Entertainment events News

காதலர் தினம் இப்படிதான் உருவானதா..?

 பிப்ரவரி 14-ஐ கொண்டாடுவதற்கு முன் அதன் வரலாறு தெரிஞ்சுக்கோங்க..!

காதலர் தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றாலும், ரோமானிய பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது.




உலகம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று தான் காதல். அப்பாவின் பாசம், அம்மாவின் பாசம், குழந்தைகள் மீதான பாசம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. இந்த நாளை நாமும் நமக்குத் தெரிந்த படி கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து ஒரு நாளும் யோசித்து இல்லை.. இதோ காதலர் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்…

காதலர் தின வரலாறு : காதலர் தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை என்றாலும், ரோமானிய பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதித்துள்ளார்.




இந்த சூழலில் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் என்பது 7 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதோ முழு விவரம் இங்கே..

பிப்ரவரி 7– காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டே என பிப்ரவரி 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலிக்கும் ஒவ்வொரு ஒருவரும் ரோஜாக்களை கொடுத்து தங்களது காதலை மனப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார்கள்.




பிப்ரவரி 8 – ப்ரொபோஸ் டே தான் காதலர் வாரத்தின் இரண்டாவது நாளாகும். இந்நாளில் தங்களின் காதலை எந்த தயக்கமும் இல்லாமல் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

பிப்ரவரி 9 – சாக்லேட் தினம்: காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களோ? பெண்களோ? தங்களின் அன்பானவர்களுக்கு சாக்லேட் பாக்ஸ்களை கொடுத்து மகிழும் நாளாக இது அமைகிறது.

பிப்ரவரி 10 டெடி டே : உங்கள் காதலிக்கு இந்நாளில் ஒரு டெடி பொம்மை அன்பளிப்பாக அளித்து அதை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க சொல்லலாம்.

பிப்ரவரி 11- வாக்குறுதி தினம் (promise day): நான் உனக்காக வாழ்கிறேன்,.. உனக்காக எதையும் செய்வேன், நம்பிக்கையோடு என்னைக் காதலிக்கலாம் என வாக்குறுதியை அளிப்பதற்காக காதலர் தின வாரத்தின் 5 வது நாள் வாக்குறுதி தினம் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 12 – ஹெக்டே (Hug day): நான் உனக்காக உண்மையாக இருக்கிறேன் என்பதை வெளிக்கொணரும் விதமாக நீங்கள் விரும்பும் ஒருவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.

பிப்ரவரி 13 – முத்த தினம் (kiss day): காதலர்களுக்கு இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் தினம் இது.

பிப்ரவரி 14 காதலர் தினம் : காதலர்கள் மற்றும் தம்பதிகள் ஒன்றாக நேரத்தைச் செலவிடும் நாளாக அமைகிறது காதலர் தினம். இந்நாளில் இவர்கள் தங்களின் அன்புகளை பரிமாறிக் கொள்ளவும் இந்த நாள் உதவுகிறது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!