Barathi Kannmma Serial Stories பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – 5

5

” ம் …இந்த பையன் இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டராக இருக்கிறானேம்மா …” முத்துக்குமார் தோசை ஊற்றிக் கொண்டிருந்தார் .

” ஆமாம்பா …எனக்கும் ஆச்சரியம்தான் .அந்த முதலாளிதான் நித்திகாவின் அப்பாவாக இருப்பாரென நான் நினைக்கவில்லை .ஆனால் அவர் உங்களை போன் குரலிலேயே கண்டுபிடித்து விட்டேன்னு சாதாரணமாக சொல்கிறார் ” மிக்ஸியில் சுற்ற விட்டிருந்த சட்னியை நிறுத்திவிட்டு ஜாரிலிருந்தபடியே ஒரு ஸ்பூனால் சட்னியை எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு அப்பா சுட்டு வைத்திருந்த தோசையையும் வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் .

” எல்லா விசயங்களையும் கூர்மையாக கவனிப்பார் போல .அதுதான் இவ்வளவு தெளிவு ….” முத்துக்குமாரும் சாப்பிட ஆரம்பித்தார் .




” ஆனால் இந்த கவனம் அவரது தொழிலில் ,அவரது மகளிடம் இல்லையேப்பா ….” கண்ணம்மாவினுள் அங்கே வாசலில் நின்றுகொண்டு இங்கே இவளை தைப்பது போல் பார்த்த அவனது ஊசிப்பார்வையின் நினைவு .

” அதற்கு அவரது அதிக வேலைகள் காரணமாக இருக்கலாமேம்மா .இப்போது இரண்டையுமே நீ சுட்டிக்காட்டி விட்டாய் .எனக்கென்னவோ அவர் எல்லாவறறையும் சரி செய்து விடுவாரென்றே தோன்றுகிறது ….”

” ம் …பார்க்கலாம்பா .அப்படி சரி செய்துவிட்டால் அந்தக் குழந்தைக்கு நல்லது ….” கண்ணம்மா பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள் .

அடுப்பை துடைத்துக் கொண்டிருந்த முத்துக்குமார் திடீரென ” ஏம்மா அந்த பையன் பெயர் என்ன சொன்னாய் …?்” என்றார் .

கண்ணம்மா விழித்தாள் .இதை அவள் கேட்கவேயில்லையே …அவன் பெயர் என்னவாக இருக்கும் …?

” கேட்கவேயில்லையா ….? அடுத்த முறை பார்க்கும்போது மறக்காமல் கேட்டு விடு ….”

முத்துக்குமார் சொல்லிவிட்டு சென்றதும்தான் …அவனை நான் ஏன் திரும்ப சந்திக்க போகிறேன் என நினைத்தாள் .

மறுநாள் பள்ளியில் சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் நித்திகா .வகுப்பின் இடையே இவளை வேறு பார்த்தபடியே இருந்தாள் .குழந்தையை நிறைய திட்டிவிட்டானோ ….?

லன்ஞ் டயத்தில் அன்று போலவே சாப்பிடாமல் அமர்ந்திருந்தவளின் அருகே போய் அமர்ந்தாள் கண்ணம்மா .

” நித்திகா …நேற்று அப்பா திட்டினாரா ….? “

கண்ணம்மாவின் கேள்வியில் சந்தோசமாக நிமிர்ந்தாள் ” இல்லை மிஸ் …திட்டலை மிஸ் ….என்கூட ரொம்ப நேரம் பேசினாங்க மிஸ் …..வெளியே போய் சாப்பிட்டோம் மிஸ் …த்ரீ டி படத்திற்கு கூட்டிட்டு போனாங்க மிஸ் ….”




” மெல்ல …மெல்ல …மூச்சு வாங்க போகுது .எதுக்கு இத்தனை மிஸ் …? “

” உங்களுக்கு என்னை பிடிக்காதோ ….நீங்கள் என்னிடம் இனிமேல் பேசவே மாட்டீர்களோ என நினைத்துக் கொண்டே இருந்தேன் மிஸ்.எனக்கு அழுகையாக வந்த்து மிஸ் .இப்போ நீங்க பேசினதில் ரொம்ப சந்தோசம் மிஸ் …..”

” அட்டா ….நித்திகா சமர்த்து பொண்ணாச்சே .அவளிடம் பேசாமல் இருப்பேனா …நீ மட.டும் இனிமேல் சமர்த்தாக இருந்தாயானால் நான் உன்னை திட்டவே மாட.டேன் .சரியா …? “

” சரிதான் மிஸ் .இனி சமர்த்தாக இருப்பேன் மிஸ் .உங்களால் தானே அப்பா என்னிடம் நன்றாக பேசினார் .மிஸ் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் .இனி யாரையும் அடிக்காமல் எதையும் உடைக்காமல் சமர்த்தாக இருப்பேன் மிஸ் ….” படபடத்த குழந்தையின் முதுகை தட்டி ஆசுவாசப்படுத்தினாள் .

” குட் …இப்போது சாப்பிடு .”அவளது டிபன் பாக்ஸை திறந்து கொடுத்துவிட்டு தான் சாப்பிட போனாள் .

” ஸ்ட்டூடன்ஸ் கிட்ட பேசுற அளவு கூட எங்கள் கூட பேச மாட்டேங்கறீங்களே டீச்சர் …? ” தனசேகர் வம்பிழுத்தான் .

” தேவையொன்றால் பேசிக்கொண்டுதானே சார் இருக்கிறேன் ….”

” அந்த லூசு பொண்ணுகிட்டே இப்போதான் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தீங்க …? “

” ஒழுங்காக பேசுங்கள் சார் .எதற்காக அவளை லூசு என்கிறீர்கள் …? “

” அதற்கு எதற்கு நீங்கள் இப்படி குதிக்கிறீர்கள் …?? ”
ஒரு மாதிரி முறைத்தபடியோ …விறைத்தபடியோ …அடிக்கடி கை நீட்டவும் செய்யும் நித்திகாவிற்கு ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து லூசு என்றுதான் பெயர் வைத்திருந்தனர் .

” எங்களுக்குள் எப்போதுமே அவளை அப்படித்தான் சொல்வோம் டீச்சர் ” வெண்ணிலா சொன்னாள் .

” பாடம் கற்று தரும் ஆசிரியர்களே இப்படி சொல்வது தப்பு .இனி மாற்றிக் கொள்ளுங்கள் …” உறுதியாக கூறிவிட்டு பாதி சாப்பாட்டில் எழுந்தாள் கண்ணம்மா .

சை இப்படியா ஒரு குழந்தையை பேசுவார்கள் …? நினைக்க நினைக்க ஆறவில்லை கண்ணம்மாவிற்கு .
இவர்கள் கண் முன்னாலேயே அந்த குழந்தையை நல்லபடியாக மாற்றிக் காட்டவேண்டும் என நினைத்துக்கொண்டாள் .

” ஹலோ நீங்கள் …மை காட் கண்ணம்மா …நீயேதானா …? ஐயோ என்னால் என் கண்களையே நம்பவே முடியவில்லையே …..” சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தவளின் அருகே வண்டியை நிறுத்தியிருந்தான் அவன் .முகம் முழுவதும் சந்தோசம் நிரம்பியிருந்த்து .உணர்ச்சி வசப்பட்டதில் கண்கள் கலங்கியிருந்தன.




” கடவுளே இந்த நாள் எனக்கு இவ்வளவு இனிமையானதாக இருக்குமென்று நினைக்கவில்லையே …” சுற்றியிருப்போர் அவனை வேடிக்கை பார்ப்பதை உணராமல் கொஞ்சம் சத்தமாகவே பேசினான் .

” உஷ் எல்லோரும் பார்க்கிறார்கள் .நாம் பிறகு பேசலாம் …”

” பிறகா …மூன்று வருடங்கள் கண்ணம்மா என் கண்மணியை பிரிந்து ….” தொடர்ந்த அவன் காதல் வசனங்களில் சங்கடமுற்றவளுக்கு உதவ சிக்னல் விழுந்துவிட  தனை மறந்து புலம்பி நின்றவனை விட்டுவிட்டு சர்ரென வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள் .

அவன் திகைத்து நின்று சுற்றிலும் சூழ்ந்து கொண்ட வாகனங்களுக்கிடையே மாட்டிக்கொண்டு நின்றுவிட்டான் .

” காபி சூடு சரியாக இருக்கிறதாம்மா …? ” தோள்களை உலுக்கிய தந்தைக்கு திடுக்கிட்டவள் …

” அ…அப்பா …எ…என்ன கேட்டீர்கள் …? ” என்றாள் .

” என்னம்மா வந்த்திலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கிறாயே …? “

” இன்று அவரை பார்த்தேன் அப்பா …”

யாரை ….? “

” அந்த ராமச்சந்திரனை …”

” அ…அவன் இங்கேயா இருக்கிறான் ….? ” முனகினார் முத்துராமன் ..

What’s your Reaction?
+1
1
+1
3
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!