karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 51

   51

சாம்பலும் கருமையும் விரவிக்கிடக்கும் 
மழைவீதியை வேடிக்கை பார்க்கையில் 
கண்ணாடி சன்னலில் சிதறிக்கொண்டிருக்கிறது 
வெம்மையாய் 
உனதந்த முத்தம் .

” எதற்காகடி அவர்கள் பின்னால் போனாய் …? ” சௌந்தர்யா .

” அவர்களிடம் ஏதோ தவறு இருக்கிறதென்று தெரிந்த்து .அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமென …”

” ஆமாம் இவள் பெரிய துப்பறியும் புலி .எவ்வளவு பெரிய பயங்கரவாதிகள் .அவர்கள் பின்னால் போனாளாம் …” சாத்விகாவின் தலையில் நங்கென ஒரு கொட்டு விழுந்த்து .

” சாந்தினியையும் , வஹீப்பையும் முதலிலேயே தெரிந்து கொண்டாயா …? ” சந்திரிகா .




” சாந்தினியிடம் முதலில் இருந்தே சிறு நெருடல் இருந்த்து .அன்று   வஹீப் அவளிடம் நெருக்கமாக இருப்பது போல் தெரிந்தாலும் சாந்தினியின் உடையில் மைக்கை வைத்து விடுகிறானோ …என்ற சந்தேகம் பின்னால் வந்த்து .பிறகு   ஒருநாள் அவள் தொழுது கொண்டிருந்த்தை பார்த்ததும் அது உறுதியாகி விட்டது .அன்றிலிருந்து அவளையும் , வஹீப்பையும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தேன் .”

” எங்களிடம் ஏன் சொல்லவில்லை …? “

” நீங்கள் கூடத்தான் அவர்களை பற்றி தெரிந்து கொண்டே வீட்டிற்குள் நடமாட விட்டுக் கொண்டே என்னிடம் சொல்லவில்லை “

” நாங்கள் அவர்களை சுதந்திரமாக விட்டால் அதற்கான கவனிப்பையும் சேர்த்து வைத்திருப்போம் .நீ அப்படியா …? ” மீண்டும் ஒரு கொட்டு கிடைத்தது .

” திரும்ப திரும்ப அவர்களை சந்திக்க ஏன் போனாய் …? “

” அவர்கள் நம்மிடம் எதையோ தேடுகிறார்களென தெரிந்த்து .அந்த ஏதோ …என்னது என்று தெரிந்து கொள்ளலாமென போனேன் .அது லேப்டாப் என தெரிந்த்து …”

” உடனே அதனை எளிதாக தூக்கி கொண்டு போய் கொடுத்து விடுவாயா …? அதில் எவ்வளவு முக்கியமான விபரங்பள் இருந்தன தெரியுமா ..? சாத்விகாவின் கன்னம் அழுத்தி கிள்ளப்பட்டது .

” ஆ …அதற்குத்தான் பாஸ்வேர்ட் வீரா விரல்ரேகைதானே .அவர் இங்கே இருக்கும் போது அவர்களால் அங்கே அதை திறக்க முடியாதே என்ற நம்பிக்கையில்தான் எடுத்து போனேன் .லேப்டாப்பை வைத்து ஆசை காட்டி அவர்களையெல்லாம் கொன்று வடலாமென்ற திட்டத்தோடு துப்பாக்கியெல்லாம் எடுத்து போனேன் …”

” எது …உன் என்.சி.சி துப்பாக்கி பயிற்சி நம்பிக்கையோடு …அவ்வளவு பயங்கர தீவிரவாதிகளை கொல்ல கிளம்பி விட்டாய் .உங்கள் மகளுக்கு சுத்தமாக மூளையே கிடையாது அத்தை .இப்படியா பிள்ளை வளர்த்து வைப்பீர்கள் …? ” சாத்விகாவின் மீது கோபத்தை தூண்டிவிட்டபடி வீரேந்தர் வந்து அமர்ந்தான் .

” அது ..நான் கேம்பில் துப்பாக்கி சுடுவதில் பர்ஸ்ட் ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கிறேன் .இப்போது கொஞ்சம் டச் விட்டு போச்சு .அதனால்தான் லேசாக குறி தவறிவிட்டது .”

” என்னது …? லேசாக குறி தவறியதா …? அத்தை நெஞ்சில் சுட சொன்னால் கன்னத்தில் சுடுகிறாள் உங்கள் மகள் ்என்னவென்று கேளுங்கள் …” வீரேந்தர் சௌந்தரயாவை தூண்டிவிட அவள் கையால் அடித்து அடித்து வலிக்கறதே ஏதாவது கட்டை , கம்பு கிடைக்குமா …என சுற்று முற்றும் தேட ஆரம்பித்தாள் .

” வீரா …சும்மாவே இரண்டு பேரும் என்னை நடுவில் உட்கார வைத்துக் கொண்டு அடித்தே கொல்லுகிறார்கள் .இதில் நீ வேறு தூண்டி விடுகிறாயா …? பற்களை கடித்தபடி அருகிலிருந்த ப்ளவர் வாஷை அவன் முகத்திற்கு குறி வைத்து எறிந்தாள் .அது வீரேந்தரின் தோளை நோக்கி பயணித்து கடைசி நிமிடம் அவனால் கேட்ச் பிடிக்கப்பட்டு பத்திரமாக மீண்டும் டீபாயில் வைக்கப்பட்டது .

” பாருங்களேன் உங்கள் பொண்ணின் அழகான குறி பார்த்தலை …” வீரேந்தர் பேசி முடிக்கும் முன் அவன் மேல் பாய்ந்து அவன் தலை முடியை பிடித்தாள் சாத்விகா .

” நீ இப்பொது வாயை மூடிக்கொண்டு இருக்க போகிறாயா இல்லையா ..? முதலில் இதை சொல் .நீயில்லாமல் அந்த லேப்டாப்பை ஓபன் பண்ண முடியாது என்ற நிம்மதியில் நான் இருக்கும் போது அங்கே எப்படி வந்தாய் …?! “

” ஓஹோ …அப்படி உன்னையும் , லேப்டாப்பையும் தூக்கி கொடுத்துவிட்டு நாங்கள் பேசாமல் இருப்போமென்று நினைத்தாயோ …? நீ வீட்டை விட்டு வெளியேறும் போது நாங்கள் மூவரும் மாடி பால்கனியில் நின்று உன்னை பார்த்துக் கொண்டுதானிருந்தோம் .நீ போகவும் உன்னை தேடி வருவது போல் வீட்டை விட்டு ரோட்டு பகுதிக்கு வந்து நானாக சிக்கி கொண்டேன் ்நிதின் அதற்கு உதவினான் …”

” ஓ…எல்லாம் உங்களுக்கு தெரியுமா ..? “

” அப்படி உன்னை கவனிக்காமல் நாங்கள் விட்டு விடுவோமா பாப்பா …? ” பரிவுடன் கேட்டபடி சக்கரவர்த்தி வந்து அமர்ந்தார் .சாத்விகா அவரை பாசமாக பார்த்தாள்

” .இது போன்ற தீவிர கவனிப்பு.  இல்லாவிடில் நான் என்னஙாகியிருப்பேனோ …? நிச்சயம் பிணமாகத்தான் வந்திருப்பேன் .எனது சிறு பிள்ளைத்தனத்திற்கு அதுதான் தண்டனையாக இருந்திருக்கும் “

” உளறாதே பேபி..” அதட்டினார் சண்முக பாண்டியன் .

” அவர்கள் அந்த அளவு பயங்கரமான தீவிரவாதிகள் தான் சண்முகம் ்பாப்பா விவரமில்லாமல் அவர்களுடன் பழகிக் கொண்டிருந்தாள் .நாங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்துடன்தான் கழித்துக் கொண்டிருந்தோம் …”

” என்னிடம் முதலிலேயே சொல்லியிருக.கலாமே மாமா …? ” சாத்விகா குற்றவுணர்வடன் கேட்டாள் .

” சொன்னால் உடனேயே கேட்டு கொள்கிறவளா நீ …உடல் முழுவதும் அடம் , பிடிவாதம் …சரி உன்னிஷ்டம் போலவே விட்டு பிடிப்போமென நினைத்தோம் .ஆனால் அப்பா அவளாக போயிருந்தாலும் அந்த மாலிக் இவளை கொல்லும் அளவு போயிருக்க மாட்டானென்று நினைக்கிறேன் .அதிகபட்சம் பாகிஸ்தானுக்கு கடத்தி போயிருப்பான் .நாம் இவளை தேடி அங்கே போயிருக்க வேண்டியதிருக்கும் ..  அவனுக்கு நம் சாத்விகாவை பார்த்தால் தங்கை போல் தெரிகிறதாம் .சாகும் போது கூட பாச மழை பொழிந்து விட்டுத்தான் செத்தான் ….”

” அட …அப்படியா …” அனைவரும் ஆச்சரியப்பட ” அது எப்படி அவன் எனக்கு போட்டிக்கு வரலாம் …?” என கார்த்திக் முகத்தை தூக்கி வைத்து கொண்டான் .ஐய்யோ …அண்ணா உன்னைப் போல் வருமா …என சாத்விகா அவனுக்கு ஐஸ் வைத்து சமாளித்தாள் .

” மாலிக் அந்த ரேணுகாதேவியை பற்றி என்ன சொன்னான் தெரியுமா …? ” சாத்விகா பரபரக்க …

” அவனுக்கு அந்த ரேணுகாதேவியையே தெரியாது .உனக்கு ஒரு தூண்டில் போலத்தான் அவளை பயன்படுத்தினான் .ரேணுகாவை பற்றி ஏதோ சந்தேகம் வந்து,.உன்னை வைத்துத்தான் பாகிஸ்தானில் ரேணுகாவை கண்டுபிடிக்க நினைத்திருந்தான் …”

” அப்படியா …ஆனால் ஏன் ..? “

” ஏனென்றால் ரேணுகாதேவியை நம் நாடு சார்பாக நாங்கள்தான் உளஙாளியாக அங்கே அனுப்பி வைத்தோம் .அஙள் அங்கே மக்களோடு மக்களாக கலந்து இருந்து நமக்கு தேவையான தகவல்களை அனுப்பக் கொண்டிருக்கிறாள் …”

” நிஜம்மாகவா சொல்கிறீர்கள் மாமா …? ” சாத்விகா பிரமித்தாள் .

” ஆமாம்மா ரேணுகா எப்போதும் நமக்கு நம்பிக்கையானவள் , அவளது ஆஸ்பத்திரி உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இது போல் நாட்டிற்கு சேவை செய்ய விரும்பினாள் .அதற்கான ஏற்பாடுகள் செய்து அவளை அனுப்பி வைத்தோம் ….” சந்திரிகா பதில் சொன்னாள் .

” ஓ…நான் அவர்களை தவறாக நினைத்துவிட்டேன் ….”

” நீ யாரைத்தான் சரியாக நினைத்தாய் …இது போல் பாகிஸ்தானில் போய் வேலை செய்ய போவதாக ரேணுகாதேவி சங்கேத வார்த்தையில் உன் அப்பாவிற்கு எழுதிய லெட்டரைத்தான் நீ திருடி எடுத்து , கையில் தூக்கிக் கொண்டு அலைந்தாய் …”

சாத்விகாவிற்கு கொஞ்சம் வெட்கமாக இருந்த்து .” என்னிடம் கொஞ்சமாவது ஏதாவது சொல்லியிருக்கலாமே …? “




” எதை சொல்ல …? இந்த லெட்டர் எழுதிய ரேணுகாதேவி என் அம்மா எனச் சொல்லிக் கொண்டிருந்தாய் .இல்லம்மா அவள் ஒரு இந்திய உளவாளி .பாகிஸ்தானில் இருக்கிறாள் …என்று உன்னிடம் விவரிக்கவா …? ” வீரேந்தரின் நக்கலில் கோபமாக அவனை முறைத்தாள் .

” நீ ஒண்ணும் என்கிட்ட பேச வேண்டாம் போ …” அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு தாயிடம் தலையில் ஒரு கொட்டு வாங்கிக்கொண்டாள் .

” அதென்ன எப்போது பார்த்தாலும் ஒருமை …டா …புருசனை இப்படித்தான் பேசுவதா …? “

” அத்தை உங்கள் மகள் என்னிடம் டைவர்ஸ் கேட்டிருக்கிறாள் .என்னை பிடிக்கவில்லையாம் .என் மீது காதலே இல்லையாம் .அதனால் டைவர்ஸ் வேண்டுமாம் .இவளோடு காலம் முழுவதும் போராட முடியாது எனபதால் நானும் விவாகத்தை ரத்து செய்து விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் …”

” அட அப்படியா ..? “

” சூப்பர் …”

” வாழத்துக்கள் ..”

” அந்த நல்ல காரியம் எப்போது …? “

ஆளாளுக்கு இப்படி வீரேந்தரிடம் கேட்க தொடங்க  , சாத்விகாவிற்கு அழுகையே வந்துவட்டது .

” சை ..இதெல்லாம் ஒரு குடும்பமா …எனக்கு பிறந்து வீடும் சரியில்லை .புகுந்த வீடும் சரியில்லை .நான் எங்காவது சாமியாரிணியாக போகப் போகிறேன் …” சாத்விகா கோபமாக எழுந்து வந்து தோட்டத்தில் அமர்ந்து கொண்டாள் .

” யார் என் பெண்ணை கலாட்டா செய்வது …? ” கேட்டபடி வந்தார் சண்முகபாண்டியன் .அவர் இடையில் எழுந்து ஙெளியே போயிருந்தார் .அவர் கையில் அன்றைய மாலை பேப்பர் இருந்த்து .

” பாருங்கப்பா இவுங்க எல்லோரும் சேர்ந்து என்னை டைவர்ஸ் பண்ண சொல்லி வீராவுக்கு ஐடியா கொடுக்கிறாங்க ” தந்தையிடம் புகாரளித்தாள் .

” அவுங்க கிடக்கிறாங்க பேபி.அவுங்க என்ன டைவர்ஸ் பண்றது …அதுக்கு முன்னாலே நாமளே பண்ணிடலாம் .வக்கீலுக்கு போன் பண்ணவா ..? ” என்க …

” யு டூ டாடி …” சாத்விக அலற அனைவரும் சிரித்தனர்

” உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது பாப்பா .இதோ நீங்கள் இன்று காலையில் செய்த சாதனை பேப்பரில் வந்துவிட்டது …”

உடனே எல்லோரும் ஓடி வந்து பேப்பர் மேல் விழ , சாத்விகா அடியில் கையை வைத்து நைசாக பேப்பரை உருவிக்கொண டு வீட்டினுள் ஓடினாள் .மாறி …மாறி புரட்டி பார்த்துவிட்டு ..” அப்பா இதில் ஒன்றுமில்லையே …” கத்தினாள் .

அவள் கையிலிருந்த பேப்பரை வாங்கிய வீரேந்தர் பேப்பரின் கடைசி பக்கத்தை புரட்டினான் .அங்கே ஒரு ஒரத்தில் கடைசியாக ” எல்லைப்பகுதியில் சந்தேகப்படும்படியான இருவர் கைது .பாகிஸ்தான் உளவாளிகளா …? ” என்ற தலைப்பில் சிறிய எழுத்தில் ஒரு செய்தி இருந்த்து .

” இதென்ன வீரா ..்இவ்வளவு சின்னதாக கடைசியாக போட்டிருக்கிறார்கள் …? “

” பிறகு கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாகவா போடுவார்கள்…? ” என்றபடி அவன் செய்தியை படிக்க ஆரம்பித்தான் .

” இது போன்ற ராணுவ சம்பந்த செய்திகளுக்கு இது போல் பப்ளிக்காக முக்கியத்துவம் தருவதில்லையம்மா .அது நம் எதிரி நாட்டினரின் கவனத்தை கவரலாமில்லையா …அதுதான் .” சக்கரவர்த்தி வளக்கினார் .

” ஓ…” என்றபடி அந்த பேப்பரை வாங்கி வாசிக்க தொடங்கியவள் கடைசி பாராவை படித்ததும் ” இது என்ன அநியாயம் …” எனக் கத்தினாள் .

” என்ன பேபி …? ” வீரேந்தர் வேகமாக மீண்டும் பேப்பரை வாங்க , ” அந்த உளவாளிகள பிடித்தது யாரோ நிதின் கஷ்யப் னு போட்டிருக்கிறார்கள் “

” அது நம் நிதின்தான் பேபி .நம்முடன் வந்தானே …”

” அது தெரிகிறது .அ.ங்கே எல்லாம் செய்த்து பூராவும் நீங்களும் ,நானும் .    அந்த ஆள் என்ன செய்தார் ….ஒரு துப்பாக்கியை கூட பிடிக்க பயந்து கையால் தட்டிக்கொண்டிருந்தார் .அவர் பெயரை பேப்பரில் பேட்டிருக்கிறார்களே .இது அவருடைய ஏற்பிடுதானென நினைக்கிறேன் ்வாருங்கள் நாம் உடனே இந்த பத்நிரிக்கை ஆபிஸ் போய் உண்மையை சொல்லிவிட டு வருவோம் …” சாத்விகா வெளியேற ஆயத்தமானாள் .

” சும்மாயிரு பேபி .நாங்கள் சொன்னபடிதான் பேப்பரில் போட்டிருக்கின்றனர் .நிதின் நம் ராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் .நீயோ …நானோ ராணுவத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்பள் .நம் பெயரை போட முடியாது .போடவும் கூடாது .அதனால்தான் அவர் பெயரை போட்டிருக்கிறோம் …”

” சை .்அவனவனுக்கு எப்படியெல்லாம் வாழ்வு வருது .எனக்குன்னு வந்து சேருது பார் இப்படி ” முணுமுணுத்தபடி அமர்ந்திருந்த சாத்விகாவின. எதிரே ஒரு அழகிய தந்த பெட்டியை நீட்டினார் சக்கரவர்த்தி .

” நீ ரொம்ப பெரிய காரியம் செய்திருக்கிறாய் பாப்பா .உனக்கு தங்கமாகவும் , வைரமாகவும் பரிசுகளை வாங்கி குவிக்க ஆசைதான் .ஆனால் அந்த பரிசுகளையெல்லாம் உன் அப்பா உனக்கு சிறு வயதிலிருந்தே வாங்கி கொடுத்து வந்துள்ளார் .அவருக்கும் மேல் அது போல் என்னால் எந்த பரிசும் கொடுக்க முடியுமென தோன்றவில்லை .அதனால் நீ செய்த தைரியமான காரியத்திற்கு உனக்கு மிகஙும் பிடித்தமான இந்த பரிசை தருகிறேன. …”




,” இதில் என்ன இருக்கிறது மாமா …?! “

” நீ தேடிக்கொண்டிருந்த ரகசியம் .உன் மனதை குத்திக் கொண்டிருக்கும் முள் .உன் தாயை பற்றிய விபரங்கள் .அவளை பற்றிய விபரங்களை முழுவதுமாக நாங்கள் அழித்துவிட்டோம் .ஆனாலும் எப்போதோ கட்டிய ஸகூல் பீஸ் ரசீதுகள் அவளை உனக்கு காட்டிக் கொடுத்துவிட்டது .இதில் எங்கள் மகளின் போட்டோக்கள்  , அவள் உபயோகித்த அவளுக்கு பிடித்த சாமான்கள் என நாங்கள் அழிக்க விரும்பாத சில பொருட்கள் இருக்கின்றன.அவை நிச்சயம் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் , நீ அடிக்கடி சந்தித்து கொண்டிருக்கும் உன்னை பெற்றவளை உனக்கு   அடையாளம் காட்டும் .வாங்கிக் கொள் .உன்னை பெற்றவளை அறிந்துகொள் .” 
சாத்விகாவின் மனம்  ஓ வென ஆர்ப்பரித்து விழும் காட்டருவியாய் கூச்சலிட்டது .இதற்காக அவள் என்ன பாடு பட்டிருக்கிறாள் .உடலோடு மனமும் நடுங்க மெல்ல கை நீட்டி அந்த பெட்டியை வாங்கினாள் .

What’s your Reaction?
+1
21
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!