Serial Stories விளக்கேற்றும் வேளையிலே

விளக்கேற்றும் வேளையிலே – 1

பத்மா கிரகதுரை

எழுதிய

விளக்கேற்றும் வேளையிலே

 1

மடித்து வைத்த இலைச்சுருளுக்குள் 
மல்லிகையாய் உன் நினைவு …

 




சென்னையையே உலுக்கி திருப்பிப் பொட்டுக்கொண்டிருந்த மழை வெள்ள கால இரவு பொழுது .இப்படி ஒரு மழையை எதிர்பார்க்காத சென்னை மக்கள் …செய்வதறியாது விழித்தபடி வீட்டினுள் முடங்கியிருந்தனர் .

மழை வெள்ளம் ததும்பி ததும்பி கழுத்து வரை வந்துவிட்டது .ஆனாலும் விடாது ஒரு கையில் மனைவியையும் , மறு கையில் குழந்தையையும் தோள்களில் சில சாமான்களையும் தூக்கியபடி அந்த ஆண் வெள்ள நீரில் நீந்திக் கொண்டிருந்தான் .ஒரு கட்டத்தில் குழந்தையை தோளில் ஏற்றிக் கொண்டு , மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்தபடி நீரை துழாவியபடி வெளியேறிக் கொண்டிருந்தான் .காமிரா அவனை தொடர்ந்து கொண்டிருந்தது. டிவியில் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதவாணி .நிச்சயம் இவன் தன் குடும்பத்தோடு கரை சேர்ந்து விடுவான் .எப்படிப்பட்ட கணவன் …தகப்பன் .எந்த மாதிரி வாழ்க்கை அப்பெண்ணிற்கு ..

தன் வாழ்க்கை மீது ஒரு விரக்தி எண்ணம் வந்த்து அவளுக்கு .ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண டும் ? பிடிக்காதவனை எப்படி மணமுடிப்பது ? எப்படி குடும்பம் நடத்துவது ? அவளென்ன உணர்ச்சியற்ற ஜடமா ..? ஊருக்கும் உலகுக்குமான ஒரு போலி வாழ்க்கை வாழ…??

” அமுதா கையோடு கொஞ்சம் மல்லி சட்னி அரைச்சிடுறேன்  .உனக்கு பிடிக்குமே ..” அடுக்களை உள்ளிருந்து குரல் கொடுத்தாள் காயத்ரி.

” சித்தி இருக்கிறதை கொண்டு வாங்க .எனக்கு தோசை பொடி கூட போதும் .” இங்கிருந்தபடி பதில் கொடுத்தாள் .

” வெறும் பொடியை தொட்டால் தோசை பாதி தொண்டையில் விக்கும் .இரு கொஞ்சமா அரைச்சிடுறேன் “

காயத்ரி கேட்க மாட்டாள் .இந்த இரண்டு நாட்களாக விருந்தாளியை போல் அவளை கவனித்து வருகிறாள்” .வேறு விதியின்றி உங்களிடம் வந்திருக்கிறேன் சித்தி .இப்படி கவனித்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது .சாதாரணமாக இருங்கள் ” பலமுறை சொல்லி விட்டாள் .காயதரி காதில் வாங்குவதாக இல்லை .

தள்ளின சொந்தம் இந்த காயத்ரி .அவள் அம்மாவின் சிறு வயது தோழியும் கூட “.உன் அம்மாவை நினைத்தே உனக்கு நான் இந்த உதவியை செய்ய நினைக்கறேன் அமுதா .நிச்சயம் என்னால் முடிந்த அளவு உன் வாழ்வை காப்பேன் …” அவ்வளவு பெரிய வீட்டில் சூழ்ந்திருந்த நெருங்கிய சொந்தங்களிடையே இந்த தள்ளிய சொந்தம்தான் அவளுக்கு உதவ முன்வந்த்து .அதுவும் அராஜகமாய் அரசாட்சி செய்ய நினைக்கும் அவளுடைய அந்த குடும்பத்தினரிடையே …தைரியமாக அவளுக்கு கை கொடுக்க முன் வந்தாள்




.அப்படிப்பட்டவளிடமே தனது வாழ்வின் முக்கிய விசயமொன்றை மறைக்கறோமேயென்ற உறுத்தல் இருந்தாலும் அமுதாவிற்கு வேறு வழி தெரியவில்லை .அந்த விசயம் தெரிந்தால் காயத்ரி இது போல் அவளுக்கு உதவ வரமாட்டாள் .

சொன்னபடி மணக்க மணக்க கொத்தமல்லி சட்னியுடன் மென்மையான தோசையுடன் வந்தாள் .” இன்றைய பொழுது சரியா போச்சு .நாளைக்கு ஒருநாள் தாக்கு பிடிக்கலாம் . அதற்கு மேலும் மழை தொடர்ந்தால் என்ன செய்யன்னு தெரியலை ” புலம்பினாள் .

” ஏன் சித்தி உங்கள் தோழி நாளை வீட்டில்தானே இருப்பாங்க .? ” தோசையை வாயில் திணித்தபடி , ஓரக்கண்ணால் தனது பயணத்திற்காக தயாராக எடுத்து வைக்கப்பட்ட பேக்கை பார்த்தபடி கேட்டாள் .இந்த மழை மட்டும் வந்திராவிட்டால் அவள் இந்நேரம் இங்கேயிருந்திருக்க மாட்டாள் .

” இந்த மழையில் அவள் வேலைக்கு எங்கே போகப் போகிறாள் ? வீட்டில்தான் இருப்பாள் .ஆனால் நீ நாளைக்கெல்லாம் போக வேண்டாம் .இந்த மழை நிற்கட்டும் .பிறகு பார்க்கலாம் “

” மழை நிற்கும் வரை என் தாத்தா சும்மா இருப்பாரென்றா நினைக்கிறீர்கள் ? அவர் இருந்தாலும்  என் பாட்டி சும்மா இருக்க விடுவார்களா ..? ” சிவராமனையும் , மங்கலதேவியையும் மனதில் நினைத்தபடி கேட்டாள் .

” இந்த மழையில் அவர்கள் என்ன செய்வார்கள் ..?மழைக்குள் குடை பிடித்துக் கொண்டு வந்து உன்னை தேடவா போகிறார்கள் .? பேசாமல் இரு அமுதா ” காயதரி சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் .

அவர்கள் வரமாட்டார்கள் .அதற்கான பொழுதோ , வயதோ அவர்களுக்கு கிடையாது .ஆனால்    அவர்கள் அழகு பேரன் வருவான் .அலட்சியமும் , அதிகாரமுமாக தலை நிமிர்ந்தபடி என்னிடம் தவறேயில்லை எனும் பாவனையை முகத்தில் கொண்டு திமிரோடு வருவான் .  அப்படி ஈஸிசேரில் சாய்ந்தபடி ” அந்தக் கழுதை எங்கிருந்தாலும் பிடித்து இழுத்து வாடா ” சிவராமன் உத்தரவிடுவது போன்ற காட்சி தோன்றியது .அன்று உத்தரவிட்டாரே ” அந்த நாயை இழுத்துட்டு போய் ஏதாவது கோவிலில் தாலி கட்டி கூட்டிட்டு வாடா ” 

இரண்டு உத்தரவிற்கும்” நீங்கள் சொன்னால் சரிதான் தாத்தா ” என்பதே அந்த பேரனின் பதிலாக இருந்தது .இப்போதும் இருக்கும் .பேத்தி என்ற பாசம் தாத்தாவிற்கோ , பாட்டிக்கோ என்றுமே கிடையாது. அம்மா , அப்பாவை இழந்துவிட்டு ஆறாத் துயருடன் அமுதவாணி தாத்தா வீட்டு படியேறிய நாளிலிருந்து அப்படித்தான். அவள் அந்த வீட்டின் ஓரமாக போடப்பட்டிருக்கும் ஒரு பழைய நாற்காலி போலத்தான் அனைவராலும் நடத்தப்பட்டாள. சொந்த தாய்வழி பாட்டி வீட்டில் இது போல் மோசமாக நடத்தப்பட்ட முதல் பேத்தி தானாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொள்வாள் அமிதவாணி .

ஆனால் இவளிடம் மட்டும்தான் அப்படி பாராமுகமாக , வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வார்கள் பாட்டியும் , தாத்தாவும் …இன்னமும் அவர்கள் அருமை பேரனும் . .அவர்களது மற்ற பேரப்பிள்ளைகளான அமிர்தன் , ரஞ்சனி , சித்தார்த் , சந்தனா , இவர்களெல்லாம் இப்போதும் அவர்களது செல்லப் பிள்ளைகளே …குழந்தைகள் போல் செல்லம் கொஞ்சிக் கொள்வார்கள் .கண்ணம்மா , பாப்பா , செல்லம் என செல்லப்பெயர்கள் இரைபடும் .இவள் மட்டும் நாய் , கழுதை , இல்லையெனில் ஏய் ..இந்தா ..இவளே …இப்படி அழைக்கப்படுவாள் .




தங்கள் வாழ்வை உயிர்ப்பிக்க வந்த அமுதம் இவளென்று  இவள் பெற்றோர் சூட்டிய பெயரினை இவளே மறந்து விட்டாள் .அம்மு என்ற அவர்களின் செல்ல அழைப்பும் மறைந்தே விட்டது .நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் .நீ வெளி ஆள் என இவர்கள் அனைவரும் சேர்ந்து இவளுக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்கள் .ஒரு புழுவினை போல் கூனிக் குறுகி போக்கிடமற்று அடுப்படிக்குள் உள்ளூர நைந்து கொண்டிருப்பாள் அமுதவாணி .

அந்த பொய் வாழ்வும் , போலி பகட்டும் வேண்டாமென றுதான் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் .ஆனால் அவளை விட மாட்டார்களென தெரியும் .ஏனென்றால் இப்போது அவளது மதிப்பு அப்படி . அவள் பெயரில் இருக்கும் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள பங்குகளை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள் .எப்படியாவது தேடி வந்து மீண்டும் சங்கிலி பிணைத்து அழைத்து சென்று அடுப்பை துடைக்க வைக்காமல் விடமாட்டார்கள் .

இந்த முறை அந்த சுழலில் சிக்க அமுதவாணி தயாரில்லை .எனவேதான் அவள் சிலநாட்களாக தன் மனதை உலுக்கிக் கொண்டிருந்த பலவீனத்தை கூட ஒதுக்கி விட்டு  வெளியேறியிருந்தாள் .

” ஐய்யய்யோ அமுதா இங்கே வந்து பாரேன் ” காயதரி கத்த எழுந்து வந்து ஜன்னல் வழியே பார்த்தவள் திகைத்தாள் .வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த்து .வாசலை திறந்த கணத்தில் உள்ளே நுழைந்துவிட துடித்தபடி கசிந்து உள் வந்து கொண்டிருந்த்து .

” கதவை திறந்திடாதீங்க சித்தி .இந்த ஜன்னலை கூட மூடிவிடலாம் ” இத்தனை இடரில் தன்னை தேடி நிச்சயம் வர மாட்டார்கள் என எண்ணியபடி ஜன்னல் கதவுகளை இழுத்து மூடியவள் வாசலில் வந்து பிரேக் அடித்த அந்த காரின் சத்தத்தில் விதிர்த்தாள் .மீண்டும் ஜன்னல் கதவை லேசாக திறந்து பார்த்தாள் .

வெளியே முழுவதும் இருள்தான் .கரண்ட் வேறு போய்விட்டதால் கண்மையை கரைத்து அப்பியது போல் வெளிப்புறம் இருந்த்து .இருந்தாலும் காரிலிருந்து இறங்கிய அந்த கோட்டு உருவத்தை அமுதாவால் இங்கிருந்தே உணர முடிந்தது .அந்த உயரமும் …ஆகிருதியும் …இது நிச்சயம் அவன்தான் .அவனிடம் அகப்படக்கூடாது ஓடிவிட வேண்டும் என எண்ணினாலும் , கால்களை நகர்த்த முடியாமல் தேங்கிய நீரினிடையே ‘ சளப் சளப்பென ‘ அவன் வருவதை பார்த்தபடி அப்படியே நின்றுகொண்டிருந்தாள் .

” யார் அமுதா ..? ” கேட்ட காயத்ரிக்கு அவனை சுட்டியவள் ” அமிர்தன் ” முணுமுணுத்தாள் .

” முருகா ..! நீ இனி இங்கே இருக்க வேண டாம் .பின்வாசல் வழியாக ஓடிவிடு ,” முன்பே தயாராக வைத்திருந்த பேக்கை எடுத்து அமுதாவின் தோளில் மாட்டினாள் காயதரி .

அதற்குள் கதவு தட்டப்பட்டது .” போம்மா நான் அனுவிடம் பேசுகிறேன் .பணம்




வைத்திருக்கிறாய்தானே ..? இந்த மழையில் கஷ்டம்தான் .ஆனால் வேறு வழியில்லை .போ …போய்விடு …” கதவின் தட்டல் அதிகரித்தது .கூடவே ” திறங்கள் ” என்ற சத்தமும் .

அமுதாவின் கையை பிடித்து இழுத்து வந்து பின் வாசல் கதவை காயத்ரி  திறக்கவும் தயாராக இருந்த வெள்ளநீர் ஆவலாக உள்ளே நுழைந்த்து .அதற்குள் அவளை தள்ளியவள் ” அதோ அந்த பக்கம் காம்பவுன்ட் சுவர் கொஞ்சம் குட்டையாக இருக்கிறது .அதில் ஏறி குதித்து போய்விடு ” அவளை தள்ளி பின் கதவை பூட்டிவிட்டு ” இதோ வருகிறேன் ” என வாசல் கதவிற்கு விரைந்தாள் காயத்ரி .

அமுதா கஷ்டப்பட்டு சுவரேறி குதிக்கையில் ” அவளை எங்கே ..? ” என்ற அமிர்தனின் கோபக்குரல்   வீட்டினுள் கேட்டது .குதித்த வேகத்தில் சாலையின் மறுபுறம் நின்ற ஆட்டோ கண்ணில்பட அதில் ஏறிய அமுதா ஆட்டோக்காரன் கேட்ட அநியாய கூலிக்கு ஒத்துக்கொண்டு அனுராதாவின் முகவரியை சொன்னாள் .

அதே சுவர் வழியே குதித்து இறங்கி அமிர்தன் வந்து பார்த்த போது அந்த சாலை நடமாட்டமின்றி வெறிச்சோடியிருந்த்து .” அப்படி என்னை மீறி எங்கே போய் விடுவாய்னு பார்க்கிறேன்டி ” முகத்தில் வழிந்த மழைநீரை துடைத்தபடி கோபம் கொப்பளிக்க  தன் கையிலிருந்த போனை பார்த்தான்  அமிர்தன் .

What’s your Reaction?
+1
6
+1
11
+1
1
+1
3
+1
1
+1
3
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!