kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 7

7

 

” ஹாய் ஆன்ட்டி எப்படி இருக்கிறீர்கள் ? ” கோரசாக குரல் கேட்க நிமிர்ந்து பார்த்த மாரீஸ்வரியின் முகம் வெளுத்தது.

 

வாவாங்கம்மாஇப்படி உட்காருங்கள் ” உபசரித்த அவளின் உள்மனதில் பெரும் போராட்டம் .இவர்களை எப்படி சமாளிப்பது

 

” என்ன ஆன்ட்டி  போன தடவை வந்தபோது இருந்ததைக் காட்டிலும் இந்த தடவை வீடு வித்தியாசமாக தெரிகிறதே ” பவித்ரா கேட்டாள் .அவளுடன் வந்திருந்த இருவரும் விழிகளை சுழற்றி வீட்டை ஆராய்ந்தனர்.




 

” ஆமாஆமா கொஞ்சம் இன்டீரியரை  மாற்றி இருக்கிறோம் .இருங்க உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன் ” சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போய் தன் போனை எடுத்தாள்.

 

அப்பா அம்மாவிற்கு தெரியாமல் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்றால் அவர்களைத் தாண்டி அவளுக்கு ஒரு உறவு இருக்கிறது என்றுதானே அர்த்தம் .அந்த உறவு காதலாக தானே இருக்க முடியும் .அக்கா காதலித்தாளா ?யாரை காதலித்தாள்இந்த விஷயம் அம்மா அப்பாவிற்கு தெரியுமா ?

 

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பலவிதமான யோசனைகளில் இருந்தால் மிருதுளா .அக்காவின் போன் இருந்தால் நன்றாக இருக்கும் .இப்போதெல்லாம் எல்லோருடைய அந்தரங்கங்களும் போனில் தானே ஒளிந்திருக்கின்றனநினைத்தபடி எந்த இலக்குமின்றி  மதுராவின் அலமாரியை மீண்டுமொருமுறை குடைந்தாள் மிருதுளா.

 

நிறைய அலங்கார சாதனங்கள்உடைகள் ,புத்தகங்கள் அவள் படிப்பு சம்பந்தமான ஃபைல்கள் என எல்லாவற்றையும் கலைத்து தேடிய பிறகும் அவளுக்கு உபயோகமான எதுவும் கிடைக்கவில்லை .எரிச்சலுடன் அலமாரியை அடித்து மூடிய   வேகத்தில் உள்ளிருந்து ஒரு பேப்பர் பறந்து வந்து கீழே விழுந்தது .அதனை எடுத்துப் பார்த்த மிருதுளாவின் முகத்தில் சிறு உற்சாகம் தோன்றியது. இப்படி முயற்சித்துப் பார்த்தால் என்னஉடனே உடனே என அவளது ரத்த நாளங்கள் சத்தம் இட்டன.

 

உடனே என்று கிளம்பிய அவளின் வேகத்தை போன் தடை செய்தது .மாரீஸ்வரி கீழே இருந்து அழைத்துக் கொண்டு இருந்தாள்.

 

” என்னம்மா ? “

 

” குட்டி நீ கொஞ்சம் கீழே இறங்கி வாயேன் .இங்கே மதுராவுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்திருக்கிறார்கள் .அவர்களிடம் நான் ஏதாவது உளறிக்கொட்டி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது ‘ 

 

மிருதுளா வேகமாக கீழே இறங்கி வந்தாள்.

 

” ஹாய் பவித்ராக்கா எப்படி இருக்கிறீர்கள் ? ” 

 

” நான் நன்றாக இருக்கிறேன் .இந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தோம் .அப்படியே மதுராவையும் பார்த்து விட்டு போகலாம் என்றுஅவளை எங்கே ? ” 

 




” அது வந்துஅக்கா ஊருக்கு போய் இருக்கிறாள் ” 

 

” எந்த ஊருக்கு ? ” 

 

” அதுதிருச்சிஇல்லைமதுரை

 

” மிருதுளா உனக்கே எங்கே போயிருக்கிறாள்  என்று தெரியாதா  ” பவித்ரா கிண்டலாக கேட்டாள்

 

” ஏன் தெரியாமல்நன்றாக தெரியுமே அக்கா திருச்சிக்கு ஆமாம் திருச்சிக்கு தான் போய் இருக்கிறாள் .அம்மா வீட்டு வழியில் ஏதோ சொந்தக்காரர்களின் திருமணம் ” 

 

” ஆன்ட்டி இங்கேதானே இருக்கிறார்கள் உன் அக்கா மட்டுமா போயிருக்கிறாள் ? ” 

 

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று மிருதுளாவிற்கு தெரியவில்லை .அவள் விழிக்க தொடங்கினாள்.மாரீஸ்வரி உள்ளே போனவள் வெளியே வரவே இல்லை .இந்த தோழிகள் கூட்டத்தை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் இல்லை .அதனால் உள்ளேயே இருந்து கொண்டாள்.

 

” அத்தையும் சேர்ந்து போவதாகத்தான் இருந்தது .ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லாததால் மதுராவை மட்டும் அனுப்பி வைத்தோம் .அவள் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் ” தோழிகளின் கேள்விக்கு பொருத்தமான பதில் கொடுத்தபடி உள்ளே வந்தான் மகிபாலன்.

 

அப்பாடா என்ற பெருமூச்சு வந்தது மிருதுளாவிற்கு .ஏனோ இனி எல்லாவற்றையும் மகிபாலன் பார்த்துக் கொள்வான் என்ற ஆசுவாசத்துடன் அவனை பார்த்தாள் .கண்களை ஒரு முறை அழுத்தி மூடி நான் பார்த்துக்கொள்கிறேன் என அவளுக்கு ஜாடை சொன்னவன் ஒற்றை சோபா ஒன்றில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு  கம்பீரமாக அமர்ந்தபடி அப்புறம் என்பது போல் அவர்களை பார்த்தான்.

 

வேறென்ன என்பது போன்ற அவனது புருவம் உயர்த்தலில் மேலே கேட்க நினைத்திருந்த கேள்விகள் எல்லாம் மறந்து போயின அந்த பெண்களுக்கு.

 

” வேறுவேறு ஒன்றும் இல்லை சார் .நாங்கள் சும்மாதான் மதுராவை பார்க்கலாம் என்று….” 

 

” ஊரில் இருந்து அவள் வந்ததும் அவளை உங்களிடம் பேச சொல்கிறேன்  ” கிளம்புகிறீர்களா  பார்வை அவர்களை பார்த்தான்.

 

”  சரி சார் .பேசச் சொல்லுங்கள் ” எழுந்து கொண்டனர் . மரியாதை நிமித்தம் அவர்களுடன் வாயில் வரை நடந்தாள் மிருதுளா.

 

மிருதுளா இவர்  உங்கள் அத்தான் மகிபாலன் தானே ? ” 

 

” அத்தானை உங்களுக்கு தெரியுமா பவித்ரா அக்கா ? ” மிருதுளா ஆச்சரியமாகக் கேட்டாள்.

 

” ஏன் தெரியாமல்மதுரா இவரைப் பற்றித்தானே வாய் ஓயாமல் எங்களிடம் பேசுவாள் .அவள் சொல்வதில் எந்த மறுப்பும் இல்லை .இவர் உங்கள்் அத்தான் அப்படியே சினிமா ஹீரோ போல் தான் இருக்கிறார் ” தன் இதயத்தின் ஏதோ ஒரு நரம்பு சுண்டி இழுக்கப் படுவதாக உணர்ந்தால் மிருதுளா.

 

” அதுதான் வந்தவர்களை சமாளித்து அனுப்பியாயிற்றே இன்னும் என்ன யோசனையில் இருக்கிறாய் குட்டிகண்டதையும் நினைத்துக் கொண்டிருக்காமல் சாப்பிடு ” மாரீஸ்வரி மகளுக்கு பரிமாறினாள்.

 

” மகி எனக்கு ஒரு சந்தேகம் மதுராவிற்கு ஏதாவது லவ் அபேர் இருந்திருக்குமா ? ” மாரீஸ்வரி கொஞ்சம் அந்தப்பக்கம் நகரவும் தன் அருகே அமர்ந்திருந்த மகிபாலன் பக்கம் குனிந்து மெல்லிய குரலில் கேட்டாள்.

 

உண்ட உணவு புரையேறி கொள்ள இரும துவங்கினான் மகிபாலன். ”  பார்த்துமெல்ல ” அவனுக்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.

 

” நீ கேட்ட கேள்விக்கு எனக்கு வந்த இந்த இருமல் குறைவான அதிர்ச்சி. என்ன மிருது நம் மதுராவை பற்றி உனக்குத் தெரியாதாஅப்படி காதல் என்ற பெயரில் வெளியே சுற்றும் பெண்ணா அவள் ? ” 

 

” பெற்றவர்களை தவிர்த்து ஒரு பெண் வீட்டை விட்டுபோகும் இடம் தெரிவிக்காமல் வெளியேறுகிறாள்  என்றால்அதற்கு இதைத் தவிர எனக்கு வேறு காரணங்கள் தெரியவில்லை மகி ” 

 

” யோசிக்கிறேன் கண்டுபிடிக்கிறேன் என்று எதையாவது மண்டைக்குள் போட்டு குழப்பிக் கொண்டே இருந்தாயானால் இதோ இப்படித்தான் தப்பு தப்பாக உனக்கு தோன்றும் மிருதுளா .இனி இந்த வகையில் யோசிக்காதே ” 

 

” சரி வேண்டாம் .இதனை விட்டுவிடுங்கள். இப்போது மதுரா காணாமல் போனதற்கு சரியான காரணம் ஒன்றை எனக்குச் சொல்லுங்கள் ” 

 

” அதைத்தான் நாம் விசாரித்துக்கொண்டு இருக்கிறோமே. என்ன அவசரம் உனக்கு  ? ” மகிபாலனின் குரலில் சிறு எரிச்சல் தெரிந்தது.

 

” என்ன விசாரிக்கிறார்கள்யார் யாரிடம் விசாரிக்கிறார்கள் ? ” மிருதுளா இந்த விஷயத்தை இப்போது விட விரும்பவில்லை

 

” சென்னை டிஐஜியிடம் நானும் உன் அப்பாவும் நேரில் போய் மதுராவின் போட்டோவைக் கொடுத்து பர்சனலாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். அவர் தமிழ்நாடு முழுவதும் மதுராவின் போட்டோவை அனுப்பி  ரகசியமாக அவளைப் பற்றிய விபரங்களை தேட சொல்லியிருக்கிறார் .நம்முடைய தொழிலில் நண்பர்கள் வட்டத்தில் உறவினர்களுக்கு இடையில் மிகவும் தெரிந்த முழு நம்பிக்கைக்கு உரிய சிலருடைய காதுகளுக்கு மட்டும் மதுரா விஷயத்தை கொண்டுபோய் அவர்களால் முடிந்த உதவிகளை செய்யச்சொல்லி கேட்டிருக்கிறோம். இப்போதைக்கு இது மட்டும்தான் நம்மால் செய்ய முடியும் மிருது .கூடிய சீக்கிரமே மதுரா நமக்கு கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” 

 

” ஆனால் அந்த நம்பிக்கை எனக்கு ஒரு பர்சன்ட் கூட இல்லை ” மிருதுளா தட்டிலேயே கைகழுவிவிட்டு எழுந்தாள் .” உட்கார்ந்து சாப்பிடும்மா என்ற மாரீஸ்வரியின் கிண்டல்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். மீண்டும் மதுராவின் உடமைகளை அலச ஆரம்பித்தாள் .

 

சிறிது நேரத்திலேயே அவள் அறைக்கதவு தட்டப்பட”  உள்ளே வாங்க ” என்று சொல்லிவிட்டு தனது வேலையில் தீவிரமாக இருந்தாள்.

 

” என்ன செய்து கொண்டிருக்கிறாய் மிருதுளா ? ” அதிர்ச்சியோடு கேட்ட குரல் மகிபாலன் உடையது.

 

அவனது அதிர்வுக்கு காரணம் அலமாரிக்குள் இருந்த பொருட்கள் எல்லாமே தரையில் சோபாவில் கட்டிலில் என்று அறை முழுவதும் சிதறி இருந்தன. அலமாரி ஒன்றுக்குள் தலையை குனிந்து புதையல் எடுப்பவள் போல் தேடிக்கொண்டிருந்தாள் அவள் .

 

” அக்காவின் செல்ஃபை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் ” மகிபாலனை திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னாள்.

 

” அதற்கு இப்போது என்ன அவசியம் ? ” 

 

” எனக்கு அவசரம் ” 

 

பொறுமையற்ற வேக மூச்சு ஒன்றை திரும்பிப் பார்க்காமலேயே அவனில் உணர்ந்தாள் .” சரி உன்னுடைய அகழ்வாராய்ச்சியை  கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு இங்கே வா சாப்பிடு ” 

 

” நான் சாப்பிட்டுவிட்டு தானே வந்தேன் .எனக்கு வேண்டாம் பசிக்கவில்லை ” தலையை உயர்த்தவில்லை.

 

” பாதி சப்பாத்தியிலும் பாதியை கொறித்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு வந்து விட்டாய். இது ஒரு சாப்பாடாஇங்கே வா சூடாக இட்லி கொண்டு வந்திருக்கிறேன் சாப்பிடு ” 

 

” உம்  ”  என்ற பதிலுடன் மிருதுளா தனது தேடலை தொடர அவளது தோள்கள் அழுத்தி பற்ற பட்டன.

 

” இது என்ன சிறுபிள்ளை அடம் ” அதட்டலுடன் அவள் தோளை பற்றி இழுத்தவன் அப்படியே எளிதாக தன்னை உயர்த்தி தூக்குவதை வியப்பாகப் பார்த்தாள் மிருதுளா.

 

விடுங்கள் மகி நான் என்ன சின்னப் பிள்ளையா இப்படி தூக்குவதற்கு ? ” 

 

” அப்படித்தானே அடம்பிடித்து கொண்டிருக்கிறாய்.”  அவளை உணவு இருந்த டேபிள் முன் அமர்த்தியவன் ”  நீயாக சாப்பிடுவாயா இல்லையென்றால் குட்டிக்கு ஊட்டிவிட வேண்டுமா ”  என்று கேட்டபோது அவன் குரலில் மென்மை சேர்ந்து இருந்தது.

 

” ஒன்றும் வேண்டாம். போங்க மகி எப்போது பார்த்தாலும் என்னை சிறு குழந்தை போலவே ட்ரீட் செய்துகொண்டு ” சிணுங்கினாள் மிருதுளா.

 

” நீ அப்படித்தானேடா குட்டி நடந்து கொண்டிருக்கிறாய் ” 

 

” நான் ஒன்றும் குட்டி கிடையாது. முதலில் இப்படி கூப்பிடுவதை நிறுத்துங்கள் ” 

 

” அதற்கு நீ கொஞ்சம் பெரிய பிள்ளைபோல் பொறுப்பாக பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் ” 

 

சீண்டலும் சிணுங்கலுமாக   இருவரும் பேசிக் கொண்டிருந்தாலும் மகிபாலன்  கை இயல்பாக இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது .” ஒழுங்காக சாப்பிட தெரிகிறதா பார் ”  செல்லமாக வைதபடி அவள் இதழ் தாண்டி சிந்திய உணவை தொலைத்தவனின் ஒற்றை விரல் அவள் இதழ்களின் மென்மையை வருடி அங்கேயே நிலைத்தது.

 

” இந்த இட்லி சாப்ட்டா உன்னுடைய உதடுகளாநான் தெரிந்து கொள்ளட்டுமா  குட்டி ”  கேட்டபடி மகிபாலன் அவள் முகம் நோக்கி குனிய இமை அசைக்க கூட மறந்து மிருதுளா அவனைப் பார்த்தபடி இருக்க

 

சடார் என்ற பயங்கர சத்தத்துடன் ஏதோ கீழே விழ பதறி திரும்பிப்பார்த்த மிருதுளா அதிர்ந்தாள் .சுவரில் மாட்டியிருந்த மதுராவின் போட்டோ ஒன்று கீழே விழுந்திருந்தது.

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!