Samayalarai

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு- அரை கப்

தண்ணீர்-1 கப்

உப்பு- தேவையான அளவு

நெய் அல்லது பட்டர் -1 ஸ்பூன்

அரிசி மாவு- 2 கப்

எள்ளு-1 ஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை

செய்முறை விளக்கம் :




  • அரைக் கப் பாசிப்பருப்பை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். ( இரண்டு விசிலில் இறக்கவும்).

  • வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு, நெய் அல்லது பட்டர் சேர்த்து மிருதுவாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

  • அரைத்த பருப்புடன் அரிசி மாவு 2 கப், எள்ளு, பெருங்காயத்தூள்  சேர்த்து நன்றாக முறுக்கு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

  • பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான முறுக்கு தயார்.

 டிப்ஸ்




  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கை பொரித்தல் முறுக்கு முழுவதிலும் எண்ணையை இறங்கி விடும்.

  • அதிக சூட்டில் அடுப்பை வைத்தால் வெளியே கருகிவிடும் உள்ளே வேகாமல் இருக்கும்.

  • கப்பியில்லாமல் அரைத்துக்கொள்ளுங்கள், கப்பி இருந்தால் முறுக்கு வெடிப்பதற்கு அதிக  வாய்ப்பு  உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!