Entertainment தோட்டக் கலை

மாடி தோட்டதில் செய்ய கூடாத சில விஷயங்கள்.




மாடித்தோட்டத்துல விவசாயம் செய்றவங்க, ஆர்வக்கோளாறுல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல நடவு செஞ்சிடுறாங்க. அப்படி செய்யக் கூடாது. ஏன் வைக்கக் கூடாது? வெச்சா என்னாகும்னு ஒரு கேள்வி வரலாம். அதுல ஒண்ணும் பெரிய விஷயம் இல்லீங்க.

உதாரணமா, தக்காளி, கத்திரி, மிளகாய் இதுக மூணும் ஒரே தாவரக் குடும்பம். ஒரே அப்பார்ட்மென்ட்ல அண்ணன், தம்பி, அக்கா வீடு இருக்குன்னு வெச்சுக்குங்க. அண்ணன் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க நம்ம வீட்டுக்கும் வருவாங்க. அக்கா வீட்டுக்கும் போவாங்கதானே… அதுதான் இங்கயும் நடக்குது.

தக்காளிச் செடிக்கு வர்ற பூச்சி கத்திரிக்கும் போகும். மிளகாய்க்கும் போகும். ஆக ஒரு பயிருக்கு வர்ற பூச்சியை இன்னும் ரெண்டு பயிருக்குப் போயிட்டு வாங்கனு அனுப்புற வேலைதான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைப் பக்கத்துல பக்கத்துல வைக்குறதுனால நடக்குது. அதனால இந்த மூணு பயிர்களையும் பக்கத்துல பக்கத்துல வைக்கக் கூடாது.

நமக்கு இருக்கிறதே கம்மியான இடம். இதுல எப்படித் தள்ளித் தள்ளி வைக்கிறதுனு யோசிக்கிறீர்களா? தக்காளியை அடுத்து வெண்டைக்காய் வைக்கலாம். இது வேற குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளிக்கு வர்ற பூச்சி இதுக்குப் போகாது. தக்காளி செடியில இருந்து 4 அடி தள்ளிக் கத்திரிக்காய் செடி வையுங்க. அதுல இருந்து 4 அடி தள்ளி மிளகாய் செடியை வையுங்க. இதுகளுக்கு இடையில இருக்குற இடைவெளியில மத்த பயிர்களை வையுங்க. இம்புட்டுதான் ப்ரோ. இது தெரியாமதான் ரொம்ப பேர் இந்தத் தவற்றை செஞ்சிடுறாங்க. உங்க மாடித்தோட்டத்துலயும் இப்படி இருந்துச்சுன்னா உடனே மாத்திடுங்க.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!