Cinema Entertainment

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரம் மாயம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரம் மாயம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அடுக்கடுக்காக வரும் சோதனை

இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீப காலமாகவே சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இது பத்தாது என்று, கூடவே இருப்பவர்களும் தற்போது குழி தோண்டியதால் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.

தன்னுடைய வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுமார் 3.6 லட்சம் மதிப்புள்ள இந்த நகைகள் அனைத்தையும், 2019 ஆம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பயன்படுத்திவிட்டு தனது லாக்கரில் வைத்ததாக கூறியுள்ளார்.




லாக்கரின் சாவி ஐஸ்வர்யா வசம் இருந்த போதிலும், அதன் சாவி அவருடைய தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தெரியுமாம். அவர் இல்லாத சமயத்தில் அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்ட்க்கு செல்வார்கள் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் லாக்கரை சரி பார்க்கும்போது திருமணமான 18 ஆண்டுகளில் வாங்கிய நகைகள் அனைத்தும் காணாமல் போனது தெரிய வந்துள்ளதும் பெரும் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய வீட்டில் பணிபுரியும் மூன்று பேரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் விலகுவதாகவும் அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருங்கிய தோழியும் லால் சலாம் படத்தின் காஸ்டியூம் டிசைனருமான பூர்ணிமாவும் விலகுவதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்த 60 சவரன் தங்க வைர நகைகள் மாயமானது அவருக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷ் உடன் விவாகரத்து பெற்று, தன்னுடைய மகன்களுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் இப்படிப்பட்ட சூழலில், கூட இருப்பவர்களே குழி தோண்டி இருக்கும் துரோக செயலை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!