kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 1

பத்மா கிரகதுரை 

எழுதும் 

கனா காணும் கண்கள் 

 

 

1

 

 

மிருதுளா கண்களை மூடியபடி படுக்கையில் படுத்துக் கிடந்தாள் வலுக்கட்டாயமாக பிடுங்கி எறியப்பட்ட கொடிபோல் அவள் உடல் துவண்டு கிடந்ததுமூடிக்கிடந்த அவள் இமைகளுக்குள் சிறு சலனம் தெரிந்தது. கருவிழிகள்  அங்குமிங்கும் அலைந்தன .மிருதுளாவிற்கு  விழிப்பு வந்து கொண்டிருப்பதை அந்த  இமை அசைவுகள் உணர்த்தின.

 

விழிப்பு வந்ததும் இமை பிரித்து அவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொள்ளவில்லை. முதலில் மெலிதாக அசைந்த அவள் கண்ணிமைகள் இப்போது சற்று வேகமாக உருண்டன. புருவங்கள் சுருங்க நெற்றியில் கோடுகள் விழுந்தன .தொண்டை தண்ணீருக்காக ஏங்குவது போல் தவித்து ஏறி இறங்க உதடுகள் லேசாக பிளந்து உஷ்ண மூச்சு வெளிப்பட்டது.

 




அவளது வலது கை உயர்ந்து அவள் தலையை பிடிக்க  அளவில்லா வேதனையை பிரதிபலித்தது அவள் முகம் .சில நிமிடங்கள் நீடித்த இந்த உள்மன அவஸ்தையின் பின்  அவள் சடாரென எழுந்து அமர்ந்தாள் .அவள் விழிகள் விரிந்து பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து தனது பாதுகாப்பை சோதித்தன.

 

என் வீடுதான்என் அறைதான் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டவள் ஒரு நிம்மதி மூச்சின் பின் உரக்க கத்தினாள் ”  அம்மா ” 

 

” என்னம்மா …? என்ன ஆச்சு …? ” இரண்டாவது நிமிடமே அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மாரீஸ்வரி .ஆதரவாய் கைநீட்டி தன் மகளை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

 

” மிருதுகுட்டி என்னடாம்மாஏன் அப்படி கத்தினாய் ? ”  மகளின் தலையை வருடினாள்.

 

” அம்மா எனக்கு பயமாக இருக்கிறதும்மா ” 

 

” நம்முடைய வீட்டுக்குள் உனக்கு என்ன பயம் மிருது ? ”  கேட்டபடி அறைக்குள் வந்தார் கலிவரதன்

 

” தெரியவில்லை அப்பா .ஏதோ பயம் .என்னென்னவோ நினைவுகள் …” மிருதுளாவின் விழிகள் கலவரத்துடன் விரிந்தன.

 

” என்னங்க இப்படி பயப்படுகிறாள்  ? ” மாரீஸ்வரி கவலையாக கலிவரதனை  பார்க்க  அவர் தலையசைத்தார். பேசாதே எனும்படியான கட்டளை பார்வையை  மனைவிக்கு கொடுத்தவர் மகளின் கைப்பற்றி அவளை எழுப்பினார்.

 

” காற்றோட்டம் இல்லாமல் இதுபோல் மூடிய அறைக்குள் அடைந்து கிடந்தால் இப்படித்தான் மூச்சுமுட்டி எதையாவது நினைக்கச் சொல்லும் குட்டி. ஈஸ்வரி நீ முதலில் அந்த ஏசியை ஆஃப் பண்ணு .குட்டிம்மா வாடா நாம் கொஞ்ச நேரம் ஹாலில் போய் காற்றோட்டமாக உட்காரலாம் ” 

 

தந்தையின் பேச்சில் நியாயம் இருப்பதுபோல் மிருதுளாவிற்கு தோன்ற தந்தையுடன் எழுந்து ஹாலுக்கு வந்தாள் .மெத்தென்று பாதி ஆளை உள்ளே இழுத்துக் கொள்ளும் அந்த உயர சோபாவில் அவளை அமர வைத்த கலிவரதன் ஆதரவாக தானும் அருகே அமர்ந்து மகளின் கையை பற்றிக் கொண்டார்.

 

” ரொம்ப தலை வலிக்கிறது அம்மா ” மிருதுளா சொல்ல மாரீஸ்வரி மகளின் தலையை மெல்ல பிடித்து விட தொடங்கினாள் .அன்னையின் கை மிக மென்மையாக பஞ்சினை ஒத்தது போல் தான் இருந்தது .ஆனாலும் மிருதுளாவின் கடுமையான தலைவலியை விரட்டும் சக்தி  அந்த கைக்கு இல்லை .மிருதுளாவின் முகச்சுளிப்பு அப்படியேதான் இருந்தது .அவள் தளர்வாக தந்தையின் தோள்களில் சாய்ந்துகொண்டாள்.

 

” அப்படியே மூளையையே யாரோ உறிஞ்சி  குடிப்பது போல் இருக்கிறது ” தனது நெற்றிப்பொட்டில் நீவிவிட்டு கொண்டாள் .மற்றவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .இருவரும் ஒருவரை ஒருவர் துயரத்தோடு பார்த்துக் கொண்டனர்.

 

திடீரென்று இந்த தலைவலி தனக்கு ஏன் வந்ததுமிருதுளா யோசிக்க முயன்றாள் .இப்போதுதான் தூங்கி விழித்து இருக்கிறாள். விழிக்கும் போதே இந்த வலி ..தூங்குவதற்கு முன்பு தனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததாசளி காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருந்ததாஅவள் நினைவுகளை முன் செலுத்தி யோசித்தாள்.

 

ம்கூம்முன்னால் துழாவிய  அவளுடைய நினைவுகள் வெறும் கறுப்பு பக்கங்களையே அவளுக்குக் கொடுத்தன .எந்த சம்பவங்களும் அவள் மனதிற்குள் தோன்றவில்லை .ஏதோ பார்ட்டிக்கோ , பங்சனுக்கோ போனது போல் ஒரு ஞாபகம் அரை குறையாக மனதிற்குள் தோன்றியது. என்ன இது எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லையே ?இந்த தலைவலிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும்

 




” மாமா ” என்ற குரல் வாசலிலிருந்து அழைத்தது .ஒரு நிமிடம் திகைத்து பின் குரல்  புரிந்து நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா .அங்கே வாசலில் அவன் நின்றிருந்தான் .மகிபாலன் .அவனுடைய கண்கள் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன .தலையை தாங்கி இருந்த இவளது  வேதனையை கவனித்துக் கொண்டிருந்தன.

 

மகிபாலனை நம்பாதே அவனது குறி பணமும்   சொத்துக்களும்மிருதுளாவின் மனதிற்குள் இப்படி ஒரு குரல் கேட்டது .அதன் பிறகு அவள் தலைவலி மேலும் அதிகமாவது போல் உணர்ந்தாள்.

 

” மகிபாலா உள்ளே வாப்பா .” பாசமாக அழைத்தாள் மாரீஸ்வரி .கலிவரதன் தன் தலையை அசைத்து வரவேற்க  அவன் உள்ளே வந்தான்.

 

” மிருதுளாவுக்கு என்ன ஆயிற்று மாமா ? ” அவன் கண்கள் இன்னமும் இவள் மேல்தான் இருந்தன.

 

” இப்போதுதான் எழுந்தாள். தலைவலி என்றாள  ” கலிவரதன் சொல்ல மெல்ல தலையாட்டினான் அவன்.

 

” இருப்பா உனக்கு காபி கொண்டு வருகிறேன் ” மாரீஸ்வரி உள்ளே போனாள்.

 

வலிக்கும் தலையுடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள் மிருதுளா.”  வேண்டாம் அவனை பார்க்காதேநம்பாதே ” என்று அவளுக்குள் கேட்ட குரல் மிக பலவீனமாக இருந்தது.

 

” எப்போது கிளம்புகிறாய் ? ” கலிவரதன் கேட்க ” இதோ இப்போது கிளம்பிவிட்டேன் மாமா ”  பதில் சொன்னான் மகிபாலன்.

 

அவனது கண்கள் இப்போது கலிவரதனுக்கும்  மிருதுளாவுக்குமாக ஊஞ்சல் ஆடியது.

 

” சம்பளத்திற்கான தொகையை உன்னுடைய பேங்க் அக்கவுண்டிற்கு  மாற்றி விட்டுவிடுகிறேன் .ஏடிஎம்மில் எடுத்துக்கொள் .வேலை பார்ப்பவர்கள் எல்லோருக்கும் சம்பளம் போட்டுவிட்டுஅங்கே வேலை நிலவரத்தையும் தெரிந்து கொண்டு வா .உனக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நேம் லிஸ்ட் தருகிறேன் ” எழுந்து உள்ளே சென்றார்

 

மிருதுளா அவனை ஆச்சரியமாக பார்த்தாள் ”  மகிபாலன் அப்பா உங்களை எங்கே போகச் சொல்கிறார் ? ”  மகிபாலனின் முகத்தில் மிகச் சிறிதாய் ஒரு சலனம் .கண் இமைப்பதற்குள் மாறிப்போனது.

 

” கோயம்புத்தூருக்கு. மது காட்டன் மில்ஸ் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மேலும் சில வேலைகளையும் பார்த்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறார் ” 

 

” என்ன உங்களையா ? ‘ மிருதுளாவின் பிரமிப்பில் பாறையாய் இருந்த அவன் முகத்தில் லேசான மின்னல் கீற்று.

 

” ஆமாம் என்னையேதான். ஒருவழியாக என்னை நம்பி விட்டார் உன் அப்பா… ” மிக லேசாக பிரிந்த அவனது இதழ்கள் இடையே முன் பற்களின் வெண் நுனி .

 

” அப்பாவின் நம்பிக்கையை பெற்றதற்கு வாழ்த்துக்கள் ” புன்னகைக்க முயன்று தலைவலியின் தொல்லையால் முகம் சுளித்தாள் மிருதுளா.

 

மகிபாலன் மெல்ல எழுந்து வந்து அவள் உச்சந்தலையில் கை வைத்தான்.”  நான் கொஞ்ச நேரம் தலையை பிடித்து விடட்டுமா மிருது ? ” 

 

மிருதுளா அகன்ற விழிகளுடன் அவனைப் பார்த்தபடி இருக்க மகிபாலனின் கைகள் மெல்ல அவளது தலையை அழுத்தி விட துவங்கின .நெற்றிநெற்றி பொட்டு உச்சந்தலைபின்னந்தலை என்று அவன் கைகள் இதமான அழுத்த தொடங்க மிருதுளாவின் இமைகள் தாமாக மூடிக்கொண்டன.

 

” காபி எடுத்துக்கோப்பா ” சொன்னபடி வந்த அம்மா மகிபாலனின் செயலை கண்டுகொள்ளாமல் இருந்ததை ஆச்சரியமாக பார்த்தாள் மிருதுளா .கைகளில் ஒரு பைலுடன்வந்த கலிவரதனும்  இந்த தலையழுத்தலை  கண்டுகொள்ளவில்லை.

 

தாய் தந்தையின் ஏன் இதோ இந்த மகிபாலனின் நடவடிக்கையில் கூட ஏதோ அபஸ்வரம் தட்டியது மிருதுளாவிற்கு. இவர்கள் எல்லோரும் முன்பு இப்படி இல்லையே ? இயல்பு மாறித் தெரிந்த அவர்களை குழப்பமாக பார்த்தாள்.

 

” டிரைவரிடம் ஏர்போர்ட்டிற்கு காரை எடுக்கச் சொல்லு ஈஸ்வரி ” கலிவரதன் சொல்ல மிருதுளாவிற்கு மீண்டும் ஆச்சரியம். மகிபாலன் கோயம்புத்தூருக்கு பிளைட்டில் செல்கிறானா

 

” டிரைவர் இன்று லீவுங்க ” மாரீஸ்வரி தயக்கமாய் சொல்ல, ”    மறந்துவிட்டேன் .நீ காரை எடுத்துப்போய் ஏர்போர்ட் பார்க்கிங்கில் நிறுத்திவிடு மகி .நான் பிறகு எடுத்துக் கொள்கிறேன் ”  கலிவரதனின் திட்டத்திற்கு மகிபாலன் லேசாக சிரித்தான்.

 

” எனக்கு டிரைவிங் தெரியாது மாமா  ” கலிவரதனும் மாரீஸ்வரியும்  மௌனமாகிவிட மிருதுளா எழுந்தாள்.

 

” நான் அவரை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு வருகிறேன் அப்பா ” 

 

” நீயா வேண்டாம் குட்டி ” கலிவரதன் மறுக்கமாரீஸ்வரி மகளின் கைகளை பதட்டத்துடன் பற்றிக்கொண்டாள்.”  தலைவலி என்று சொன்னாயே குட்டிம்மா .இப்போது எப்படி டிரைவிங் செய்வாய் ? ” 

 

” அதனால்தான் அம்மா இந்த தலைவலியிலிருந்து கவனத்தை கொஞ்சம் திருப்புவதற்காக தான் அப்படியே வெளியே போய்விட்டு வரலாம் என்று நினைக்கிறேன் ” 

 

” சரிதான் அவள் விருப்பப்படி விட்டுவிடுங்கள் மாமா ”  மகிபாலன் சொல்ல உடனே தலையாட்டும் தாய் தந்தையை வியப்பாக பார்த்தாள் மிருதுளா .மகிபாலன் ஒன்று சொல்லி அதற்கு இவர்கள் தலையாட்டுவதா ?

 

நெடுஞ்சாலையை அடைந்ததும் டாப் கியருக்கு உயர்த்தி காரை வேகத்திற்கு கொண்டுவந்தாள். ” எப்போதும் இந்த வேகத்தில் தான் கார் ஓட்டுவாயா மிருதுளா ? ” 

 

மகிபாலனின் கேள்விக்கு திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.”  நீங்களும் காரோட்ட கற்றுக்கொள்ளுங்கள் மகிபாலன் .பிறகு இந்த வேகம் எல்லாம் சாதாரணமாக தெரியும் ” 

 

ம் .கற்றுக் கொள்ளலாம் . இப்போது உன் தலைவலி எப்படி இருக்கிறது ? ” 

 

” இருக்கிறது இன்னமும் சம்மட்டி வைத்து உச்சந்தலையில் யாரோ அடிப்பது போல் இருக்கிறது ” 

 

மகிபாலனுன் கை மெல்ல அவளது உச்சந்தலையை  வருடியது .அழுத்தி விட்டது .” எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காமல் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் குட்டி ” 

 

அவளது தாய் தந்தையால் மட்டும் அழைக்கப்படும் அவளது செல்ல அழைப்பு .அது அவனது வாயிலிருந்து வந்த போது  மிருதுளாவினுள் ஏதோ ஒரு நெகிழ்வை கொடுக்க இனம் புரியாத நடுக்கம் ஒன்று அவள் உடலில் ஓடியது.

 

” அப்பா அம்மாவிற்கு எப்போது நல்ல பிள்ளையானீர்கள் மகி ? ” 

 

” உன் அப்பாவிற்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லாததால்தொழிலில் ஒரு இக்கட்டு வந்ததால்இப்போதுதான் ஒரு வாரத்திற்கு முன்புஅதாவது அவர் என்னை கொஞ்சம் நம்பி விட்டார் ” 

கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தாற் போலிருந்தது மகிபாலனின் குரலில்.

 

கடந்த ஒரு வாரமாக என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை மகி .யோசித்துப் பார்த்தால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை .தலைவலி மட்டுமே அதிகமாகிறது .ஏதேதோ வேண்டாத கனவுகள் கண்களுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது .யாரோ ஒரு பெண் ஏதோ ஒரு பெரிய ஆயுதத்தை தூக்கிக்கொண்டு என்னை விரட்டுவது போல்….”  பேசிக்கொண்டே போன மிருதுளா ஸ்தம்பித்தாள்.

 

அந்தப் பெண்…. அவள் கனவில் துரத்திய அதே பெண் நடுரோட்டில் தூரமாக 

 நின்றிருந்தாள். கையில் ஆயுதத்தை உயர்த்தியபடி வா என்ற அழைப்போடு இவளது கார் அவளை நெருங்க காத்துக் கொண்டிருந்தாள்.

 

மிருதுளா வீல் என்ற அலறலுடன் ஸ்டியரிங்கை விட்டுவிடகார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்திற்கு ஓடி ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நின்றது.

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!