Barathi Kannmma Serial Stories பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – 4

4

 

 

” மேடம் நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன் .கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன் .நாம் பிறகு பேசலாம் ….”

” நோ ..திஸ் இஸ் ஆல்சோ இம்பார்ட்டென்ட் .ஐ வான்ட் டூ டால்க் வித் யூ ரைட் நவ் “

அவன் எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிநாட்டுக்கார்ர்களாதலால் அவர்களுக்கு புரியட்டுமென ஆங்கிலத்தில் பேசினாள் கண்ணம்மா .

அது சரியென்பது போல் அவர்கள் எழுந்துவிட்டனர் .

” இட்ஸ் ஓ.கே சார் .யூ கேரி ஆன் .வீ வில் பினிஷ் அவர் லன்ஞ் அன்ட் தென் ஜாயின் யூ ” அவனுடன் கைகுலுக்கி விட்டு கண்ணம்மாவிற்கு ஒரு சினேக புன்னகையை கொடுத்துவிட்டு வெளியேறினர் .




” என்ன விசயம் ….? ” அவன் பார்வை கண்ணம்மாவை கோபமாகவும் , அவள் பின் நின்ற விற்பனை பெண்ணை மிக கோபமாகவும் பார்த்தது .அவன் தன்னை உட்கார சொல்லவில்லையெனபதை மனதினுள் குறித்தபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றபடி பேச ஆரம்பித்தாள் .

நடந்தவற்றை கண்ணம்மா சொல்ல டேபிள்வெயிட்டை உருட்டியபடி தனது ரோலிங் சேரை ஆட்டியபடி ” ம் ” கூட சொல்லாமல் கேட்டான் .இறுதியில் அவள் பேசி நிறுத்தியதும் …நிமிர்ந்து அவளை முடித்துவிட்டாயா ..என்பது போல் பார்த்து ….

” சரி நான் பார்த்துக் கொள்கிறேன் .நீங்கள் கிளம்புங்கள் ….” என்றான் .

“என்ன சார் இப்படி சொல்கிறீர்கள் …? இது எவ்வளவு பெரிய விசயம் …சாதாரணமாக சொல்கிறீர்களே .என்ன ஆக்சன் எடுக்க போகிறீர்களென எனக்கு தெரியவேண்டும் .சொல்லுங்கள் ….”

” மேடம் இது எனது கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விசயம் .அவர்கள் அனைவரும் எனது குடும்ப ஆட்கள் போல. அவர்கள் விசயத்தை உங்களைப போல் ஒரு மூன்றாம் மனிதருடன் நான் பேச முடியாது …”

” ஓஹோ ….உடை மாற்றும் அறைக்குள் ஓட்டை போட்டு எட்டி பார்க்கும் ஊழியரெல்லாம் உங்கள் குடும்பத்தில் ஒருவரா…? ஒன்றுமறியாத இந்த சிறுபெண்ணை அடித்து வேலை வாங்குபவரெல்லாம் உங்கள் குடும்ப ஊழியரா …? எனக்கென்னவோ இங்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் உங்கள் பங்கும் இருக்கிறது என்றே தோன்றுகிறது .இதனை நான் விடப்போவதில்லை …நீங்கள் எனக்கு பதில் சொல்லவில்லையென்றால் நான் கடுமையான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் ….”

” தென் யு வில் டூ இட் ….” என்றவன் எழுந்து அந்த பெண்ணிடம் ….” என்னோடு வாம்மா …” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான் .

இப்படி திடுமென அவன் எழுந்து போகவும் திகைத்த கண்ணம்மா …” என்ன …? ” என்றபடி போனவனை பார்த்தாள் .

” உங்களால் என்ன முடியுமோ அதை பண்ணிக்கொள்ளுங்கள் என்றேன் …” அறைக்கதவை திறந்தவன் நின்று இவளிடம் அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினான் .தனியாக அந்த அறையினுள் விழித்தபடி நின்றாள் கண்ணம்மா .

” என்ன சாப்பிடுகிறீர்கள் மேடம் …? ஹாட் ஆர் கோல்டு …? “

அவனை பார்த்த நொடியிலிருந்து அன்று நடந்தவைகளெல்லாம் கண்ணம்மாவினுள் படமாக ஓடிக்கொண்டிருக்க அவன் அது போன்ற எந்த பாதிப்புகளுமின்றி சாதாரணமாக அவளை உபசரித்துக் கொண்டிருந்தான் .




திமிர் …பணத்திமிர் மனதினுள் அவனை வசை பாடியவள் …

” நான் உங்கள் மனைவியுடனும் பேச விரும்புகிறேன் …” என்றாள் .

” பரவாயில்லை நீங்கள் என்னிடமே எல்லாவற்றையும் சொல்லலாம் ….”

” உங்கள் மகளை எங்கே …? ” எரிச்சலாக கேட்டாள் .

” அவள் ….நித்தி உள்ளேதானே இருக்கிறாள் …? ” கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து வைத்த பணிப்பெண்ணிடம் கேட்டான் .

” பாப்பா தூங்குதுங்கய்யா ….”அந்த பெண் தகவல் சொல்லவிட்டு போனாள் .

” நீங்களும் வீட்டிலேயேதான் இருக்கிறீர்கள் .ஆனால் உங்கள் மகள் என்ன செய்கிறாளென உங்களுக்கு தெரியவில்லை .உங்களிடம் நான் என்ன பேச முடியும் …? உங்கள் மனைவியை கூப்பிடுங்கள் சார் ….”

ஒரு நொடி மௌனமானவன் பின் ….” அவள் அம்மா இல்லை .நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம்தான் பேசியாக வேண்டும் …”என்றான் .

” ஏன் எங்கேயாவது வெளியில் போயிருக்கிறார்களா …? நான் வேண்டுமானால் வெயிட் பண்ணி ….”சொல்லிக்கொண்டு போனவள் நிறுத்தி அவனை கூர்ந்து …

” யு மீன் ….? “

” ஆமாம் அவள் அம்மா இல்லை .நீங்கள் என்னிடமதான் பேசியாகவேண்டும் ….” என்றான் மீண்டும் .

” கடவுளே ….” என முனகிய கண்ணம்மாவனுள் நித்திகாவின் மேல் பரிதாபம் சுரந்த்து .தலையை பிடித்து கொண்டு குனிந்தவளிடம் ஜூஸை எடுத்து நீட்டினான் .

” ரிலாக்ஸ் மேடம் .குடித்துவிட்டு பேசுங்கள் …”

நிமிர்ந்த கண்ணம்மாவின் பார்வையில் இப்போது பரிதாப உணர்வு அவனுக்கும் சேர்த்து இருந்த்து .

” ம்ஹூம் …நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் மேடம் .இவ்வளவு பரிதாபம் எங்களுக்கு தேவையில்லை ….” கணீரென கேட்டது அவன் குரல் .

மெல்ல தன்னை சமாளித்து கொண்டவள் பள்ளியில் நித்திகாவின் நடவடிக்கைகளை விவரிக்க தொடங்கினாள் .

” இப்படியே அவளை கவனிக்காமல் விட்டால் பாவம் குழந்தை என்ன ஆவாளென தெரியவில்லை .நீங்கள் கொஞ்சம் உங்கள் வேலைகளை குறைத்துக் கொண்டு உங்கள் மகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் “

அன்று ஜவுளிக்கடையில் வைத்து அவள் கூறிய கம்ப்ளைன்டுகளை எப்படி அசையாமல் கேட்டானோ …அதே போன்றே தன் இரு கைகளையும் கோர்த்து ஆட்காட்டி விரல்களை மட்டும் ஒன்றொடு ஒன்று தட்டியபடி கேட்டான் .




” ம் …ஓ.கே .நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்றான் .

” என்ன …எதை பார்த்துக் கொள்வீர்கள் …? ” எரிச்சலாக கேட்டாள் .எதுவானாலும் இவனுக்கு என்ன இப்படி ஒரு அலட்சிய பாவம் …

தரை கார்பெட்டில் பார்வையை பதித்திருந்தவன் நிமிர்ந்து இவள் முகம் பார்த்தான் .பளிச்சென புன்னகைத்தான் .

” நிச்சயமாக மேடம் .நான் பார்த்துக்கொள்கிறேன் .நீங்கள் கவலைப்படாமல் கிளம்புங்கள் ….” எழுந்துவிட்டான் .

வேறு வழியின்றி தானும் எழுந்த கண்ணம்மா கைகளை குவித்துவிட்டு  வாசலுக்கு நடந்தாள் .தனது ஸ்கூட்டி அருகே வந்தவள் திரும்பி அவனை பார்க்க …

” என் தொழிலும் வாழ்க்கையும் வேறுதான் மேடம் .அதை நானும் உணர்ந்திருக்கிறேன் ….” என்றான் .

அப்போது இவனுக்கு அவளை நினைவிருக்கறது .இவ்வளவு நேரமாக தெரியாத்து போன்றே என்ன பாவம்  முகத்தில் ….

” கொஞ்சம் தள்ளுங்கள் உங்கள் வண்டியை நான் திருப்பி தருகிறேன் ….” அவளிடமிருந்து ஸ்கூட்டியை வாங்கியவன் வாசலுக்கு நேராக அதை திருப்பியபடி …

” இன்று காலை போனிலேயே உங்கள் குரலிலேயே உங்களை கண்டுபிடித்து விட்டேன் மேடம் …உங்களையே எதிர்பார்த்துதான் காத்துக்கொண்டிருந்தேன் .ம் ….இப்போது கிளம்புங்கள்….” என்றான் .




அவனது சூட்டிகையில் கண்ணம்மாவிற்கு வியர்த்தது .

” உங்கள் பெயரை தெரிந்துகொள்ளலாமா …? ” இவன் குரலில் அதிகமான ஆர்வமிருக்கிறதோ ….யோசித்தபடி தனது பெயரை கூறினாள் .

இவளது பெயருக்கு லேசாக புருவம் உயர்த்தியவன் தனது வாய்க்குள் அந்த பெயரை சொல்லிப் பார்த்துக் கொள்வதை உணர்ந்தாள் .

” அழகான பெயர் …” கை குவித்தான் .

வியர்வையில் வழுக்கிய கைகளால் ஆக்ஸிலேட்டரை திருகியபடி வீட்டை விட்டு வெளியேறும்போது கண்ணம்மா திரும்பி பார்க்க அவன் அதே இடத்தில் கைகளை பேன்ட் பாக்கெட்டினுள் விட்டுக்கொண்டு நின்றபடி இவளையே பார்த்துக்கொண்டிருந்தான் .

What’s your Reaction?
+1
2
+1
4
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!