Samayalarai

சப்பாத்திக் குருமா

சப்பாத்திக் குருமா

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்-1/4 கிலோ (ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள்)

 பெரிய வெங்காயம்-2 

 தக்காளி-2

பச்சை மிளகாய்-2 

மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன் 

மிளகாய்த்தூள்-1/2 டீஸ்பூன்

தண்ணீர்- 2  டம்ளர்

 உப்பு- தேவையான அளவு

எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு- தாளிக்க தேவையான அளவு 




செய்முறை விளக்கம் 

  • காய்கறிகளை எல்லாவற்றையும் கழுவி நறுக்கவும். 

  • அடுப்பில் குக்கரை வைத்து காய்களை போட்டு அதனுடன் மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரை மூடி சிம்மில் வைக்கவும்.  இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து காய்கறிகளுடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சைட் டிஷ் தயார்.




டிப்ஸ்:

  • தாளிக்கும் போது 1 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து தாளித்தால்  சுவை அதிகமாக இருக்கும் 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!