Entertainment News

உங்களுக்கேற்ற ஆடையை தேர்வு செய்வது எப்படி?

  1. ஒல்லியோ,குண்டோ கறுப்போ ,சிகப்போ…உயரமோ,குள்ளமோ…உங்களுக்கேற்ற ஆடையை தேர்வு செய்யலாம்.. வாங்க..

தான் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்க தான் செய்கிறது. இயற்கை வாரி வழங்கியுள்ள அழகை மேலும் மெருகூட்டுவது என்னவோ ஆடைகள் தான். இதனால் தான் பெரியவர்கள் ஆள் பாதி ஆடை பாதி என்றார்களோ தெரியவில்லை. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.




குட்டையாகவும் நல்ல கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ஜாக்கெட் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.

கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்த வரை பார்டர், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது. மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக்கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும் படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள் ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விடவேண்டாம். முடியை கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக்கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீளவாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ஜொள்ளுபவர்களின் எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த அளவுக்கு நீங்கள் எடுப்பாக தெரிவீர்கள்.




ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி மாறி வருவது போல் ஆடையை தேர்வு செய்யலாம். இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குண்டாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள் அல்லது மணி சிம்கி அமைந்திருந்தால் தோற்றத்த சற்று உயர்த்திக்காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். மேலும் நீங்கள் பிரில் வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கி காட்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.

பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட் ஷர்ட் அணிபவர்கள் ஷர்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம். மொத்தத்தில் ஆடையின் விலை முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையை தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால் இனி நீங்களும் உலக அழகிதான்.




 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!