karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 41

41

கூவும் குயிலும் , ஊறும் நாகமும்

சட்டென காதல் கொண்டுவிடுகிறது

நாம் மட்டும்தான் …

நாழிகைகளை எண்ணி

நகம் கடித்து கொண்டிருக்கிறோம்

” சந்திரா குழந்தைக்கு சாப்பாடு கொண்டு வா …” மனைவிக்கு கட்டளையிட்ட சக்கரவர்த்தியின் குரலில் 
சாத்விகாவிற்கு மிகுந்த கருணை இருந்த்து . தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த சாத்விகாவிற்கு அவரது இந்த கருணை மிகுந்த ஆறுதலளிக்க , காலை காபி கூட குடிக்காமல் அவள் வெளியேறியதையும் இப்போது மதிய உணவு நேரம் தாண்டிவிட்டதையும் அவளது வயிறு நினைவுறுத்த திடுமென கபகபவென பசிக்க ஆரம்பித்த விட்ட வயிற்றை கைகளால் அழுத்திக் கொண்டாள் .பிரேமலதா வீட்டில் குடித்திருந்த டீ வயிற்றினுள் எப்போதோ காணாமல் போயிருந்த்து ்

” சந்திரா சீக்கிரம் வா ….” சக்கரவர்த்தியின்  அதட்டலுக்கு பதிலாக சாத்விகாவின் எதிரே அலட்சியத்துடன் வைக்கப்பட்ட உணவு தட்டின் உணவு வெளியே தளும்பி சிதறி தனது கோபத்தை காட்டியது .அந்த கோபத்தின் அதே சாயலுடன் நின்றிருந்த சந்திரா ” குட்டிச்சாத்தானுக்கெல்லாம் குழந்தையென்று பெயர் வைப்பீர்களா ….? ” என்றாள் .




வேதாள குடும்பத்திற்கு குட்டிச்சாத்தானதான் சரியான பதில் என்று சொல்லுவோமா …புரவங்களை சுருக்கி யோசித்து வார்த்தைகளை கோர்த்து கொண்டிருந்த சாத்விகாவின் முன் அந்த உணவு தட்டை திறந்து சக்கரவர்த்தி நீட்ட , உணவின் வாசம் பசியை அவளுக்கு நினைவுறுத்த , வேதாளங்களை சாப்பிட்ட  பிறகு பார்த்துக்கொள்வோமென முடிவெடுத்த அந்த குட்டிச்சாத்தான் சாத்த்தில் பருப்பையும் , நெய்யையும் ஊற்றி பிசைந்து அவசரமாக சாப்பிட ஆரம்பித்தது .

” இப்போது என்ன இவள் மீது பரிதாபம் உங்களுக்கு ? …” சந்திரிகா கோபமாக சக்கரவர்த்தியை பார்த்த போது சக்கரவர்த்தியின் பார்வை பாசத்தோடு சாத்விகாவை பார்த்தபடி இருந்த்து . சட்டென தனக்குள்ளும் மூண்டுவிட்ட ஒரு நெகிழ்வில் அமைதியாகிவிட்ட சந்திரிகா ,சாத்த்துடன்  தட்டில் அடுக்கியிருந்த கிண்ணங்களை அகற்றி கீழே வைத்து சாத்விகா ஒழுங்காக சாப்பிட உதவ , சக்கரவர்த்தி சாம்பார் கிண்ணத்தை அவள் தட்டிலிருந்த சாத்த்தில் ஊற்றினார் .மோர் சாத்த்திற்கு வந்த பிறகுதான் சாத்விகாவால் நிம்மதி மூச்சுடன் சுற்றுப்புறத்தை கவனிக்க முடிந்த்து .

ஊறுகாய் கிண்ணத்தை தனக்கு நகற்றிய சந்திரிகாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி ,” எங்கேம்மா போயிருந்தாய் …? ” என்ற சக்கரவர்த்தியின் கேள்விக்கு ” டாக்டர் பிரேமலதாவை சந்திக்க …” என்றபடி தனது சாப்பாட்டை  தொடர்ந்தாள் சாத்விகா .

” அங்கே ஏன் போனாய் …? ” சந்திரிகாவின் சிடுசிடுப்பிற்கு ” அவர்கள் உங்கள் இருவரையும் பற்றி நிறைய சொன்னார்கள் …” என பதிலளித்து இருவரின் நாடித்துடிப்பையும் எகிற வைத்துவிட்டு நிதானமாக தட்டில் கை கழுவினாள் .

” இது என்ன கெட்ட பழக்கம் …தட்டில் கை கழுவுவது ….? ” சுளித்த சந்திரிகாஙின் முகத்தில் பார்வையை பதித்தவள் , ” உங்களை பற்றி டாக்டர் நிறைய சொன்னார் .எளிய மக்களுக்கு நீங்கள் செய்த சேவைகளை , உங்களது புத்திசாலித்தனத்தை , அர்ப்பணிப்பை …” சொல்லியபடி சென்ற சாத்விகாவின் குரலில் நக்கலோ , குத்தலோ இன்றி பாராட்டு மட்டுமே இருக்க சந்திரிகாவின் முகம் இளகி அமைதியானது .

” காஷ்மீரை  பற்றி சொன்னார் .அங்கே பிரிவினை சக்திகளை நீங்கள் அடக்கியதை  சொன்னார் ..இதற்காகவே நீங்கள் குடும்பத்தோடு காஷ்மீர்  பகுதியில் தங்கியிருந்த்தை சொன்னார் …”

,” காஷ்மீர் பற்றியா …..? வேறென்ன சொன்னார் ….? ” வரிசையாக சொன்னபடியிருந்த சாத்விகாவை இடைமறித்து சந்திரிகா படபடக்க அவளை விநோதமாக பார்த்தாள் சாத்விகா .

” வேறு என்ன ….? காஷ்மீரில் நடந்த மத பிரச்சினைகளை சொன்னார்..அதில் பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களுக்கு நீங்கள் மருத்துவ உதவி புரிந்த்தை சொன்னார் .இதை பேசியபடி இருந்த போதே வீரேந்தர் வந்து என்னை அழைத்து வந்துவிட்டார் ….” சொன்னபடி சந்திரிகா முகத்தை ஆராய அதில் நிம்மதி தெரிந்த்து . என்னவாக இருக்கும்  , கேட்கலாமென வாயை திறந்த  சாத்விகா …ஆமாம் கேட்டால் மட்டும் இந்த அம்மா சொல்லி விட போகிறார்களாக்கும் சலித்தபடி தனது பார்வையை சக்கரவர்த்திக்கு திருப்ப , அவர் யோசனையில் இருப்பது தெரிந்த்து .இவரை கிளறி பார்த்தால் என்ன …என்றொரு எண்ணம் தோன்ற ….கிளறலாமே என தனக்கு தானே ஒரு பதிலும் சொல்லிக்கொண்டு மெல்ல ஆரம்பித்தாள் .

” உண்மையில் அப்போது காஷ்மீர் பகுதியில் என்ன பிரச்சினை …கேப்டன்…? டாக்டர்  சொன்னது எனக்கு புரியவில்லை .அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ….”

” ம் …நம் நாட்டும் , பாகிஸ்தானும் காஷ்மீருக்காக சுதந்திரம்அடைந்த காலத்திலிருந்து   சண்டை போட்டுக்கொண்டிருப்பது உனக்கு தெரியுமென்று நினைக்கிறேன் …”

சாத்விகா ஆமோதிப்பாய் தலையசைத்தாள் .

” காஷ்மீர் என்பது இந்துக்கள் முப்பது சதவிகிதமும்  முஸ்லீம்கள் அறுபது சதவிகிதமும் , பத்து சதவிகிதம் புத்தம் , சீக்கிய மத்த்தவரும்  வசிக்கும் மாநிலம் .  இந்திய அரசும் , பாகிஸ்தான் அரசும் பரஸ்பரம் நீங்கள்  எங்களவர்கள் என்ற எண்ணத்தை அம்மக்கள்மனதில்  குழப்பங்கள் பூசி   விதைத்தபடி இருப்பதினால் , அங்கு வாழும் மக்கள் இரு நாடுகளுக்குமிடையே எல்லை பகுதியில் இருந்து கொண்டு இங்கா …அங்கா என்ற மதில் மேல் பூனை மனதுடனேயே எப்போதும் இருக்கின்றனர் .இந்த குழப்பத்தை பாகிஸ்தான் அரசு நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நாட்டிலிருந்து இளைஞர்கள் அடங்கிய சிறு குழுக்களை காஷ்மீருக்கு நல உதவி குழு என்ற பெயரில் அனுப்பி வைத்ததுக் கொண்டிருக்கிறது .அவர்களது வேலை  அம்மாநில மக்களின் மனதில் பிரிவினையை விதைப்பது …”

” பிரிவினையைன்றால் ….? எந்த வகையில் …? “

” இது போல் நிறைய மத்த்தினர் கலந்து வசிக்கும் பூமியில் அவர்கள் ஒற்றுமையை பிரிக்க ஆளும் வர்க்கத்தினர் பயன்படுத்தும் வழி சாதி மற்றும் மதம் .இங்கேயும் அதேதான் .முஸ்லீம் , இந்து என்ற இரு மதங்களை பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டிவிட்டனர் .மக்கள் நல உதவி குழு என சொல்லிக் கொண்டாலும் அவர்கள்அரசாங்க உதவி கொண்ட மறைமுக தீவிரவாதிகளே . பொதுவாக காஷ்மீர் மாநிலம் பொருளாதார வகையில் பின்தங்கிய மாநிலம் .அங்கு வாழும் மக்களும் தொழிலோ , வேலைகளோ பெரிய அளவிலின்றி வருமானமற்ற எளிய மக்கள்தாம் .இவர்களிடையே தீவிரவாத்த்தை பரப்புவது அந்த குழுக்களுக்கு எளிதாக இருந்த்து .”

” ஓ..மிகவும் இக்கட்டான நிலை …”

” ஆமாம் .இது போன்றதோர் சூழ்நிலை நிலவும் மாநிலத்தில் மக்களை காக்க நம் நாடு தன் ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது .இரவு பகல் பாராமல் அந்த மாநிலத்தை…மக்களை  காவல் காப்பது ராணுவத்தின் வேலை .அங்கே ராணுவத்தினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் அடிக்கடி மோதல் நடக்கும் .எத்தனை முறை தீவிரவாதிகளை அவர்கள் நாட்டிற்கு விரட்டினாலும் , அவர்கள் மீண்டும் மீண்டும் களை போல் முளைத்தபடியே இருக்கின்றனர் .இதுதான் அன்றும் , இன்றும் காஷ்மீரின் நிலை …” சக்கரவர்த்தி விளக்கமாக சொல்லி முடித்தார் .

” இத்தனை வருடங்களாக முயற்சித்தும் … …அந்த தீவிரவாதிகளை ஏன் அடக்க முடியவில்லை ..? ராணுவ  பலமென்பது இரும்பு பிடியல்லவா …? “

” எத்தனை வலிமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு இடத்திற்கு பணி புரிய போகும் போது அந்த பகுதி மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் , நாம் நினைத்ததை முடிக்க முடியும் .நான்தான் சொன்னேனே …அந்த பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்த்த படுகின்றனர் .அவர்களின் ஆதரவு ராணுவத்தினருக்கு முழுமையாக கிடைப்பதில்லை .எனவே வருடங்பள்தான் ஓடுகின்றன .காஷ்மீர் பிரச்சினை முடியவில்லை …”

” ஆமாம் , வேறு வழியில்லாமல் காஷ்மீர் இப்பொது வரை ராணுவத்தினரின் ஆளுகைக்குள்ளேயே கிடக்கிறது ….” திடுமென வாசல் புறம் ஒலித்த குரலுக்கு திரும்பி பார்த்தனர் மூவரும் .அங்கே கையில் ஒரு பெரிய கவருடன் வஹீப் நின்று கொண்டிருந்தான் .சாத்விகாவிற்கு அவனது இந்தி ஓரளவு புரிய புன்னகைத்தாள் அவள் .




” என்ன விசயம் வஹீப் …? ” சக்கரவர்த்தியின் குரலில் இப்போது ஆளுமை வந்திருந்த்து . சோபாவின் சாயுமிடத்தில் கைகளை ஒய்யாரமாக தூக்கி போட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு குரலில் கம்பீரம் வழிய மீசை முறுக்கினார் .

இவ்வளவு நேரம் குழைவான குரலில்விளக் ங்கள் கூறிக்கொண்டு   தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் இவர்தானா…என சந்தேகப்பட்டாள் சாத்விகா .விநாடியில் அந்த அளவு உருமாறியிருந்தார் சக்கரவர்த்தி .நம்மிடம் வேலை செய்பவர்களென்றால் உடனே இந்த அளவு அதிகாரம. காட்ட வேண்டுமா என நினைத்தாள் சாத்விகா .

” கேப்டன்  இதை உங்களிடம் பத்திரமாக சேர்ப்பிக்க சொன்னார் சாப் …” தன் கையிலிருந்த பெரிய காக்கி கவரை சக்கரவர்த்தியிடம் கொடுத்தான் .பெரிய அந்த கவர் அரசாங்க எழுத்துக்களுடனும் , கெட்டியான சீலுடனும் இருந்த்து . சக்கரவர்த்தி அதனை வாங்கி அதன் சீலை பரிசோதிக்க துவங்கினார் .

” காஷ்மீருக்கு நம் பிரதம மந்திரி எப்படி போவார் தெரியுமா மேம்சாப் …? ராணு ஜீப்களும் , ஹெலிகாப்டர்களும் சூழ , ராணுவ பாதுகாப்போடு நமது B.T ஊழியர்களின் தீவிர பாதுகாப்போடும்தான் போவார் .அங்கே அரைமணி நேரமோ , ஒரு மணி நேரமோ குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று பேசிவிட்டு , உடனே டுல்லிக்கு பறந்து வந்துவிடுவார் .வேறு மந்திரிகளோ , அதிகாரிகளோ அந்த மாநில பக்கமே எட்டிப் பார்க்கவே பயப்படுவார்கள் . காஷ்மீரை பொறுத்த வரை அங்கே ராணுவ அதிகாரிகள் தான் பிரதம மந்திரி , அமைச்சர் , அரசாங்க அதிகாரிகள் எல்லாமே .அவர்களின் கட்டளைப்படிதான் அம்மாநிலம் இயங்கி வருகிறது …” சாத்விகாவிற்கு புரிய ஙேண்டுமென வஹீப் எளிய சொற்களை போட்டு நிதானமாக பேசி முடிக்க , சக்கரவர்த்தி மெலிதாக கை தட்டினார் .

” வெரிகுட் வஹீப் …மிக அருமையாக உனக்கு டிரெயினிங் கொடுத்ததற்கு இன்று உன் கேப்டனை பாராட்ணுகிறேன்.சரியா …? ” சக்கரவர்த்தி வஹீப்பை பாராட்டுகிறாரா …நக்கல் பண்ணுகிறாரா என சாத்விகா குழம்ப ஆரம்பிக்கையில் வஹீப் பதறினான் .

” மன்னிக்கனும் சாப் .நான் சும்மா பேச்சுவாக்கில் பேசினேன் .நீங்கள் மேடமிடம் காஷ்மீர் பற்றிய விபரங்களை பேசுவதை கேட்டுக்கொண்டே வந்தேன் .என் பங்கிற்கு நான் அறிந்த விசயங்களை சொல்ல வேண்டுமென்ற ஆவலுடன் பேசிவிட்டேன் . மன்னித்துவிடுங்கள் .இனி அதிகம் பேச மாட்டேன் …” பணிவும் , பரிதாபமுமாக கெஞ்சினான் .

நமக்கு கீழே இருப்பவர்களென்றால் இத்தனை அதிகாரமா …? சாத்விகா வெறுப்புடன் சக்கரவர்த்தியை பார்க்க , அவர் தோரணையாய் மீசையை தடவியபடி ” சரி …சரி …போ …” என அலட்சியமாய் புறங்கையை வீசினார் .

” நன்றி சாப் .தாகமாக இருக்கிறது .கொஞ்சம் தண்ணீர் …” என வஹீப் இடை வரை குனிய …” ம் .்.ம் …” என வீட்டின் உள்புறம் சம்மதமாய் கையாட்ட அவன் ஆளை விடுடா பாவனையுடன் வீட்டுனுள் வேக நடையில் போனான் .

” அப்படியெனில் ராடுவத்திற்கும் , பயங்கரவாதிகளுக்குமிடையே நடக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்க படுகிறார்கள் .இல்லையா …? ” இந்த பேச்சை பாதியில் நிறுத்த சாத்விகா விரும்பவில்லை . எனவே அதையே தொடுத்து பேச ,சக்கரவர்த்திநிடம் அந்த எண்ணமில்லை  .

” எனக்கு களைப்பாக இருக்கிறது பாப்பா .நான்கொஞ்சம்  படுத்து எழ போகிறேன் .நீயும் ஒரு குட்டி தூக்கம் போடேன் .பிறகு பேசலாம் …” எழுந்து நின்று மென்மையாக சாத்விகாவின் தலை வருடி சொன்ன சக்கரவர்த்தியின் குரலில் பழையபடி குழைவு வந்திருந்த்து .ஆனால் பார்வை வீட்டினுள் சென்று கொண்டிருந்த வஹீப் மீது இருந்த்து .சாத்விகாவிற்காக குரலில் இருந்த மென்மை வஹீப்பின் பின் பார்வையில் இல்லை .அதில் கடுமை தெரிந்த்து .

சாத்விகாவின் பதிலை எதிர்பாராது சக்கரவர்த்தி மாடிக்கு நடந்து விட , சாத்விகா திரும்பி பார்த்த போது அங்கே சந்திரிகாவும் இல்லை .இந்த அம்மா எப்போது எழுந்து போனார்கள் ….ம் எப்போதும் போய்விட்டு போகிறார்கள் .இருந்தால் மட்டும் எனக்கென்ன பிரயோஜனம் இருக்க போகிறது …உதட்டை சுளித்தபடி சாத்விகாவும் எழுந்து தனது அறைக்கு நடந்தாள் .




அறையின் பால்கனியை திறந்து நின்று சும்மா வேடிக்கை பார்த்தபடி நின்ற போது வீட்டின் பின்புறம் சுற்று முற்றும் பீர்த்படி சாந்தினி வருவது தெரிய ஆச்சரியமானாள் .இவளெதறகு திருடி போல் பதுங்கி பதுங்கி வருகிறாள் ….பார்வையை கூர்மையாக்கினாள் . அந்தப்புறமிருந்து வஹீப் வந்தான் .அவளை போன்றே அதே திருட்டு செய்கைகளுடன் …இருவரும் எதிரெதிரே வந்து ஒருவரைநொருவர் பார்த்தபடி நின்றனர் .

மெல்லிய குரலாய் உதடுகளை அசைத்தபடி சாந்தினியின்  தோள்களில் தன் இரு கைகளையும் வைத்த வஹீப்மெல்ல  தோள்களை வருடியபடி தன் கைகளை கீழே இறக்கினான் அவர்களை பார்த்தபடிநிருந்த சாத்விகா .சட்டென சூழ்ந்த வெட்கத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

What’s your Reaction?
+1
10
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!