events

காணும் பொங்கல் வரலாறு 

பொங்கல் என்பது சாதி, சமய, பேதம் இன்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா. பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுவது வழக்கம். பொங்கலுக்கு முந்தைய நாளும், மார்கழி மாதத்தின் கடைசி நாளும் ’போகி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது.




தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளில் உழவுக்கு உதவும் மாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். நான்காவது நாள் தான் காணும் பொங்கல்.

காணும் பொங்கல் பெண்களுக்கு மிக முக்கியமான நாளாகும். அன்று பொங்கல் அன்று வைத்த மஞ்சள் கொத்து வீட்டு பெரியவர் பெண்களிடம் கொடுப்பர். அவர்கள் ஆசீர்வாதம் பெற்று வாங்கி அந்த மஞ்சளை அரைத்து முகத்திலும், பாதத்திலும் பூசிக் கொள்வர்.




காணும் பொங்கல் அன்று உறவினர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவது தொன்றுத் தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாது ஜல்லிக்கட்டு, உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல வீர விளையாட்டுகளும் நடைபெறும்.

காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக, காக்கா குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை

ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ ,மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்க வேண்டும்.

முதல் நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சர்க்கரை பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும், குருவிக்கும் படையல் வைக்க வேண்டும்.

’காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்’ என்று சொல்லி படையல் வைக்க வேண்டும்

ஆனால் இந்த வழிமுறை மாறி தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல இடங்களை காண செல்கின்றனர்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!