Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 28

        28

பகலென்று தோன்றினால் சிறகசைக்கலாம் ,
இரவாக உணர்ந்தால் போர்வை போர்த்தலாம் ,
ஆழ் சிவப்பை காட்டும் அந்தியெனில்
சில்லிடும் குளிரையும் ,
எங்கோ …மலர்ந்திருக்கும்
மலரின் மகரந்த மணத்தையும் நுகரலாம் ,
எதை …எப்போது …எப்படி …
உணர்த்துகிறதென்பதறியாது …
எதிர்கொள்ளும் திராணியற்று
தடுமாறுதந்த முத்தம் .




வேறு ஒருவனிடமா …?யார் …? ஓ…நீங்கள் அந்த அவரை சொல்கிறீர்களா …? “

” எந்த சுவரை சொல்கிறேன் .கருங்கல் சுவரை ….”

” ம்ப்ச் …சும்மா இருங்க …அவர் பெயர் கூட …ஐயோ ….நல்ல பெயர் …எனக்கு மறந்து விட்டதே ….” யோசனையாக உதறிய கைகளை அழுத்தி பிடித்தான் ரிஷிதரன் .

” அவன் பெயர் தெரியலைன்னா இப்போ என்னடி நஷ்டம் …? எதற்கு இந்த குதி குதிக்கிறாய் …? “

” சும்மா இருங்க …” ச” விலோ ….” சு ” விலோ …ஆரம்பிக்குமே ….ஏங்க உங்களுக்கு தெரியுமா …? “

” ஏய் ..என்னடி கொழுப்பா உனக்கு ..? அப்படியே கடிச்சிடுவேன் ….கழுதை …உன்னை …” காரை நிறுத்திவிட்டு அவள் கழுத்தில் தன் கைகளை பதித்தபடி ரிஷிதரன் அதட்ட …

இவனுக்கு கோபம் வந்தால் கடித்துத்தான் வைப்பானாக்கும் …மனதிற்குள் சிரித்தபடி ….

” எங்கே கடிங்க பார்க்கலாம் …” அவனுக்கு வாகாக கன்னத்தை திருப்பி காட்டி சவால் விட , சிவந்து குவிந்திருந்த கன்னங்கள் வேறு நினைவை தூண்ட இதழ்களை குவித்தபடி நெருங்கிய போது அவள் பட்டென்று …

” ம் நினைவு வந்திடுச்சு .சபரிஷ் …” என்றாள் .சட்டென அவளது கன்னத்தை நிஜம்மாகவே கடித்தே விட்டான் .

” ஆ….ச்சை …சரியான முரடு .இப்படியா கடிப்பீர்கள் ….” கடிபட்ட கன்னத்தை வருடியபடி கேட்டாள் .

” சாரி …சாரி …சரி வா தடவி கொடுக்கிறேன் …”

” ஒண்ணும் வேண்டாம் .அந்த சபரிஷை ..உங்களுக்கு தெரியுமா …? அவரை பற்றிய அண்ணனின் எண்ணம் கூடவா …? எப்படி …? நானே அவரை மறந்து போனேன் .உங்களுக்கு எப்படி ….? “ஆச்சரியமாக கேட்டாள் .

” அது என்ன நானேனேனே ….அது எதற்கு அந்த ” னே ” …அவன் என்ன உனக்கு அவ்வளவு முக்கியமானவனா …? “

ரிஷிதரனின் பொஸசிவ்நெஸ்ஸில் சந்தோசத்தோடு சிரிப்பும் சேர்ந்து வர, இவன் அந்த சபரிஷை நேரடியாக சந்தித்திருந்தானால் ஒரு வழியாக்கி இருப்பான் போலவே …என எண்ணியபடி ….

” நீங்கள் அவரை சந்தித்தீர்களா …பேசினீர்களா …? “

” ம் ..பார்த்தேன் .கண்ணை விரித்து சும்மா பார்த்ததற்கே கை காலெல்லாம் நடுங்க அந்த ஓட்டம்  ஓடினான் .பிறகு எங்கே பேச …? ” என்றவனை முறைத்தாள் .

” அவரை மிரட்டினீர்களாக்கும் …? “

இப்போது அவன் முறைத்தான் .




” என் பொண்டாட்டியை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்னு சொல்றவனை கூட்டிட்டு போய் ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுக்க சொல்கிறாயா ..? “

இவன் எந்த அளவு சபரிஷை மிரட்டியிருந்தால் அவன் ஆளே சுவடே தெரியாமல் மறைந்திருப்பான் .சிரிப்போடு சபரிஷ் மேல் சிறிது பரிதாபமும் தோன்றியது சாம்பவிக்கு .பாவம் அவன் என்ன செய்தான் ….?

” ஏங்க இப்படி ….அவர் உண்மையாகவே நல்லவர் தெரியுமா ..? ஒரு நாளும் ஒரு தப்பான பார்வை பார்த்தது கிடையாது ரொம்ப டீசன்டாக அண்ணனிடம் என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார் .”

சக் சக்கென கியரை மாற்றி காரை எடுத்தவன் கோபத்தை காரிடம் காட்ட கார் பறந்த்து .” ஏய் …உனக்கு இருக்குடி  .என்கிட்ட தனியாக மாட்டுவாயில்லையா …அன்னைக்கு வச்சிக்கிறேன்டி உன்னை ….என்கிட்டேயே இன்னொருத்தனுக்கு கான்டாக்ட் சர்ட்டிபிகேட்டா ….? ” சர்ரென காரை ஆபிசினுள்  கொண்டு வந்து நிறுத்தினான் .

” இறங்கி தொலை …” என எரிந்து விழுந்தவனிடம் …

” அப்புறம் அவரை …சபரிஷை பற்றி ஒன்றுமே சொல்லவேயில்லையே நீங்கள் …? ” வம்பிழுத்தாள் .

” போனால் போகுதுன்னு அவனை ஊர் மட்டும் மாற்றி விட்டது தப்புன்னு இப்போ தோணுது …” ஸ்டியரிங்கில் குத்தினான் .

கதவை திறந்து இறங்கியவள் குனிந்து “ஏங்க .. அது எந்த ஊர்னு சொன்னீங்க..?அப்போ  நான் சரியாக கேட்கவில்லை ….” என்றாள் .

ரிஷிதரன் கண்களை உருட்டி பற்களை கடிக்க ஆரம்பிக்கவும் , ” ஐயோ ..பயமாக இருக்கிறதே ….” என்றபடி உள்ளே ஓடினாள் .

வேக ஓட்டத்தில் வாசலில் ஏறும் போது எதிரே வந்த சஹானாவின் மேல் மோதிக்கொண்டாள்.

” எதிரே வருகிற ஆள் தெரியாதா உனக்கு …? இப்படியா மாடு போல் மேலே வந்து மோதுவாய் …? ” கத்தினாள் அவள் .

” ஏன்டி நீதான் பார்த்து வர வேண்டியதுதானே …? ” சாம்பவியும் பதிலுக்கு கத்தினாள் .

” ஏய் …உனக்கு கொழுப்பாடி …நீ மிதந்து கொண்டே வந்துவிட்டு என்னை சொல்கிறாய் …? “

” என்னடி நீ சமைத்து சமைத்து எனக்கு கொட்டினாயா ..? நான் கொழுப்பெடுத்து அலைய …? “

” ஆமான்டி உனக்கு சமைத்து கொட்டத்தான் நான் இருக்கிறேன் பார் ….'”

காரை நிறுத்தி விட்டு பின்னால் வந்த ரிஷிதரன் இவர்கள் சண்டையை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் நின்றான் .அவனிடம் ஒன்றுமில்லை நீங்கள் போங்க.நான் பார்த்துக் கொளகிறேன் என ஜாடை காட்டினாள் சாம்பவி .

” சஹி ..வர..வர..உன் தோழிக்கு யாரைப்பற்றி….யாரிடம் … என்ன பேசுவது என்றே தெரியவில்லை .நீயே கேளு …” என தன் பங்குக்கு கொஞ்சம் ஏற்றிவிட்டு போனான் .

சாம்பவி அவனை முறைக்க ஒழுங்காக இருக்குமாறு அவளை ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்து விட்டு போனான் அவன் .

” ஏய் …இங்கே நான் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் .நீ என்ன அவனை முறைத்துக்கொண்டிருக்கிறாய் ….? எனக்கு பதில் சொல்லுடி …” அவள் முகத்தை பிடித்து தன்புறம் திருப்பினாள் சஹானா .




” என்னடி சொல்லனும் …? ” அலுத்தபடி கேட்டாள் சாம்பவி .

” அது ….” என ஆரம்பித்த சஹானாவிற்கு எதற்காக சண்டையை ஆரம்பித்தோம் என்று மறந்துவிட்டது .

” என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ….? ” என அவளிடமே சந்தேகமாக கேட்டாள் .

” ம் …எனக்கும் மறந்துவிட்டது .ஒன்று செய் ..நீ யோசித்து வைத்துவிட்டு என்னைக் கூப்பிடு .பிறகு வந்து மீதி சண்டையை தொடருவோம் ….” என்றபடி உள்ளே காலை எடுத்து வைத்த சாம்பவி விதிர்விதிர்த்தாள் .

” நான் வேண்டுமானால் சொல்லட்டுமா …?” என்றபடி எதிரே வந்து நின்றாள் மஞ்சுளா .அவளது பார்வை சாம்பவியை கொத்தி கூறு போட்டது .

” என்ன மாம் சொல்ல போகிறாய் …? ” கொஞ்சலாய் கேட்டபடி அம்மாவின் அருகே போய் அவள் கைகளை பிடித்தபடி கொஞ்சலாய் அவள் மேல் சாய்ந்து கொண்டாள் சஹானா .

” உங்கள் இரண்டு பேருடைய சண்டையை பற்றித்தான் ….”

” அது …சும்மா மம்மி .ஜஸ்ட் ..டைம் பாஸ் ….டூ நாட் கிவ் தேட் இம்பார்ட்டென்ஸ் .லீவ் இட் மம்மி ….”

” ஐ…ஆல்ஸோ திங்க் லாட் ஆப் திங்க்ஸ் லைக் தேட் …ஆனால் எங்கே முடிவதில்லை …” என எதற்கோ பெருமூச்சு விட்டவள் …சாம்பவியிடம் ,

” எப்படியிருக்கிறாய் ..? ” என்றாள் .

” நன்றாகயிருக்கிறேன் .நீ …நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் …? “

” ம் ..ம் …”என்றவள் …” சஹிம்மா …ரிஷியும் வந்துட்டானே அப்பாவோடு அவனுடன் பேசிவிடலாமே …வா ..போகலாம் …” என நடந்தாள் .

ஓ…அவர் அப்பாவும் வந்திருக்கிறாரா …? எதற்காக எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் …? என்ன பேசப் போகிறார்கள் …? ….

சாம்பவியின் இதயம் ஏனோ மத்தளமாய் மாறியது .ஏதோ பிடிக்காத விசயம் நடக்க போவதாக தோன்றியது .தளர்ந்த நடையுடன் அவர்கள் பின்னால் நடந்தாள் .

ஆபிஸ் அறைக்குள் முன்னால் சஹானா போய்விட , அவள் பின் உள்ளே நுழைய போன மஞ்சுளா நின்று தன் பின்னால் நின்றிருந்த சாம்பவியை பார்த்து …

” இதோ பாரும்மா …உன் பெயர் ….ஆ…சாம்பவ்வ்வி ….நாங்கள் எங்கள் பேமிலி பர்சனல் மேட்டர் பற்றி டிஸ்கஸ் பண்ண போகிறோம் .அதனால் நீ கொஞ்சம் வெளியே இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும் ….” என்றுவிட்டு அவள் முகத்தில் அறைவது போல் கதவை பூட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள் .

துடித்து போய் நின்றாள் சாம்பவி .அவசரமாக வழிந்து விட்ட கண்ணீரை துடைத்தாள் .யார் பார்வையிலும் படும் முன் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள் .குழாயை திறந்து விட்டுக்கொண்டு அழுதாள் .பிறகு அந்த அழுகைக்காக தன் மீதே கோபம் கொண்டு முகத்தை நன்றாக நீர் விட்டு கழுவினாள் .

இல்லை ..நான் கலங்க கூடாது .என் கணவன் என்னை ஒதுக்க மாட்டான் .அவன் என் மீது மிகுந்த பாசமும் , காதலும் ஙைத்திருக்கிறான் .மீண்டும் …மீண்டும் தனக்குள் கூறிக்கொண்டாள் .ஓரளவு தன்னை தேற்றிக் கொண்டு வெளியே வந்தாள் .

” சாம்பவி என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் .அங்கே உள்ளே அவ்வளவு முக்கியமான டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது .நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள் …? ” ஷ்ராவத் விசாரித்தான் .

” அங்கே அவர்கள் பேமிலி டிஸ்கசன் நடக்கலாம் .நான் எப்படி அங்கே போக முடியும் …? “

” என்ன ஆச்சு சாம்பவி …? ஏன் இப்படி பேசுகிறீர்கள் …? நீங்கள் இல்லாமல் ரிஷிக்கு ஏது பேமிலி  …? “

ஷ்ராவத்தின் இந்த பேச்சில் ஆச்சரியப்பட்டு அவனை பார்த்தாள் சாம்பவி .” உங்களுக்கு எல்லா விசயமும் …? ”
” தெரியும் சாம்பவி .ரிஷியும் , நானும் சேர்ந்துதான் ப்ளான் செய்து உங்களை இங்கே வேலைக்கு வரவழைத்தோம் ….”




சாம்பவிக்கு மயக்கம் வருவது போல் இருந்த்து .ரிஷிதரன் தற்செயலாக இங்கே வரவில்லையா …? வேறு வழியில்லாமல் அவளுடன் சேர்ந்து வேலை பார்க்கவில்லையா …?

” எல்லாமே ரிஷியின் ஏற்பாடுதான் சாம்பவி .இந்த ஷோரூம் நஷ்டத்தில் போவதை அறிந்து , அதை சரி செய்வது போன்ற தோற்றத்தில் உங்களையும் பார்த்து பழகவேண்டுமென்றுதான் இங்கே வந்தான் ….”

” ஓ…அதனால்தான் அடிக்கடி எங்கள் இருவருக்கும் தனிமை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு நீங்கள் ஓடிக்கொண்டே இருந்தீர்களா …? “

” ஏதோ ..என்னால் முடிந்த்து .நான் போவதோடு சஹானாவையும் இழுத்துக்கொண்டு போனேனே .அதை சொல்லவில்லையே நீங்கள் …”

” சஹானாவிற்கு இந்த விசயம் ….”

“மூச் …தெரியாது. முதலிலேயே இந்த விசயம் எனக்கு தெரியுமென்று அவளிடம் சொல்லிவிடாதீர்கள் ….”

” ஏன் …? “

” நான் இதோ இப்போது வரை அவளிடம் எனக்கு முன்னே பின்னே தெரியாத உங்களுடைய நல்ல குணங்களை பற்றி …அடிக்கடி எடுத்து சொல்லி அவள் மண்டையில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன் .எல்லாம் முன்னேற்பாடுன்னு தெரிந்தால் போதும் …என்னை கொன்றேவிடுவாள் ….” ஷ்ராவத்தின் குரலில் உண்மையாகவே கொஞ்சம் கவலை தெரிந்த்து .

அவனது கவலை சிரிப்பை தர ” எனக்கென்னவோ …அவள் இந்த விசயம் தெரிந்தால் சந்தோசப்படுவாள் என்றே தோன்றுகிறது ….” என்றாள் .

” அது எப்படி சொல்கிறீர்கள் …? “

” அவள் என்னவோ அவளால் நஷ்டப்பட்ட தொழிலை தூக்கி நிறுத்துவதற்காக அவளை விட நன்றாக தொழில் நடத்தும் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து அழைத்து வந்திருப்பதாக இப்போது வரை கவலையில் இருக்கிறாள் .அப்படி ஒன்றும் இல்லை .இதெல்லாம் ஒரு செட்டப்தான் என்று சொல்லி விட்டீர்களானால் உண்மையிலேயே ரொம்ப சந்தோசப்படுவாள் …”

” அப்படி ஒன்றும் திறமையில்லாத ஒருவரை அழைத்து வந்து நாங்கள் இந்த தொழிலை கொடுக்கவில்லை சாம்பவி .நிறைய நேரங்களில் தொழிலில் உங்கள் பாய்ன்ட் ஆப் வியூ பார்த்து நானும் ரிஷியும் வியந்திருக்கிறோம் ….”

” ஆக புதிதாக நடக்க தொடங்கும் குழந்தையை நடக்க விட்டு தள்ளி நின்று பார்க்கும் அன்னையை போல் என்னை தொழிலில் விட்டுவிட்டு நீங்கள் இருவரும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள் …”

” ம் …சஹானாவையும் .ஆனால் இதில் தவறென்ன இருக்கிறது …? பெண்களை அடுப்படிக்குள் விட்டு சமைக்க மட்டுமே பழக்க வேண்டுமா …? இப்படி தொழிலில் பழக்க கூடாதா …?

” நிச்சயம் பழக்கலாம் .மிக உயர்ந்த எண்ணம் உங்களுக்கு .மனதார பாராட்டுகிறேன் …”

,” இந்த பாராட்டு எனக்கு மட்டும் உரியதில்லை சாம்பவி .இதில் பெரும் பங்கு உங்கள் ஹஸ்பென்டுக்குத்தான் .அவன் சொன்னதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் .அவ்வளவுதான் …”

ஒத்துக்கொண்டு தலையாட்டிய சாம்பவியை பார்த்து ” என்ன பிரச்சினை சாம்பவி ..? ” என்றான் .

” இல்லை உள்ளே அவருடைய அம்மா அப்பாவோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் .நான் போனால் அவர்கள் …அவர்களுக்கு பிடிக்காமல் போகலாம் …அதுதான் …”

” அப்படி அவன் சொன்னானா …? “




” அவருடைய அம்மா …அப்பா நினைக்கலாமே …”

” அதெப்படி அப்படி நினைப்பார்கள் …? வாங்க நான் பார்க்கிறேன் ….”என்றவன் அவளை கைப்பிடியாக இழுத்துக் கொண்டு அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் .

உள்ளே நடுவில் அமர்ந்திருந்த தனசேகர் இவளை பார்த்ததும் புருவங்களை உயர்த்தினார்  .மஞ்சுளாவின் கண்களில் எரிச்சல் தெரிந்த்து .

ரிஷிதரன் திரும்பியே பார்க்கவில்லை . அவன் முகம் மிகவும் இறுக்கமாக இருந்த்து .டேபிளை வெறித்தபடி இருந்தான் .

” அங்க்கிள் ஆன்ட்டி இவர்களை உங்கள் யாருக்கும் அறிமுக படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் .இப்போதைக்கு நம் கம்பெனி ஜி.எம் .முன்பே உங்கள் வீட்டு மருமகள் …” என்று பளிச்சென்று போட்டு உடைத்தான் ஷ்ராவத் .

தனசேகர் அவஸ்தையாக நெளிய , மஞ்சுளா கோபமாக சாம்பவியை பார்த்தாள் .இருவரையும் கவனித்து விட்டு சஹானா பக்கம் பார்வையை திருப்பிய ஷ்ராவத்திற்கு திக்கென்றது .

அவள் ‘ அடப்பாவி சண்டாளா …’பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் போச்சு ..போச்சு நான் தொலைந்தேன் .சாம்பவி முன்னால் ஹீரோவாக காட்டிக் கொள்வதற்காக சஹானா முன் வில்லனாகி விட்டேனே …மனதிற்குள் அலறியபடி வெளியே …முழுக்க நனைந்தாயிற்று இனி முக்காடு எதற்கு …? என அசட்டு தைரியத்தில் தொண்டையை செருமிக் கொண்டான் .

” என்ன எல்லோரும் இப்படி பேசாமலேயே இருக்கிறீர்கள் ..? இவ்வளவு நாள் கழித்து சொந்தங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள் …? ஒரு ஹலோ சொல்லிக் கொள்ள மாட்டீர்களா …? ” என்றான் .கவனமாக சஹானாவை பார்ப்பதை தவிர்த்தான் .அவள் கோப பார்வையை பார்த்தால் ஷ்ராவத்திற்கு இப்படி தொடர்ந்து பேச வந்து தொலையாது ….

தனசேகர் தலையசைத்து ” வாம்மா நன்றாக இருக்கிறாயா …? ” என்றார் பொதுவாக ..

மஞ்சுளா அது கூட கேட்க பிடிக்காமல் தலையை திருப்பிக் கொண்டாள் .

” ம் …நன்றாயிருக்கிறேன் ….” சாம்பவி தலையசைத்துக் கொண்டிருக்கும் போதே ரிஷிதரன் எழுந்தான் .

” எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது .பேசிக்கொண்டிருங்கள் வருகிறேன் ….” என்றுவிட்டு வெளியே போய்விட்டான் .

சாம்பவி ஷ்ராவத்தை முறைத்தபடியே எழுந்து ” இதோ வர்றேன் டாட் …” என்றுவிட்டு …வாடா என ஷ்ராவத்திற்கு ஜாடை காட்டிவிட்டு வெளியே போனாள் .

ஒரு நிமிடம் யோசித்த ஷ்ராவத் பிறகு ” ம்…சமாளிப்போம் …” என தனக்குள் கூறிக்கொண்டு , வெளியே நடந்தான் .

சாம்பவியை கடக்கும் போது ” கவலைப்படாதீர்கள் சாம்பவி .நான் ஒன்றும் பயப்படவில்லை .சமாளித்து விடுவேன் ….” என்றுவிட்டு போனான் .

இவன் எனக்கு தைரியம் சொல்கிறானா …தனக்கு தானே சொல்லிக்கொள்கிறானா ….என புன்னகையோடு எண்ணியபடி நிமிர்ந்த சாம்பவி தன்னை கூர்ந்து பார்த்தபடி இருந்த  தனசேகரையும் , மஞ்சுளாவையும் பார்த்து வியர்த்தாள் .

” ரிஷி ..எல்லாம் சொன்னான்மா .ம்ப்ச் அவன் தலையெழுத்து இதுதானென்று ஆன பின்பு …ம் …சரி …சரி …இனி செய்வதற்கு ஒன்றுமில்லை .போகலாம் மஞ்சு …” என்றபடி எழுந்து வெளியே போய்விட்டார் .

தனது வாழ்நாள் எதிரியை பார்க்கும் பார்வையை அவளை பார்த்தபடி ” உன்னை முதன் முதலாக தோழி என்று சொல்லிக் கொண்டு சஹி வீட்டிற்குள் கூட்டிவந்த போதே எனக்கு பகீர் என்று இருந்த்து. ஏனோ நீ எங்கள் குடும்பத்திற்கு நல்லது எதுவும் செய்ய போவதில்லை என்று அன்றே தோன்றியது .அது போன்றே எனது மகனை , மகளை …அவர்கள் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே …? இது நியாயமா …? ,” என்றாள் .

” நானா ..நான் ..ஒன்றும் ..என்ன செய்தேன் அத்தை …? “

” மூன்று வருடங்களாக என் மகன் உன்னை விட்டு விலகி அமெரிக்காவில் இருந்தான் . ரொம்ப நிம்மதியாக இருந்தான் .என்ன கண்றாவிக்கு இங்கே வந்தானோ …வந்த்திலிருந்தே அவனுக்கு சோதனைதான் .அவனை தேடி வந்த தொழிலதிபர் விருது கூட கிடைக்காமலேயே போய்விட்டது .எல்லாமே உன்னால்தான் ….”

என்ன …? அவருக்கு விருது கிடைக்கவில்லையா …? ஆனால் அதற்கு நான் எப்படி காரணமாக முடியும் …? சாம்பவி குழம்ப ஆரம்பித்தாள் .




What’s your Reaction?
+1
41
+1
25
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!