events lifestyles News

புது ஆண்டில் புதிய ஆரம்பம்…நம் பயணத்தை தொடங்குவது எப்படி..?

பிறக்கப் போகும் புத்தாண்டு நம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி, மாபெரும் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. திறமை, முயற்சி, தன்னம்பிக்கை போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.

அதே சமயம், கடந்த காலங்களில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், கெட்ட நினைவுகள் போன்ற பல விஷயங்களை கடந்து புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் நாம் அடியெடுத்து வைக்க வேண்டும். நம் வாழ்க்கையில் நாம் மாற்றிக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான தொடக்கமாக இந்த புத்தாண்டை வைத்துக் கொள்ளலாம்.




பொதுவாக புத்தாண்டு பிறக்கும்போது உடல் எடையை குறைக்க வேண்டும், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், மது, புகை போன்ற பழக்க, வழக்கங்களை கைவிட வேண்டும் என்ற பொது நியதிக்கு உட்பட்ட தீர்மானங்களைத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். அதையெல்லாம் கடந்து, நம்மையே புதுமையான நபராக மாற்றிக் கொள்ள நாம் சபதமேற்க வேண்டும்.

சுய ஆய்வு : நாம் யாரென்று நமக்கென ஒரு அடையாளத்தை மேலோட்டமாக வைத்திருப்போம். ஆனால், ஆழ்ந்து உற்று நோக்கினால் தான் உண்மையாகவே நம்முடைய அடையாளம் என்ன என்று நமக்குத் தெரியவரும். அடிப்படையாக நம் மீது நமக்குள்ள மதிப்புகள் மற்றும் நாம் பெற்ற அனுபவங்கள்தான் நமக்கான அடையாளமாக அமையும். இவ்வாறு சிந்திக்கும்போது வாழ்வில் உள்ளார்ந்த அர்த்தங்கள் பிறக்கும்.




மாற்றங்களை ஏற்பது : ஒரு மாற்றம் ஏற்படும்போது கொஞ்சம் தயக்கமாகவும், அச்சமாகவும் இருக்கலாம். ஆனால், மாற்றங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வதுதான் நம் அடையாளத்தை தக்க வைக்கும் முயற்சியாக அமையும். எந்தவித அனுபவமும் இல்லாத புதிய பாதையை நோக்கி நம்முடைய சிந்தனையை ஓட விட வேண்டும். அப்போதுதான் புதிய கண்ணோட்டத்துடன் புதிய வாய்ப்புகளை ஏற்க முடியும்.

சுய மேம்பாடு :  நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துவது மிக அவசியமாகும். அது நமக்கு பொறுமை, சமரசத்தன்மை போன்ற குணாதிசயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். வாழ்நாள் முழுவதுக்குமான கற்றல் வாய்ப்பாக அது அமையும். அன்பு, கருணை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.




நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது : பெரும்போக்கான எண்ணம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் மனித குல வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும். பிறருக்கு உதவும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை விட பெரியவர்களானாலும், சிறியவர்கள் என்றாலும், அவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறரை மதிக்கும்போது நமக்கான மதிப்பீடும் அதிகரிக்கும்.

இதுபோன்ற காரியங்களை நமக்குள் பெரிய விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். மனநிம்மதி, மகிழ்ச்சி ஆகியவற்றை உங்களுக்குள் தோற்றிவிக்கும். அன்றாட தேவைக்காக ஓடிகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ வாழ்த்துக்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!