தேவையான பொருட்கள்:
பாகற்காய் துண்டுகள்- ஒரு கப்
சமையல் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- ½ ஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு கொத்து
பெரிய வெங்காயம்-1
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மல்லி தூள்-1 ஸ்பூன்
சீரகத்தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
-
பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
-
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய விடுங்கள் என்னை நன்கு காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விடுங்கள் பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை உரித்து போட்டு விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.
-
வெங்காயம் வதங்கியவுடன் வெட்டி வைத்த பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிண்டி மூடி வேக வையுங்கள்.
இவற்றின் மசாலா வாசம் போகும் வரை நன்கு பிரட்டியதும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து தொக்கு போல நன்கு பாகற்காய் வெந்து மசாலாக்களுடன் ஒன்று சேர்ந்து கலந்து சூப்பராக டேஸ்ட்டியாக உங்களுக்கு பாகற்காய் தொக்கு கிடைக்கும்.
டிப்ஸ்:
Ø பாகற்காயை உப்பில் போட்டு நன்கு கழுவினால் கசப்பு தன்மை போய்விடும்.
Ø வெங்காயத்தில் சற்று உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கிவிடும்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1