Entertainment தோட்டக் கலை

காய்கறி விதைகள் விதைக்க.. டிப்ஸ்

முதலில் விதைகளை தேர்வு செய்யும் போது நல்ல தரமான விதைகளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும் முடிந்த வரையில் நாட்டு விதைகளாக வாங்கினால் நல்லது. அது மட்டுமின்றி நாட்பட்ட விதைகளை வாங்கி விதைத்தாலும் அவைகள் முளைக்காது. எனவே விதைகளை வாங்கும் போது கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.

  • விதைகள் சிறிய விதைகளாக இருந்தால் குறைந்தது இரண்டு மணி நேரமும், கொஞ்சம் பெரிய விதைகளாக இருந்தால் ஒரு நாள் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்த பிறகே விதைக்க  வேண்டும். இப்படி செய்யும் போது தான் செடிகள் விரைவில் முளைத்து வரும்.

  • வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

  • முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.




  • மாடித்  தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது. இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.

  • தொட்டிகள்ல தேங்காய் நார், மண்புழு உரம், செம்மண் கலந்து போட்டு அதுல இலைதழைகள், கரும்புச்சக்கை, காய்கறிக் கழிவுகள்னு போட்டு மட்க விடுவிடுங்கள் . அப்புறம் நவதானியங்களை விதைச்சு நாப்பது நாள் வளத்து தானியச்செடிகளைப் பிடுங்கிப் போட்டு மட்க விடுங்கள். இப்படிச் செய்றதால மண் நல்ல வளமாகிடும்.

  • அதே போல் விதைகளை மண்ணில் நடும் போது விதையின் அளவை விட இரண்டு மடங்கு ஆழத்தில் மட்டும் தான் நட வேண்டும். மிக மேலே விதைகள் தெரிந்தாலும் சூரிய ஒளி பட்டு கருகி வராமல் போய் விடும். அதே நேரத்தில் ஆழமாக விதைத்து விட்டாலும், செடிகள் முளைத்து வெளிவர சிரமமாக இருக்கும்.

  • விதைத்தவுடன் அடுத்து செய்யும் மிகப் பெரிய தவறு தண்ணீரை அதிகமாக ஊற்றி விடுவது. மணல் ஈரப்பதமாக இருக்க வேண்டுமே தவிர தண்ணீர் அதிகமாக தேங்க கூடாது. மண்ணில் ஈரம் காயும் தருவாயில் தண்ணீர் தெளித்து விட்டால் போதும். இந்த விதைகள் முளைத்து வரும் வரை செடிகளுக்கு தண்ணீர் கையில் தெளித்தால் நல்லது.

  • அதுக்கப்புறம்தான் தேவையான காய்கறி விதையையோ, நாத்தையோ நடுங்கள். நாட்டுக் காய்கறிகளைச் சாகுபடி செய்யப் பட்டம் முக்கியம். தக்காளி, மிளகாய் ரெண்டையும் நாத்து விட்டுத்தான் நடவு செய்ய வேண்டும். மத்த காய்கறி விதைகளை நேரடியா விதைச்சுடுங்கள். செடிகள்ல பூச்சிகள் வந்தா மட்டும்தான் இஞ்சி-பூண்டுக் கரைசல் அல்லது வேப்பெண்ணெய் தெளிச்சு விடுங்கள்.  தினமும் செடிகளைப் பராமரிக்கிறதுக்காக “ஒரு மணி நேரம் ஒதுக்கிடுங்கள்.”




  • அடுத்த செடிகள் முளைத்து வரும் வரை அதை வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. வெயிலின் நிழல் படும் இடத்தில் தான் வைக்க வேண்டும். ஒரு வேளை வெயிலில் வைக்க நேர்ந்தால் என்றால் அதற்கு மேல் ஒரு கவர் பிளாஸ்டிக் போன்ற ஏதாவது ஒன்றை அதன் மேல் மூடி வைத்து தான் வளர்க்க வேண்டும். வெயில் நேரடியாக விதைகளில் மீது படும் போது செடிகள் முளைக்கவே செய்யாது. அது மட்டும் இன்றி இப்படி மாடியில் வைப்பவர்கள் அந்த விதைகளை மூடாமல் வைத்து விட்டால் எலி, அணில் போன்றவை எல்லாம் விதைகளை தின்று விடும் நமக்கே தெரியாது விதைகள் முளைக்கவில்லையே என்று யோசிப்போம்.

  • நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனி தான்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!