Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 10

10

 

 

” யாருடி என் மருமகன் …? ” வேகமாக தோளை அழுத்திய தாயின் கைகளை தட்டி விட்டாள் ஜீவிதா .

” உங்க நாத்தனார் பையன் மருமகன் உறவில்லாமல் வேறு என்ன …? நான் அந்த உறவைத்தான்  சொன்னேன் .நீங்க என்ன நனைத்தீர்கள் …? “

” ஹி ….ஹி …வந்து ..நா..நானும் , அதையேதான் …” சௌதாமினி   வழிந்து சமாளித்து கொண்டிருந்த போதே சிவபாலனின் கார் அவர்களுருகே நின்றது .




” என்ன ஆச்சு …? ” கேட்டபடி இறங்கிய சிவபாலனுக்கு அலட்சிய முகம் திருப்பலை ஜீவிதாவும் , உனக்கென்னடா நீ பாட்டுக்கு போயேன் , கோப பார்வையை சௌதாமினியும் தந்தனர் .

அவனோ இரண்டு பெண்களையும் எளிதாக அலட்சியம் செய்து ” தள்ளு ஜீவா .நான் பார்க்கிறேன் ” இயல்பாக அருகே வர , மகளின் கையை பிடித்து தன்புறம் இழுத்துக் கொண்டாள் சௌதாமினி .

மாடு மாதிரி இருந்துட்டு பக்கத்தில் உரசுவது மாதிரி வருகிறான் பார் …ஜீவாவாம் …பாப்புவாம் .சௌதாமினிக்கு சிவபாலன் ஜீவிதாவை எப்படி அழைத்தாலும் பிடிக்காது சாதாரணமாக மகளிடம் அவன் பேசுவதே பிடிக்காது .இதில்  ஜீவா …பாப்பு என்றெல்லாம் கொஞ்சினானால் , பிடிக்கவே பிடிக்காது .இதையும் தாண்டி அன்று அவன் அவளை எப்படி அழைத்தான் …இன்னமும் அந்தரங்கமாக …நெருக்கமாக அந்த அழைப்பு .இப்போதும் சௌதாமினிக்கு உடல் எரிந்த்து .

அன்று மகளை படிப்பதற்கு சம்மதம் வாங்க சிவபாலனை மாடிக்கு அனுப்பிவிட்டு , சௌதாமினியால் ரொம்பநேரம் கீழே இருக்க முடியவில்லை .உடனடியாக அங்கே போய் நடப்பதை பார்க்காவிட்டால் , தலை வெடித்தே விடுமென்ற உறுதிக்கு அவள் வந்துவிட்டதால் பூனை போல் படியேறினாள் .ரூமுக்குள் தனிமையில் பேசிக் கொண்டருப்பார்களோ என்ற அவள் சந்தேகத்திற்கு மாறாக இருவரும் மாடி ஹாலில்தான் பேசிக்கொண்டிருந்தனர் .




இந்த விசயத்தில் சௌதாமினியால் சிவபாலனை குறை சொல்ல முடியாது .வயதுப் பையன் அவன் . அழகான பருவப் பெண் ஜீவிதா .மாமன் மகளென்ற உறவோடு , வருங்கால மணமக்களென்ற பேச்சும் உண்டென்றாலும் அவனிடம் ஒரு தவறான பார்வையை ஒருநாளும் சௌதாமினி கண்டதில்லை .பாசமும் , அன்புமாய் பேசுவான் , பார்ப்பான் .மிகச் சில நேரங்களில் கள்ளமில்லாத ஆர்வ பார்வையையும் அவனிடம் கண்டதுண்டு .ஆனால் நொடியில் அதை மாற்றிக் கொண்டு விடுவான் . அப்படியொன்றும் அவன் தன் மகளிடம் அத்துமீறி விட மாட்டான் என்ற நம்பிக்கையுடனேயே சௌதாமினி இருந்தாள் .

இதோ …இப்போதும் அறைக்குள் இருந்தவளை வெளியே ஹாலுக்கு அழைத்து எதிர் சோபாவில் அமர வைத்து பேசிக் கொண்டிருக்கிறானே .சிறு நிம்மதியோடு அவர்களை கவனித்தாள் .படிப்பை பற்றியும் , அதன் முக்கியத்துவம் பற்றியும் பொறுமையான குரலில் மென்மையாக ஜீவிதாவிற்கு அவன் விளக்கிக் கொண்டிருக்க , அவள் ஒரேடியாக தலையாட்டி மறுத்துக் கொண்டிருந்தாள் .அந்த படிப்பு பிடிக்கஙில்லை …போக மாட்டேன் …திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் . கொஞ்ச நேரம் மௌனமானவன் எழுந்து நின்றான் .

” ஜீவி …இங்கே வா ” இரண்டு கைகளையும் நீட்டி அழைத்தான் .கண்களை அகல விழித்து , அவளை பார்த்தபடி எழுந்து வந்தவளின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான் .

” ஜீவி இங்கே பாருடா .உயிரை காப்பாற்றுவது என்பது ஒரு உன்னதமான செயல் .அதனால்தான் உயிரை காப்பாற்றுபவர்களை நாம் கடவுளுக்கு இணையாக பார்க்கிறோம் .ஒருவர் வாயிலிருந்து நன்றாகயிரு என்ற வார்த்தையை மனமாற வாங்கிப் பாரு .அது கொடுக்கும் சுகம் , நிறைவு வேறெதிலும் கிடைக்காது .இது போன்ற வாழ்த்துக்களை , திருப்தியை நமக்கு தரும் ஒரே உன்னத தொழில் இந்த மருத்துவ தொழில் .அதனால்தான் இதனை கற்க நான் மிகவும் ஆசைப்பட்டேன் . ஆனால் எனக்கு அதற்கான கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது . எனக்கு கிடைக்காத ஒன்று உனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டிமென்றுதான் நான் இந்த படிப்பை உனக்கு தீவிரமாக சொன்னேன் .இந்த படிப்பு கிடைக்காமல் உள்ளூற அழுது கொண்டிருப்பவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள் தெரியுமா …? அபூர்வமான இந்த கற்றல் வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கும் போது நீ இப்படி அதை தூக்கி எறுவது நியாயமா …? “

” ஜீவி …இங்கே என்னை பாருடா ” அவள் முகத்தடியில் ஒற்றை விரலை வைத்து முகத்தை தூக்கி அவள் கண்களுக்குள் பார்த்தான் .




” இந்த படிப்பை எனக்காக …உன் பாலாவுக்காக …இந்த சிறு சிறு இடர்களை தாங்கி படிக்க கூடாதா …ம் …? ” கெஞ்சலான அவன் குரல் சௌதாமினிக்கு கொஞ்சல் போல கேட்டு வைத்ததில் அவள் சிவபாலனை பின்னால் போய் முதுகில் ஒரு அறை கொடுத்தாலென்ன என யோசித்தாள்.

” இதற்காக ஏன் கெஞ்சுகிறீர்கள் பாலா …எனக்காக இல்லை …உங்களிக்காக மட்டும் ..நான் நிச்சயம் இந்த படிப்பை படித்து முடிப்பேன் ….” அவன் கண்ணோடு கண் கலந்தபடி  சூளுரைப்பது போல் சொன்ன மகளுக்கு , தலையில் கொட்டி ,கன்னத்தில் கிள்ளி , முதுகில் அடித்து என விதம் விதமான தண்டைனையை அவள் வரிசைப்படுத்திக் கொண்டிருந்த போது …

” குட் கேர்ள் …” அவள் முகத்தை தாங்கிய ஒற்றை விரலால் கன்னத்தில் லேசாக தட்டி மெச்சியவன் ” உன் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை எனக்கு மெயில் பண்ணு ்என்னால் முடிந்த வரை உனக்கு பயிற்றுவிக்க முயல்கிறேன் ” என அவளது பாட பயத்தையும் போக்கினான் .

” ம் …” என தலையாட்டிய ளின் கைகளை அறைப் பக்கம் திருப்பி விடுவித்துக் கொண்டவன் ” இனி நீ போய் ரெஸ்ட் எடு ஜீவி …” என்றான் .

திரும்பும் மனமின்றி நின்றவளின் தோள்களை லேசாக பிடித்து திருப்பி ” ம் …போடா .படிப்பு முக்கியம் .வேறெதையும் மனதில் நினைக்க கூடாது …” என்றான் .சௌதாமினி அவசரமாக கீழிறங்கி வந்துவிட்டாள் .

அன்றெல்லாம் அவள் ஏனோ சிவபாலனிடம் தான் தோற்றுவிட்டதாக நினைத்தாள் .தான் அத்தனை தூரம் கெஞ்சி , கொஞ்சி , மிரட்டி சாதிக்க முடியாத்தை இவன் சும்மா லேசாக கையை பிடித்து பேசி சாதித்து விட்டானே . இவன் மிகவும் அபாயகரமானவனாக இருக்கிறான் . இவனை எக்காலமும் தன் குடும்பத்தோடு சேர்த்துக. கொள்ளவே கூடாது என்ற தீவிர முடிவிற்கு வந்தாள் .

” பேன் பெல்ட் போச்சு , கார்பரேட்டர்ல அடைப்பு இருக்கு , ஆய்ல்  எப்போ மாத்தினது …? காரை எப்போ சர்வீஸ் விட்டீங்க …? கவனிக்கிறதே இல்லையா …? ” படபடவென அ வன் அடுக்கிய குறைகளில் எரிச்சலுற்ற ஜீவிதா …

” தேங்க்ஸ் நாங்க பாத்துக்கிறோம் .நீங்க கிளம்புங்க ” என்றாள் .

தனது போனில் மெக்கானிற்கு சொன்னவன், ” மெக்கானிக் இப்போ வந்திடுவார் …” என்றான் .




” நீ போகலாம் .நாங்க  போய் கொள்வோம் ” சௌதாமினி அவனை விரட்டினாள் .

” ஏன் நீங்க ரெண்டு பேரும் இங்கே விவசாயம் பார்க்க போறீங்களா …?  “

விவசாயம் பார்க்கும் இடமா இது …இருவரும் விழிகளை சுழற்றி முள்மரங்கள் நிறைந்த அந்த கருவேலங்காட்டை பார்த்தனர் .

” துணைக்கு இதுங்களா …? ” என அவன் சுட்டி கேட்ட இடத்தில் சிறு சாக்கடை குட்டை ஒன்றுக்குள் ஊறியபடி கிடந்தன பன்றி கூட்டங்கள் .

   அருவெறுப்பும் கோபமுமாக அவனை முறைத்த ஜீவிதா,” .  நான்  அப்பாவை கூப்பிட்டுப்பேன்  …” என  போனை எடுக்க ,

” மாமாவுக்கு இன்னைக்கு லெதர் பாக்டரியில் மீட்டிங் .போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்திருப்பார் ….,” தகவல் தந்தான் .

” எங்க பேக்டரி விசயம் உனக்கெப்படி தெரியும் …? ” சௌதாமினி கத்தினாள் .

” நான்தான் அத்தை பாரினிலிருந்து ஒரு கஸ்டமரை  பேக்டரிக்கு வர வைத்திருக்கிறேன் …” இயல்பாக சொன்னான் .

” உங்களுக்கு சிமெண்ட் பாக்டரி , எங்களுக்கு லெதர் பாக்டரின்னு பிரிச்சுக்கிட்டோமே .திரும்ப ஏன் எங்க தொழிலில் தலையிடுகிறாய் …? “

” அது என் கடமை அத்தை “

” அது போல் கடமையாற்றும் வேலை எதுவும் உங்களுக்கு நாங்கள் கொடுக்கவில்லை , அதனால் …நீங்கள் …” போகலாம் என கையசைத்தாள் ஜீவிதா .

” ம் …போயிடுவேன் .இந்த முள் காட்டுக்குள்ளே கொஞ்ச நாளாக திருடர்கள் நடமாட்டம் இருக்கிறதாக  கேள்விப்பட்டேன் .உங்கள் இரண்டு பேரையும் கொள்ளையடிச்சா எப்படியும் முப்பது பவுனாவது தேறாது …? “

சௌதாமனி முழிக்க , ஜீவிதா தன்னியல்பாக முணுமுணுத்தாள் .” சிவ …சிவா “

சட்டென சௌதாமனி மகளின் கையை கிள்ளினாள் .” வாயை மூடித் தொலைடி ….”

” என்ன பண்ண போறீங்க …? ” அமர்த்தலாக கேட்டவனின் பார்வை ஜீவிதா மேல் படிந்து , உன் ஜபத்தை கேட்டு விட்டேனே என அறிவித்தது .




இப்போது இந்த முள்காட்டுக்குள் தனித்து நின்றிருப்பதை விட , இவனுடன் காரில் போய் விடுவதே சரியான முடிவு என நன்கு தெரிந்த போதும் , அவர்களால் அதை செய்ய முடியவில்லை விழித்தபடி நின்ற போது மெக்கானிக் இருவர் டி.விஎஸ் பிப்டியில் வந்தனர் .

” இப்போது நீங்கள் போகலாம்தானே ..? ” கேட்ட ஜீவிதாவை அலட்சியப்படுத்தி அந்த மெக்கானிக்குகளிடம் காரின் பிரச்சனையை விவரித்தான் .

” கார்பரேட்டரில் அடைப்பு இருக்கு சார் .அதோடு காரை நிச்சயம் ஓட்ட முடியாது . நாங்கள் எங்கள் இடத்திற்கு கொண்டு போய் , அடைப்பை எடுத்து , ஆய்ல் மாற்றி உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டு விடுகிறோம் …” பேன் பெல்டை மாற்றி காரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர் .

எப்போதாவது ஒன்றிரண்டு டூ வீலர் மட்டுமே போகும் அந்த ஒதுக்கு புற ரோட்டில் விழித்தபடி நின்றிருந்தனர் அம்மாவும், மகளும் .கைகளை கட்டியபடி இருவரையும் பார்த்தபடி சிவபாலன் நிற்க , அவனுடைய அழுத்தத்திற்காகவாது அவனுடன் போகவே கூடாது என்ற முடிவினை எடுத்தாள் சௌதாமினி .

ஆனால் சாக்கடைக்குள் கிடந்த பன்றியின் வால் சுழட்டுதலை அருவெறுப்பாய் பார்த்த  ஜீவிதா , சிவபாலனை நோக்க அவன் கண்களுக்கு கூலர்ஸை மாட்டிக் கொண்டிருந்தான் .ஆமான்டா …சும்மாவே தாடி வளர்த்து பாதி மூஞ்சியை மறைத்து வைத்திருக்கிறாய் .தெரிந்த்து அந்த கண் மட்டும்தான் …அதையும் இப்போ மறைத்துக்கோ …பரதேசி மாதிரி இந்த தாடி எதுக்கு உனக்கு …எரிச்சலாய் நினைத்தபடி ஈரெட்டாய் நின்ற போது , அவள் போன் ஒலித்தது .

க்ளினிக்கில் சேர்ந்திருந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி வந்துவிட்டதாக ஜெயந்தி அழைக்க , உடனே வருவதாக அவள் போனை கட் செய்து நிமிரும் முன் அவள் கையை இறுக பற்றியிருந்தான் சிவபாலன் .” வா போகலாம் …”




” ஏய் …அவள் கையை ஏன்டா பிடிக்கிறாய் …? கையை விடு ” அவன் கையை விலக்க முயற்சித்த சௌதாமினி புறம் திரும்பி ” வாயை மூடிட்டு போய் காரில் ஏறுங்கள் …” உறுமினான் .

அவன் பார்வையில் தெறித்த ரௌத்ரத்தில் உடல் நடுங்கிய சௌதாமினி வாயை மூடிக்கொண்டு காரில் ஏறினாள் .அவளருகிலேயே ஜீவிதாவை பிடித்து தள்ளியவன் வேகமாக காரை எடுத்தான் .பத்தே நிமிடங்களில் அவளை க்ளினிக் வாசலில் இறக்கி விட்டான் .

” சீக்கிரம் போய் பாரு .இந்த உலகத்திற்கு ஒரு புது உயிரை கொண்டு வரப் போகிறாய் .வாழ்த்துக்கள் ” என்றான் .சற்று சிக்கலாக இருந்த இந்த பிரசவ கேஸினால் கொஞ்சம் பயத்தோடு இருந்த ஜீவிதாவிற்குள் இந்த வாழ்த்து குளிர் தென்றலாய் இறங்க , தைரியம் பெற்ற அவள் சிவபாலனை நன்றியோடு பார்த்தாள் .

தன் கண் கண்ணாடியை சுழட்டியவன் அவள் கண்களை நேராக பார்த்து , இமைகளை மூடித் திறந்தான் .யானை பலம் பெற்ற ஜீவிதா  மருத்துவருக்கான  மிடுக்கான நடையுடன் உள்ளே போனாள் .அதிகபட்சம் அரை நிமிடத்தில் நடந்து விட்ட இந்த பார்வை பறிமாற்றம் சாதாரணமாக மற்றவர்கள் கண்ணுக்கு படாது .ஆனால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியிருக்கும் சௌதாமினிக்கு …

தன்னை பார்வையாளராக்கி நடந்து கொண்டிருக்கும் இந்த கூத்தை ஏற்க அவள் தயாரில்லை .ஆத்திரத்துடன் கார் கதவை திறந்து இறங்க கால் வைத்தாள் .

” எங்கே போகிறீர்கள் …? உட்காருங்கள் .வீட்டில் விட்டு விடுகிறேன் …” சொன்னதோடு வெளியே நீட்டியிருந்த தன் காலை பார்த்து சௌதாமினி அலறிக் கொண்டிருக்கும் போதே , காரை விர்ரென எடுத்துக் கொண்டு ரோட்டிற்கு போனான் .

அவசரமாக  காலை உள்ளிழுத்து , கதவை மூடி விட்டு பெருமூச்சு விட்டவள் …” ஏன்டா என்னை கீழே தள்ளி கொல்லலாங்கிறது உன் உத்தேசமா …? ” என்றாள் .




” இல்லை …குறைந்த பட்சம் காலையாவது உடைப்பது ….” தயக்கமற்ற இந்த பதிலில் நடுங்கி காரினுள் நன்கு தள்ளியமர்ந்து கொண்டு , கார் கதவை பரிசோதித்து கொண்டாள் ….பூட்டித்தானே இருக்கிறது ….என அவளை திருப்தியடைய விடாமல் , தாராளமாக குண்டு , குழிகளில் விழுந்து எழுந்த அவனது காரோட்டம் சௌதாமினியின் குடலை வாயருகே கொண்டு வந்து தள்ளியது .

பாவிப்பய …எப்படி பழி வாங்கிகிறான் …? இதற்குத்தான் காரில் ஏற மாட்டேன்னு சொன்னேன் .ஆனால் இப்போது அவனை ஏதாவது கேட்டால் அவனால் காரிலிருந்து உருட்டப்படுவோம் என்பது நிச்சயமானதால் , வாயை கைகளால் மூடிக்கொண்டு காருக்குள் குலுங்கியபடி இருந்தாள் .அவள் வீட்டு வாசலில் சிவபாலன் அவளை உதறிய போது , மிஷினிலிருந்து விழுந்த கரும்பு சக்கையாய் தன்னை உணர்ந்தாள் சௌதாமினி .

——————

கொடி சுற்றிக் கிடந்த அந்த குழந்தையை பக்குவமான முறையில் கையாண்டு பிரசவம் பார்த்து வெளிக் கொணர்ந்தாள் ஜீவிதா .குழந்தைக்கு கொடி சுற்றியிருப்பது என்பது இன்றைய நவீன மருத்துவ உலகில் சாதாரண ஒன்றாக இருந்தாலும் , இன்னமும் கிராம்புறங்களில் அது ஒரு அபசகுனமாகவே கருதப்படுகிறது .

தகப்பனுக்கு ஆகாது , தாய்மாமனுக்கு ஆகாது என்பது போன்ற மூட நம்மிக்கைகள் மிகுந்து காணப்படுகின்றன .இதோ இப்போதும் கொடி சுற்றி கர்ப்பத்தில் இருந்த இந்த குழந்தை குடும்பத்தனர் அனைவரையும் பயமுறித்தியபடிதான் இருந்த்து .பயந்து …பயந்து அவர்கள் ஆளாளுக்கு கேட்ட கேள்விகளே ஜீவிதாவையும் பயமுறுத்தி வைத்திருந்தன .

எதற்கும் இருக்கட டுமென அவள் இந்த பெண ணுக்கு ஆபரேசனுக்கும் ஏற்பாடுகளை செய்து விட டுத்தான் காத்திருந்தாள் .நல்லவேளையாக இயற்கை வலியே வந்துவிட்டது .” நீங்க நல்லா இருப்பீங்க டாக்டரம்மா ” பிரசவ களைப்போடு பிரசவ அறையிலேயே கையெடுத்து கும்பிட ட அந்த பெண்ணின் கைகளை தட்டிக் கொடுத்து சமாதானம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது ஜீவிதாவின் மனது நிறைந்திருந்த்து .




நன்றாயிரு என்ற வார்த்தையை மனமாற வாங்கிப் பார் …சிவபாலனின் வார்த்தைகள் நினைவு வர , உடல் சிலிர்த்தது . இந்த அளவு உயரத்திற்கு  என்னை கொண்டு வந்து நிறுத்தி விட்டு நீ ஏன்டா தள்ளி போய்விட்டாய் …மனதிற்குள் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள் .

” அக்கா சார் வெளியே வெயிட் பண்ணிட்டிருக்காங்க …” ஜெயந்தி அவசரமாக தகவல் சொல்லிவிட்டு கையில் மருந்து டீரேயோடு நடந்தாள் .பாலா…உடனே அவனிடம் தனது இன்றைய  சிகிச்சையை பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் வேகமாக எழுந்து ரிசப்சனுக்கு வந்தவள் அதிர்ந்தாள் .

அங்கே இவளுக்காக காத்திருந்தவன் கைலாஷ் .

What’s your Reaction?
+1
10
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!