Sprituality

நவக்கிரக தோஷங்கள் நீங்க

கார்த்திகை மாதம் செய்ய வேண்டிய 51 ரகசிய தகவல்கள்.

(இன்றைக்கான 7 தகவல்கள்)




*28. கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவிரியில் நீராடுவதுதீபம் தானம் செய்வதுவெங்கல பாத்திரம்தானியம்பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.*

*29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய்ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.*

*30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.*




*31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.*

*32. கார்த்திகை மாத துவாதசி நாளில்ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால்கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்துதாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.*

*33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டுபகவத் கீதையின் விபூதி யோகம்பக்தி யோகம்விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால்சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.*




*34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்துவரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தைமுதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால்நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கிசிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.*

*35.ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்அதிகாலை முதல் மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்துகுப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம்திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.*




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!