Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 12

      12

பல் நெறிக்கும் கோபங்களுக்கு முன்னால் 
சட்டென  சன்னல் சார்த்தி விடேன் .

” தைத்ததை இப்படி குப்பையா தள்ளாதீங்க மீனாக்கா .பேன் காத்துல பறந்து போய் ஆபீஸ் முழுதும் பரவுது பாருங்க …” அதட்டல் கலந்து சொன்னபடி   வெட்டிய  துணி. துணுக்களை அள்ளி கூடையில் போட்டாள் சரளா .

இடைவெளியின்றி மிஷினில் கால்களை ஓட்டிக் கொண்டிருந்த மீனா பல்லை கடித்தாள் .வெட்டிப் போட்ட துணிகளை அள்ளி சரளாவின் முகத்தில் எறியும் ஆவல் கொண்டாள் .ஆனால் …முடியாது .திரும்பி வேதிகாவை பார்த்தாள் .டேபிளில் விரித்து வைத்திருந்த அந்த பிங்க் நிற துணியில் கவனமாக மார்க் இட்டுக் கொண்டிருந்தாள் .வேதிகா மார்க்கிட்ட துணிகளை மற்றொரு டேபளில் கட் செய்து சுருட்டி கட்டி வைத்தாள் கௌரி .அந்த சிறு துணி பண்டல்களை ஒவ்வொரு மிஷினிற்கும் கொண்டு வந்து கொடுத்தாள் சரளா .




ஐந்து மிஷின்களில் ஒரே மாதிரி அந்த பிங்க் நிற கவுன்தான் தைக்கப்பட்டுக் கொண்டிருந்த்து .அது ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழா கலைநிகழ்ச்சிக்கான ஆர்டர் .இரண்டு நாட்களாக அந்த வேலை அவசரமாக நடந்து கொண்டிருந்த்து .இந்த ஆர்டர் தவிர இரண்டு பெரிய இடத்து திருமணத்திறகான ஆர்டர் வேறு அவர்களுக்கு வந்திருந்த்து .எனவே அங்கிருந்த இருபது பெண்களும் பன்னிரெண்டு மணி நேரமாக உழைத்து கொண்டிருந்தனர் .

அவசரமான தையலில் தள்ளி விடும் துணிகளை …அள்ளி போட இந்த குட்டி  பெண்ணிற்கு எவ்வளவு அதிகாரம் …?மீனாவிற்கு பற்றிக் கொண்டு வந்த்து. அவளை ஒன்றும் சொல்லமுடியாது .அவள் வேதிகாவிற்கு செல்லபெண் .அந்த தைரியம் .எரிச்சலோடு கொஞ்ச நேரம் மிஷினை நிறுத்தி கை விரல்களுக்கு சொடுக்கெடுத்தாள் .சரளாவை காணவில்லை .அவள் இருந்தால் ஒரு நிமிடம் கூட இப்படி சும்மா இருக்கவிட மாட்டாள் .சீக்கிரம் வேலையை பாருங்க்க்கான்னு முதலாளியம்மா மாதிரி விரட்டிக் கொண்டே இருப்பாள .

கால்களை நீட்டி சொடக்கெடுத்த மீனாவின் காலில் துண்டு துணிகள் மிதிபட , குனிந்து பார்த்தாள் .நிறைய குப்பைகள் சேர்ந்திருந்தன .வேதிகாவிற்கு இப்படி குப்பை சேர்வது பிடிக்காது .ஆஹா …இதை காட்டி அந்த குட்டியை மாட்டி விட்டால் ….

” மேடம் …நிறைய குப்பை சேர்ந்தடுச்சு போல. , காலெல்லாம் ஒட்டுது …” சலிப்பு போல் காலை தூக்கி காண்பித்தாள் .மார்க் பண்ணிக் கொண்டிருந்த துணியிலிருந்து தலை நிமிர்த்தாமல் …” சரளா இப்போ வந்திடுவா மீனாக்கா .என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போனாள் .நிறைய குப்பை இருந்தால் சிரம்ம் பார்க்காமல் நீங்களே கொஞ்சம் பெருக்கி அள்ளிவிடுங்களேன் ” என்றாள் .

எனக்கு தேவையா இது …மீனா வேகமாக மிஷினை மிதிக்க ஆரம்பித்தாள் .தலையை நிமிர்த்தி கூட பார்க்கவில்லை .

” அவள் நினைத்தது வேறு …நீ செய்த்து வேறு …அங்கே பாரேன் மீனா கண்ணும் , கருத்துமாக தைப்பதை …” வேதிகா அருகிலிருந்த கௌரி துணியை கட் செய்தபடி சிரிப்பாய் முணுமுணுத்தாள் .

அவளுக்கு வெறுமனே ” உம் ” கொட்டிய வேதிகாவின் கவனம் முழுமையாக இங்கில்லை .மனதில் பதிந்து விட்ட அளவுகளால் மார்க்கரால் சரியாக அளவுகளை குறித்துக் கொண்டிருந்தாலும் ,அடிமனம் முழுவதும் மங்கையர்கரசியையே சுற்றி வந்த்து .

எவ்வளவு இயல்பாக பூரிப்பாய் பேசிக் கொண்டிருந்தார் .    அது ஏன் திலகவதியை பார்த்ததும் அப்படி பழையபடி உம்மணாம் மூஞ்சியாக மாறி போனார் …? அமரேசன் திலகவதியை பார்த்ததும் ” சும்மா பேசிட்டிருக்கோம் அத்தை .நீங்களும் வாங்களேன் …” உரிமையாய் அழைக்க , உள்ளே வந்த திலகவதியின் கண்கள் மெத்தையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நகைகளின் மீது விழுந்த்து .

” இது யாருடையது …? “

” அம்மாவோட நகைகள் அத்தை .இப்போ …” அமரேசன் பேசிக் கொண்டிருக்கையிலேயே மங்கையர்கரசியின் கலக்கமான    கண் ஜாடையில் அந்த நகைகளை அள்ளி பைக்குள் போட்டு தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டாள் வேதிகா .




அவளது அந்த செய்கையில் அதிருப்தியுற்ற அமரேசன் கண்டிப்பு பார்வையுடன் ” அம்மா வேதாவிற்கு கொடுத்துட்டாங்க ” என முடித்தான் .

” ஓ…உன் அம்மாவின் நகைகளை நான் இதுவரை பார்த்ததில்லையே அமரன் …”

” நானும்தான் பார்த்ததில்லை அத்தை .அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்  .பெணகள் அப்படித்தான் தங்கள் நகைகளை ஒளித்து வைத்து கொள்வார்களாம் .என் பொண்டாட்டி சொல்கிறாள் …” என் பொண்டாட்டி என்பதை ரசித்து அவன் சொன்னவித்த்தில் வேதிகாவிற்கு உடல் சிலிர்த்தது .

” ஆமாம் …அப்படித்தான் வைத்து கொள்வோம் …” என்றபடி மாமியாரின் நகைகளுடன் , கணவன்  தனக்கென   வாங்கி வந்த நகைகளையும் சேர்த்து எடுத்து தன் பீரோவிற்குள் வைத்து பூட்டினாள் .

” அட நான் கேட்க மாட்டேன்மா .பயப்படாதே …” கிண்டல் போல் அவளை குத்தியபடி ,” சாப்பிட வாங்க …” மங்கையர்கரசியை ஒரு பார்வை பார்த்தபடி கீழே இறங்கி போனாள் திலகவதி .பின்னாலேயே மங்கையர்கரசியும் இறங்கி சென்றதும் ” என்ன வேதா இது …” என ஒரு தீவிர அறிவுரைக்கு தயாரான அமரேசனை தடுத்த வேதிகா ” எனக்கு பசிக்கிறது …” என தானும் இறங்கிவிட்டாள் .

பிறகும் இது விசயம் பேச அமரேசன் முயலும் போதெல்லாம் அவளுக்கு அவசர வேலை இருந்து கொண்டே இருந்த்து .இரண்டொரு தடவைகளில்    அவள் தவிர்ப்பை தெரிந்து கொண்ட அமரேசன் அவளை முறைத்தபடி இருந்தான் .

போடா …பெரிய கோபம் …இது என்ன செய்யும் என்னை …? அலட்சியமாக அவனை பார்த்தபடி இருந்தாள் .” ஏய் …உனக்கு இருக்குடி .என்கிட்ட தனியாக மாட்டுவாயில்லையா …?அப்போ இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு மொத்தமா குடுக்கேன் …” அன்று காலையில்தான் அவளிடம் முணுமுணுத்திருந்தான் .

அவன் உச்சரித்தது ” மொ ” வா …” மு ” வா என்பதில் அவளுக்கு சந்தேகம் வந்துவிட ,உலர்ந்த தொண்டையை எச்சில் அனுப்பி நனைத்தபடி அந்த ” மு ” எப்படி இருக்க கூடும் …? அன்று    எப்படி இருந்த்து என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் .

” ஏய் …எந்த உலகத்திலடி இருக்கிறாய் …? ” பட்டென தனது தோளில் விழுந்த அறையில் திடுக்கிட்டு பூலோகம் வந்தாள் வேதிகா .” எ…என்னடி …என்ன விசயம் ..?”

” இந்திரலோகத்திலிருந்து இறங்கி வாம்மா இந்திராணி …மெல்லிய குரலில் கிண்டல் செய்த கௌரி  ,” சரளா எதுக்கோ மூக்குறிஞ்சிட்டு நிக்கிறா .என்னன்னு கேளு ” என்றாள் .

அழுதுவிடுபவள் போல் நின்றிருந்த சரளாவை பார்த்ததும் சின்னதாக மறித்து வைத்திருந்த ஆபிஸ் ரூமிற்குள் கூட்டி போனாள் வேதிகா .உள்ளே நுழைந்த்துமே அவள் கால்களில் விழுந்தாள் சரளா .” அக்கா …என் அண்ணனை நீங்கதான் காப்பாற்றனும் …” அழுதாள் .

” உன் அண்ணனா …நானா …என்ன சொல்கிறாய் …முதலில் எழுந்திரு …” அதட்டினாள் .

அழுகையினூடே சரளா சொன்ன விபரங்கள் அவள் அண்ணன் பாண்டியன் வேலை செய்த இடத்தில் ஏதோ தப்பு செய்துவிட்டான் .அதனால் அவனது முதலாளி அவன் மேல் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் .இப்போது அவன் ஜெயிலில் இருக்கிறான் .

” அண்ணனின் சம்பளத்திலும் , என் சம்பளத்திலும் தான் குடும்பமே ஓடுகிறது அக்கா .அவர் ஜெயிலுக்கு போய்விட்டால் என் குடும்பமே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் …” இது வேதிகா அறிந்த விசயம்தான் .தகப்பன் இல்லாத ஐந்து பிள்ளைகளையுடைய பெரிய குடும்பம் சரளாவுடையது .அதில் பரிதாபமுற்றுதான் சரளாவை தன்னிடம் வேலைக்கு அமர்த்தியிருந்தாள் வேதிகா .

” இதில் நான் என்னம்மா செய்யமுடியும் …? “

” முடியும்கா .என் அண்ணனின் முதலாளியும்  உங்கள் கணவரும் ப்ரெண்டாம் .அதனால் நீங்கள் அவரிடம் சொல்லி , அண்ணனின் முதலாளியிடம் பேச சொல்லுங்க்க்கா …” சரளாவின் அழுகை வேதிகாவை இளக்கியது .பாவம் எளிய குடும்பத்தனர் .வறுமை சில நேரம் நேர்மை தவற வைத்திருக்கலாம் .வேதிகா சரளாவிற்கு உதவ முடிவெடுத்தாள் .




இருவருமாக அமரேசனை பார்க்க போன போது , அவன் கார் ஒன்றின் அடியில் படுத்து ஏதோ ரிப்பேர் சரி பார்த்து கொண்டிருந்தான் .வாயில் ஸ்பானருடன் தலையை நீட்டி பார்த்தவனின் கண்களில் வேதிகாவை பார்த்ததும் மின்னல் ஒன்று குடியமர்ந்த்து .

” வா …வேதா .என்ன விசயம் …? ” ஆவலுடன் வரவேற்றான் .ஆனால் விசயத்தை சொன்னதும் அவன் முகம் இறுகியது .” என் நண்பன் கதிரேசனை கூட்டிப் போய் அந்த பாண்டியன் மேல் போலிஸில் கம்ளைன்ட் கொடுக்க சொன்னதே நான்தான் தெரியுமா ….? ” கைகளில் படிந்திருந்த க்ரீசை அழுக்கு துணியில் துடைத்தபடி அலட்சியமாக சொன்னான் .

” ஓ…ஆனால் இப்போது …அவர் …பாவம் .ஏதோ தெரியாமல் செய்துவிட்டார் .கம்ப்ளைன்டை வாபஸ் வாங்க சொல்லுங்களேன் ….”

” நிச்சயம் முடியாது .துரோகிகளை நான் மன்னிக்கவே மாட்டேன் …” உறுதியான அவன் குரலில் மேற்கொண்டு செய்வதறியாது அயர்ந்து நின்றாள் வேதிகா .

” தயவு பண்ணுங்க சார் ….” கை கூப்பிய சரளாவை பார்க்காமல் முகம் திருப்பி கொண்டான் .அதில் எரிச்சலுற்று சரளாவின் கைகளை பற்றிக் கொண்டு வெளியேறி விட்டாள் வேதிகா .

” என் ப்ரெண்ட் கதிரேசன் தெரியுமில்ல மாமா .கார் கேர் சென்டர் வைத்திருக்கிறானே ….”இரவு.  அப்பாவிடம் அமரேசன் பேச்சை ஆரம்பித்த போது அதில் தனக்கான செய்தியிருக்க போவதை அறிந்து கொண்டாள் வேதிகா .ஆனாலும் அதில் கவனமில்லாதவள் போல் பார்வையை டிவிக்கு திருப்பிக் கொண்டாள் .

” சொல்லுங்க மாப்பிள்ளை …” மகளின் கவனமின்மை பாவனைக்கும் சேர்த்து மருமகனை கவனித்தார் சாமிநாதன் .

” அவனிடம் பாண்டியன்னு ஒருத்தன் வேலை பார்த்துட்டிருந்தான் .மூன்று வருடமாக நம்பிக்கையாய் இருந்த்தால் இப்போது ஐந்து மாதமாக அவனிடம் கொஞ்சம் பொறுப்புகளை கதிரேசன் கொடுத்திருக்கிறான் .இவன் அதை இவனுக்கு சாதகமாக பயனபடுத்தி சர்வீஸுக்கு வரும் கஸ்டமர் சிலரை ப்ரண்ட் பிடித்து வைத்துக் கொண்டு ,அவர்களை வேறொரு கேர் சென்டருக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்திருக்கிறான் .இதற்கு அந்த கம்பெனியிடமிருந்து கமிசன் வாங்கி கொண்டிருந்திருக்கிறான் . இவனை என்ன செய்வது மாமா …? “

” அடிச்சு இழுத்துட்டு போய் போலீஸ் ஸ்டேசனில் தள்ளுங்க மாப்பிள்ளை .இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியே விட்டு வைக்கவே கூடாது …”

” அப்படியா சொல்றீங்க …? ” அவன் பார்வை வேதிகாவிடம் இருந்த்து .

” தப்பு செய்தவனை மன்னித்து இன்னொரு வாய்ப்பு கொடுக்கும் பழக்கம் உங்கள் அகராதியில் கிடையாதா …? ” இடையிட்டாள் வேதிகா .

” இது தப்பில்ல வேதாம்மா .பெரிய குற்றம் .இவனையெல்லாம் ஐந்து வருசமாவது ஜெயில்ல களி திங்க வைக்கனும் …”

“அதானே …எப்போதும் மாமனும் , மருமகனும் ஒரே கட்சிதானே .உங்களுக்கெல்லாம் தொழிலும் , சொத்தும் , வருமானமும்தான் கண்ணிற்கு தெரியும் .அன்பும் , பாசமும் , குடும்பமும் எங்கே தெரிய போகிறது .பணம் சம்பாதிக்கும் எந்திரங்கள் நீங்கள் …” ஆத்திரம் தாளாமல் கத்தினாள் .

” ஏன் …நீயும்தான் தொழில் பார்க்கிறாய் .பணமும் , சொத்தும் வந்தால் வேண்டாமென்று விடுவாயா …? ” நக்கலாக கேட்டான் அமரேசன் .

” அதற்காகத்தான் தொழில் பார்ப்பதே .ஆனால் நான் அதனை உங்களை போல் ஏழைகளின் கண்ணீரிலிருந்து சம்பாதிப்பதில்லை …”

” ஆஹா …நம் வீட்டில் அன்னை தெரசாவின் வாரிசு ஒருவர் உருவாகிக் கொண்டிருப்பதை நீங்கள் சொல்லவே இல்லையே மாமா …? ” அமரேசனின் கேலியில் கொதிநிலைக்கு போனாள் வேதிகா .

” சை …நீங்கெல்லாம் ஒரு மனுசங்க .உங்களையெல்லாம் சொந்தம்னு சொல்லிக்கவே பிடிக்கலை .இனி நீங்க இரண்டு பேரும் என்னிடம் பேசாதீர்கள் .எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ….” ஆத்திரத்துடன் முன்னால் டீபாயிலிருந்து நியூஸ் பேப்பர்களை தள்ளிவிட்டு போக , அவை சிதறி பேன் காற்றில் வீடு முழுவதும் பறந்த்து .




” இங்கே பாருடா …பொட்டப்புள்ளைக்கு இவ்வளவு கோபமா…? ” திலகவதி அளவுக்கதிமாக ஆச்சரியப்பட , சாமிநாதனுக்கு தர்ம சங்கடமானது .

” அவளை கொஞ்சம் சின்னப்பிள்ளையா வச்சிருந்துட்டோம் .இன்னமும் பக்குவம் வரலை .நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை …” சாமிநாதன் மருமகனை சமாதானப்படுத்த ஆரம்பிக்க …

” இது தேவையே இல்லை மாமா .என் மனைவியை எனக்கு தெரியாதா …? அதெல்லாம் பெரிய விசயமில்லை .இப்போது சாப்பிடாமல் போய்விட்டாளே .அதுதான் கவலையாய் இருக்கிறது .” சாமிநாதனுக்கு சிரிப்பு வந்த்து .

” விடுங்க மாப்பிள்ளை .ஒரு நேரம் பட்டினி கிடந்தால் ஒன்றுமில்லை .காலையில் சரியாகி வடுவாள் …”

அப்படி விடவில்லை அமரேசன் .வேண்டாம் மாப்பிள்ளை அவள் பிசாசு போல் கத்துவாள் என்ற விசாலாட்சியின் எச்சரிக்கையையும் தாண்டி , மனைவிக்கான இரவு உணவை தானே எடுத்து போய் கொடுத்து …பதிலாக அவளிடமிருந்து நிறைய வசவுகளையும் , முறைப்பிகளையும் வாங்கி கொண்டுதான் வந்தான் .

 

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!