Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 8

8

 

 

” வாங்க பாப்பா , உங்களை பார்த்து எத்தனை வருசம் ஆச்சு …? ” பழகிய அந்த கோவில் பூசாரி வரவேற்றார் .

” நல்லாயிருக்கீங்களாய்யா …? “

” எங்களையெல்லாம் நல்லா பார்த்துக்கத்தான் நீங்க டாக்டரம்மாவா இருக்கீங்களே பாப்பா .அப்புறம் எங்கள் நலத்தில் என்ன குறை இருக்க போகிறது …? ” சிறுவயதிலிருந்து பார்த்து வந்த பூசாரி .இப்போது டாக்டராக வந்து நிற்பவளை ஆச்சரியமாய் பார்த்து ஆவலுடன் வரவேற்கிறார் .

” என் மகள் இப்போது இந்த ஊரையே காக்கும் இந்த அம்மனுக்கு ஒப்பானவள் பூசாரி ஐயா …” சௌதாமினியின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சில் ஜீவிதாவிற்கு எரிச்சல் வந்த்து .
இந்த அம்மா எப்போது இயல்பாக இருப்பார்கள் …?




கொஞ்ச நாட்களாகவே …சிவபாலன் இவர்களது குடும்ப தொழில்களுக்குள் எளிதாக புகுந்து கொள்ள ஆரம்பித்த பிறகு சௌதாமினி ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தாள் .வாழ்வே வெறுத்தது போல் நடமாடிக் கொண்டிருந்தவளை பார்க்க பரிதாப்ப்பட்டுத்தான்  , அவள் அழைத்ததும் கோவிலுக்கு வர ஒப்புக்கொண்டு வந்திருந்தாள் ஜீவிதா .வந்த்தும் ஆரம்பித்துவிட்டாள் .மனம் கசந்தாள் .

” வாயை மூடிட்டு வர மாட்டீங்களாம்மா …? “

சௌதாமினி வாயை மூடிக்கொண்டாலும் , அவள் முகத்தில் மின்னிய பெருமை மட்டும் குறையவே இல்லை .இந்த அல்ப பெருமைக்காக என் வாழ்வை வெறுமையாக்கி விட்டாயே …எனத் தாயை கேட்க நினைத்து வாயை மூடிக் கொண்டாள் . அவள் கேட்க நினைத்ததை செயலில் சிவபாலன் செய்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள் .

தன் மகளின் வாழ்வை வீணாக்கி விட்டதாக சிவபாலன் மேல் சபாபதி கொண்டிருந்த வெறுப்பை , அவரது தொழிலை மையமாக  வைத்து சுலபமாக மாற்றி விட்டான் அவன் .நம் சொத்து …நம் சொந்தம் போன்ற சொற்களை தூவி எளிதாக அவர்கள் தொழிலை ஆக்ரமித்துக் கொண்டான் .அவன  சொன்னது போலவே சபாபதியை சமாளிப்பது அவனுக்கு மிக எளிதாகவே இருந்த்து .

பிறகு சௌதாமினி இருந்தாள் .அவனது எல்லா முயற்சிகளுக்கும் மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தாள் . ஆனால் சிவபாலன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை .அகம்பாவ பார்வையும் அலட்சிய கையசைவுமாக அவளை விலக்கிக் கொண்டிருந்தான் .இவையெல்லாம் சௌதாமினி முன்பு சிவபாலனிக்கும் , அவன் அன்னைக்கும் அளித்தவைகள் ்இப்போது அம்மா  திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறாளென உணர்ந்தாள் ஜீவிதா .




தாய்க்கு  இப்படி ஒரு அவமானத்தை அவள்  விரும்பவில்லைதான் .ஆனால் அங்கே வேறு வழி இருக்கவில்லை . முழுமனதுடன் சபாபதியும் ,அரை மனதுடன் ஜீவிதாவும் சிவபாலன் பக்கம் நிறக , சௌதாமினி எளிதாக தனிமைப்பட்டு பேனாள் .அவர்களுடன் சேரவும் அவள் விரும்பவில்லையென்பதும் ஒரு உணமை .

” இது போல் உன்னோடு பெருமையாக ஊர் முழுவதும் வலம் வர வேண்டிமென்பது என் நெடுநாள் ஆசை பாப்பு ….” பிரகாரத்தின் ஓரம் அமர்ந்தபடி சொன்னவளை திரும்பி பார்க்காமல் தேங்காயை தரையில் அடித்து சில்லெடுக்க ஆரம்பித்தாள் ஜீவிதா .

” பெரிய பண்ணையார் வீட்டு அம்மாக்கள் .தரையில் உட்கார்ந்து தேங்காய் கீறிக் கொண்டு இருக்கிறார்களே …ஏன் தெரியுமா அண்ணி …? ” கிண்டல் குரலில் நிமிர்ந்தனர் .

சசிகலாவும் , நீலவேணியும் நின்றிருந்தனர் .சசிகலாதான் இப்படி நக்கலாக கேட்டுக் கொண்டிருந்தாள் .

” வேண்டாம் சசி வம்பிழுக்காதே …” சௌதாமினி எச்சரித்தாள் .

” பாப்பு எப்படிடா இருக்கிறாய் …? ” நீலவேணியின் குரலில் பாசம் இழையோடியது .

இவர்களும் சேர்ந்துதான் சிவபாலனுக்கு சுகன்யாவை மணம் முடித்து வைத்தார்கள் .சேதுபதி அண்ணனிடம் சண்டை போட டு தன் பங்கு சொத்துக்களை பிரித்து போனதும் , பாட்டி தன்பங்கு சொத்துக்களையும் சித்தப்பாவிற்கு கொடுத்ததும் பெரிய அண்ணனை விட சின்ன அண்ணன் பங்கு சொத்துக்கள் அதிகமாகி விட்டதால் அங்கே போய் உட்கார்ந்து கொண்டவர்கள் இந்த அத்தை .சின்னண்ணன் சொத்துக்கள் தன் மகனுக்கு வர வேண்டுமென சுகன்யாவை மகனுக்கு திருமணம் முடித்து வைத்தவர்கள் …

நீலவேணியின் துரோகம் முழுவதும் மனதில் ஓட ஜீவிதா அவளது நல விசாரிப்பு காதில் விழாத்து போல் தலையை திருப்பிக் கொண டாள் .ஆனால் அவள் விடவில்லை .ஜீவிதாவின் அருகல் வந்து உட்கார்ந்து கொண்டாள் .

” ஏன்டா பாப்பு இவ்வளவு நாட்களாக இந்த பக்கமே வராமல் இருந்து வுட்டாய் …? “

” அதுதானே அத்தை உங்களுக்கு வசதியாக போய்விட்டது ….”




” இல்லைடா …உன்னை பார்க்காமல் அம்மா , நான் , சிவா எல்லோரும் ரொம்பவே தவித்து போனோம் தெரியுமா …? அம்மா இறந்தபோது கூட வந்த கையோடு கிளம்பிபோய்விட்டாயே …? “

ஒரு அதிகாலை திடுமென சிவபாலனும் , சுகன்யாவும் மாலையும் , கழுத்துமாக வந்து நிறக , அவர்களுக்கு துணையாக சேதுபதி , சௌந்தரம் , சசிகலா .

சபாபதி என்ன இது என அலற …சௌதாமினி விடுதலை உணர்வுடன் பார்த்படி இருக்க , ஜீவிதா ஸ்தம்பித்து நின்றாள் .

” சிவாவிற்கும் , சுகன்யாவுக்கும் கல்யாணம் முடித்து வைத்துவிட்டேன் சபா …” சொன ன தாயை எதிரியை போல் பார்த்தார் சபாபதி .

” ஏம்மா இப்படி செய்தீர்கள் …? “

” அவர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருப்பார்கள் போல …இப்போதுதான் சொன்னார்கள் ….”

” பொய் …அம்மா ..்சுத்த பொய் .அது போல் நடக்க வாய்ப்பே இல்லை ….” சபாபதி கத்தினார் .

” டேய் சிவா நீயே சொல் …இது பொய்தானடா ….” சிவபாலனின் பார்வை அதிர்ந்து நின்றிருந்த ஜீவிதா மேல் இருந்த்து .

” நீலா நீ சொல் ….என்ன நடந்த்து …? எல்லோருமாக சும்மா விளையாடுகறீர்கள.தானே ….? ” சபாபதி அங்குமிங்குமாக அலை பாய்ந்தார் .

” இல்லைண்ணா …உண்மைதான் .நேற்று அண ணி பேசிய பேச்சிற்கு  பிறகு நான் இந்த முடிவுக்கு வர வேண்டியதாகி விட்டது .” அமைதியான நீலவேணிக்குள் கூட இப்படி ஒரு குரோதம் இருக்கமுடியுமா …?

சௌதாமினி எப்போதும் நீலவேணியையும் , சிவபாலனையும் ஏதாவது குத்தலாக பேசிக்கொண்டே இருப்பாள் .மாமியாரும் , கணவரும் இருக்கும் போது அடங்கியிருக்கும் அவளது வாய் , அவர்களில்லாத போது அரவமாய் நாத்தனார் மீது பாயும் . வாழ்வை தொலைத்து விட்டு நிறகும் தங்கை மீது சபாபதி அதிக பாசம் காட்ட …காட்ட சௌதாமினியின் குரோதமும் அதிகமாகிக் கொண்டே போனது .




சபாபதி சிவபாலனையும் அந்த வீட்டு பிள்ளை போல் நடத்த ஆரம்பிக்க , அதனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்து நின்ற நாத்தனாரை அவள் வீட்டை விட்டு விரட்ட மாட்டாள்தான் . ஆனால் நீலவேணி அந்த வீட்டில் ஒரு மூன்றாம்மனுசியாக …சமையல்காரியாக , வேலைக்காரியாக முடங்கிவிட வேண்டுமென நினைத்தாள் .கணவனை இழந்து , சரியான பின்புலமில்லாமல் பிறந்து வீட்டிறகு வரும் பெரும்பான்மை பெண்களின் நிலை இப்படித்தான் அமைந்துவிடுகிறது .

நீலவேணியும் , சிவபாலனும் வீட்டிற்கு வெளியில் பெரியவீட்டு ஆட்கள்  , பதி  குரூப்ஸின் சொந்தங்கள் என சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் வீட்டிலோ …அலுவலகத்திலே அந்த அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள் .எங்களை அண்டி பிழைக்க வந்தவர்கள் நீங்கள் ..என தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி உணர்த்தியபடியே இருந்தாள் .

மாமியாரும் , கணவரும் சேர்ந்து சிவபாலனையும் , ஜீவிதாவையும் இணைத்து பேசும் போது அவளுக்கு உள்ளுக்குள் கொதிக்கும் .என் மகளுக்கு ஈடானவனா இவன் …? அவன் மூஞ்சும் ….மொகரையும் .சௌதாமினியை பொறுத்த வரை அவள் மகள் வான்தேவதை .உலகப் பேரழகி .அவளுக்காக ஏதோ ஓர் தேசத்து ராஜகுமாரன்தான் இறங்கி வந்து இறைஞ்சி மணம் முடிக்க கேட்க போகிறான் என நம்பிக் கொண்டிருந்தாள் .

இருந்த சில சொத்துக்களையும் தொலைத்து விட்டு , தகப்பன்ற்று தங்கள் வீட்டிற்கே ஆதரவென வந்து நின்ற ஒருவனை அவளால் மகளின் மணமகனாக கற்பனை பண்ண முடியவில்லை .இதனை அவள் மாமியாரிடமோ , கணவனிடமோ சொல்ல முடியாது .பெட்டியை தூக்கி தலையில் வைத்து நட்டி  உன் பிறந்துவீட்டிற்கு என்றுவிடுவார்கள் .  அதனால் அ வள்இதனை அடிக்கடி நீலவேணிக்கும் ,  சிவபாலனுக்கும் உணர்த்தியபடியே இருந்தாள் .

இது எல்லாமே…




என் மகளின் வீடு , மகளின் தொழில்கள் , அவளின் சொத்துக்கள் .என் மகள் மகாராணி .நீ அவளது சேவகன் .உன் கடமை என் மகளுக்கு பணி செய்வது என இருவருக்குமே  சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் .ஆனால் அவளது சொல் எந்த அளவு நீலவேணி , சிவபாலனுக்குள் விழுந்த்தென அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை .அவளொரு வேலை சொன்னால் முகம் சிறுக்கும் நீலவேணி ” அத்தை இந்த சுடியை அயர்ன் பண்ணி வையுங்க ” என வீசும் ஜீவிதாவிற்கு ” சரிடா பாப்பு ” என முகம் கனிந்துவிட்டு உடனடியாக அந்த சுடிதாரை தோளில் போட்டுக் கொண்டு அயர்ன் பாக்ஸை எடுப்பாள் .

” ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சு .போய் காரை எடுங்க பாலா …” என்றவளின் ஏவலுக்கு ” உத்தரவு மகாராணி ” என நிஜமாகவே தலைகுனிந்து நிமிர்வான் சிவபாலன் .அப்போது அவன் முகம் காட்டும் பாவனையை அவளால் புரிந்து கொள்ள முடியாது.  வீட்டினர்  அனைவரையும் சுலபமாக கணிப்பவளுக்கு இந்த சிவபாலன் மட்டும் எப்போதும் அவளது  கணிப்பிற்கு அப்பாற்பட்டவனாகவே இருப்பான் .

அன்னையும் ,மகனுமாக சேர்ந்து தன் மகளுக்கு ஏதோ மருந்து வைத்து ஏவல் செய்து கொண்டிருக்கின்றனர் எனத்தான் அவள் நம்பினாள் .இல்லையென்றால் அவள் அந்த அளவு அத்தையை பற்றியும் …அந்த அத்தை பெற்ற தவப்புதல்வனைப் பற்றியும் மகளின் காதில் ஓதி வருவதெல்லாம் எப்படி வீணாய் போகும் …?

” அந்தப் பயல் கூட ரொம்ப ஒட்டாதடி …” என்றதற்கு தலையாட்டி விட்டு , ” லீவ் விட்டாச்சு பாலா .போரடிக்குது .எங்கேயாவது கூட்டிப் போங்களேன் ….” என அவனிடம் சிணுங்கிக் கொண்டிருப்பாளா …சௌதாமினி பல்லை நறநறப்பாள் .

” ஆற்றுக்கு போகலாமா ….? ” ஜீவிதா கேட்கும் ஆறு அவர்கள் ஊரை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி காவிரி ஆற்றின் கிளையாக சிறிதாக ஓடிக்கொண்டிருக்கும் நதி .அந்த நதிக்கரையில்தான் சிவபாலன் ஜீவிதாவிற்கு பாடம் சொல்லிக் கொடுப்பான் .அறியாத கணக்குகளின் பல புரியாத பார்முலாக்களை அந்த இயற்கை சூழலில்தான் அவள் மண்டைக்குள் திணிப்பான் .

” ஆற்றுக்குத்தான் அடிக்கடி போகிறோமே …இந்த தடவை  பு ளியஞ்சோலை போகலாமா …? “

” ஐயோ …அது ரொம்ப தூரமே …மலையேறனுமே …” மீண்டும் சிணுங்கியவளை , ” பரவீயில்லை வா .நான்தான் இருக்கிறேனே .திரும்ப இறங்கும் போது உன்னை இரண்டு கிலோவாவது வெயிட் குறைத்து கூட்டி வருகிறேன் .கிளம்பு …” அவளது புசுபுசு உடலை கிண்டல் செய்தான் .

” என்னது …குண்டா நான் …? ” ஜீவிதா எழுந்து அவனை அடிக்க ஆரம்பிக்க …

” சீச்சி …நீ குண்டா …இல்லடா பாப்பு …ஐம்பத்தியேழு கிலோல்லாம் ஒரு வெயிட்டா …? “அவளது அடிக்கு தன் முதுகை கொடுத்தபடி கிண்டலை தொடர்ந்தான் .

ஐய்யோ …நேற்று வெயிட் பார்த்தபோது இவனுக்கு தெரியக்கூடாதுன்னு மறைத்து நின்று கொண்டுதானே பார்த்தேன் .பிறகு எப்படி புள்ளியோடு என் வெயிட்டை சொல்கிறான் …? யோசித்தவளுக்கு அந்த ரகசியம் புரிபடாமல் தனது அடியின் வேகத்தை அதிகப்படுத்தினாள் .சௌதாமினி இருவரையும் வெறித்து போய் பார்த்தாள் .அவள் எவ்வளவுதான் கட்டுப்படுத்தி வைத்தாலும் அடிக்கடி வீட்டிற்குள் நிகழ்ந்து விடும் இது போன்ற நிகழ்வுகளை அவளால் தடுக்க முடிவதே இல்லை .

இதோ …இப்போதும் அவனது பிக்னிக் ஏற்பாட்டையும் , அதற்கு துணை போகும் குடும்பத்தாட்களையும் …கையாலாகாமல் பார்த்துக் கொண்டுதான் நிற்க முடிந்த்து. நீலவேணி புளியோதரையும் , தயிர்சாதமும் பார்சல் கட்ட , விசயத்தை கேள்விப்பட்ட சுகன்யா தானும் வருவதாக சொல்ல ….சின்ன பிள்ளைகள் போய்வரட்டும் ,நமக்கு வேலை இருக்கிறதே என அண்ணனும் , தம்பியும் இவர்களை மட்டும் அனுப்பி வைத்ததை பார்த்துக் கொண டுதான் இருக்க முடிந்த்து .




மூவருமாக ஜீப்பில் கிளம்பி போவதை ஙெறுப்புடன் பார்த்தபடி இருந்தவளின் அருகே வந்த சசிகலா ” எனக்கு பிரச்சினை இல்லை அக்கா .சுகன்யா என் தம்பிக்குத்தாங்கிறது அவள் பிறந்த்துமே முடிவு செய்த விசயம் .நல்ல வேளையாக அதற்கு நம் வீட்டு ஆட்கள் அன்றே சம்மதம் சொல்லி விட்டார்கள் .நீங்கள் ….ம் …ஜீவிதா ….ம் ….” வெறுப்பேற்றி விட்டு போனாள் .

சுகன்யா பிறந்த்துமே மிக வசதியான தனது பிறந்துவீட்டு சம்பந்த்த்தை சசிகலா சொன்னாலும் , அதனை அப்போது மறுத்தவர்கள் , பிறகு சசிகலாவின் தம்பியிடமோ …அவளது பிறந்தவீட்டினரிடமே எந்தக் குறையும் இல்லாது போக  சுகன்யா பெரிய பெண்ணாகவும் அதற்கு ஒத்துக் கொண்டனர் .வாய் பேச்சாக பேசியும் வைத்துவிட்டனர் .அதனால்தான் சௌந்தரமும் , சபாபதியும் சிவபாலனிற்கு ஜீவிதாவை மணம் முடிக்க எண்ணினர் .அனைவருக்குமே பெண் வாரிசுகளாக போய் விட்ட தங்கள் குடும்பத்து திரண்ட சொத்திக்கள் வெளியாட்கள் கைக்கு போய்விடக் கூடாது என்ற ஒரே எண்ணம்தான் .

” உன் தம்பி என்ன செய்கிறார் சசி…? ” எள்ளலாக ஓரகத்தியை விசாரித்தாள் சௌதாமினி .அவள்தான் ஏதோ பெரிய காரியம் சாதித்து விட்டதை போல் நின்று கொண்டிருக்கிறாளே …அவளெ குத்த வேண்டாமா…

” அவனுக்கென்ன …ராஜாவுக்கேத்த ராணியாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு ஜம்னு இருக்கான் .நம்ம பிள்ளைங்களோட மனசை நாமளும் புரிஞ்சி நடந்துக்கனுமில்லையா ….? ” சுகன்யாவின் விருப்பப்படிதான் அவளை சிவபாலனுக்கு மணம் முடித்து வைத்தாளாம் …சௌதாமினி அவள் மகளின் மனதை புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டு விட்டாளாம் .

சரிதான் போடி …பெரிய மாப்பிள்ளையை பார்த்து முடித்துவிட்டாய் …..கத்த துடித்த வாயை ஜீவிதாவை நினைத்து அடக்கிக் கொண்டாள் .

” நாலு வருசமாக எங்களை மறந்து இந்த ஊர் பக்கமே திரும்பாமல் இருப்பேன்னு நாங்க நினைச்சு கூட பார்க்கலைடா பாப்பு ….” ஜீவிதாவின் கை பற்றி கரகர குரலில் பேசக் கொண்டிருந்த நீலவேணியை பார்த்தாள் .




” என்ன அண்ணி பாசம் ரொம்பத்தான் பொங்குது …? சௌதாமினியின் அடுத்த தாக்குதல் நீலவேணிக்கானதாக இருந்த்து .

” என் பாசம் எப்போதும் ஒன்று போல்தான் இருக்கிறது அண்ணி .சூழ்நிலைக்கேற்றபடி அன்பை மாற்றிக் கொள்பவள் நானில்லை …” நீலவேணி பட்டென திருப்பக் கொடுக்க அதிர்ந்தாள் .

சாதாரணமாக நீலவேணி இப்படி பேசுபவளல்ல .சௌதாமினியின் ஏவல்களை , மறைமுக அதிகாரங்களை மௌனமாகவே ஏற்றுக் கொண்டு போய்விடுவாள் .ஆனால் அன்று …சௌதாமினியுடன் சண்டை போட்டு விட்டு நீலவேணியும் , சிவபாலனும் வீட்டை விட்டு வெளியேறிய தினம் …இப்போது போல் நினைவுக்கு வந்த்து .

What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
Anonymous
Anonymous
1 year ago

Visitor Rating: 1 Stars

0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!