Serial Stories

மாற்றங்கள் தந்தவள் நீதானே -5

அத்தியாயம்-5

 

“ஆ…ஆமாம்” என்று திக்கி திணறி பதில் சொன்னாள் மோகனா.

தீடிரென்று அந்த இடத்திலே அவனைப்பார்த்தவுடன் பேச்சே வரவில்லை.

“நீ.. நீங்க ரேவதிக்கு என்ன வேணும் அதாவது கல்யாண பொண்ணுக்கு உறவான்னு கேட்டேன்”  அவனிடம் சகஜமாக பேச முடியாமல் தடுமாறினாள்.




“உறவெல்லாம் இல்லைங்க…எங்க சித்தப்பாவுக்கு பழக்கமான குடும்பம் பொண்ணு கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் உதவி செய்யுங்கன்னு கேட்டாங்க…இன்னைக்கு சாட்டர்டே இல்லையா அதுவும் செகண்ட் சாட்டர்டே? பேங்க் லீவு அதுதான் நேரடியாக கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆமா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க உங்க பேரண்ட்ஸ் உங்க கூட வரலையா?” கேட்டுக் கொண்டே அவன் முன்னே நடக்க,

“அவங்கல்லாம் நாளைக்கு காலைல பிளைட்ல வந்துருவாங்க கல்யாண பொண்ணு ரேவதி என்னோட கிளாஸ் மேட் அதனால நான் மட்டும் சீக்கிரமா வந்துட்டேன்.”

” ஓகே…ஓகே சீ யூ  மீட்  அகைன்”

வீட்டிற்குள் இருவரும் சேர்ந்து நுழைந்தாலும் இவளை தெரியாததைப் போலவே காட்டிக் கொண்டான். அது சற்று வித்தியாசமாக இருந்தது ஆனால் அதுவும் நல்லதுதான் இவனிடத்தில் பணம் வாங்குவது அவர்களுக்கு தயக்கமாக இருக்கலாம். அதுவும் நமக்குத் தெரிஞ்சவருன்னு தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாங்க, அதனால இவன் யாருன்னு தெரியாததுப்போல இருப்பதே நல்லது.

மோகனாவை பார்த்தவுடன் ரேவதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி

“மோகனா வந்துட்டியா டீ…” தோழியை கட்டி தழுவிக் கொண்டாள் ரேவதி

“வந்துட்டேன் வந்துட்டேன் நீ எல்லாம் எனக்கு ஒரு ஃபிரண்ட் கல்யாணத்தை வச்சுக்கிட்டு பத்திரிக்கை அடிச்சு யாரோ மூனாவது மனுஷனுக்கு கொடுக்குற மாதிரி குடுக்குற? அதுவும் குடுக்கல கொரியர் அனுப்புறே. எனக்கு ஒரு போன்னாவது பண்ணி இது மாதிரி திடீரென கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு பத்திரிக்கை அனுப்புறேன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துட்டுன்னு இதுவரைக்கும் ஒரு கால்பண்ணியாவது சொன்னியா? நானேதான் மனசு கேட்காம ஓடி வந்தேன். எப்படி எல்லாம் மனுஷங்க இருக்காங்க பாரு அது தெரிஞ்சுக்காம நான் இருக்கேன்.”

“சாரிடி மோகனா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல இது ஒரு திடீர் கல்யாணம் வீட்டு சூழ்நிலை அப்படி சொன்னா நீ கஷ்டப்படுவேன்னுதான் உன் கிட்ட நான் சொல்லல…”

“என்ன ஆச்சுடி என்ன பிரச்சனை ” பதட்டத்தோடு கேட்டாள் மோகனா.

“அம்மாவுக்கு கேன்சர் டீ…ரொம்ப முத்திப் போச்சு என்கிட்ட சொல்லாம மறச்சிட்டாங்க ரெண்டு மாசமோ மூணு மாசமோதான்  உயிரோடு இருப்பாங்களாம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழுத தோழியை ஆறுதலோடு தோளில் சாய்த்துக் கொண்டு மோகனாவும் கண்ணீர் வடித்தாள்.

” அழத டீ ரேவதி அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.”




“ப்ச்… நாம வேணா மனச தேத்திக்கலாம் ஆனா அவங்க சாவோட விளிம்பில இருக்காங்க. அவங்க உயிரோடு இருக்கும் போதே எனக்கு ஒரு கல்யாணத்த பண்ண நினைக்கிறாங்க… நானும் நீங்க யாரை சொல்றீங்களோ அவங்களையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இதுவரைக்கும் நான் மாப்பிள்ளையை கண்ணால பார்க்கவே இல்ல”

” என்னடி சொல்ற…?”

“ஆமாண்டி உண்மையத்தான் சொல்றேன் அவரு பாரினில் இருந்து நேத்து காலையில தான் வந்து இருக்கார். போட்டோவுலதான் பாத்துருக்கேன் இந்த ரிசப்ஷன்லதான் முதல் முறையா பார்க்க போறேன். “

“ரேவதி மேக்கப் பண்றதுக்கு ஆள் வந்துட்டாங்க இப்ப ஆரம்பிச்சாதான் 7 மணிக்குள் ரெடியாக முடியும் சீக்கிரம் போ…” உறவுக்காரப் பெண் ஒருவர் வந்து சொல்ல தோழிகள் இருவரும் அடுத்த கட்ட அலங்காரத்திற்கு தயாரானார்கள்.

சுமார் 2 மணி நேர அலங்காரத்திற்கு பிறகு மணப்பெண்ணின் பொலிவுடன் ரிசப்ஷனுக்கு தயாரானாள் ரேவதி.

தோழியை மேடையில் ஏற்றும் போது மணமகன் நின்றிருந்தார். திருத்தமான முகத்தோற்றம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தோழி ரேவதியையும் அவருக்கு அறிமுகப்படுத்தும் போது அவர் முகத்தில் வெட்கம் கலந்த ஒரு சிரிப்பு தெரிந்தது. ரேவதியின் காதருகே குனிந்து பரவாயில்லை மாப்பிள நல்லவராகத் தெரிகிறார் நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். உனக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி தான். ‘ஆல் த பெஸ்ட்’  சொல்லிவிட்டு  வந்தவர்களை வரவேற்கத் உறவுக்காரர்களோடு இணைந்துக்கொண்டாள்.

இரவு 11 மணிவரை ரிசப்ஷன் நீண்டு கொண்டே சென்றது செல்போனை எடுத்து மணி பார்த்தவள் அத்தை வீட்டுக்கு இப்ப கிளம்பினால்தான் நைட்டு தூங்கிவிட்டு திரும்பவும் அப்பா அம்மா கூட கல்யாணத்துக்கு வர முடியும் என்ற எண்ணத்தோடு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றாள்.

இவளுடைய கெட்டநேரமோ என்னவோ டிரைவர் குடித்துவிட்டு காரில் மட்டையாக கிடந்தான். வெகுநேரம் எழுப்பியும் அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்புமில்லை. ஒருவேளை அதிகமா குடிச்சி இருப்பானோ? என்ன பண்றதுன்னு தெரியலே பதினொரு மணிக்கு மேலே எப்படி  அத்தை வீட்டுக்கு  தனியா போவது? குழப்பமாக இருந்தது மோகனாவுக்கு. அத்தைக்கு கால் பண்ணா ரொம்ப பயந்துடுவாங்க…நாம் ஏதாவது ஒரு கால் டாக்ஸி ரெடி பண்ணிட்டு போய்டலாம். என்ற எண்ணத்தோடு ஓலா கேப்ஸ் ஏதாவது கிடைக்கிறதா? என்று சர்ச் பண்ணி பார்த்தாள். ஒன்றுமே இல்லை. மண்டபத்தின் வாசலில் வந்து நின்று கொண்டு ஏதாவது கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்  இருக்கிறதா என்று தேடினாள்.

ரேவதியிடம் கேட்கலாம் ஆனால் அவளிடம் சொல்லிக் கொண்டு வந்துட்டேன் திரும்பவும் போய் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நாமளே தேடிப் பார்ப்போம்.




சற்று தூரம் நடந்தாள். ஒரே இருளாக இருந்தது. தெருவிளக்கு  வெளிச்சம் கூட இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த தெருவில் கரண்ட்கட்டாக இருக்குமோ? என்ற யோசனையோடு  மேலும் முன்னேறினாள். அப்போது ஒரு ஆட்டோ இவளுக்கு பின்னால் வந்தது. கையைக் காண்பித்து தான் போக வேண்டிய இடத்தை சொன்னாள். எவ்வளவு வேணுன்னாலும் கொடுத்துடுறேன் கொஞ்சம் கூட்டிட்டு போக முடியுமா?

“சரிம்மா முதல்ல ஏறுங்க என்று சொன்னவர் 500 ரூபாய் தருவீர்களா என்றார்.

“சரிங்க” ஆட்டோவிலேயே ஏறி  கண்மூடி அமர்ந்தாள். சற்று பதட்டம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தபிறகு கண்களை திறந்தாள். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் போனவுடன் ஆட்டோ ஒரு மரங்கள் அடர்ந்த பாதையில் திரும்பியது.

“இது மெயின்ரோடு இல்லீங்களே எங்கே போறீங்க ?”

அவனிடம் எந்த பதிலுமில்லை. தொண்டையை செருமிக்கொண்டு உரத்த குரலில் கேட்டாள்.

“ஹலோ…பதில் சொல்லுங்க நீங்க வேற வழியில் போறமாதிரி தெரியுது?”

“வாய மூடிக்கிட்டு பேசாம வருவியா? சும்மா தோன தொணன்னு கத்திகிட்டே வாரே?” அவன் குரலில் கடுமை ஏறி இருந்தது இவளுக்கு உடம்பெல்லாம் படபடவென்று நடுங்கியது. தவறான நபரிடம் தவறான இடத்தில் மாட்டிக் கொண்டோம் என்று உள்ளுணர்வு கூறியது.

“ஆட்டோவை நிறுத்துங்க நான் இறங்கனும் நிறுத்துலன்னா  கீழே குதித்துடுவேன்.”

அவன் அதற்கெல்லாம் அசரவில்லை வேகத்தை அதிகரித்தான். இவள் கத்தி கூச்சலிட்டாள் திடீரென்று ஆட்டோவின் வேகத்தை குறைத்து நிறுத்தினான்.

எதிரில் குறுக்கே மறைத்தது போன்று ஒரு கார் நின்றிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் காரின் முன்பக்க இருக்கையில் இருந்து இறங்கியவனை அடையாளம் காண முடிந்தது சாட்சாத் அது தேவானந்தனேதான். சினிமாவில் வரும் ஹீரோ போல அவன் வேக வேகமாக வந்து ஆட்டோக்காரன் சட்டையை பிடித்து இரண்டு அறை விட்டு கீழே தள்ளினாள். இவள் பயத்தோடு அவனிடம் வந்து ஒட்டிக்கொண்டாள். பயப்படாதீங்க என் காரில் போய் உட்காருங்க என்றான்.

அடியோட வலிதாங்க முடியாமல் எழுந்து ஓட தொடங்கினான் ஆட்டோக்காரன். மோகனா கத்தினாள் அவனை சும்மா விட கூடாது  போலீஸ்ல புடிச்சுக் கொடுக்கணும் என்றாள்.

“அதெல்லாம் வேணாங்க தேவையில்லாம உங்க பேரு அடிபடும் நாம் இந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல கிளம்பலாம் வாங்க…அவன் முன் இருக்கையில் வந்து அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினான் இவளுக்கு பளிச்சென்ற அந்த கேள்வி தோன்றியது

“நீங்க எப்படிங்க இந்த நேரத்தில இந்த இடத்தில?”




“அதுவா ரிசப்ஷன் முடிஞ்சு என்னுடைய ரூமுக்கு போகலாம் என்று கிளம்பும் போது நீங்கள் தனியாக எங்கேயோ போறதுக்கு தெரிஞ்சது சரி யாராவது உங்களை பிக்கப் பண்ண வந்து இருக்கலாம் அப்படின்னு நான் அதை பெருசா எடுத்துக்கல ஆனா நீங்க ரொம்ப நேரம் நடக்கிறதை பார்த்தவுடனே உங்களை ஃபாலோ பண்ணினேன். அப்பதான் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் நீங்க ஏறுவது தெரிஞ்சது. சரி கொஞ்சம் வேகமா வந்தேன். ஆட்டோவிலேயே ஏன் போறிங்க? என்கூட வரீங்களான்னு கேட்கலாம் நினைச்சுட்டு ஆட்டோவை பாலோ பண்ண அவன் ஏடாகூடமா ஏதோ ஒரு ரோட்டில் போனான்.

அவன் நல்ல நபர் இல்லன்னு தோணிச்சி அதனாலதான் நான் முன்னாடி வந்து ஆட்டோவை வழிமறைச்சேன். எப்படி? உங்களை காப்பாற்ற வந்த ஹீரோ? நல்லா சண்டை போட்டேனா? கேட்டவனை நன்றி கலந்த வெட்கத்தோடு பார்த்தாள் மோகனா.




What’s your Reaction?
+1
18
+1
16
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!