Entertainment News தோட்டக் கலை

தோட்டக் கலை – மாடித்தோட்டம்




                                                                                        

மாடித்தோட்டம்

வீட்டு தோட்டம் அமைக்க இயலாளர்கள் மாடியில் தோட்டம் அமைக்கும் முறை எப்போதோ தொடங்கி விட்டாலும் ,தற்போது இதன் நன்மைகளை அறிந்து அதிகமான இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைகின்றனர்.சுமாராக ஆயிரம் ரூபாய் பணமதிப்பில் மாடித்தோட்டம் அமைத்தால் வருடத்திற்கு பத்தாயிரம் வரை பயன்தரக்கூடிய காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.சிறிய அளவில் தோட்டமிடுவதால் பூச்சி பரவுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது மொத்தமாகவே செடிகளை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் நடவு செய்துகொள்ளலாம் ,இந்த வசதி விவசாயிகளுக்கு இல்லாத காரணத்தினாலேயே அதிகம் பயிர் செய்த செடிகளை அளித்து நஷ்டமடையாமல் இருக்க செயற்கை இரசாயனங்களை நாடுகிண்டனர்.

மாடித்தோட்டத்தின் பயன்கள்

  • செயற்கை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி உணவில் கலப்பது கட்டுப்படுத்தலாம்

  • பொருளாதார மாறுதல்களை சமாளித்து அதிக செலவின்று நிறைய காய்கறிகளை நாமே விளைவிக்கலாம்

  • நாகரிக உலகில் தனிமையின் வெறுப்புகளை சமாளித்து நல்லதொரு பொழுதுபோக்காக விவசாயம் செய்யலாம்

  • அதிக நீரின்று போனால் கூட விவசாயம் செய்ய முடியும்

  • பூ செடிகள் வைத்து வளர்ப்பதில் மூலமாக மன நிம்மதி அடைந்து நல்ல மனநிலையை அடையலாம்

  • குறைந்த இடத்தில அதிக மகசூல் பெறலாம்.




தொட்டிகள்

தொட்டிகள் வைக்கும் அளவுதான் இடம் இருக்கிறது என்றால், நீங்கள் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் செடி வளர்க்கலாம். ஒரே மாதிரியான தொட்டிகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய பொருள்களில் செடிகள் வளர்க்கிறீர்கள் எனில், தேவையில்லாத தண்ணீர் வெளியேறும் வகையில் துளைகள் போட்டுக்கொள்ளுங்கள். பழைய வாட்டர் பாட்டில் போன்று நீள அகலம் குறைவான பொருள்களில் புதினா, கொத்தமல்லி, அழகுச்செடிகள் என குறைந்த அளவில் வேர் படரும் செடிகளைத்தான் வளர்க்க வேண்டும். பழைய குடங்கள், மினரல் வாட்டர் கேன்கள், வாளிகள், போன்றவற்றில் கத்தரி, தக்காளி, எலுமிச்சை போன்ற செடிகளைக்கூட வளர்க்கலாம். குறைவான இடமே இருக்கிறது என்பவர்கள், வீட்டில் இருக்கும் பழைய ஷு அல்லது கப்களில் மண்ணை நிரப்பி கீரைகள், மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். அப்பார்ட்மென்ட் வீடுகள் என்றாலும்கூட, தொட்டிகளைத் தொங்கவிட்டு கீரை, பூச்செடி வகைகளை வளர்க்கலாம்.

தொட்டிகளை நேரடியாகத் தரையில் வைத்து வளர்த்தால் தரை பாதிக்கப்படும் என்பதால், தொட்டிகளை வைக்கும் முன், பிளாஸ்டிக் கவர்களையோ, கடப்பா கல், மரப்பலகைகள் போன்றவற்றை வைத்து அதன்மீது தொட்டிகளை வைக்க வேண்டும்”.




பல வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட பெட்டகங்களை நிறுவுதல்

பலவிதமான வடிவங்கள் மற்றும் பலவிதமான அளவுகள் கொண்ட பெட்டகங்களை தோ்வு செய்து அவற்றில் செடிகளை வளா்க்க வேண்டும். ஒருவேளை நமது தோட்டம் மிகச் சிறியதாக இருந்தால் அல்லது நமது பால்கனியில் தோட்டம் இருந்தால், அவற்றில் பல வண்ண நிறங்கள் கொண்ட மற்றும் பல வடிவங்கள் கொண்ட பெட்டகங்களை வைத்து அவற்றில் செடிகளை வளா்த்தால் சிறப்பாக இருக்கும்.

மாடித் தோட்டம் அமைக்கும் முறை :

வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்துவிரிந்த இடம் தேவையில்லை. பால்கனி அல்லது மொட்டைமாடிகூட போதும். அந்த இடமும் இல்லையென்பவர்கள், வெயில்படும் இடத்தில் தொங்கும் செடிகள் அமைப்பது, வீட்டின் கைப்பிடிச் சுவர்களில் சிறிய தொட்டிகள் அமைத்து பராமரிப்பது என நிறைய வழிகள் இருக்கின்றன. பழைய குடம், கேன், வாளிகள், டயர்கள் என எதில் வேண்டுமானாலும் செடிகளை வளர்க்க முடியும். இதுபோன்ற பழைய பொருள்களில் செடிகள் வளர்ப்பவர்கள், 1,000 ரூபாய் செலவில் தோட்டம் அமைக்க முடியும்.

  • 10 தொட்டிகளுடன் அமைக்கும் ஒரு சிறிய தோட்டத்திற்கு விதைகளை வாங்க 100 ரூபாய் வரை செலவாகும்.

  • 10 தொட்டிகளுக்கு 2 கிலோ தென்னங்கழிவு போதுமானதாக இருக்கும். அதற்கு 50 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

  • புது தோட்டம் அமைப்பவர்கள், பஞ்ச கவ்யாவை விலைக்கு வாங்கலாம். அதற்கு 100 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

  • உரங்கள் தயாரிக்க முடியாதவர்கள், 5 கிலோ உரம் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு 50 ரூபாய் வரை செலவாகும்.பூவாளி வாங்க 100 ரூபாய் செலவாகும்.

  • வளமான மண் இல்லை என்பவர்கள், அருகில் உள்ள நர்சரிகளில் 10 தொட்டிகளுக்கு மண் வாங்கி, உங்கள் பகுதியில் உள்ள மண்ணுடன் கலந்துகொள்ளலாம். ஒரு கிலோ மண் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 10 கிலோ வாங்கினால் 600 ரூபாய் செலவாகும்.

இதில், உங்களிடம் இருக்கும் பொருளுக்கு ஏற்ப உங்கள் பட்ஜெட்டை மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களை கையாள வேண்டும்.

தோட்டக்கலை பற்றி (என்ன என்ன காய்கறி, மருத்துவ செடி வளர்ப்பது, உரம் தயர்ப்பது ) போன்ற தகவல்களை  அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!