Entertainment serial

எதிர்நீச்சலே நீ எழுந்து வா

எதிர்நீச்சல்




சன் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வரக்கூடிய ‘கோலங்கள்’ தொடரை எடுத்ததுடன், ‘கோலங்கள்’ சீரியலில் அனைவரின் மனம் கவர்ந்த தொல்ஸ் எனும் தொல்காப்பியம் என்கிற கேரக்டரில் நடித்தவரான, இயக்குனர் திருச்செல்வம் தான், ‘எதிர்நீச்சல்’ தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.

திருச்செல்வத்தின்  படைப்பு

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. கோலங்கள் புகழ் திருச்செல்வம் தான் இந்த சீரியலின் இயக்குனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம் மற்றும் பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.




     பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திருசெல்வம் இந்த சீரியலை இயக்கி உள்ளார். திருச்செல்வம் இயக்கம் என்றாலே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பை தொடங்கி விடுகிறார்கள். ஒரு இயக்குனராக ரசிகர்களின் ரசனை அறிந்து சீரியலை எடுப்பது இவருக்கு நிகர் இவர் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போதைய எதிர்நீச்சல் சீரியலும் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சீரியலுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு நடிகர்களையும் தேர்வு செய்துள்ளாராம்.

முற்போக்கு தான் எதிர்நீச்சலின் மையக்கரு

இந்த சீரியலை பார்த்து மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். ஆனால், நான் பாராட்டுக்கோ, விமர்சனத்துக்கோ, எந்த ஒரு காட்சியையும்  வைப்பதில்லை.  கதை நகர்வுக்காக திறமைகளை அடுப்பங்கரையிலேயே வைத்துக்கொண்டு முடங்கி வாழும் நிலையில் இருந்து விடுபட்டு, முற்போக்கு சிந்தனையுடன் முன்னேறுவதே எதிர்நீச்சல் கதை என்கிறார் இயக்குனர் .




எதிர்நீச்சலுக்கும் நல்ல வரவேற்பு

எனது முந்தைய சீரியல்களான கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் சரி, சிதம்பரம் மணிவண்ணன் இயக்கிய வல்லமை தாராயோ வெப் சீரிஸிலும் சரி, முடிந்தவரை முற்போக்கு சிந்தனையை எனது கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கும்.  ஆனால் என்னுடைய முந்தைய சீரியல்களை போலவே, எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிராமப்புறம், நகர்ப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் இருந்து நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிகிறது. சில திரைப்படங்களை விட நம் சீரியலுக்கு நன்றாகவே வரவேற்பு உள்ளது, நான் சொல்வது சில திரைப்படங்களை தான்..” என இயல்பாக பேசி புன்னகைக்கிறார் ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் திருச்செல்வம்.

டயலாக் ரைட்டர்

எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பிரபல முன்னாள் சீரியல் நடிகை தான்  டயலாக் ரைட்டராம்.




இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனாலும் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்திருக்கும் எதிர் நீச்சல் சீரியலின் டயலாக் ரைட்டர் யார் தெரியுமா? அவரும் பிரபல சீரியல் நடிகை தான். தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. , சின்னத்திரை ரசிகர்கள் ‘கோலங்கள்’ ஆர்த்தியை சீக்கிரத்தில் மறந்து இருக்க மாட்டார்கள். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”, “என்னவளே” போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத்துறைக்குள் வந்த ஆர்த்தியின் நிஜப்பெயர் ஸ்ரீவித்யா. ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் “ஜில்லுன்னு ஒரு காதல்” படத்தில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார்.




பின்னர் சீரியலுக்கு வந்த ஸ்ரீவித்யாவுக்கு கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரமும், தென்றல் சீரியலில் சாருலதா வீரராகவன் என்ற கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டார். குடும்பம், குழந்தை என்றிருந்த அவர், சிறு இடைவேளைக்கு பிறகு ”சித்திரம் பேசுதடி”, ”கைராசி குடும்பம்” ஆகிய நாடகங்களின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி ஆனார். பின்னர் சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவில் மீண்டும் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை ஆனால் இந்த சீரியலில் அனல் பறக்கும் வசனங்களை எழுதும் வசனகர்த்தாவாக பட்டையை கிளப்பி வரும் இவருக்கு மக்களிடம் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இந்த சீரியலில் நடித்து அல்ல அல்ல..  கேரக்டராகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்த நடிகர், நடிகைகள் பற்றி நாளைய தொகுப்பில் பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!