Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் -4 

நான் நக்சலைட் ஆகியிருப்பேன் என்று கூறினார். அதிர்ந்து போனார் அந்த நிருபர், நக்சலைட்டுகள் என்பவர்கள் தேசவிரோதிகள் நீங்கள் ஏன்  அப்படி சொல்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டார். நக்சலைட்டுகள் என்பவர்கள் எளியவர்கள், வலியவர்களால் தாக்கப்பட்டவர்கள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கப்படாமல் அந்த உரிமைக்காக போராடுபவர்கள். அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். நீங்களே சொல்லுங்கள் ராணுவத்தின் பலத்தோடு நக்சலைட்டுகளை எதிர்த்து நிற்கும் படேல் இரும்பு மனிதரா? அல்லது தனி ஒருவராக நின்று ராணுவத்தையே எதிர்த்து நிற்கும் நக்சலைட்டுகள் இரும்பு மனிதர்களா? என்று பதில் கேள்வி கேட்டு அந்த நிருபரை திணறடித்தார்.




எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது போல் எவ்வளவு நடித்தாலும் எவ்வளவு பிளாஸ்களை முகத்தில் வாங்கிக் கொண்டாலும், சிலுக்கின் கலைத் தாகம் கொஞ்சம் கூட குறையவில்லை.’ நல்ல கதாபாத்திரங்களில் நடி ‘ “நல்ல கதாபாத்திரங்களில் நடி” என்று அவரது உள்ளுணர்வு அவரை தூண்டிக்கொண்டே இருந்தது. அதேசமயம் தெலுங்கில் விஜயசாந்தி அதிரடி நாயகியாக பல ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். தனக்கும் அது போன்ற அதிரடி படங்களில் நடிக்கும் ஆசை சில்க் மிதாவிற்கு உருவானது. விஜயசாந்தி வீட்டிற்கு செல்லும் தயாரிப்பாளர்கள் சத்தியமாக தன்னை பார்த்து திரும்ப போவதில்லை என்பதை நன்றாக உணர்ந்தார் சில்க் ஸ்மிதா. அதனால் தான் சில்க் ஸ்மிதா அந்த முடிவை எடுத்தார்.




எத்தனையோ தயாரிப்பாளர்கள் எத்தனையோ டைரக்டர்கள் என்னை வைத்து பணம் செய்கிறார்கள், நான் நடித்த படங்கள் அனைத்தும் 100 நாட்கள் தாண்டி ஓடுகின்றன, என்னாலேயே ஓடிய படங்கள் இருக்கும் பொழுது, எனக்காகவே திரைப்படங்கள் ஓடும் பொழுது, நான் ஏன் சொந்தமாக பட தயாரிப்பில் இறங்கக்கூடாது? என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அந்த தைரியத்தில் அவர் தெலுங்கில் ‘வீர விகாரம்’ என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தார். படத்தை வாங்குவதற்காக பைனான்சியர்கள் தேடி வந்தனர். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசை வந்தது அவருக்கு .தானே சொந்தமாக திரையரங்குகளில் வெளியிடப் போவதாக சொல்லி பைனான்சியர்களை அனுப்பி வைத்துவிட்டார். படத்திற்கு உண்டான வெளியீட்டுத் தேதி வந்தது. அனைத்து தியேட்டர்களிலும் சொந்தமாக படத்தை வெளியிட்டார்..  படம் மிகப்பெரிய அளவில் படுதோல்வி அடைந்தது. அந்தப் படத்தின் தோல்வியால் ஆடிப் போனார் சில்க் ஸ்மிதா.

காசை தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும். எனவே தெலுங்கில் மீண்டும் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார்  ‘பிரேமச்சி சூடு’ என்ற அந்தத் திரைப்படம் தியேட்டர்களில் வந்த இடம் தெரியாமல் வெளியேறிவிட்டது. ஏறத்தாழ அதே நேரத்தில் தமிழில் சில்க் ஸ்மிதாவை வைத்து :சில்க் சில்க் சில்க்’ என்ற திரைப்படம் இயக்கப்பட்டது. ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் முழுக்க முழுக்க சில்க் ஸ்மிதாவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமானதால் ,அது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழிலும் அந்தப் படம் ஊத்திக் கொண்டது. மலையாளத்தில் பெண் சிங்கம் என்ற பெயரில் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார் சில்க் ஸ்மிதா. படம் வெளிவந்ததா என்றே தெரியவில்லை.




அடுத்தடுத்து தோல்விகள் நிலைகுலைந்து போனார் சில்க் ஸ்மிதா. சம்பாதித்த பணம் அனைத்தும் போய்விட்டது . ஏறத்தாள தெருவிற்கே வந்து விட்டார் .ஒரு காலத்தில் ரசிகர்கள் எந்த நேரமும் அவருடைய வீட்டின் முன்னால் கூடிக் கிடப்பார்கள். அந்த காலமெல்லாம் போய் இப்பொழுது கடன்காரர்கள் வீட்டின் வாசலை முற்றுகையிடும்  சூழல் வந்தது.  தமிழில் அப்பொழுதுதான் குஷ்பூ என்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் கவர்ச்சிக்கு என்று தனி நாயகியை ஒதுக்காமல் கதையின் நாயகியே போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் ஒரு சூழ்நிலை உருவாகி இருந்தது. சிலுக்கிற்க்கும் சரிவா என்று சொல்லும் அளவிற்கு தமிழிலும் அவருடைய மார்க்கெட் மிகவும் மந்தமான நிலையை அடைந்திருந்தது. தெலுங்கிலும் மலையாளத்திலும் அடுத்தடுத்து சொந்தத் தயாரிப்புகளால் முடக்கம். சுற்றிலும் முழுவதுமாக இருண்டு போய் விட்டதாக நினைத்தார். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அவரிடம் மீதம் இருந்தது அது அவருடைய ‘கால்கள்’ அதன் துணை கொண்டு வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். சென்ற நாடுகளில் எல்லாம் குத்தாட்டத்தை ஆடி தள்ளினார். மீண்டும் பணம் வர ஆரம்பித்தது. ஆனால் சில்க் தேடிய நிம்மதி அது மட்டும் வரவே இல்லை.  ‘மேத்தா’ அவர்கள் சில்க்கிற்க்காக ஒரு கவிதை எழுதி இருப்பார் .

“வறுமையின் கோரப்  பிடியிலும் உன்னால் ஒழுங்காக உடுத்திக் கொள்ள முடியவில்லை ,
வசதியின் வாழ்க்கை பிடியிலும் உன்னால் ஒழுங்காக உடுத்திக் கொள்ள முடியவில்லை “

‘மேத்தா’ அவர்களின் இந்த கவிதை சில்க்கின் மனக்குமுறலை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது. தொடர்ந்த மனப்போராட்டம் ,தொடர்ச்சியான தோல்விகள், சரிந்து போன மார்க்கெட், இவை மட்டுமே சில்க் அந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்க முடியாது. அப்படித்தான் சினிமா உலகம் மொத்தமும் அன்று பேசிக்கொண்டது.          யார் சில்க் ஸ்மிதா வா? அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார்!! பெரிய பெரிய நடிகர் நடிகைகள் கூட ஒரு கணம் ஸ்தம்பித்தனர். சில்க் ஸ்மிதாவின் அந்த முடிவை எவராலும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.




சில்க் என்ன முடிவு எடுத்தார் ? யோசிங்க ..  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!