Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 11

11

 

” நாங்க கஞ்சி குடிச்சோம் .உனக்கு இதுதானே பழக்கம் ” என்றபடி தன் தட்டில் சூடாக வந்து விழுந்த இட்லியை எப்படி எடுத்துக் கொள்வதென நர்மதாவிற்கு தெரியவில்லை .பாசமாஅக்கறையாபரிவா ….வேண்டா வெறுப்பாநெற்றிப் பொட்டை  அழுத்தி விட்டுக் கொண்டாள் அவள் .

 

 




சூடான இட்லியின் மீது மணமான சாம்பார் ஊற்றப்பட்டது .மிக ருசியாக இருக்கும் என்று பார்க்கும் போதே தெரிந்தாலும் சாம்பாரில் இருந்து எழுந்த பெருங்காய வாசனை நர்மதாவிற்கு பிடிக்கவில்லை .வயிற்றை பிரட்டி வாந்தி உணர்வு வந்தது.

 

” மருமகளுக்கு பரிமாறும் மாமியார் .இந்த மாதிரி கொடுப்பனை எல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா ? ” நக்கலாக பேசியபடி வந்தாள் முத்தாச்சி.

 

” மருமகளோ என்னவோ …? நம் வீடு தேடி வந்தவர்களுக்கு சாப்பாடு போடுவது நம்முடைய கடமைதானே முத்து ? ” ஓரகத்தியை சமாதானம் செய்தாள் சர்வேஸ்வரி.

 

வீட்டிற்கு வந்த யாரோ போல் என்னை நடத்தும் இவர்களிடம் எப்படி சொல்லப்போகிறேன் உங்கள் குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கிறேன் என்றுமுதலில் இதனை அவனிடம் எப்படி சொல்லப்போகிறேன் …? சொன்னால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்  ? முதலில்

 நம்புவார்களாநர்மதாவிற்கு தலை சுழலும் உணர்வு உண்டானது.

 

” என்ன தட்டுல போட்டதை எடுத்து தின்ன தெரியாதாசோறு போட்டதோடு மகாராணிக்கு ஊட்டியும் விடனுமோ ? ”  இன்னமும் இட்லியை தொட்டுப் பார்க்காத அவளை கோபமாக கேட்டாள் சர்வேஸ்வரி.

 




” அப்படி ஒன்றும் இல்லை அத்தை .நான் இதோ இந்த கஞ்சி குடிக்கிறேனே…”  அருகில் அமர்ந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்த சங்கரியை பார்த்து சொன்னாள்.

 

உண்மையில் அவளுக்கு அப்போது இட்லியை காட்டிலும் அந்த கம்மங்கஞ்சியைத்தான் குடிக்க வேண்டும் போல் இருந்தது .பெண்கள் மூவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

 

கூழுகஞ்சி எல்லாம் எனக்கு பழக்கம் இல்லை .இட்லிதோசைபூரி இப்படித்தான் எனக்கு காலை டிபன் வேண்டும் .முன்பு இங்கே இருந்த சில நாட்களில் இப்படிப் பேசிய நர்மதா அவர்களின் நினைவிற்கு வந்தாள்.

 

” எனக்கும் கஞ்சியே கொடுங்கள் அத்தைகேட்டவளை ஆச்சரியமாக பார்த்தபடி

சர்வேஸ்வரி தட்டில் கஞ்சியை வைத்து மோர் ஊற்றி கரைத்து அவளிடம் நீட்டினாள்.”  இந்த ஊறுகாயை தொட்டுக் கொள் ”  அருகே சிறு தட்டில் ஊறுகாய் வைத்தாள்.

 

லேசாக புளித்த அந்த கம்மஞ்சோறும்  காரமான  மாவடுவும் நர்மதாவின் மசக்கை வாய்க்கு தேவாமிர்தம் போல் இருந்தது .” ரொம்பவும் டேஸ்டாக இருக்கிறது அத்தை ” மீண்டும் ஒருமுறை தனது கட்டில் கஞ்சியை கரைத்துக் கொண்டாள் .ஆசையான அவளுடைய உணவு உண்ணலை  சுருங்கிய புருவங்களுடன் பார்த்தபடி அறை வாசலில் நின்றிருந்தான் மாதீரன்.

 




” ஐயையோ நர்மதா என்ன சாப்பிடுகிறாய்எப்படி இதெல்லாம் உன்னால் சாப்பிட முடிகிறது ? ” கத்தலாய்  பதறினான் மாதீரன் பின்னால் நின்றிருந்த தாண்டவன்.

 

” ஏன் இந்த உணவுக்கு என்னமிகவும் ருசியாக இருக்கிறது. எனக்கு பிடிக்கிறது சாப்பிடுகிறேன் .உனக்கு வேண்டுமென்றால் நீ இட்லி சாப்பிடுசொல்லிவிட்டு கஞ்சியை குடிக்க துவங்கினாள் நர்மதா.

 

தாண்டவன் சாப்பிடுவதற்கு சேரை இழுத்துப் போட்டு அமர வைத்த மாதீரன் ” இவருக்கு இட்லி வையுங்கள் அம்மா ” என்றுவிட்டு நகர்ந்து நர்மதாவின் அருகில் வந்தான் .சாம்பார் பாத்திரத்தை நகர்த்தும் பாவனையில் அவள் பக்கம் குனிந்து முணுமுணுத்தான்.

 

” சிரமப்பட்டு எதையும் சாப்பிட வேண்டாம் ” 

 

ஏன் இப்படி சொல்கிறான்நான் விரும்பி தானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்நர்மதா அவனை நிமிர்ந்து பார்க்க மாதீரன் அவள் அருகே இருந்த சேரில் உட்கார்ந்து கொள்ளலாமா …?எனும் எண்ணத்தில் இருந்தபோது சுமித்ரா வேகமாக உள்ளே வந்தாள் .அண்ணனை கையால் ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில்தான் அமர்ந்தாள்.

 

” எனக்கு சாப்பாடு கொண்டு வாங்க அம்மா ” அடுப்படியை பார்த்து கத்தினாள்.

 

மாதீரன் நகர்ந்து தாண்டவன் அருகே அமர்ந்து கொள்ளசுமித்ரா தன்னருகே அமர்ந்ததில் சந்தோசமான நர்மதா ” கம்மங்கஞ்சி குடித்துப் பார் சுமி .மிகவும் டேஸ்டாக இருக்கிறது ” என்றாள்.

 




” நான் இட்லி தான் சாப்பிட போகிறேன் .அம்மா சீக்கிரம் கொண்டு வாங்கமுகம் திருப்பிக் கொண்டாள்.

 

நர்மதாவின் முகம்  வாடியது .” அடுத்தவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது கொஞ்சம் யோசித்து கொடுக்க வேண்டும் .எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எதிலாவது மாட்டி விட்டு விட்டு தான் மட்டும் நிம்மதியாக இருக்க நினைப்பதுஇவர்கள் எல்லாம் என்ன ஜென்மங்கள்

மிகத்தெளிவாக நர்மதாவின் காதில் விழுவதற்காகவே முணுமுணுத்தாள்.

 

நர்மதா துவண்ட மனதுடன் போய் கைகழுவினாள் .எதிரில் இருந்து அவன் தங்கையின் குத்தல்களை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் .ஒரு சின்ன ஆட்சேமாவது சொல்கிறானா ? அமைதி காத்து நின்ற மாதீரன் மேல் கோபம் வந்தது அவளுக்கு.

 

வாருங்கள்பேசலாம் என்று அவள் பிறந்த வீட்டிற்கு அழைப்பு விட்டிருந்த போதும் இங்கே அவளுடன் உட்கார்ந்து பேச யாரும் தயாராக இல்லை என்பதை தெரிந்துகொண்டாள் .சுமித்ராவோ  இங்கே இருக்காதே வெளியே போ செய்தியை தனது சிறு அசைவிலும் கூட அவளுக்கு உணர்த்தினாள் .நான் ஏன் போக வேண்டும்இது என்னுடைய வீடுஎனும் உரிமையோடு பேச நர்மதா நினைத்தாலும் சுமித்ராவின் நிலை அவளது வாயை கட்டிப்போட்டது.

 




நர்மதா மாதீரனை தனியாக சந்திக்க விரும்பினாள். முதலில் தன்னுடைய தாய்மையை அவனிடம் தெரியப்படுத்த நினைத்தாள் .இதனை அவள் வேறு யாரிடமும் பேச விரும்பவில்லை .எல்லா பெண்ணும் விரும்புவது போலவே தனது கர்ப்ப விவரத்தை கணவனிடமே முதலில் பகிர்ந்து கொள்ள விரும்பினாள் .

 

ஆனால் அவனுடன் தனிமையில் ஐந்து நிமிடம் பேசக்கூட அவளுக்கு அங்கே சந்தர்ப்பம் அமையவில்லை .கணவன் மனைவியை தனித்து விடக்கூடாது என்ற நோக்கத்துடனேயே அந்த வீட்டில் எல்லோரும் இருப்பது போல் அவளுக்கு தோன்றியது .முக்கியமாக சுமித்ராவிற்கு .எப்படி நீ என் அண்ணனுடன் பேசுவாய் என்று பார்க்கிறேன் என்ற தீவிரத்துடன் அவள் நடந்துகொள்வதாக நர்மதாவிற்கு உறுத்தியது.

 

எனக்கு கிடைக்காத வாழ்வுஉனக்கு மட்டுமா  ? எனும் குரோதம் அவள் விழிகளில் தெரிந்ததை நர்மதாவால் உணரமுடிந்தது .தன்னை உணர்த்த சுமித்ராவுடன் அவள் பேச நினைத்த சந்தர்ப்பங்கள் எல்லாமே பயனற்று போனது.

 

” அண்ணனுடைய அறையில் அழுக்கு  துணி கிடைக்கிறதா என்று பார்த்து எடுத்துவா சங்கரிஏகாலி வந்திருக்கிறாள் ” சர்வேஸ்வரி குரல்கொடுக்கசங்கரி மாடிப்படியேற நர்மதாவின் மனது துள்ளியது .ஆக இந்த வீட்டில் மாதீரனுக்கு தனி அறை இருக்கிறது .மற்ற எல்லோரும் ஆண்பெண் என பிரிந்து இரண்டு பெரிய அறைகளில் படுத்துக் கொண்டாலும்வீட்டை விட்டு தூரமாக போய் நாட்டிற்காக போராடி வருபவன் என்றோ என்னவோ  அவள் கணவனுக்கு மட்டும் தனியறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 




இது போதுமேகணவனின் அறையில் இரவில் மனைவி தங்குவது இயல்புதானே ?நிம்மதி பெருமூச்சுடன் நர்மதா இரவிற்கு காத்திருந்தாள் .கணவனுடனான தனிமையை நினைத்த உடனேயே அவள் மனதினுள் சிறு தட்டாரப் பூச்சிகள் சிறகு அசைத்தபடி அங்குமிங்குமாக உற்சாகமாக பறந்தன.

 

முன்னொருநாள் தாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்த தினத்திற்கு அவள் மனம் பறந்தது. மனைவியாக அவளுடனான தனிமைக்கு மாதீரன் ஆவலுடன் காத்திருப்பதை அவளால் உணர முடிந்தது .ஆனால் நர்மதாவிற்கு அவனிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தன்னுடைய மனக்குறைகள்இங்கிருக்கும் கட்டுப்பாடுகள் என அவளுக்கு கணவனிடம் தெரிவிக்க தெரிந்துகொள்ள நிறையவே இருந்தன.

 

ஆனால் இவற்றில் எதையும் கேட்பதற்கு மாதீரன் தயாராக இல்லை .அவனுடைய நோக்கம் முழுவதும் மனைவியாக அவளை அணுகுவதில் மட்டுமே இருந்தது. தனக்குள் எடுத்த முடிவு காரணமாக வெட்கம்கூச்சம் தவிர்த்து சற்றே நிமிர்ந்த தலையுடன்தான் முதல் இரவு அறைக்குள் நுழைந்தாள் நர்மதாமலர் தூவப்பட்டிருந்த கட்டிலில் அவனை காணாமல் விழி திருப்பியவள் அவன் பால்கனியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து அங்கே போனாள்.

 

பால்கனியை நெருங்கியதும் அவள் விழிகள் விரிந்தன .பால்கனி முழுவதும் அவள் முன்பு  ஆசைப்பட்டது போல் தொட்டிச் செடிகளால்  நிரம்பியிருந்தது .மல்லிகைமுல்லை போன்ற வாசமலர்களோடு செவ்வந்திசெம்பருத்தி போன்ற அழகு மலர்களும் அங்கே இருந்தன .விதம்விதமான நிறம் நிறமான ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின .திடுமென தங்கள் வீட்டில் தோன்றிவிட்ட மலர் தோட்டத்தை நம்ப முடியாமல் பார்த்தாள் நர்மதா.

 

” பிடித்திருக்கிறதாஉன் ஆசை போல் இருக்கிறதா ? ” மாதீரனின் குரல் மேகங்களுக்கு நடுவே இருந்து ஒலித்த கந்தர்வனின் குரலை போல் அவளுக்கு தோன்றியது.

 




” நேற்றுதான் திருநெல்வேலிக்கு போய் எல்லா செடிகளையும் வாங்கி வந்தேன் .இவற்றை நம்முடைய திருமண பரிசாக வைத்துக்கொள்கிறாயா ? ”  கொஞ்சலாக ஒளித்த அவனது குரலுக்கு மயக்கமாக தலையசைத்தாள்.

 

” இந்த முல்லைப்பூ வாசம் மனதை கிறக்குகிறது ” என்றபடி பெரிய தொட்டியில் வைத்து கயிறுகள் கட்டி பால்கனியை சுற்றிவர விட்டிருந்த முல்லைப் பந்தலினடியில் அவள் இடை பற்றி இழுத்து தன்னோடு ஒட்டி கொண்டவன்  சொன்ன கிறக்கம் நர்மதாவினுள்ளும் பரவத்துவங்கியது.

 

மிக இயல்பாக கணவன்மனைவிக்கான முதல் இரவாக அமைந்துவிட்ட அன்றைய நாள் இன்று நினைக்கையில் செக்கச் சிவப்பாக நர்மதாவின் கன்னத்தில் படிந்தது.

 

இல்லை அன்று போல் இல்லை .இன்று அவனிடம் பேச வேண்டும்வந்துவிட்ட  இருளை பார்த்தபடி வெளியே சென்றிருக்கும் கணவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவளின் அருகே சொத் என்ற சத்தத்துடன் பாய் ஒன்று போடப்பட்டது

 

பொம்பளைங்க எல்லாம் இங்கேதான் படுக்கனும்உத்தரவாக கூறியபடி காவல் போல் அவளருகே இன்னொரு பாயை போட்டு் அதில் படுக்க தயாரானாள் சுமித்ரா .நர்மதா திகைப்பாக அவளை பார்க்க வீட்டிற்குள் வந்த மாதீரன் படபடவென மாடியேறினான் .மேலே சென்ற அடுத்த நிமிடம் அவனது குரல் சத்தமாக ஒலித்தது .




 

 

சுமித்ரா உன் மதினியை இங்கே வரச் சொல் ” 

 

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!