் கொம்பா முளைத்திருக்கறது …?மனிதப் பிறப்பில் ஆணென்ன …பெண்ணென்ன …? ” பூந்தளிர் கையை நீட்டியபடி சோபாவிலிருந்து எழுந்துஙிட்டாள் .விட்டால் சேலையை தார்பாச்சு கட்டிக் கொண்டு அவனோடு சிலம்பம் சுற்றி சண்டையிடுவாள் போல் நின்றாள் .அப்போது அவள் கைகளை அப்படித்தான் …சிலம்ப குச்சியை சுற்றுபவளை போலத்தான் வைத்துக் கொண்டிருந்தாள் .சிலம்ப வாத்தியார் பொண்ணாச்சே கம்பு சுற்றினாலும் சுற்றுவாள் …பெருமூச்சு ஒன்றெடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் குருபரன் .
” தாயே பத்ரகாளி கொஞ்சம் மலையிறங்கி வா …நாம் பேசிட்டிருக்கிற விசயம் இந்த பெண் விடுதலையில்லை .நம் குடும்ப விசயம் …பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தோம் ….” பூந்தளிரை நடப்புக்குள் இழுக்க முயன்றான் .




What’s your Reaction?
+1
24
+1
14
+1
0
+1
8
+1
0
+1
1
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!