Samayalarai

காஜூ பிஸ்தா ரோல்

தேவையான பொருள்கள்

முந்திரி- 250 கிராம்

பிஸ்தா- 50 கிராம்

சர்க்கரை -250 கிராம்

 நெய்- 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

வெள்ளைத்தாள்- தேவையான அளவு-

 தண்ணீர்- 125ml

 

செய்முறை விளக்கம்


  1. முந்திரியையும், பிஸ்தாவையும் பவுடர் போல் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும்.

  1. சர்க்கரையில் 200-250 ml தண்ணீர் சேர்த்து 1 ½ கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

  1. 1 ½ கம்பி பாதம் வந்த பின்பு அரைத்து வைத்த முந்திரி பவுடரை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

  1. சிறிது நேரம் கழித்து நெய் ஊற்றி கெட்டியான பதம் வந்ததும் பூரி பிசையும் கட்டையில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.




  1. ஒரு பாதி முந்திரி மாவில் பிஸ்தா பவுடரை சேர்த்து பிசைந்தால் பிஸ்தா ஸ்டப்பிங் ரெடி.ஸ்டப்பிங் செய்யும்பொழுது லேசான தண்ணீர் விட்டு பிசைந்தால் நன்றாக ஸ்டப்பிங் தயாராகும்.

  1. பின்பு முந்திரி மாவை தட்டையாக வைத்து பிஸ்தா உருண்டையை சேர்த்து பந்துபோல் உருட்டி கொள்ளவும்.  மெல்லிதாக கயிறு போல் உருட்டிக் கொள்ளவும்.

  1. உருட்டிய மாவை தேவையான அளவு கட் செய்தால் சுவையான காஜூ பிஸ்தா  ரோல் தயார்.

 

டிப்ஸ் :

  • 1 ½ கம்பி பதம் வரும் வரை மட்டும் சர்க்கரை கொதிக்க வேண்டும். (இரண்டு விரல்களில் நடுவில் தொட்டு பார்க்கும் போது விரல்களின் நடுவில் கம்பி போல் வருவதை கம்பி பதம் என்போம். 1 ½ கம்பி போல் பாகை தயார் செய்தல் மிக அவசியம்).




  • பிஸ்தா ஸ்டப்பிங்கிற்கு ½ ஸ்பூன் தண்ணீர் மட்டும் சேர்க்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!