gowri panchangam Sprituality

ரிஷப ராசிக்காரர்களே- தேவைக்கு அதிகமாக லாபம் கிடைக்கும்

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

ரிஷபம்  ராசியில் ராகு, 2 ஆம் இடமான

ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ம் இடமான

துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில்

சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான

விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த

மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய

பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன்

பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன்

பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.




இதனால், பிப்ரவரி மாதத்தில்

ரிஷபம்  ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்

 இந்த பிப்ரவரி மாதத்தில் அதிக முன்கோபத்தால் பல பிரச்சனைகள் ஏற்பட நிறைய

 வாய்ப்புகள் உள்ளது. இதனால் குடும்பத்தில் மற்றும் வேலை செய்யும் இடங்களில்

மனக்கசப்பு ஏற்படலாம். எனவே, உங்களுக்கு ஏற்படும் முன் கோபத்தை குறைத்துக்

கொள்வது உத்தமம். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற கடினமாக

உழைப்பீர்கள், அதற்கான வெற்றியையும் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவால்

இதுவரை முடிக்க முடியாத செயல்களையும் செய்து முடிப்பீர்கள்.




உங்கள் பிள்ளைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இந்த பிப்ரவரி மாதமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பணம் குறித்து கவலை இல்லாத மாதமாக அமையும். செலவு இருந்தால் அது உங்களின் தேவைக்காக இருப்பதால் கவலை வேண்டாம். மாணவர்களிடம் இருக்கும் பயம், பதட்டம் நீங்கி தங்கள் லட்சியத்தை நோக்கி பயணிப்பார்கள். எதிர்பாராத பயணத்தால் அலைச்சல் உண்டாகும்.

 

புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வத்துடன் இருப்பவர்கள் நேர்மையுடன் செயல்படுவது அவசியம். இந்த மாதத்தில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.  வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். திருமணம் கை கூடி வரும். உங்களுக்கு சத்தமாக தீர்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டம நாள்: 12, 13

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபாடு செய்து உங்கள் நாளை தொடங்குங்கள். உங்களால் முடிந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நீங்கள் நினைத்த காரியத்தை அது வெற்றியை நோக்கி கொண்டு செல்லும்.

 


What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!